இன்னா கண்ணுங்களா, கொஸப்பேட்ட குப்ஸாமி இங்கிலிபீசு பேஸ்றான்னு நென்ச்சிட்டிங்களா? எனுக்கு தெர்ஞ்ச ஒரு பார்ட்டி "இன்னா குப்ஸாமி எம்மா நாளு ரிக்ஸா வளிச்சிக்கின்னு இர்ப்ப, ஒரு லேண்ட் ரோவரு காரு சுளுவா கெடிக்கிது, ரூவா ரெடி பண்ணுபா வாங்கிக்கின்னு சோக்கா ரவுண்டு உடலாம்"ன்னு ஐடியா குட்த்துச்சு. குப்ஸாமி கைல புது ரிக்ஸா வாங்கவே பைசா கெடியாது, இதுல எங்கேர்ந்து லேண்டு ரோவரு!!! ஆனா, சொம்மா இர்க்க முடியுமா? கார விக்கப் போற பார்ட்டி யாருன்னு கேட்டேன். பார்ட்டி படா பார்ட்டி போல, ஆனா எலிக்ஸனுக்கு செலவு செய்ய பைசா இல்லைன்னு கைல கீற கார விக்கப் போறாராம். ஆர்ன்னா கார வெலைக்கு வாங்கினா குப்ஸாமிக்கு ஏஜெண்ட்டு கமிஸனா ஒரு கட்டிங்க போட்டுடுங்கபா....
காரு ஓனரு டீட்டெய்ல்ஸ்
ஓனரு பேரு: மு.க. அளகிரி
அப்பா பேரு: மு. கருணாநிதி
கார் மாடல்: லேண்ட் ரோவர்
அடக்க வெல: ரூவா ஒரு லச்சத்து இருவதாயிரம்
விக்கிறதுக்கு ரீஜன்: எலிக்ஸனுக்கு பைசா இல்ல.
விக்க நெனைக்கிற வெல: ஒரு லச்சத்து இருவத்தையாயிரம் (காரோட பேன்ஸி நம்பரு TN 05 - 6666, இதுக்கே துட்ட குட்த்து வாங்கிடலாம். பாவம் புள்ளைக்கு பைசா இல்ல, அத்தால ஐயாயிர ரூவா எக்ஸ்ட்ரா கெட்ச்சா போதும்ன்னு விக்கிறாரு)
இந்த காரு பாஸ்ட்டா வித்துட்டா அட்த்ததா ஒரு ஹோண்டா சிட்டி காரும் வெலைக்கு வருதாம். நம்பரு TN 58 - 1. இதுவும் பேன்ஸி நம்பரு காரு, வெல ரூவா 1,40,000. கூட பத்தாயிர ரூவா குட்த்தா காரு உங்குளுக்கு, ஆரு வோணும்ன்னா அப்ரோச்சு பண்ணுங்கபா.Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6622134.post-44816676399099058512009-04-02T06:10:00.000-07:002009-04-02T06:13:18.441-07:00எலெக்ஷன் காமெடீஸ்எலிக்ஸனு வந்தாலும் வந்துச்சுபா, இந்த பாலிடிக்ஸு பண்றவங்கோ ரவுஸு படா காமெடியா கீதுபா. ஒவ்வொரு காமெடியா பாக்கலாம்
டாப் ஒன் காமெடி
சிஎம்மு தாத்தா “வெற்றி நமதே”ன்னு எலிக்ஸனு கொரலு வுட்டுக்கீறாரு. வுட்ட கொரலுல மொதோ கொரலு “இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், உரிமையுடனும் வாழ வழிவகை செய்யப்படும்”. இன்னா தாத்தா பெர்ய காமெடி அட்ச்சிக்கின்னு கீறியேபா. இம்மா நாளு இத்தன மினிஸ்டர கைல வெச்சிக்கின்னு சொம்மா ரிஸைன் பண்றோம்ன்னு கொரலு வுட்டத தவுற ஒண்ணுமே செய்யல, அடுத்த தபா எலிக்ஸன்ல கெலிச்சு தான் செய்யப் போறிங்களாக்கும்? ரெண்டாவது காமெடி “மீனவர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்”. லாஷ்ட்டு அஞ்சு வர்ஸத்துல எத்தன மீனவருங்கோ எலங்க ராணுவத்து கையால குண்டு வாங்கி மண்டையப் போட்டாங்கன்னு கணக்கு எட்த்துப் பாரு தாத்தா, அப்பாலிக்கா தெர்யும் உங்க ஆச்சியிலே எம்மா பாதுகாப்போட மீனவருங்கோ இர்ந்தாங்கன்னு. தாத்தாவோட “வெற்றி நமதே” கொரலு அல்லாமே படா காமெடியா கீறதால அட்த்த லெவலுக்கு எஸ்கேப்பாவலாம்.
டாப் டூ காமெடி
தங்கபாலு “காங்கிரஸ் கட்சியில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், தன்னிச்சையாக அறிக்கை விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்”ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. இன்னிக்கு சிஎம்மு தாத்தா “வெற்றி நமதே” கொரலு வராங்காட்டி நம்ம தங்கபாலு கொரலு தான் படா காமெடியா இர்ந்துருக்கும், ஜஸ்ட்டு மிஸ்ஸு. கோல்ட்மில்க் சாரு, “காங்கிரஸு கச்சில ராங்கு காட்டுறவங்கோ யார்ன்னா இர்ந்தா சோனியாம்மா நடவடிக்கை எடுப்பாங்கோ”ன்னு சொல்லுங்கோ, அது இன்னாது நீங்களே அல்லாம் செய்ற மேரி “நடவடிக்கை எடுப்பேன்”ன்னு சொல்லிக்கீறிங்கோ. ஒரு டவுட்டு தலீவா, அது இன்னாது பேட்டி குடுக்கசொல்லோ மூலம் வந்தவரு கணுக்கா குந்திக்கின்னு வெளக்கண்ண குட்ச்ச மேரி மூஞ்ச வெச்சிக்கின்னே பேட்டி குடுக்குறியே, ஏன்பா அப்டி? ஒரு மேட்டரு தெர்யுமா உனுக்கு, ஒபிஎஸ்ஸு ஒன்னிய பாத்து “நானாவது ஒரு அம்மாவுக்கு பயந்துகின்னு சீட்டு நுனில குந்திக்கின்னு இர்ந்தேன், ஒன்னோட நெலம படா பேஜாருபா, ரோட்ல போறவன் வர்றவனுக்கு கூட பயந்துக்கின்னு கீற நெலமைலகீற”ன்னு கூவிக்கின்னுகீறாராம்.
டாப் த்ரீ காமெடி
வைகோ இன்னைக்கு கோர்ட்டுக்கு வக்கிலு ட்ரெஸெல்லாம் மாட்டிக்கின்னு தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கம்பி எண்ணிக்கின்னு கீற நாஞ்சிலு சம்பத்த வெளில உடுங்கபா’ன்னு கொரலு வுட வந்துக்கீறாரு. இன்னாபாது ஒரு கச்சிய கட்டிக்காத்துக்கின்னு(??!!!)கீறவரு, இப்டி வக்கிலு ட்ரெஸெல்லாம் மாட்டிக்கின்னு வந்துட்டியே தலீவா இன்னா மேட்டருன்னு கேட்டேன். “குப்ஸாமி என்னோட நெலம தெர்யாம இப்டி கேட்டியே குப்ஸாமி”ன்னு கதறி கதறி அய்துப்புட்டாரு. “இன்னா மேட்டரு தலீவா, தெளிவா சொல்லுபா”ன்னு கேட்டேன். “குப்ஸாமி, என்னோட கச்சியிலே இப்போ நானும் சம்பத்தும் மட்டும் தான் இர்க்கோம், சம்பத்தும் அடுத்த எலிக்ஸனுக்கு என்னாண்ட இர்ப்பாரோ இன்னான்னு தெர்யாது. இப்போ யாரா இர்ந்தாலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல புட்ச்சி உள்ளாறப் போட்டுறாங்கோ. அவுங்கள வெளில எடுக்கற வக்கிலு பொழப்புக்கு மாறிட்டா பொழப்பும் ஓடிக்கின்னு இர்க்கும், கைல கொஞ்சம் துட்டும் பாக்கலாம்ன்னு தா தம்பி சம்பத்து மேட்டர்லேந்து தொயில ஆரம்பிச்சிக்கீறேன்பா”ன்னு மேட்டர அவுத்துவுட்டாரு. புச்சா ஆரம்பிச்சிக்கீற தொயிலாவது நல்லபடியா வர்ட்டும் தலீவான்னு வாய்த்து சொல்லிட்டு வந்துட்டேன்.கொஸப்பேட்ட குப்ஸாமிhttp://www.blogger.com/profile/07079284807648234765noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6622134.post-71960782798799615792009-03-31T05:59:00.001-07:002009-03-31T05:59:46.879-07:00குப்ஸாமி is backஇன்னாமா கண்ணுங்களா, எப்டி கீறிங்கோ, சோக்காக்கீறிங்களா? எம்மா நாளாச்சுபா ஒங்களல்லாம் பாத்து. குப்ஸாமி ரிக்ஸா வளிக்கற்துல பிஸீயா பூட்டேன், அத்தால தாம்பா ஒங்கள கண்டுக்க முடியல. இப்போ இன்னாத்து வந்துக்கீறேன்னு கேக்குறிங்களா, எலிக்ஸன் வந்துடுச்சு, மைக்செட்டு போஸ்டரு பிரியாணில்லாம் பாஸ்ட்டு, இப்போ டிஜிட்டல் போர்டு, டிவி, ஓட்டுக்கு ஐயாயிர்ரூவா துட்டு இத்தானாமே பேஸனு. அதான் கொஞ்சம் கெலிச்சிக்கிட்டு போலாம்ன்னு ரிக்ஸாவுக்கு டாட்டா காட்டிக்கின்னு வந்துட்டேன்.
இந்த தபா எலிக்ஸனுல அல்லாருக்கும் டாட்டா காட்டுனது டாக்டரும் கஜேந்திரரும் தான். சின்ன டாக்டரு தான் "யப்பா, இன்னாபா நீயி, எனுக்கு மந்திரி போஸ்ட்டு குட்த்தாங்கோ, ராஜ்யசபா எம்பி சீட்டு குட்த்தாங்கோ, அவுங்கள வுட்டுப்புட்டு அம்மா கைல சரண்டரு ஆவச் சொல்றியே"ன்னு ஃபீலானாரு. பெர்ய டாக்டரு "மவனே, நீ முன்னாடி மந்திரியா அஞ்சு வர்ஸம் குப்பக் கொட்டுனது பத்தியே ஃபீலிங்காவுற, நானு நீயி இன்னும் அஞ்சு வர்ஸத்துக்கு மந்திரி ஆவணும்ன்னு கணுக்குப் போட்டுக்கின்னு கீறேன்பா"ன்னு எதிர் ஃபீலிங்கு வுட்டுக்கிறாரு. வுட்ட ஃபீலிங்கு கரீட்டு தான் போல, இந்த தபாவும் ஒரு ராஜ்ய சபா சீட்டு உசார் பண்ணிட்டாரு.
