நம்ம ஐஸ்பாய் விவேக்கு எதுனா நல்லது பண்ணி அட்த்த சிஎம்மா வந்துடுவாருன்னு அம்மாவுக்கு பயம் வந்துட்ச்சு போலக்கீது. சுனாமில அடிப்பட்ட மக்களுக்கு வூடு கட்டித் தர விவேக்கு அம்மா கைல எடம் கேக்க, அம்மா "அத்தெல்லாம் முடியாது போபா"ன்னு அட்ச்சி தொர்த்திட்டாங்கோ. மன்ஸன் ஃபீலானானும் வெளில காட்டிக்காம ரீஜண்ட்டா "எடம் கெடிக்கல, அத்தால நா பாண்டிசேரி பக்கமா ஒதுங்கிக்கிறேன்"ன்னு கொரலு வுட்டுட்டுப் பூட்டாரு.
இந்த மேட்டர நம்ம (அம்)மாமன்றத்துல எதிர்கச்சி கொய்ந்திங்கோ கேட்டு வெக்க, அம்மா கபால்ன்னு எய்ந்து (ஆர கேள்வி கேட்டாலும் அம்மா தான் ரிப்ளை வுடுவாங்கோ, அம்மாவையே கேக்குறப்போ வேற ஆரு சொல்லுவா!!!) "தோடா, துக்கடா பையன். இன்னா செஞ்சுட்டான்னு இம்மா ஃபீலாவுற நீயி. அந்தப் பையன் ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடல. கவுருமெண்ட்டு செஞ்சதுல பத்து பர்ஸெண்ட்டு கூட செய்யல. இத்த போயி பெர்ஸா பேச வண்ட்டியா நீயி"ன்னு கேக்குறாங்கோ.
சோக்கா கீதும்மே உன்னோட பேச்சு. (அம்)மாமன்றத்துல பேச எய்தி குடுக்குற கவிஞரு, தாடிக்கார தோஸ்த்து எய்துன கொறள பத்தி அம்மா கைல சொல்லாம வுட்டுட்டாரு போலக்கீது. அத்தால அத குப்ஸாமி இப்போ அம்மாவுக்கு எட்த்து குடுக்குறான்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
20 comments:
கொஸப்பேட்ட மாமூ, எந்த விவேக்கு கொரலுவிட்டாராம். விவேக் ஒபராயா... லாடு லபக்கு தாஸ் விவேக்கா? ரொம்ப நாள் அர்சியல் மேட்டரு படிக்காம கலீஜ் அவுது...
கொரலு வுட்டது அல்வாசிட்டி.விஜய்
ஒரு கெவுருமென்டு செய்ரதுல 10 பெர்சென்டை ஒரு ஆளு செய்யுறது பெர்ஸுதானே மாமு? சுளுவா சொல்லிடுச்சே அந்த அம்மா..
கொரலு வுட்டது சுதர்சன்
One more time Amma has opened her "Oatai Vaai". This news has not come in any other dailies or weeklies. I guess.
Sometimes back, she opened up ManiShankar Iyer episode in the same way in Satta Manram.
கொரலு வுட்டது kirukan
கவலைப்படாதே நைனா, இன்னிக்கு சாயங்காலம் சன் டி.வி பாரு. அறிவாலயத்து பெரிசு விவேக்கை சப்போர்ட் பண்ணி அறிக்கை வுடும். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!
கொரலு வுட்டது Ramki
அடிச்சு சொன்ன மாமு
வாய்க்கரிசி போடுறதுலயும் அரசியல் பண்ணும் சாபக்கேடு நம்ம நாட்டுக்கு மட்டும்தான் உண்டு
இவனுகலுக்கு ஆப்ப்படிக்க ப்லாக் மட்டும் போதாது , யெலசுங்க அரசியலுக்கு வரணும்
கொரலு வுட்டது செந்தில்
விஜய், ஐஸ்பாய்ன்னு சொல்லிக்கீறேன், இப்டி யாருன்னு கேக்குறிங்களே, நாயமா இத்து. அல்லாம் நம்ம விவேக் ஒபராய் தான்.
