பேரு பாண்டியா, நம்ம "காக்க காக்க"ல பயாஸ்கோப்பு காட்டுன பாண்டியா இல்ல, இவுரு வேற. அஜுல் பாண்டியா. இவுரு வூட்டுக்குள்ள போனா வூடு முளுக்க சர்டிபிகெட்டாம், அல்லாத்துலையும் அண்ணாத்தே மொதோ ஆளா வந்திக்கிற மேரி சர்ட்டிபிகெட்டாம். இவுரு வுடுற கதியெல்லாம் கேட்டா தான் ஜூப்பரா கீது.
கதியெ ஒவ்வொண்ணா சொல்றேன்.
1. இவுரு மைக்ரோசாப்ட்டு கம்பெனியிலே Immenient (sic) Chief Executive Officer of Technologyயா ஜோலி செய்றாராம்.
2. இவுராண்ட பில்கேட்ஸு "நைனா உனுக்கு வாரத்துக்கு $5000 கூலி தாரேன், என்னோட சேந்துக்கோ"ன்னு கெஞ்சினாராம். இவுரு "அத்தெல்லாம் வாணாம்பா, எனுக்கு நா படிக்கிற என்ஜினியரிங்கு முடிக்கணும், ஹார்வோர்டு யுனிவர்சிட்டில எம்பில்லு படிக்கணும், அதுக்கெல்லாம் நெறியா டைமு வேணும். அத்தால எப்போலாம் முடியுதோ அப்போலாம் உனுக்கு நா எல்பு பண்றேன்"ன்னு சொன்னாராம். அதுக்கு பில்கேட்ஸும் மண்டைய மண்டைய ஆட்டுனாராம்.
3. பில்கேட்ஸுக்கு எதுனா ரோசன வோணும்ன்னா இந்த அண்ணாத்த கைல தான் கேப்பாராம், இவுரும் பில்கேட்ஸாண்ட கேட்டுகின்னு தான் அல்லாமும் செய்வாராம்.
போற போக்குல பாண்டியா அண்ணாத்தே பில்கேட்ஸு ஈமெயிலு ஐடின்னு ஒரு கொசு மெயில் ஐடி குட்த்துக்கீறாரு. அத்த டெஸ்ட் பண்ணி பாக்கசொல்லோ அத்து வேலைக்கு ஆவல, அத்த மேரி டெல்லில கீற மைக்ரோசாப்ட்டுல "இத்த மேரி ஒர்த்தரு கதி சொல்லிக்கின்னு கீறாரே, அத்தெல்லாம் மெய்யாலுமே உண்டா"ன்னு நம்ம டைம்ஸ் ஆப் இந்தியா கேட்டுக்கீறாங்கோ. அவுங்க அதுக்கு "ஆக்காங், அத்தெல்லாம் ஒர்த்தரும் அப்டி கெடியாது. இவனாங்காட்டி எதுனா கதி சொல்லட்டும், அப்பாலிக்கா புட்ச்சு உள்ளே போட்டுடணும்"ன்னு சொல்லிக்கீறாங்கோ.
வுட்டாக்கா நம்ம சுப்ரமணிய சாமியே பாண்டியா கைல க்ளாஸு எட்த்துக்கணும் போல கீது, அந்த மேரி ரீலு வுடுறாரு தலீவரு.
இன்னா மேட்டருன்னு தலைய பிச்சிக்கிறவங்கோ இங்கே போயி பிச்சிக்கோங்கபா...
நா ஆட்டோக்காரி ஆட்டோக்காரி
ஆட்டோகிராப்பு போட்ட சேரன் மட்டும் தான் பட்ச்ச பளைய இஸ்கூலு, பிரண்ட்ஸுங்கோன்னு பாத்து "ஞாபகம் வர்தே ஞாபகம் வர்தே"ன்னு பாடணுமா. இப்போங்காட்டி நம்ம மன்மோகன் ஐயா கைல "ஒங்க மன்ஸுல இன்னா பாட்டு நைனா ஓடிக்கின்னு கீது"ன்னு கேட்டாக்கா அவுரு மன்ஸுக்குள்ள இத்தே பாட்ட தான் பாடிக்கின்னு இர்ப்பாரு.
நம்மூருல இந்த ஒரு மாசத்துல ஆரோட பேரு நெறியா ஆளுங்கோ வாயிலே வந்துருக்குன்னு ரோசன பண்ணா அது நம்ம போலீஸக்கா செயலச்சுமியா தான் இர்க்கும்போல. ஒரு நாளைக்கு ஒரு நூஸ் வுட்டுக்கின்னே கீது. நம்மூரு அர்சியல்வாதிங்கோ தான் எப்பவும் தன்ன சுத்தி பத்தாளுங்கோ நிக்கணும், பத்து பேரு தன்ன பத்தி பேசிக்கின்னே இர்க்கணும்ன்னு நெனிப்பாங்கோ. அக்கா அவுங்கள தாண்டி போச்சு. நூஸ் பேப்பருங்கோ, டிவிகாரங்கோ அல்லாரும் இப்போ யக்காவ சுத்திக்கின்னே கீறாங்கோ.
நம்ம வூருல இன்னா விசேஷம் வந்தாலும் நடக்காத ஒரு கூத்து இந்தப் புள்ளையார் சதுர்த்தி வந்தா மட்டும் நடக்கும்ப்பா. வூருல ஒண்ணுத்துக்கும் ஒதவாம சுத்திக்கின்னு கீற பசங்கோ அல்லாரு வூட்டுலையும் துட்டு வசூல் பண்ணி புள்ளையாருக்கு செலை வைக்கிறது, அன்னிக்கு ஆடாத ஆடமெல்லாம் ஆடுறதை நா கணக்குலியே எட்த்துக்கல. ஆனா கட்டே கடேசியா புள்ளியார கொண்டுபோய் கடல்ல போடுவாங்கோ பாருங்கோ, அத்தான்பா மெய்யாலுமே கொடுமையான மேட்டரு.