கஜேந்திரரு சிஎம்மு தாத்தா போட்ட ரூட்டுக்கே வண்டிய வுட்டுட்டாரு. கஜேந்திரரு நம்மலாண்ட ஒட்டிக்கிட்டு ஓட்டுக் கேக்கறத விட தனியா நிக்கசொல்லோ அம்மா ஓட்ட நெறியா பிரிப்பாருன்னு தாத்தா போட்ட கணக்கு ஒர்க்கவுட்டு ஆயிபூட்ச்சி. இப்போ திமுக கூட்டணியோ கொபசெ கணுக்கா கஜேந்திரரு மைக் செட்ட புட்ச்சிக்கின்னு டாக்டரையும் அம்மாவைவும் கீச்சிக்கின்னு கீறாரு.
இந்த எலிக்ஸனோட பெர்ய காமெடியனே வைகோ தான். எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நல்லவரா கீறாரு. ஒரு சீட்டு கம்மியாகீதுன்னு திமுக கூட்டணில கலண்டுகின்னு வந்த வைகோ இப்போ "சகோதரி, நீயி எத்தன சீட்டு வோணும்ன்னாலும் குடு சகோதரி, அட சீட்டே குடுக்க வாணாம் சகோதரி, உனுக்காக நா கொரலு வுடுறேன்"ன்னு நிக்கிறாரு. அம்மாவும் நம்ம கச்சிக்கு கொரலு குடுக்க மைக்செட்டு முன்ஸாமி கணுக்கா ஆளு வோணுமேன்னு வெச்சிக்கின்னு கீறாங்கோ.
ஆமா, இவங்க அல்லாரும் போன மாசம் வரிக்கும் ஈழப் பெர்ச்சன, எலங்கை ராணுவம்ன்னு கொரலு வுட்டுக்கின்னு இர்ந்தாங்களே, இப்போ எங்கபா ஒரு கொரலையும் காணோம்? கஜினி படத்து சூர்யா கணுக்கா பாலிடிக்ஸு பண்றவங்கோ மற்ந்துபூட்டாங்களா? இல்லாங்காட்டி ஓட்டுப் போடுற மக்கள கஜினி ஆக்கிட்டாங்களா?Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6622134.post-71142080796362194462007-08-22T02:30:00.000-07:002007-08-22T02:32:59.196-07:00சென்னை 368எப்டி கீறிங்கோ மக்களே? சோக்கா கீறிங்களா? "சென்னை 368" டைட்டிலு பாத்து இன்னா நென்ச்சிங்கோ? வெங்கட் பிரபு "சென்னை 600028" எட்த்து சொம்மா பிச்சிக்கின்னு ஓடினதும் நம்ம குப்ஸாமியும் அதே மேரி பயாஸ்கோப்பு எடுக்கப் போறான்னு நென்ச்சிங்களா? அத்தான் கெடியாது. இன்னியோட நம்ம சென்னப்பட்டணத்து வய்ஸு 368 ஆகுதுபா. ஆகஸ்ட் 22 1639ல பொற்ந்த சென்னப்பட்டணம் 368 வர்ஸமா அத்தோட ரவுஸு கொறையாம கீதுபா. குப்ஸாமிக்கு கவுஜ எய்தவும் தெர்யாது கானா பாடவும் தெர்யாது. ஆனாலும் கையி சொம்மா இர்க்க மாட்டேங்குதுபா. அத்தால நம்ம சென்ன பட்டணத்துக்கு ஒரு பொற்ந்தநாளு வாய்த்து எய்த்திக்கீறேன்.
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
கண்குளிர சைட்டடிக்க குயின்மேரிஸு
கண்டதுமே தெரிச்சு ஓட மீனாட்சிகாலேஜு
மனுசனோட புத்திய தீட்ட கன்னிமாரா
சும்மா இருக்குறவன சுத்தல்ல வுடுற சுண்டக்கஞ்சி
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
காத்து வாங்க இருக்கதைய்யா மெரினா பீச்சி
மணி ஏழடிச்சா காட்டிடுமே ஏ படக்காச்சி
முண்ணூறு வருஸமான செண்ட்ஜார்ஜு கோட்ட
இன்னிக்கும் இஸ்ட்ராங்கா நிக்கிதய்யா அடிதடியோட
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
சாம்பார் இட்டிலி துண்ணனுமா சரவணபவன் இருக்கு
சால்னாவும் பரோட்டாவும் ரவுண்டு கட்ட முனியாண்டி விலாஸு
சைனீஸு நூடுல்ஸுக்கு இருக்குபாரு அஞ்சாறு நூடுல்ஸு ஹவுஸு
அஞ்சப்பரும் பொன்னுசாமியும் அங்கங்கே இருந்தும்
ஐய்யா கையேந்திபவன் நாஷ்தா டேஷ்ட்டு கொறையல இன்னும்
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
மூண்ணூத்தி அறுவத்தெட்டு வர்ஸமென்னா
உனுக்கு எண்ணூறு வர்ஸமானாலும் ஜொலிப்பு காட்டுவா
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
- கொஸப்பேட்ட குப்ஸாமிUnknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6622134.post-33037296286480154462007-06-29T00:17:00.000-07:002007-06-29T00:18:59.594-07:00மதுரை மேற்கு - காங்கிரஸ்(??) வெற்றிமதுர மேக்கு தொகுதில காங்கிரஸு 31 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல கெலிச்சிக்கீறாங்கோ. இன்னா தான் தினகரனு, ரவுடி அளகிரி, கவர்ல பணம்ன்னு அல்லாரும் ரவுண்டு கட்டி அட்ச்சாலும் சொல்லி அடிக்கிற கில்லின்னு திர்ம்ப ஒருக்கா அளகிரி அட்ச்சிக்கீறாரு.
காங்கிரஸு ராஜேந்திரன் - 60,785 ஓட்டு
அதிமுக செல்லூர் ராஜு - 29,959 ஓட்டு
தேமுதிக சிவமுத்துக்குமரன் - 21,241 ஓட்டு
இந்த எலிக்ஸன்ல ஆரு படா குஷி ஆகிடுவாங்கன்னு பாக்கசொல்லோ, காங்கிரஸு கட்சி தலீவி சோனியாவ விட, அவங்க பாச அப்பா தமிழ்நாட்டுத் தாத்தா கலீஞர விட, அவரு புள்ள அளகிரிய விட, தமிள்நாட்டுல இன்னும் காங்கிரஸு இருக்குன்னு கெனா கண்டுகின்னுக்கீற சில்லுண்டி காங்கிரஸு பெர்ஸுங்கள விட, கஜேந்திரரு விஜயகாந்து தான் குஷியா இர்ப்பாரு.
அதிமுகல நின்ன செல்லூர் ராஜு உள்ளூர் வெயிட்டு, அத்தால திமுகவே கலீஜாகி தான் நின்னுச்சு. ஆனா சைக்கிளு கேப்பு கஜேந்திரரு சர்ச்சு கோயிலுன்னு ரவுண்டு கட்டி அட்ச்சிட்டு இப்போ 21,241 ஓட்டு வாங்கிக்கீறாரு. இப்போ சொல்லுங்கபா ஆரு படா குஷியா இர்ப்பாங்கோன்னு?Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6622134.post-1165912686149788162006-12-12T00:34:00.000-08:002006-12-12T02:04:46.450-08:00கவுருமெண்ட்டு சொத்து நம்ம சொத்துதாத்தா கலீஞரு அல்லாருக்கும் அள்ளி அள்ளி குட்த்துகினே கீறாருபா. பயாஸ்கோப்பு பொட்டி குட்த்தாரு, ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்குறேன் குடுக்குறேன்னு டகால்ட்டி காட்டுறாரு, டாஸ்மாக்கு ஆளுங்களுக்கு எக்ஸ்ட்ரா துட்டு குட்த்தாரு, பயாஸ்கோப்பு பார்ட்டிங்களுக்கு தமிளுல பேரு வெச்சா டாக்ஸு வாணாம்ன்னு சொல்லிட்டாரு. இப்டி அல்லாருக்கும் குட்த்துகினே கீறப்போ கரவேட்டி பார்ட்டிங்களுக்கு மட்டும் ஒண்ணுமே குடுக்கலையேன்னு மன்ஸுக்குள்ளே ஃபீலாகி இர்ப்பாரு போலக்கீது. இப்போ அவுங்களுக்கும் குட்த்துக்கீறாரு.
இன்னா குட்த்துக்கீறாரு தெர்யிமா? கட்சிக் கூட்டம்ன்னு பேரு பண்ணிகினு மைக் செட்டு மாணிக்கமெல்லாம் இன்னா அளும்பு பண்ணாலும், எந்த கவுருமெண்ட்டு சொத்த வீணாக்குனாலும் அந்தக் கட்சி ஃபைனுல்லாம் கட்ட வாணாம். இதுக்கு அவுரு சொல்லிக்கீற ரீஜனு படா சோக்குபா. கட்சி மைக்கு செட்டு கட்டி கூட்டம் கூட்ட சொல்லோ ஆராவது வந்து பேஜார் பண்ணா அதுக்கு எப்டி அந்தக் கட்சி பொறுப்பாவும். அத்தால அந்தக் கட்சி கையிலே பைசா கேக்கக்கூடாதுன்னு சொல்லிக்கீறாரு. பெர்ய மன்ஸன் பெர்ய மன்ஸன் தான்பா. இன்னாமா சொல்லிக்கீறாரு.
இப்போ ஒரு கண்ணால மண்டபத்துல கண்ணாலம் வெக்கிறோம், எதோ கொய்ந்திங்கோ ரெண்டு மூணு சாமான ஒட்ச்சிடுது, இல்லாங்காட்டி ஆரோ ரெண்டு மூணு எவர்சிலுவரு பாத்திரத்த ஆட்டயப் போட்டுடுறாங்கோ. கண்ணால மண்டப ஓனரு வந்து நம்ம கைல "கண்ணு, இத்த நீயி செய்ல, ஆரோ கண்ணால மண்டபத்துக்கு வந்தவங்கோ செஞ்சுக்கீறாங்கோ. அத்தால இதுக்கெல்லாம் நீயி பைசா குடுக்க வாணா கண்ணு"ன்னு சொல்ற மேரி கீதுபா. கரவேட்டி கண்ணுங்களா, இனிமே நீங்க எத்த ஒட்ச்சாலும் துட்டு குடுக்க வாணாம்பா, என்சாய் பண்ணுங்கோ. வர்ட்டா......Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6622134.post-1164707169378428402006-11-28T01:35:00.000-08:002006-11-29T02:44:11.790-08:00சானியா மிர்ஸா பத்தாவது இடத்திற்கு முன்னேற்றம்குப்ஸாமிக்கு டென்னிஸு புடிக்கும், அதுக்கு மொதோ ரீஜனு பீட் சாம்ப்ரஸு, அப்பாலிக்கா ஃபெடரரு. இப்போ கொஞ்ச வர்ஸமா ரொம்ப ரொம்ப புடிக்கிது. ரீஜனு கீதுபா, அல்லாம் சானியா மிர்ஸா தான். அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்துல கொஸப்பேட்ட குப்ஸாமி பேரு ஆயுளு உறுப்பினரு, அகில ஒலக செயலாளருன்னு போட்ருக்கும். அப்டி ஒரு கில்மா சானியா மேல.