கொரலு வுட்டது kosappettai kuppusamy
மன்சிரூங்க தலீவா... அத்தானே லாடு லபக்கு தாஸூ இப்போ தான் சன் டிவி பேவரைட் ஆச்சே அத்தான் கொழம்பிட்டேன். ஐஸ்பாய் சொன்னது ஐஸ்ஸ பத்தி நினைக்கவே இல்லீங்கோ....
கொரலு வுட்டது அல்வாசிட்டி.விஜய்
அந்தாளென்ன சொந்த பணத்திலயா செஞ்சாரு, எல்லாம் பெர்ய மனுசங்க குடுத்த நன்கொடைலதான்
செஞ்சார்னு வேறே சொல்லி அம்மாக்கு சமூக சேவையப் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு காமிச்சுட்டாங்க.
மின்னெ பின்னெ செஞ்சிருந்தால்ல தெரியும்!
கொரலு வுட்டது aathirai
ஆமாம்பா.. இன்னாங்கறே நீ.. விவேக் ஒண்ணுமே பண்ணலைன்றது தானே உண்மை. அம்மா எவ்வ்ளோ செஞ்சிருக்காங்கோ. ஏம்பா, தமிழ்நாட்டு சொத்து எல்லாம் ஆந்திராவுலயும், கர்நாடகாவுலயும் போயிருச்சுங்கற ஆதங்கத்துலதானே, திராட்சை தோட்டம் முதல்கொண்டு, அங்கெ சொத்தா வாங்கி குவிச்சிக்கினு இருக்காங்க. அம்மா செஞ்சதுக்கு நோபல் பரிசு கொடுக்கலைன்னு அமெரிக்காவுல ஒரு தெருவுக்கு பேரு வச்சு கலீஜூ பண்ணினுக்கறாங்க. வுடுப்பா. விவேக்கு பாவம் சின்னப் பையன் பொழச்சு போட்டம்.
கொரலு வுட்டது நாராயணன்
லேட்டஸ்ட்டா, என்.டி.டிவியிலே செய்தி சொன்னாங்க... அதாவது விவேக் ஓபராய், இதைப் பத்தி கருத்துச் சொல்ல மறுத்துட்டாராம். செய்தியோட கேப்ஷன் எல்லாம் கனஜோராக இருக்கு. " Amma vs Vivek.". வடக்கத்திய மீடியாவிலே, இன்னும் கொஞ்ச நாள் இதைப் பத்தி போட்டுக் கிழிக்கப் போறாங்கன்னு தெரியுது. ஹ¥ம்ம்ம்ம். பத்து சதவீதம் வேலை செஞ்சார்னு சட்டசபைலே அம்மா ஒத்துக்கிறாங்க.. அதுக்கு முதல்ல, நன்றி சொல்லக் கூட முடியலை. ஆனால், அவமானப் படுத்துவாங்களாம். இந்த கலாட்டாவிலே குஷியாகப் போறது யார் தெரியுமா? நம்ம ஊர் ஹீரோக்கள் தான். ஏற்கனவே காது வழியா புகை விட்டுகினு இருக்காங்களாம்.
கொரலு வுட்டது prakash
தமிழர்களை வாழவைத்த தெய்வமாக கருதும் ரஜினி, திராவிட மேதாவி கமல், உலகத் தமிழருக்கெல்லாம் குரல் கொடுப்பதாக கூறும் விஜயகாந்த், சரத், விஜய், அஜித்.. அப்புறம் இவர்களுக்கெல்லாம் கொடி பிடிக்கும் தொண்டரடி பொடிகள் எல்லாம் ஒபராயின் மூ....தை குடிக்கலாம்.
கொரலு வுட்டது kirukan
அதாவது, 10 விவேக் ஒபராய் = தமிழ்நாடு அரசு?
இவங்க பேசாம புல்லு புடுங்க போகலாம்.
