RSS : Articles / Comments


கஜேந்திரா மெடிகல் காலேஜு

11:23 PM, எய்துனது கொஸப்பேட்ட குப்ஸாமி, 10 கொரலுங்கோ

"இன்னா அண்ணாத்தே நீயி. சொம்மா இன்ஜினீரிங் காலேஜு ஆரம்பிச்சிக்கீற. இந்த காலேஜுக்கு புள்ளிங்கோ சேரணும்ன்னா ரெண்டு லச்சம் தான் குடுக்கணும், இத்தே ஒரு மெடிகலு காலேஜு தொர்ந்துருந்தா பத்து பதினஞ்சு லச்சமா பாக்கலாம்ல"ன்னு எதுனா அல்லங்கை பார்ட்டிங்கோ கஜேந்திரரு கைல சொல்லிக்கீறாங்கோ போலக்கீது. அண்ணாத்தே சிலுத்து எய்ந்து "தொரடா ஒரு மெடிகல் காலேஜு"ன்னு கெளம்பிட்டாரு.

உள்ளூருல அம்மாவ கொஞ்சம் பகைச்சிக்கின்னதால காலேஜு கீலேஜுன்னு பேச்செடுத்தா அம்மா பிச்சு கடாசிடுவாங்கன்னு கஜேந்திரருக்கு நல்லாவே தெர்யும். அத்தால பாண்டிச்சேரியிலே போயி காலேஜு தொர்க்கப்போறாராம்.

"வருங்கால மொதல்வரு வருங்கால மொதல்வரு"ன்னு அவரோட ரசிக சிகாமணிங்கோ கொரலு வுடுறதோட மெய்யான மீனிங்கு இப்போ தான் வெளங்குது. கஜேந்திரரு "காலேஜு மொதல்வரு" ஆகுறத தான் இப்டி சொல்லிக்கீறாங்கோ போலக்கீது. இனிமே "வருங்கால மொதல்வரு"ன்னு சொல்லாதிங்கப்பா, அவுரு இப்பொவே "மொதல்வரு" தான்.

10 கொரலுங்கோ

Anonymous @ 1:01 AM

அப்டி போடு அண்த்தே! இப்டி மொதல்வரு ஆவறதுதான் சுளுவு!

கொரலு வுட்டது suresh

Anonymous @ 2:11 AM

சூப்பரா சொன்ன நைனா...

கொரலு வுட்டது parasuraman

Anonymous @ 2:11 AM

சூப்பரா சொன்ன நைனா...

கொரலு வுட்டது parasuraman

கொரலு வுட்டது parasuraman

Anonymous @ 11:04 PM

kalakkal machee !

கொரலு வுட்டது sangumani

Anonymous @ 11:05 PM

கலக்கல் மச்சி ! - சங்கு மணி

கொரலு வுட்டது sangumani

Anonymous @ 1:25 AM

இவன் ஒரு ஆள்ன்னு இவன் பின்னாடியும் கொடைபிடிச்சுகினு இருக்காங்க பாருங்க அவங்கள சொல்லனும் குப்பு...
உனக்கு ஒரு விசயம் தெரியுமா தெரியாதா? அண்ணாத்தே காலேஜ்ல எல்லா மாணவர்களுக்கு இலவச படிப்பாம் :P:P:P:P:P

கொரலு வுட்டது வினோ

Anonymous @ 2:46 AM

அப்படி போடு மக்கா

கஜெந்திரன் என்ன கர்ணம் போட்டாலும் ஒண்ணும் நடக்காது

கொரலு வுட்டது pandian

Anonymous @ 10:53 PM

பின்னிட்ட பெடலு எடுத்துட்டே குப்ஸ்ஸே...



கொரலு வுட்டது venkat

Anonymous @ 2:46 AM

பாண்டிச்சேரி பாட்டிலுக்கு மட்டுமில்ல இப்பங்காட்டி காலேஜிக்கும் பேமஸ் ஆயிக்கினு கீது, தக்கினியூண்டு ஊருல எத்தினி மெடிக்கல் காலேஜி, ஆறுபடைவீடாம், மகாத்மா காந்தியாம், இதெல்லாம் பத்தாசொல்ல காரைக்கால்ல ஒன்னாம், இத்தெல்லாம்மில்லாம நம்ம கஜேந்திரரு வேறவா? ம்... பல்லு கீது பட்டாணி துன்றான் நீ வுட தலீவா, இனிமே பாண்டியில சரக்கடிக்கிறவங்க நேரா மெடிக்கல் காலேசு ஆசிப்பித்திரியில படுத்துக்கலாம்.

கொரலு வுட்டது குழலி

Anonymous @ 2:10 AM

இன்னா மாமு பின்னி எடுக்குறியே .

கொரலு வுட்டது MaMs