சானியா ஒலக ராங்கிங்குல கொஞ்ச கொஞ்சமா டவுனாகின்னே கீதா, அத்தால இப்போ கொஞ்ச நாளா குப்ஸாமி படா ஃபீலிங்கு ஆயிட்டான். ஃபீலிங்குல இர்ந்த குப்ஸாமிக்கு பட்ட பட்டயா ஊறுகா தொட்டுக்கின்னு பத்து பாட்டிலு பட்ட சரக்க அட்ச்ச மேரி ஒரு நூஸு கெட்ச்சிக்கீது. சானியா மிர்ஸா டென்னீஸு ஆட்டக்காரங்கள்ல பத்தாவது எடத்துல கீதாம். அது எப்டிபா ஆட்டத்துல தோத்துகினே இந்தப் பொண்ணு பத்தாவது எட்த்துக்கு வந்துச்சுன்னா பாக்க சொல்லோ "அயகான டென்னிஸு ஆட்டக்காரிங்கள்ல பத்தாவது எடம்" சானியாவுக்கு கெட்ச்சிக்கீதாம்.
இத்த மேரி ஒரு லிஸ்ட்டு போட்டது சீனாக்காரனுங்கோ. சீனாக்காரனுக்கு மூளையே மூளபா. அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்து சார்பா சீனாக்காரனுங்களுக்கு ஒரு டாங்க்ஸ் பார்ட்டி வெக்கணும். வர்ட்டா..............Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6622134.post-1159436660320499202006-09-28T02:43:00.000-07:002006-09-28T15:56:08.376-07:00அந்தர்பல்டி திருமாஅந்தர்பல்டி அவார்டு ஒரு சீசனுல மரவெட்டி மருத்துவரு கையிலே இர்ந்துச்சு. அப்பாலிக்கா அத்த கருப்புத்துண்டு பார்ட்டி எட்த்துகின்னாரு. அவரோட கொஞ்ச நாளு ரவுண்டு வுட்ட மப்புல இப்போ நம்ம திர்மா அந்தர்பல்டி அவார்டு வாங்கிக்கினாரு. சோக்கா கீது இவங்க அடிக்கிற பல்டியெல்லாம். ஒலிம்பிக்ஸுனு ஏதோ கீதாமே, அத்துல அட்ச்சா எதுனா களுத்துல மாட்டி அனுப்பிவுடுவாங்கோ.
முன்னே ஒருக்கா கலீஞரு கூட நிண்ணு ஒரு சீட்டு கெலிச்சாரு. அப்பாலிக்கா இன்னா நென்ச்சாருன்னு தெர்ல முட்டாயி வாணாம்ன்னு தூக்கிப் போடுற கொளந்த கணுக்கா அய்துகினே "எனுக்கு எம்.எல்.ஏ சீட்டு வாணாம்"ன்னு பூட்டாரு. மறுக்கா மரவெட்டி ஐயா கலீஞரு தாத்தா கையிலே சேர்ந்துக்கோபான்னு கூப்டப்போ, தாத்தா "வோணும்ன்னா உங்கிட்டே கீற சீட்டுல அவுனுக்கு ரெண்டு குடு"ன்னு சொன்னாரு. அப்போ "எச்சி சோறு எனுக்கு வாணாம்"ன்னு சோக்கா டயலாக்கு வுட்டு அம்மா கையிலே 9 சீட்டு வாங்குனாரு.
இப்போ மறுக்கா வந்து கலீஞருக்கு மஞ்சா சால்வ போத்தி "காலத்தின் கட்டாயம், நான் அங்கே அவமானப்படுத்தப்பட்டேன்"ன்னு டயலாக்கு வுடுறாரு. கலீஞரும் பெர்ய மன்ஸோட "எங்கையிலே கீற சீட்டுல வுனுக்கும் தரேன் கண்ணு"ன்னு டயலாக்கு வுடுறாரு. டயலாக்கெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா, குப்ஸாமிக்கு ஒரே ஒரு டவுட்டு. முன்னே "மரவெட்டி கையிலே கீற சீட்டுல ரெண்டு குடு"ன்னு சொன்னப்போ எச்சிலு சோறா தெர்ஞ்சது இப்போ தன்னோட கையிலேர்ந்து தாத்தா எட்த்து குடுக்கசொல்லோ "புச்சா வடிச்ச சுடுசோறா" தெர்யிதா? சோக்கா கீதுபா ஒங்க நாயமெல்லாம்.
திருமா அந்தர்பல்டி அட்ச்சாச்சு. இன்னும் மிச்சம் கீற கருப்புத்துண்டு பார்ட்டி, சித்தப்பா சரத்குமாருல்லாம் இன்னா டயலாக்கு வுடலாம்ன்னு மைண்ட மிக்ஸில அட்ச்சி ரோசனப் பண்றாங்கோ. சீக்கிரம் நீங்களும் வந்து தாய் களகத்துல சீட்டப் புடிங்கபா.Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6622134.post-1157010415621383682006-08-31T00:27:00.000-07:002006-08-31T03:03:33.816-07:00கானா கோபால்சாமி
வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அங்கே சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம்ம்ம்ம்ம்
நன்றி: தினமலர்.காம்Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6622134.post-1156668362587075912006-08-27T01:44:00.000-07:002006-09-28T19:37:09.043-07:00கட்டிப்புடி வைத்தியம்உம்மா அரசரு ஒலக நாயகரு வசூல்ராசாவா வந்து கட்டிப்புடி வைத்தியம் கத்துக் குட்த்தாரே ஞாபகம் கீதாப்பா. அவுருக்கு அந்த வைத்தியத்த இஸ்கூல்ல கிளாஸ் எட்த்தவரு பிரிட்டன்ல கீற நம்மூரு வைத்தியரு பெஞ்சமின் தியோதரு போலக்கீது. இந்தக் கட்டிப்புடி வைத்தியத்த நம்மாளு செப்டம்பர் 1991லேந்து சோக்கா செஞ்சுகின்னு கீறாரு. 63 வய்ஸு ஆன பொறவு கூட கட்டிப்புடி வைத்தியத்த தலீவரு வுடல போலக்கீது, வைத்தியத்துக்கு வந்த ஒரு அம்மா கையிலே கட்டிப்புடி வைத்தியத்த காட்ட, அந்தம்மா போலீஸுக்கு பூட்ச்சி. இப்போ தாத்தா ஜெயில் கம்பி கூட கட்டிப்புடி வைத்தியம் செஞ்சுகின்னு கீறாரு.
இந்த மேட்டர நம்ம கஜேந்திரரு கையிலே போட்டு வெக்கலாம்ன்னு குப்ஸாமி நென்ச்சிக்கின்னு கீறான்பா. இன்னாத்துக்குன்னு கேக்குறிங்களா? கஜேந்திரரு கையிலே சொன்னாக்கா, அவுரு பயாஸ்கோப்புல ஒரு சீன செட் பண்ணி "நீயெல்லாம் ஒரு டாக்டராடா, கடவுளுக்கு அப்புறம் நம்ம மக்கள் காப்பாத்துவார்ன்னு நம்பி வர்றது உங்களை மாதிரி டாக்டர் கிட்டே தான். புருஷனுக்கு அப்புறம் நம்ம பொம்பளைங்க அவங்க உடம்பை வெளியிலே காட்டுறதும் உங்களை மாதிரி டாக்டர்ங்க கிட்டே தான். அப்படி நம்பி வர்றவங்களை ஏமாத்துற நீயெல்லாம் ஒரு டாக்டராடா"ன்னு டயலாக்கு வுடுவாரு. வுடுற டயலாக்குல டாக்டருங்களுக்கு ஒரு நாக்கவுட்டு குட்த்த மேரியும் இர்க்கும், மருத்துவரு ஐயாவுக்கும் சின்ன மருத்துவருக்கும் ஒரு பஞ்ச் வுட்ட மேரியும் இர்க்கும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!!!!!!!!!!!!!!!!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6622134.post-1153563343037872602006-07-22T03:13:00.000-07:002006-07-22T03:16:22.413-07:00பட்ஜெட் 2006சட்டசபையிலே வாஸ்து பாத்து சீட்ட கரீட்டு பண்ணாங்களோ இல்லியோ, அத்தெல்லாம் மேட்டரே கெடியாது. இனிமே பட்ஜெட்டு படிக்கசொல்லோ கேப்டரு கஜேந்திரா இல்லாம வேற ஆரும் பட்ஜெட்ட புடுங்கி கிளிச்செறிய முடியாது. கேப்டருன்னா சொம்மா வானத்துல சொய்ய்ன்னு டைவு அட்ச்சி வந்து புடுங்கிடலாம், வேற ஆருங்காட்டி முடியுமா? பத்து அடி கேப்பு வுட்டுக்கீறாங்கோ.
இந்த தபா பட்ஜெட்டுல அல்லாரையும் சோக்கா தாஜா பண்ணிக்கீறாங்கோ. மெயினா வயித்துல துணிய கட்டிக்கின்னு கீற வெவசாயிங்கோ வயித்துல பாலு.
புச்சா வரி எதுவும் கெடியாது.
விவசாய கடனுக்கு வட்டி ஏழு பர்செண்ட்டு.
ரேஸன் அரிசிங்காட்டி தள்ளிகின்னு போனா குண்டர் சட்டத்துல உள்ள புட்ச்சிப் போட்டுருவாங்கோ
எலவச சைக்கிளு, எலவச பஸ் பாஸ் அல்லாம் அப்டி அப்டியே கீது
சென்னையிலேயும் கோவையிலேயும் புச்சா ரெண்டு டைடலு பார்க்கு
இஷ்டிரைக்கு பண்ணவங்களுக்கு இஷ்டிரைக்கு டைமுல கெடிக்க வேண்டிய துட்டு
தமிழ்ல சாப்ட்டுவேரு எய்துனா வரி கெடியாது (க்ருபா எய்துன பொறம்போக்குக்கு வரி உண்டாபா?)
