Saturday, February 26, 2005

எளங்கோ போட்ட அந்தர் பல்டி

காங்கிரஸு பாலிடிக்ஸு பெர்ய பாலிடிகிஸா கீதுபா, அதுலியும் நம்ம எளங்கோவன் கீறாரே அவுரு பாலிடிகிஸு தான் சூப்பர் பாலிடிகிஸு. நம்ம ஆளுக்கு ரொம்ப நாளாவே சிஎம்மு சீட்டு மேல ஒரு கண்ணு. இன்னாடா இது, நம்ம தாத்தா வளத்துவுட்டவங்கோ அல்லாரும் இன்னிக்கு தன்னோட பேரனுங்கள கூட மந்திரி ஆக்கிப்புட்டானுங்கோ, நாம மட்டும் பெஞ்சி தேச்சிக்கின்னு கீறோமேன்னு படா ஃபீலிங்கு. இந்த மேரி ஒரு ஃபீலிங்கு இருக்குற ஆளு நம்மூருல இர்ந்தா அது நம்ம குடும்பத்துக்கு ஆவாதுன்னு தான் தமிள்நாட்டு தாத்தா கலீஞரு "நீயி போயி டில்லில பெஞ்சி தேயி ராசா"ன்னு டிக்கெட்டு குட்த்து அனுப்பிப்புட்டாரு. இர்ந்தாலும் நம்ம எளங்கோவனுக்கு சிஎம்மு சீட்டு கனா கண்ண வுட்டுப் போவல. ஃபீலிங்கும் கொறயல.

அந்த ஃபீலிங்குல கொஞ்ச நாளு முன்னால "தமிள்நாட்டுல கூட்டணி ஆச்சி கேப்போம்"ன்னு கொரலு வுட்டாரு. அத்த புட்ச்சிக்கின்னு சுதர்ஸன நாச்சியப்பரும் "அத்த நா வளிமொளியிறேன்"ன்னு சப்போர்ட்டு கொரலு வுட்டாரு. சப்போர்ட்டு கெடிச்சதும் எளங்கோவருக்கு ஒட்டுமொத்த தமிள்நாடே தன்னோட பின்னாடி ஃபீலிங்கோட அலையிற மேரி கனா வந்துட்ச்சு. "கூட்டணி இன்னாபா கூட்டணி, நீயி இங்கேயும் அப்பாலிக்கா பிஸ்கோத்து மந்திரி சீட்டு குடுப்ப. அத்தெல்லாம் வாணாம், எங்குளுக்கு வோணும்ன்னா சீஎம்மு சீட்டு கூட கேப்போம்"ன்னு படா ஃபீலிங்கோட பேசிப்புட்டாரு.

சொம்மா இர்ந்த சங்க வூதி கெடுத்த ஆண்டி கணக்கா ஆயிபுட்ச்சி எளங்கோவரு கத. பீகாரு மேட்டரு, பட்ஜெட்டு மேட்டருல கம்மூனிஸ்ட்டுன்னு காங்கிரஸு கதி கலங்கி கெடுக்குற நேரத்துல பேரன மெயின் சீட்டுல குந்த வெச்ச குஷியில தாத்தா மட்டும் நாங்க அல்லாம் எப்பவும் ஒண்ணா தான் இர்ப்போம்ன்னு கொரலு வுட்டு காங்கிரஸு வயித்துல பீர வார்த்துக்கின்னு இர்ந்தாரு. இந்த நேரத்துல செண்ட்ரலுக்கே ஆப்பு வெக்கிற மேரி எளங்கோவரு டயலாக்கு வுட "தோ பாரும்மே, நீயா கூப்டங்காட்டி தான் நா என்னோட பேரன மந்திரி சீட்டுல குந்த வெச்சேன். ஒன்னோட பிஸ்கோத்து புள்ளிங்கோ இத்த மேரி டயலாக்கு வுட்டா அப்பாலிக்கா அல்லாரும் டாட்டா காட்டிகினு வெளில வருவோம்"ன்னு பூச்சாண்டி வேலைய காட்டிக்கீறாரு தாத்தா.

தாத்தா பூச்சாண்டியிலே ஆடிப்போன அம்பிகா சோனி "சின்னப்புள்ளிங்கோ ஆரும் இத்த மேரி கொரலு வுடக்கூடாது. நம்ம எப்பவும் தாத்தோவோட தோஸ்து தான்"ன்னு தாத்தாவ தாஜா பண்ணிக்கீறாங்கோ. செண்ட்ரலுலேர்ந்து சூட ரெண்டு வுளுந்ததும் எளங்கோவரு "நா அப்டி சொல்லல நயினா. வளக்கம் போல காமராசரு ஆச்சிய பத்தி பேசுறப்போ கொஞ்சம் ஃபீலாய்ட்டேன்"ன்னு டயலாக்கு வுட்டுக்கீறாரு. எளங்கோவரு இன்னா அந்தர் பல்டி அட்ச்சாலும் தாத்தா எளங்கோவருக்கு சூடா எதுனா குடுக்காம சொம்மா இர்க்கமாட்டாரு. அல்லாம் தாத்தா கூட்டுற குடும்ப கூட்டத்துக்கு பெறகு தெர்ஞ்சிடும்.

4 comments:

Anonymous said...

தாத்தா கவுஜய இன்னும் படிக்லியா கொசப்பு??? அத்தெல்லாம் கவுஜயாலயே கொரலு வுட்டாச்சு!

கொரலு வுட்டது மூர்த்தி

Anonymous said...

முரசொலி கவுஜயா மூர்த்தி? அதெல்லாம் சின்ன லெவள். இன்னும் பெருசா எதுனா குடுப்பாரு தாத்தா.

கொரலு வுட்டது KVR

Anonymous said...

தம்பி குப்ஸ்,

நல்லாக்கீறயா? கண்ணாலம் ரொம்ப ஷோக்கா இர்ந்துச்சுப்பா! போட்டாவெல்லாம் பாத்தேன்பா.

இப்பத்தான் தாத்தா சமாச்சாரம் பாத்தேன். எல்லாரும் பீலிங்கா ஆய்ட்டாங்களா? மந்திரி வேலை
தாத்தாவுக்கு பரம்பரை குடும்ப சொத்தாச்சேப்பா! அதை அடுத்தவுங்க கையிலே தூக்கிக்க் கொடுன்னா
அவுருதான் என்னா செய்வாரு? ரோசனை பண்ணிப்பாரு!

இப்படிக்கு

அக்கா

கொரலு வுட்டது

Anonymous said...

யக்கோவ், சொன்ன மேரி தா(த்)தா எளங்கோவருக்கு ஆப்பு வெக்க கெளம்பிட்டாரு பாத்திங்களா?

நா கூட கண்ணால போட்டோவெல்லாம் போடணும்ன்னு ரோசன பண்றேன், நம்ம ஜோலில அதுக்கு டைமு கெடிக்க மாட்டேங்குது. என்னா பண்றது....

கொரலு வுட்டது KVR