கொரலு வுட்டது suresh
பிரகாஷ், ஓபராய் ரொம்ப டீசண்ட்டா இவங்க யாரையுமே குத்தம் சொல்லாம போயிட்டார்.
"தானம் கொடுத்த மாட்டை பல்லு பிடிச்சுப் பார்க்கிறது" தான் கேள்விப்பட்டு இருக்கோம். இப்போ இவங்க செஞ்சது "தானம் கொடுத்தவனையே எட்டி உதைக்கிற" வேலை.
ஹ்ம்ம் அம்மா புகழ் இப்படியெல்லாம் பரவுது. அரசாங்கம் செய்ததுல பத்து சதவீதம் என்பது ஒரு சிறிய அளவு இல்லை என்பது கூட அவங்களுக்கு புரியலை, அல்லது ஒத்துக்க முடியலை. நீங்க சொல்ற மாதிரி நம்ம ஊர் நடிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும்.
கொரலு வுட்டது KVR
Kosapettai nice writeup.
Its shame we have politicise everthing.
Gentelman Vivek diplmotacially answered the question without blaming anyone. And Pondicherry Govt took only 10days to get over the entire process, I don't understand the problem of TN govt.
One thing every actor in TN have ganged up against Vivek Oberoi from Comedian Vivek to Sarath in this they all show unity!!
PS on help what is the script that needs to used to show and hide comments any help is appreciated thanks
K K Nagar Kirukkan
கொரலு வுட்டது K K Nagar Kirukkan
No wonder the tamil actors decided to donate money and stay away.
கொரலு வுட்டது raj
கே கே நகர் கிறுக்கனே... இங்க போய் பாருமய்யா நீர் கேட்ட ஸ்கிரிப்ட்டுக்கு
http://help.blogger.com/bin/answer.py?answer=943&topic=41
கொரலு வுட்டது அல்வாசிட்டி.விஜய்
சீ..இந்தம்மாவுக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா? எங்கிருந்தோ வந்து தனிப்பட்ட முயற்சியில பண்ணுறதையும் ,அரசாங்கம் பண்ணுறதையும் compare பண்ணுதே ? எந்த அளவுக்கு மக்களை முட்டாள்னு நினைச்சிருக்கு?
-ஜோ
கொரலு வுட்டது ஜோ
தேங்காயை நாய் உருட்டிய மாதிரி என்று ஒரு பழமொழி உண்டு. தானும் தின்னாது, பசியோடிருப்பவனையும் குரைத்துக் குரைத்துப் பல்லைக்காட்டிப் பயமுறுத்தித் தின்னவிடாது. ஜெயலலிதா இப்படித் தேங்காயை உருட்டுவது முதல் முறையா என்ன? குறைந்தபட்ச சுய அறிவு கூட இல்லாமல்!! தூ.
கொரலு வுட்டது Montresor
வந்தாரையெல்லாம் முதல்வராக்கும் namma தமிழகத்தின் முதல்வர், விவேக்கை விமர்சித்தது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது . அவர் செலவழித்தது 10% ஆனாலும் ஒரு தனி மனிதன் இவ்வளவு செய்தது பெரிய விஷயம் அல்லவா? அவர் புகழுக்காக செய்தார் என சொல்ல வாய் கூசவில்லையா அம்மைக்கு . . ஒரிரு தமிழ்படத்தில் நடித்து, தமிழ் வால்க என கூவி , ஓரிரு தையல் மெஷின் கொடுத்தால் தானாக புகழ் வந்து விட்டு போகிறது .ஏன் தமிழக முதல்வராகவே வாய்ப்புள்ளதே? ஏன் இவ்வாறெல்லாம் கஷ்டப்படவேண்டும்?
கொரலு வுட்டது LLDasu
பால்மாற்றிப் பிறக்க வேண்டியதெல்லாம் இப்பூலகில் பிறந்து... ச்சே... நான் ஊருபக்கமே வரலை.. போங்கய்யா!
கொரலு வுட்டது மூர்த்தி
Post a Comment