பயாஸ்கோப்பு பேரு தமிளுல வெச்சா வரி கெடியாது (மருத்துவரு குஸி ஆகிடுவாரு)
அல்லாம் சோக்கா தான் கீது. ஆனா அல்லாமே அடுத்த உள்ளாச்சி எலிக்ஸன மன்ஸுல வெச்சி போட்ட மேரி கீது. அடுத்த பட்ஜெட்டுல எதுனா ஆப்பு வருமான்னு தெர்லபா.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6622134.post-1149410081454645642006-06-04T01:32:00.000-07:002006-08-27T04:07:44.990-07:00டையமண்டு கவிஞரின் கண்ணகி பொராணம்சிஎம்மு தாத்தாவுக்கு நேத்து பொறந்தநாளு. "வாய்த்த வயசு கெடியாதுபா, வணங்குறேன்"ன்னு அல்லாரும் டயலாக்கு வுட்டுகின்னே காலுல வுய்ந்துருப்பாங்கோ. தாத்தா எலிக்ஸனுக்கு முன்னாடி சொன்ன மேரி அரிசி குடுக்க ஆரம்பிச்சிட்டாரு, கொஞ்ச நாளுல டிவி பொட்டியும் குடுப்பேன்னு சொல்லிக்கீறாரு. கண்ணகி செலைய கூட மருக்கா தொறந்து வெச்சிக்கீறாரு. அல்லாம் சோக்கா தான் கீது.
அல்லா மேட்டரையும் சொம்மானா பாத்துக்கின்னு இர்ந்த குப்ஸாமிக்கு கண்ணகி மேட்டருல தான் ஒரு டகால்டி கெட்ச்சிதுபா. இன்னாங்குறிங்களா? சொல்றேன் சொல்றேன். பகுத்தறிவு பாசறையிலே பாலு குட்ச்சி வளந்துபுட்டு மஞ்சத்துண்டு போட்டா மன்ஸுக்கு எதமா கீதுன்னு சொல்லிக்கின்னு கீற தாத்தா குந்திகின்னு இர்ந்த மீட்டிங்கில கவிப்பேரரசு டயமண்டு கவிஞரு ஒரே டயலாக்கா வுட்டுக்கின்னு கீறாரு.
"கண்ணகி சிலை வெறும் உலோகம் இல்லை, எங்கள் உலகம்".
ஒகே கரீட்டு.
"தலைவிரி கோலத்துடன் கண்ணகி சிலை இருப்பது சென்னை நகரத்திற்கும் தமிழகத்திற்கும் அபசகுணம் என்பதால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது"
இதுவும் ஒகே, வெச்சுக்குவோம்.
"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"
இது தான் கவிஞரே இடிக்கிது. எங்கேயோ இருக்குற இந்தோனேஷியாவுல பூமி குலுங்க, அதோட அதிர்ச்சி தமிள்நாடு தாண்டியும் அட்ச்சிது. கண்ணகி செலங்காட்டி அங்க இர்ந்தா அம்மிணி டிராஃபிக்கு போலீஸு கணுக்கா சுனாமிய வேற ரூட்டுக்கு டைவர்ட்டு பண்ணி வுட்டுருக்கும்ன்னு சொல்லுறது கொஞ்சம் டூ மச்சா கீது கவிஞரே. அதுவும் பகுத்தறிவு பாசறையிலே தாத்தா குட்ச்ச மிச்ச பால குட்ச்சி வளந்தவரு நீங்க. தாத்தா பக்கத்துல குந்திகின்னே இப்டி பேஸ்றிங்களே, நாயமா கீதா?Unknownnoreply@blogger.com23tag:blogger.com,1999:blog-6622134.post-1148306111592795002006-05-22T06:45:00.000-07:002006-05-22T11:43:26.213-07:00எலிக்ஸன் 2060 - ஒரு ரிக்ஸா ரவுண்டப்இன்னா குப்ஸாமி, தேன்கூடு நடத்துன எலிக்ஸனு 2060 போட்டி தான் இருவதாம் தேதி முட்ஞ்சி போச்சே இன்னிக்கு இன்னா எய்திக்கீறேன்னு ஆரும் ஃபீலாவதிங்கபா. நானு எலிக்ஸனு 2006ல ஓட்டுக் குத்த முடியாம பூட்ச்சேன்னு படா ஃபீலிங்ஸுல கீறேன் (மாமியாரு வூட்டுல கறிசோறு துன்னப் போயிட்டேன்பா, நீயி நெனைக்கிற மாமியாரு வூடு இல்லபா, இத்து மெய்யாலுமே மாமியாரு வூடு). 2006ல ஓட்டுப் போடல, நீயி 2060 பத்தி இன்னாத்துக்கு ஃபீலிங்ஸு வுடப் போறேன்னு நம்ம மன்ஸாட்சி கேட்டுபுட்ச்சி, அத்தான் ஒண்ணும் சொல்லாம கலண்டுகினேன், ஆனா போட்டியிலே எய்துனவங்கோ சோக்கா இன்னா இன்னாமோ சொல்லிக்கீறாங்கோ, அத்த பட்ச்சி நாம ஓட்டுப் போட்டா தான அவுங்க கெலிச்சு வர முடியும். அத்தால, அல்லாரும் மறக்காம ஓட்டுப் போட்டுறுவோம் கொயிந்திங்களா!!!
இப்போ ஆராரு இன்னா எய்திக்கிறாங்கோன்னு ஒரு தபா கண்டுகிறேன்.
1. நீ இருபது நான் அறுபது - இணைய குசும்பன்
இவுருக்கு படா தில்லுபா. அல்லாரும் 2006 பத்தி கூவிக்கின்னு கீறப்போ தோ வுட்டேன் பாரு 2060ன்னு மொதோ கதிய இஸ்துகின்னு வந்து வுள்ளார போட்டாரு. குசும்பரு சூப்பர் சானிக்குன்னு சொல்றாரு, அத்த என்னோட ரிக்ஸாவாண்ட போட்டிக்கு வர்றியான்னு கேக்கலாம்ன்னு கீறேன். ஃபன் நெட்வொர்க்கு, பாயா டிவி, மண்கொண்டான், பொன்கொண்டாள்ன்னு ரவுண்டு கட்டி அட்ச்சிக்கீறாரு. அதுக்கே அவுருக்கு ஓட்டுப் போட்டுறலாமா, அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
2. தேர்தல் 2060 - கோகுல் குமார்
இன்னா தான் 2060 வந்தாலும் அன்னாடங்காச்சிங்க பொளப்பு துண்ட காணோம் துணிய காணோம்ன்னு தான் கெடக்கப் போவுதுன்னு சொல்றாரு கோகுலு. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நம்ம பொளப்பு நம்ம கையில தான்பா கீதுன்னு சொம்மா நெத்திப்பொட்டுல கின்னுன்னு அட்ச்சிச் சொல்லிக்கீறாரு. அதுக்கே அவுருக்கு ஓட்டுப் போட்டுறலாமா, அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
3. தேர்தல் 2060 சில குறிப்புகள் - பாஸ்டன் பாலாஜி
இன்னாமா கண்ணுங்களா 2006 எலிக்ஸனுக்கு மட்டும் தான் கருத்துக்கணிப்பு நடத்தணுமா, நா நடுத்துறேன் பாருபா 2060க்குன்னு ஒரு கருத்துக்கணிப்பு நடத்திக்கீறாரு பாபா. கருத்துக்கணிப்புல கணிப்பு எதுனா சொல்லலாம், ஆனா கணிப்புக்கே ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
4. தேர்தல் 2060 - பங்ஸ்பார்ட்டி
ஜனநாயகம் எல்லாம் பணநாயகமா பூட்ச்சி, அத்தால எலிக்ஸனு மாறி பூட்ச்சு. கச்சிக்காரங்களே எலிக்ஸனு வெச்சிக்கீறாங்கோன்னு ஆரம்பிச்சி சயன்ஸு ஃபிக்ஷனு டகால்டில்லாம் வுடாம 2006 மேரியே எலிக்ஸனு வெச்சி கலீஜு வேல எல்லாம் பார்த்து எலிக்ஸனுல கெலிச்சுப்புட்டாங்கோன்னு சொல்லிக்கீறாரு. ரோசன செஞ்சு பாக்கசொல்லோ அப்டி கூட நடக்கும்ன்னு தோணுது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
5. தனியைத் தக்க வை - நடராஜன்
நம்ம நடராசரும் அறிவியல் அவியல் தான் சமைச்சுக்கீறாரு. சொம்மா சொல்லக்கூடாது, நல்லா டேஸ்ட்டாவே சமைச்சுக்கீறாரு. எந்த ஊர்ல குந்திகினும் சொந்த தொகுதியிலே ஓட்டுக் குத்தலாமாம் 2060ல. இதுங்காட்டி இப்போவே இர்ந்துச்சுன்னா மாமியாரு வூட்டுல குந்திக்கினே குப்ஸாமி ஓட்டுப் போட்டுருப்பேன், கை நயுவி பூட்ச்சி. பொண்ணுங்களுக்கு சம உரிமையாம் அல்லாத்துலேயும், படிக்கசொல்லோ சோக்கா தான் கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
6. தேர்தல் 2060 - பெனாத்தல் சுரேஷ்
2006 எலிக்ஸனுக்கே அட்ச்சி தூள் கெளப்புனாரு, 2060 எலிக்ஸன சொம்மாவா வுடுவாரு. இதுலியும் அட்ச்சி பின்னி பெடலு எட்த்துக்கீறாரு. இவுரு எய்துனதும் அறிவியல் பூனை ச்சே புனைகதை தான். கத நடுந்துகின்னு கீறப்போ ஊடால "இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்" வர்றசொல்லொ குபீர்னு சிரிப்பு வருது. கடேசில கதிய முடிச்சிக்கீறதும் சோக்கா தான் கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
7. தேர்தல் 2060: சரித்திரம் திரும்புமா? - ராமச்சந்திரன் உஷா
உஷா எய்திக்கீரதும் அறிவியல் அவியலு தான். மன்ஸனோட ப்ரீடம் மண்ணா பூட்ச்சி 2060ல, மறுக்கா பளைய மேரி எலிக்ஸனு வருமான்னு ஃபீலாவுது இந்தக் கத. 2060லேயும் ஒரு பயாஸ்கோப்பு பார்ட்டி எலிக்ஸனு டைமுல கச்சி ஆரம்பிச்சு டகால்டி காட்ட ஆரம்பிக்கிறாரு. அல்லாரும் தாத்தா சுஜாதாவோட "என் இனிய இயந்திரா" கத மேரி கீதுன்னு சொல்லிக்கீறாங்கோ. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
8. தேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் - குந்தவை வந்தியதேவன்
குளம்படி கதிங்களும், குடும்ப கதிங்களுமா எய்திகினு இர்ந்தவரு எலிக்ஸன் 2060க்கு கத எய்திக்கீறாரு. சொம்மா சொல்லக்கூடாது, சோக்காவே எய்திக்கீறாரு. தாத்தா சுஜாதாவோட கதிங்கள ஓவரா பட்ச்சிருப்பாரு போலக்கீது, மண்டைக்குள்ள மசாலாவெல்லாம் வெக்கிறதா சொல்லி பயா|ஸ்கோப்பு காட்டுறாரு. கதயிலே தாத்தா, அம்மாவெல்லாம் கூட மெய்யாலுமே வந்து போறாங்கோ, படிக்கசொல்லோ ஒரே குஜாலா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
9. பிறிது - பச்சோந்தி
எலிக்ஸன் 2060ல இன்னா மேரி வாக்குறிங்க அல்லாம் மக்களுக்கு நம்ம பாலிடிக்ஸு பார்ட்டிங்கோ குட்ப்பாங்கோன்னு ரொம்பவே ரோசன பண்ணி எய்திக்கீறாரு. 2060ல நடக்குற மேட்டருங்களா செல விஸ்யம்ல்லாம் சொல்றப்போ தற்கொல கணக்கு மன்ஸ பேஜார் பண்ணுது (இப்போ நம்ம பார்ட்டி ஷ்ரதா கழுத்துல கயித்த மாட்டிகின்னு தொங்கி பூட்ச்சிபா, குப்ஸு ஃபீலிங்ஸு ஆயிட்டான்). 2060ல நடக்கப்போற எலிக்ஸனு பத்தி நெறியா பாயிண்டு சொல்லிக்கீறாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
10. கொட்றாங்கோ! கொட்றாங்கோ!!! - demigod
இதுவும் அறிவியல் அவியலு தான். ஆனா பொஸுக்குன்னு கதிய முட்ச்சிடுறாரு. 2006 எலிக்ஸனுல நம்ம பாலிடிக்ஸு பார்ட்டிங்கோ குட்த்த இஷ்டேட்மெண்டெல்லாம் சோக்கா கலாய்க்கிறாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
11. எனது டைரி - 10/3/2060 - கனா
கனா, பேருக்கு ஏத்த மேரியே நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுல்லாம் பலிச்சிட்ச்சுன்னு டைரி குறிப்ப ஆரம்பிக்கிறாரு. 2060ல அல்லாரும் பட்ச்சவங்களா கீறாங்கோ, ஜோலி இல்லாம கீற ஆளுங்கோ ரொம்ப கம்மியா பூட்டாங்கோ. நம்ம கஜேந்திரா வுட்ட கொரலுல ஊழலு கூட கம்மியா பூட்ச்சி. ஜாதிய சொல்லி எட ஒதுக்கீடு கெடியாது, அரசியலு காலேசுன்னு கலாசுறாரு. படிக்கசொல்லோ இந்தக் கனவுல்லாம் மெய்யாலுமே நடந்தா சோக்கா இருக்கும்ன்னு தோணுது. இத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
12. தேர்தல் 2060 - டுபுக்கு
அறிவியல் அவியலு எய்துன அல்லாரும் தாத்தா சுஜாதா பாணிய சுட்டு எய்துறோம்ன்னு சொல்லாம சொல்லிக்கீறாங்கோன்னா இவரு இஷ்டார்ட்டு பண்றப்போவே "இந்தக் கதிய பட்ச்சா தாத்தா நாபவம் வரும்பா"ன்னு சலாம் வெச்சிடுறாரு. சொல்ற மேரியே தாத்தா ரூட்டுலேயே இந்தப் பேரனும் எய்திக்கீறாரு. கதிய பட்ச்சி முடிக்கசொல்லோ நம்ம ஐஐடி கொய்ந்திங்கோ ஆரம்பிச்சு புட்டுகின்ன லோக் தரித்திரன் ச்சே லோக் பரித்ரன் தான் மைண்டுல வந்து நிக்கிது. கத சொல்ற ஃப்ளோ சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
13. தேர்தல் - 2060 - பாலா
இதுவும் அறிவியலு அவியலு தான். அறிவியலு கத எய்துற அல்லாருமே புச்சு புச்சா ரோசன சொல்லிக்கினே போறாங்கோ. இவுரும் சோக்கா ரோசன சொல்றாரு. அல்லா கச்சியும் கம்பெனியா மாறி பூட்ச்சாம். எந்த கம்பெனிக்கு வோணும்ன்னா எலிக்ஸன்ல குத்தலாம், ஆருமே வேணாம்ன்னும் சொல்லலாம், புட்ச்சவங்கோ பேரையும் சொல்லலாம். சோக்கா கீது. கடேசியா கதிய முட்ச்சதும் சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
14. தேர்தல் 2060 - சிறில் அலெக்ஸ்
2021ல பெர்சா மின்னணு பொர்ச்சி வந்து ஒலகமே மாறி பூட்ச்சின்னு ஆரம்பிக்கிறாரு. இவுரு பேஸ்ர தமிள அமெரிக்கால கீற இங்கிலீஸுக்கார சொக்கா போட்ட மச்சான் சோக்கா புர்ஞ்சிக்கிறான், அவன் சொல்றத இவுரு புர்ஞ்சிக்கீறாரு. அதுக்கெல்லாம் மெசினு கண்டுபுட்ச்சிட்டாங்கோ அப்போ. சிறிலு சார், நம்ம கொஸப்பேட்ட தமிளுக்கு எதுனா கீதாபா? இவுரோட கதியும் எய்துன ஃப்ளோவும் கடேசில முடிக்கிறதும் சோக்கா கீது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
15. நேற்று இன்று நாளை - ஆனந்த் சங்கரன்
நேத்து எப்டிபா இர்ந்துச்சு எலிக்ஸனு (50 வர்ஸத்துக்கு முன்னால), இப்போ எப்டிபா கீது, நாளிக்கு எப்டிபா இர்க்கும் (50 வர்ஸத்துக்கு அப்பால), மூணுத்தையும் லிஷ்ட்டுப் போட்டு பெர்ஸா ஒண்ணும் ஆகிடாதுபா, அத்தே தான் அப்டியே இர்க்கும்ன்னு சொல்லிட்டாரு ஆனந்து. படிக்கசொல்லோ அப்டியும் நடக்கலாம்ன்னு தோணுது. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
16. 2060 - தேர்தலை நடத்தப்போவது யார்? - இரா.சுகுமாரன்
ஆனந்து சொன்ன மேரி தான் சுகுமாரும் செஞ்சிக்கீறாரு. ஆனா நெறியா மேட்டர உள்ளார இஸ்துகின்னு வந்து வுட்டுக்கீறாரு. படிக்கசொல்லோ இதான் நடக்கப் போவுதோன்னு தோணுது. தண்ணிய நம்பி வெவசாயம் பண்ணவன் எல்லாம் குப்ஸாமி மேரி ரிக்ஸா வளிச்சிகின்னு போவணும் போல. பறக்குற காரு வந்தாலும் அன்னாடங்காச்சிங்க பொயப்பு என்னைக்குமே நாறிப் போன பொலப்பா தான் இர்க்கும் போலக்கீது. நல்லா மன்ஸுக்குள்ளே பச்சக்குன்னு ஒட்டிக்கிற மேரி சொல்லிக்கீறாரு சுகுமாரு. அத்த வெச்சு அவுருக்கு ஓட்டுக் குத்தலாமா? அத்த நா சொல்லக்கூடாது, நீங்க தான் பட்ச்சிப் பாத்து போடணும்.
அல்லாருக்கும் பட்ச்சிப் பாத்து தான் போடணும்ன்னு சொல்றியே குப்ஸு, நீ ஆருக்குபா எலிக்ஸனுல குத்தப் போறேன்னு கேக்காதிங்கோ. ஓட்டுக் குத்திப்போட்டு வந்து ரெட்ட வெரலு காட்ட நா இன்னா சூப்பரு இஷ்டாரா? ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமி சார். பட்ச்சிப் பாக்கசொல்லோ புட்ச்ச கதிங்களுக்கு ஒரு குத்து குத்திட்டு போய்கினே இர்க்க வேண்டியது தான். நம்ம பொலப்ப நாம பாக்க வாணாமா?
நீங்களுகும் மறக்காம ஓட்டப் போட்டுறுங்கபாUnknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6622134.post-1145799343921703842006-04-23T06:33:00.000-07:002006-05-17T22:24:15.616-07:00எலவசமாம் எலவசம் - பார்ட் 2தாத்தா ஒரு சைடுல ரெண்டு ரூவாய்க்கு அரிசி, ரெண்டு ஏக்கரு நெலம், கலரு பயாஸ்கோப்பு பொட்டி, அத்துல பயாஸ்கோப்பு பாக்க கேபிளு டிவி அல்லாம் குட்க்கிறேன்னு சொல்றாரு. அம்மா ஒரு சைடுல, ரெண்டு ரூவா இர்ந்தா அரிசி போடுவேன்னுல்லாம் கறாரா இர்க்க மாட்டோம்பா நாங்கோ, உனுக்கு துண்றதுக்கு சோறு வோணுமா நேரா ரேசனு கடையாண்ட வா, பத்து கிலோ அரிசிய அப்டியே அமுக்கிக்கின்னு போன்னு சொல்றாங்கோ. இவுங்கல்லாம் வுடுற கொரலு போதாதுன்னு நம்ம கஜேந்திரரு ஒரு சைடுல "இன்னாத்துக்கு நீயி கடையாண்ட வரணும்? ஒன்னோட ஊட்டுக்கு வந்து குடுக்கச் சொல்றேன் பாஞ்சி கிலோ அரிசி"ன்னு சொல்றாரு. அத்தோட வுட்டாரா!!! பலசரக்கு சாமான் வாங்க ஐநூறு ரூவா தர்றேன், ரெண்டு புள்ள பெத்துக்குற அல்லாருக்கும் அந்த ரெண்டு புள்ளிங்களும் மூணு வயிசு ஆவுற வர என்னோட கொய்ந்திங்கோ மேரி பாத்துக்க மாசம் ஐநூறு ரூவா தர்றேன்னு சொல்றாரு. அல்லாமும் குட்த்துட்டு கூடவே ஒரு சீமப்பசுவும் குடுக்குறாராம். இந்த எலிக்ஸனே ஒரு எலவச எலிக்ஸனா இர்க்கும் போலக்கீது.
இத்தல்லாம் பாக்கசொல்லோ குப்ஸாமிக்கு ரிக்ஸா மிதிச்சு சம்பாரிக்க வாணாம்ன்னு தோணுது. இன்னோரு மேட்டரும் குண்ஸா வந்து மன்ஸுக்குள்ளே குந்திக்கிச்சு. அத்து இன்னான்றிங்களா? எலவசமா இத்தெல்லாம் தர்ற தாத்தா, அம்மா, கஜேந்திரரு அல்லாரையும் சிஎம்மு ஆக்கிபுட்டா இன்னா? கஜேந்திரரு வூட்டாண்ட வந்து குடுக்குற பாஞ்சி கிலோ அரிசி போதலன்னா ரேசனு கடையாண்ட போயி அம்மா பேரச் சொல்லி பத்து கிலோ அரிசி வாங்கிக்கலாம். எலவசமா கெடைக்கிற இருவத்தஞ்சி கிலோ அரிசி பத்தாங்காட்டி மட்டும் தாத்தா குடுக்குற அரிசிய ரெண்டு ரூவாய்க்கு வாங்கி துண்ணலாம். பயாஸ்கோப்பு பொட்டி தாத்தா குடுப்பாரு, அத்த வெச்சி பயாஸ்கோப்பு பாத்துக்கலாம். கஜேந்திரரு பசுமாடு குடுப்பாரு, பாலக் கறந்து நல்லா குடிக்கலாம். தாத்தா குடுக்குற ரெண்டு ஏக்கரு நெலத்த வச்சி சொம்மா வேடிக்கப் பாக்கலாம் (அல்லாமே எலவசமா குடுக்குறப்போ இன்னாத்துக்கு வேல செய்யணும்).
இன்னாபா சொல்றிங்கோ, அல்லாரையுமே சிஎம்மு ஆக்கிப்புடலாமா?Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6622134.post-1144658352178222842006-04-10T01:37:00.000-07:002006-04-15T09:38:51.656-07:00எலவசமாம் எலவசம்எலவசம் குடுக்குற மேட்டருல கருப்புத்துண்டு வைகோவுக்கும் தாத்தாவுக்கும் எதுனா உள்குத்து கீதோன்னு தோணுதுபா. நீயி அம்மா சைடு போயி கொரலு வுடு, நானும் எதிர்கொரலு வுடுறேன்னு தாத்தாவே அனுப்பிருப்பாரோன்னு தோணுது. "நா அடிக்கிற மேரி அடிக்கிறேன், நீயி அயுவுற மேரி அயுவு" கத தான். ரெண்டு ரூவாய்க்கு எப்டி அண்ணாத்தே அரிசி குடுப்பேன்னு இவரு கேக்க, "இப்டி குடுப்பேன் தம்பி"ன்னு இவரு எதிர்கொரலு குடுக்குறாரு. "டிவி பொட்டி எப்டி அண்ணாத்தே குட்ப்ப"ன்னு இவரு கேக்க, "இப்டி இப்டி குட்ப்பே"ன்னு அவரு மறுக்கா எதிர்கொருலு வுடுறாரு. கட்டே கடேசியா கருப்புத்துண்டு அட்ச்சாரு பாரு அடி, அது அம்மாவுக்கு செம்ம அடி. "டிவி குட்த்தா போதுமா, கேபிளு எலவசமா குட்ப்பியா"ன்னு கொரலு வுட்டாரு. "ஆனையே குடுக்குறேன், அங்குசமா குடுக்க மாட்டேன், வோணும்ன்னா அதுவும் குட்ப்பேன்"ன்னு தாத்தா எதிர்கொரலு வுடுறாரு.
இப்டியே அம்மா கட்சில சைடு வுட்டுக்கின்னு தாத்தாவுக்கு கொளுகப்பரப்பு செய்றாரு கருப்புத்துண்டு. சூப்பரு ஐடியா தான் போலக்கீது. தாத்தா சீட்டுல வந்து குந்திகினா, "அண்ணாத்தே, நா அப்டி கேள்வி மேல கேள்வியா கேக்கசொல்லோ தான நீயி கெலிச்ச"ன்னு மேடையிலே ஒரு அளுவாச்சிய போட்டுடுவாரு கருப்புத்துண்டு. "நீரடிச்சி நீரு வெலகுமா தம்பி"ன்னு தாத்தாவும் ஒரு அளுவாச்சிய போட்டு ஒண்ணு சேத்துக்குவாரு. அதுலயும் தாத்தா பெர்ய கில்லாடி, ரைட்டு ஃஹேண்ட கருப்புத்துண்டு மேல போட்டுக்கின்னு லெஃப்ட்டு ஃஹேண்டால பேராண்டி கைல "இத்த சன் டிவில காட்ட வாணாம்"ன்னு சொல்லிடுவாரு.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6622134.post-1140938453567898322006-02-25T23:19:00.000-08:002006-04-01T02:32:26.370-08:00சூப்பர் கூட்டணிநம்மூர்ல பெர்ய கன்ஃபூஸன்ல கீறது யார்பான்னு கேட்டா அல்லாரும் "தாத்தா கலீஞரு"ன்னு கரீட்டா சொல்லுவாங்கோ. அல்லாம் கூட்டணி மேட்டரு தான். கருப்புத்துண்டு மாமா ஒரு சைடா இஸ்துகின்னு போவேன்னு கொரலு வுடுறாரு. பீச்சாங்கை சைடுல மரவெட்டி ஐயா "குட்த்தா கருப்புத்துண்டுக்கு குட்குறத வுட ரெண்டு கூட குடு, இல்லாங்காட்டி என்னிய வுடு"ன்னு கொரலு வுடுறாரு.
தாத்தா கன்ஃபூஸன் வெளில தெர்ஞ்ச கன்ஃபூஸன், அம்மா கன்ஃபூஸனே இல்லாத மேரி காட்டிக்கின்னு பெர்ய கன்ஃபூஸன்ல கீறாங்கோ. கதவ தொற்ந்து வெச்சிக்கீறேன், ஜன்னல தொற்ந்து வெச்சிக்கீறேன்னு டயலாக்கு வுட்டுக்கின்னு சுத்துறாங்கோ.
ரெண்டு பேர்க்குமே ஒரே கன்ஃபூஸன் கூட்டணி தான். இந்த கன்ஃபூஸன களட்டிவுடணும்ன்னா இன்னா செய்யலாம்ன்னு ரெண்டு பேரும் ரோசன சேஞ்சிருப்பாங்கோ போல. "இன்னிய சீஃப் மினிஷ்டரு நானு, அன்னிய சீஃப் மினிஷ்டரு நீயி, இன்னாத்து கண்டவனுக்கு கதவ தொற்ந்து வெச்சிக்கின்னு இர்க்கோணும். நம்ம ரெண்டு பேருமே கூட்டணி வெச்சிக்கின்னா இன்னா தாத்தா"ன்னு அம்மா கேட்டுருப்பாங்கோ போலக்கீது. தாத்தாவும் "இந்த ஐடியா ஜூப்பரா கீதே"ன்னு நென்ச்சிருப்பாரு போலக்கீது. இந்த எலிக்ஸன்ல ரெண்டு கச்சியும் கூட்டணி போட்டு நிக்கப்போறாங்கோ.
இன்னா நயினா, டவுட்டா கீதா?? டவுட்டு இர்ந்தா இந்த போட்டோவ பாருபா
அம்மா கச்சியும் தாத்தா கச்சியும் ஒட்டுக்கா சேந்து ஓட்டுக் கேக்குறாங்கோ......Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6622134.post-1139903201212244382006-02-13T23:45:00.000-08:002006-02-15T18:08:10.233-08:00புள்ளையப் பெத்தா"தென்னையப் பெத்தா எளநீரு, புள்ளையப் பெத்தா கண்ணீரு"ன்னு ஒரு பளைய பாட்டுக்கீது. சோக்கான பாட்டுபா அது. இப்போ இன்னாத்துக்கு குப்ஸாமி அந்தப் பாட்டுன்னு கேக்குறிங்களா? மேட்டரு கீதுபா. இப்போ அந்தப் பாட்ட தான் நம்ம தமிழ்நாட்டு தாத்தா கலீஞரு பாடிக்கின்னு கீறாராம்.
இருக்குற 234 தொகுதிய கூட்டணிங்களுக்கு எப்டி பிர்ச்சி குட்கற்துன்னே தாத்தா மண்டைய பிச்சிக்கிறாரு (அங்க இன்னாகீது பிச்சிக்கன்னு யார்னா கேக்காதிங்கபா, அப்பாலிகா குப்ஸாமிக்கு பதிலு சொல்லத் தெர்யாது). இதுல உள்கச்சி மேட்டரு இன்னும் பிச்சிக்க வெக்கிது போல.
ஒரு சைடுல இஸ்டாலினு தலீவரு "நைனா எனுக்கு 50 சீட்டு குடு"ன்னு கேக்குறாரு, இன்னொரு சைடுல அளகிரி தலீவரு "நைனா எனுக்கு 40 சீட்டு குடு"ன்னு கேக்குறாரு. இருக்குற ரெண்டு புள்ளிங்கோ போதாதுன்னு வூட்டுக்காரம்மாவும் கேக்குறாங்கோ, அவுங்களுக்கு 5 சீட்டு வோணுமாம். பேராண்டிய வளத்துவுட்டு செண்ட்ரலுக்கு அனுப்பிப்புட்டா போச்சா, அவுருக்கு சீட்டு குடுக்கலன்னா ரீஜண்டா இர்க்குமா, அவுருக்கு 10 சீட்டு வோணுமாம்.
இப்டி அல்லாருக்கும் சீட்டுப் பிர்ச்சிக் குட்த்துட்டா தாத்தாவுக்கு எத்தன சீட்டு கீதுன்னு நெனிக்கிறிங்கோ? ஒரே ஒரு சீட்டு தான். அதுவும் அவுரு நிக்கிற தொகுதி மட்டும். இப்போ சொல்லுங்கபா, அவுரு இன்னா பாட்டுப் பாடுவாருன்னு???Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6622134.post-1138875694460511342006-02-02T02:12:00.000-08:002006-02-02T02:21:34.756-08:00அன்பான காருநம்மூருல மினிஷ்டரா இர்க்கசொல்லோ இன்னா மேரி கில்பான்ஸ்ல்லாம் பண்ணலாம்ன்னு பாருங்கபா. எல்த்து மினிஷ்டரு அன்புமணி கீறாரே, அவுரு ஜனவரி 29ம் தேதி ஈரோட்டாண்ட விசிட்டு அட்ச்சாராம். அவுருக்கு ரவுண்ட்ஸு வுட ஒரு டுபாக்கூரு ஜீப்ப குட்த்துட்டாங்களாம். ஒடனே ரைட்டு ஹாண்டு லெஃப்ட்டு ஹாண்டு கண்மணிங்கோ சொம்மா இர்க்குமா. எங்க தலீவருக்கு புச்சா ஒரு காரு கொண்டாந்து அதுல வுடுரோம்டா ரவுண்ட்ஸுன்னு சொல்லிகினு ஒரு கார்ல கொடி கட்டிக்கினு வந்துட்டாங்க (மினிஷ்ட்டருன்னா தேசிய கொடி கட்ன கார்ல தான போவணும்).
மினிஷ்ட்டருக்கு காரு கொண்டாந்த கண்மணிங்கோ கொடியெல்லாம் கரீட்டா கட்டிட்டாங்க. ஷோரூம்லேர்ந்து எட்த்துகினு வரசொல்லோ ஒரு நம்பரு பிளேட்டும் ஒட்டிகினு வந்துருக்கலாம். அத்த மட்டும் டீல்ல வுட்டுட்டாங்கோ. மினிஷ்ட்டரா இர்க்கசொல்லோ நம்பரு பிளேட்டு இல்லாம ரவுண்டு வுட்டா போலீஸு வந்து கேள்வியா கேட்டுகின்னு இர்க்கப்போவுது.Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6622134.post-1127655668568257522005-09-25T06:38:00.000-07:002006-05-25T00:00:46.346-07:00சோ(சொ)த்தை வாதம்நம்மூருல பாலிடிக்ஸுல இல்லாமலே பாலிடிக்ஸு சேஞ்சுகினுகீற மன்சங்கள்ல இவுரு பெரிய ஆளுபா. இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு. இப்போ இன்னான்னா ஆனந்த வெகடன்ல விசயகாந்து கெலிப்பாரா, அம்மா செய்றதுல்லா கரீட்டாங்குறதுலேந்து சானியா போடுற துணி வரைக்கும் கேட்டு வெச்சிக்கீறாங்கோ. இவுரும் எல்லாத்துக்கும் வெளக்கம் குட்த்துக்கீறாரு. அதுல ஒரு கேள்விக்கு இவுரு குட்த்துக்கீற பதிலு தான்பா படா சோக்கா கீது...
‘‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் உங்களுக்கு ஏன் ஒப்புதல் இல்லை?’’
‘‘இப்ப பெண்களுக்கு எந்த இடத்தில் தடை இருக்கு... யார் தடுக்கிறாங்க? பெண்கள் எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறார்கள்.
ஆனால், அரசியலில் இப்படி இட ஒதுக்கீடு என்றால், சில தொகுதிகளில் சில கட்சிகள், தகுதியுள்ள பெண் வேட்பாளர்கள் தங்களிடம் இல்லாமல், வேறு வழியே இல்லாத நிலையில் அரசியலில் ஆர்வம் இல்லாத பெண்களையெல் லாம் கொண்டுவந்து நிறுத்த வேண்டியிருக்கும்.
அதுமட்டுமல்ல... அரசியல் என்பது கிட்டத்தட்ட முழுநேரப் பணி. இதில் ஆர்வப்பட்டுப் பெண்கள் பலரும் வந்துவிட்டால் என்ன ஆகும்? புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது.
சில குடும்பங்களில் பொருளாதார ரீதியா தேவை இருக்கும்போது கணவன்& மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போவது சரி. அது தவிர்க்க முடியாதது. அதுக்காக எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்றால் அதைப் பெண் சுதந்திரம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.
இன்னொரு விஷயம்... இதைப் பற்றி எல்லாம் இங்கே பெண்கள் குரல் எழுப்பவோ, பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது தங்கள் உரிமை என்றெல்லாம் போராடவோ விரும்பவில்லை. அவங்க எல்லோரும் கணவன், பசங்க, குடும்பம் என்று ஆரோக்கியமான பாச பந்தத் தோடு மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்பறாங்க. சில பெண்கள் அமைப்பின் தலைவர்கள்தான் இட ஒதுக்கீடுனு தலையில் தூக்கிவெச்சுட்டு ஆடறாங்க!’’
பொம்பளைங்களுக்கு எடஒதுக்கீடு வாணாமாம், ஏன்னா அவுங்க அல்லாரும் பாலிடிக்ஸு பேச வண்ட்டா அப்பாலிக்கா வூட்ட பாத்துக்க ஆளே இல்லாம பூடுமாம். அட அட அட இன்னா ஃபீலிங்கோட சொல்லிக்கீறாருபா இவுரு. அட்த்ததா இன்னா சொல்லிக்கீறாருன்னா "பொம்பளைங்கோ ஆரும் இத்தெல்லாம் வோணும்ன்னு கேக்கல, செல பொம்பளைங்கோ கூட்டம் கூட்டிகின்னு தான் அப்டி கேக்குறாங்கோ"ன்னு வேற சொல்லிக்கீறாரு.
ஆம்பள பாலிடிக்ஸுல போவசொல்லோ அந்த வூட்ட பொம்பளைங்க பாத்துக்கலியா, அத்த மேரி நாலு வூட்டுல ஆம்பளைங்கோ வூட்டையும் கொளந்தக்குட்டிங்களயும் பாத்துகினா இன்னாவாம். பொம்பளைக்கு பாலிடிக்ஸுல இஸ்டம் இர்ந்தா அவுங்கள வர வுடுங்கபா, அத்து வுட்டுப்போட்டு வூட்டப் பாத்துக்கணும், அவுங்களுக்கு இதுல இஸ்டம் இல்லன்னு இன்னும் 1947 கதியெல்லாம் சொல்லிக்கினு இர்க்காதிங்கோ....Unknownnoreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6622134.post-1123414806238465832005-08-07T04:38:00.000-07:002005-08-07T04:40:06.243-07:00சோக்கா அட்ச்சபா யுவராசுநைனா, நாலு நாளா நீயி தடவுன தடவலுக்கு அல்லாம் சேத்து வெச்சி இன்னிக்கு குட்த்திட்டியேபா. இத்த மேரி இன்னும் நெறியா 100 அட்ச்சி பெரியா ஆளா வாபா.
பெரிய தலைங்கோ புட்டுக்கின நேரத்துல வந்து கை குட்த்த யுவராசுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்கபா....Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6622134.post-1121245310846296532005-07-13T02:00:00.000-07:002005-07-13T05:41:12.726-07:00பதினெட்டு வயசு சுப்ரமணியசாமிநம்ம சுப்ரமணிய சாமிக்கு இப்போ பதினெட்டு வய்சு ஆவுதுன்னு வெச்சிக்கோங்க, அவுரு இன்னா மேரி இஷ்டோரியெல்லாம் நம்ம கைல வுடுவாரு. சொம்மாவே ஜப்பான்ல ஜாக்கிசான் கூட்டாகோ அமேரிக்கால மைக்கெல் ஜாக்ஸன் கூட்டாகோன்னு அட்ச்சி வுடுற பார்ட்டி, பதினெட்டு வய்ஸுன்னா "பில்கேட்ஸ் என்னாண்ட தான் ரோசன கேட்டு புச்சா சாப்ட்டுவேரு போடுவாரு"ன்னு வுடுவாருல்ல, இப்போ அத்த மேரி புச்சா ஒரு பையன் கத வுட்டுக்கின்னு கீறாரு.
பேரு பாண்டியா, நம்ம "காக்க காக்க"ல பயாஸ்கோப்பு காட்டுன பாண்டியா இல்ல, இவுரு வேற. அஜுல் பாண்டியா. இவுரு வூட்டுக்குள்ள போனா வூடு முளுக்க சர்டிபிகெட்டாம், அல்லாத்துலையும் அண்ணாத்தே மொதோ ஆளா வந்திக்கிற மேரி சர்ட்டிபிகெட்டாம். இவுரு வுடுற கதியெல்லாம் கேட்டா தான் ஜூப்பரா கீது.
கதியெ ஒவ்வொண்ணா சொல்றேன்.
1. இவுரு மைக்ரோசாப்ட்டு கம்பெனியிலே Immenient (sic) Chief Executive Officer of Technologyயா ஜோலி செய்றாராம்.
2. இவுராண்ட பில்கேட்ஸு "நைனா உனுக்கு வாரத்துக்கு $5000 கூலி தாரேன், என்னோட சேந்துக்கோ"ன்னு கெஞ்சினாராம். இவுரு "அத்தெல்லாம் வாணாம்பா, எனுக்கு நா படிக்கிற என்ஜினியரிங்கு முடிக்கணும், ஹார்வோர்டு யுனிவர்சிட்டில எம்பில்லு படிக்கணும், அதுக்கெல்லாம் நெறியா டைமு வேணும். அத்தால எப்போலாம் முடியுதோ அப்போலாம் உனுக்கு நா எல்பு பண்றேன்"ன்னு சொன்னாராம். அதுக்கு பில்கேட்ஸும் மண்டைய மண்டைய ஆட்டுனாராம்.
3. பில்கேட்ஸுக்கு எதுனா ரோசன வோணும்ன்னா இந்த அண்ணாத்த கைல தான் கேப்பாராம், இவுரும் பில்கேட்ஸாண்ட கேட்டுகின்னு தான் அல்லாமும் செய்வாராம்.
போற போக்குல பாண்டியா அண்ணாத்தே பில்கேட்ஸு ஈமெயிலு ஐடின்னு ஒரு கொசு மெயில் ஐடி குட்த்துக்கீறாரு. அத்த டெஸ்ட் பண்ணி பாக்கசொல்லோ அத்து வேலைக்கு ஆவல, அத்த மேரி டெல்லில கீற மைக்ரோசாப்ட்டுல "இத்த மேரி ஒர்த்தரு கதி சொல்லிக்கின்னு கீறாரே, அத்தெல்லாம் மெய்யாலுமே உண்டா"ன்னு நம்ம டைம்ஸ் ஆப் இந்தியா கேட்டுக்கீறாங்கோ. அவுங்க அதுக்கு "ஆக்காங், அத்தெல்லாம் ஒர்த்தரும் அப்டி கெடியாது. இவனாங்காட்டி எதுனா கதி சொல்லட்டும், அப்பாலிக்கா புட்ச்சு உள்ளே போட்டுடணும்"ன்னு சொல்லிக்கீறாங்கோ.
வுட்டாக்கா நம்ம சுப்ரமணிய சாமியே பாண்டியா கைல க்ளாஸு எட்த்துக்கணும் போல கீது, அந்த மேரி ரீலு வுடுறாரு தலீவரு.
இன்னா மேட்டருன்னு தலைய பிச்சிக்கிறவங்கோ இங்கே போயி பிச்சிக்கோங்கபா...Unknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6622134.post-1117105029873492192005-05-26T03:55:00.000-07:002005-05-26T03:57:09.880-07:00ஆட்டோக்காரிநா ஆட்டோக்காரி ஆட்டோக்காரி
நாலுந்தெரிஞ்ச ரூட்டுக்காரி
நல்லவங்க கூட்டுக்காரி
இப்டிக்கா நம்ம அம்மா ஒரு கானாவ எட்த்துவுட்டா எப்டி இர்க்கும். அத்தாம்பா வர்ற எலிக்ஸன்ல நடக்கப்போவுது. இனிமே ஆட்டோக்காரங்கோ அல்லாரும் சூப்புருஇஸ்ட்டார வுட்டுப்போட்டு அம்மா போட்டோவ தான் ஆட்டோக்குள்ளே ஒட்டிக்கின்னு சுத்தப்போறாங்களாம்.
இன்னா மேட்டருன்னு தெர்யாம கொளம்பிப் போவாதிங்கோ. அம்மா ஆட்டோக்காரங்களுக்கு புச்சா நெறியா சலுவ காட்டிக்கீறாங்களாம். ஏளு வர்ஸமா ஆட்டோ ஓட்டிக்கின்னுகீரவங்களுக்கு மொதல்ல 500 ரூவா துட்டு கட்டணும்ன்னு இர்ந்துச்சாம், அத்த இனிமே 200 ரூவா குட்த்தா போதும் நைனான்னு சொல்லிப்புட்டாங்களாம். நம்ம சென்னப்பட்டணத்துல புச்சா இன்னும் 5000 ஆட்டோ வுடப்போறாங்களாம்.
சலுவ அல்லாம் சோக்கா தான் கீது. ஆனா சொன்ன மேட்டருல ஒண்ணு மட்டும் கொஞ்சம் ஃபீலிங்க கெளப்புது. இன்னா மேட்டருன்னா, இனிமே இஸ்கூலு புள்ளிங்கள இட்டுகின்னு போற ஆட்டோ அல்லாம் எக்ஸ்ட்ராவா இன்னும் அஞ்சு கொளந்தைங்கள வோணும்ன்னா கூட்டுக்கின்னு போலாமாம். இப்போவே ஆட்டோல இஸ்கூலு கொளந்தைங்கோ புளிமூட்ட அட்ச்ச கணுக்கா தான் போவுதுங்கோ, இதுல இன்னும் அஞ்சு பேருன்னா கொளந்தைங்கோ கெதி இன்னா ஆவறது? ஓவரா லோடு ஏத்தி அப்பாலிக்கா கொளந்தைங்களுக்கு எதுனா ஆய்ட்டா ஆரு வந்து பதிலு சொல்லுவாங்கோ. யம்மோவ், எதுனா பாத்து செய்ங்கம்மோவ்....Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6622134.post-1114841757193171682005-04-29T23:14:00.000-07:002005-04-29T23:15:57.196-07:00கோரம்(Quorum) இல்லாத கோரம்நம்மூருல வெள்ளிக்கெளம அத்தால இஸ்கூலு போவாணாம்ன்னு இஸ்கூலு புள்ளிங்கோ இஸ்கூலுக்கு கல்தா குட்க்க முடியாது. ஆபீஸுல சோலிப் பாக்குற பெர்ய மன்ஸங்கோ எதுனா ரீஜன் சொல்லி லீவு போட முடியாது. ஆனாக்க நம்ம மக்களு ஓட்டுக் குத்தி எலிக்ஸன்ல கெலிச்சி போய் வர டிரெய்னு டிக்கெட்டுலேந்து போட்டுக்குற சொக்க வெரிக்கும் அல்லாத்தையும் கவுருமெண்டு துட்டுல சோக்கு காட்டிக்கின்னு டில்லில குந்திக்கின்னு கீறாங்களே நம்ம எம்பிங்கோ, அவுங்க வெள்ளிக்கெளம அன்னிக்கு பார்லிமெண்டு கூட்டுனா வர மாட்டாங்கோ.
பிஜெபி "நா ஆட்டைக்கு வரல"ன்னு முறுக்கிக்கினு போயி மூலைல குந்திக்கினாங்கோ. காங்கிரஸு கூட்டணில மொத்தமே 36 எம்பிங்க தா வந்தாங்களாம். மத்தவங்க அல்லாம் வெள்ளிக்கெளம நமாஸ் போவணும்ன்னு செலரு, அட்த்த ரெண்டு நாளு லீவுபா அத்தால ரூம்ல சொம்மா சோக்குக் காட்டிக்கினுகீறேன்னு சொல்லிக்கீறாங்கோ. இந்தி பயாஸ்கோப்புல மஞ்ச சட்டையும் பச்சப் பேண்ட்டும் போட்டுக்கினு ஜிகினா டாண்ஸு ஆடுவாரே கோவிந்தான்னு ஒர்த்தரு, அவ்ருக்கு அவரோட படம் ஒண்ணு புச்சா வெளில வர்த்தாம், அத்து இன்னாவுமோ ஏதாவுமோன்னு படா ஃபீலிங்குல கீறாராம், அத்தால வர்லியாம்.
ஒங்கள அல்லாம் சொல்லி மிஷ்டேக்கு கெடியாது, ஒட்டுக் குத்தி கொண்டு போயி ஒக்கார வெச்சோம்ல, எங்கள சொல்லணும்.Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6622134.post-1112860116690880102005-04-07T00:45:00.000-07:002005-04-07T00:48:36.690-07:00அம்மா Vs பேரன்முன்னே ஒருக்கா (அம்)மாமமன்றம் கூட்டம் போட்டப்போ ஆரு ஃபோர்டு கொண்டு வந்தாங்கோ, ஆரு ஹுண்டாய் கொண்டுவந்தாங்கோன்னு தாத்தா ஆளுங்களும் அம்மா ஆளுங்களும் அட்ச்சிக்கினாங்கோ. ஹுண்டாய் கம்பெனிக்கு புல்லு வெட்டுனது நானுன்னு ஒருத்தரும் கள புடுங்குனது நானுன்னு ஒருத்தருமா அட்ச்சிக்கினது பாக்க சோக்கா இர்ந்துச்சு. இப்போ அட்த்த அடிதடி ஆரம்பிக்கப் போவுது. இது நோக்கியா மேட்டரு.
நோக்கியா கம்பெனி நம்ம சென்னப்பட்டனத்துல கம்பெனி இஸ்டார்டு பண்ணப் போறாங்களாம். அது அவங்களோட பத்தாவது பிராஞ்சாம். அது பத்தி பேசுறப்போ தாத்தாவோட இந்தி ஷ்பீக்கிங் பேராண்டி மாறரு "தன்னால தான் இந்தக் கம்பெனி நம்மூருக்கு வந்துக்கீது"ன்னு கொரலுவுட்டாரு. "இது மாத்ரம் இல்லபா, இன்னும் நெறியா கம்பெனி என்னாண்ட சிக்னலு குட்த்துக்கீறாங்கோ"ன்னு எக்ஸ்ட்ரா கொரலு வேற வுட்டாரு.
இத்த பாக்கசொல்லோ அம்மா மட்டும் சொம்மா இர்ப்பாங்களா. இன்னிக்கு (அம்)மாமன்றத்துல "தோ பாரு நைனா, நோக்கியா கம்பெனி சென்னைக்கு வர்றதுக்கு ரீஜனு நான் தான்பா"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. அதுவும் சொம்மா கொரலு கெடியாது, ரூல் 110 கீழே வுட்ட கொரலு அது. அந்த ரூலுல அம்மா கொரலு வுட்டா "முட்டாயி குடுக்கல, பிஸ்கோத்து குடுக்கல"ன்னுல்லாம் கோச்சிகினு வூடால கொரலு வுடுற தாத்தா கச்சி ஆளுங்கோ ஆரும் எதிர்கொரலு வுட முடியாது. இப்போல்லாம் அம்மா பேசுனாலே அது ரூலு 110ல தான் பேசுறாங்கோ. அது மரக்கெளைய ஒட்ச்ச நூஸா இர்ந்தாலும் சரி, கம்பெனி இஷ்டார்ட்டு பண்ற மேட்டரா இர்ந்தாலும் சரி.
நம்மூருல பொட்டி தட்டுறவங்கோ நெறியா கீற வூரு மூணு. பெண்களூரு, ஐதராபாத்து, அட்த்து நம்ம சென்னை. இந்த மூணுல கப்பலு, பிளைட்டு, ரோடு ரூட்டு மூணுமா கீற எடம் நம்மூரு தான். கம்பெனி தொறக்க வர்றவங்கோ இத்தெல்லாம் கீதான்னு தான் பாப்பாங்கோ, அம்மா கொரலு வுட்டதால கொண்டாந்தோமா, பேராண்டி கொரலு வுட்டதால கொண்டாந்தோமான்னு ரோசன பண்ண மாட்டாங்கோ. அத்தால ரெண்டு பேரும் இன்னா வேணா கொரலு வுட்டுக்கோங்கோ, ஆரும் கண்டுக்க மாட்டோம். ஆனா கடேசில வாய்க்கும் கைக்கும் சண்ட வந்தது மேரி ஆகி அப்பாலிக்கா இந்த வூரு வாணாம்பான்னு நோக்கியா கம்பெனி பொட்டிய கட்டிக்கின்னு கெளம்பாம இருக்கணும்.
பிட் நோட்டீஸ்: இந்த மேரி பேராண்டி பேசுனதுமே அட்த்து அம்மாவும் கொரலு வுடுவாங்கோ, நீ எதுனா சொல்லுபான்னு நம்ம காதுல வந்து ஓதுன கொல்கத்தா பிரின்ஸு செந்திலுக்கு டாங்க்ஸுபாUnknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6622134.post-1112692371712865732005-04-05T02:11:00.000-07:002005-04-05T02:12:51.713-07:00ஐஸ்பாய் Vs அம்மாநம்ம ஐஸ்பாய் விவேக்கு எதுனா நல்லது பண்ணி அட்த்த சிஎம்மா வந்துடுவாருன்னு அம்மாவுக்கு பயம் வந்துட்ச்சு போலக்கீது. சுனாமில அடிப்பட்ட மக்களுக்கு வூடு கட்டித் தர விவேக்கு அம்மா கைல எடம் கேக்க, அம்மா "அத்தெல்லாம் முடியாது போபா"ன்னு அட்ச்சி தொர்த்திட்டாங்கோ. மன்ஸன் ஃபீலானானும் வெளில காட்டிக்காம ரீஜண்ட்டா "எடம் கெடிக்கல, அத்தால நா பாண்டிசேரி பக்கமா ஒதுங்கிக்கிறேன்"ன்னு கொரலு வுட்டுட்டுப் பூட்டாரு.
இந்த மேட்டர நம்ம (அம்)மாமன்றத்துல எதிர்கச்சி கொய்ந்திங்கோ கேட்டு வெக்க, அம்மா கபால்ன்னு எய்ந்து (ஆர கேள்வி கேட்டாலும் அம்மா தான் ரிப்ளை வுடுவாங்கோ, அம்மாவையே கேக்குறப்போ வேற ஆரு சொல்லுவா!!!) "தோடா, துக்கடா பையன். இன்னா செஞ்சுட்டான்னு இம்மா ஃபீலாவுற நீயி. அந்தப் பையன் ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடல. கவுருமெண்ட்டு செஞ்சதுல பத்து பர்ஸெண்ட்டு கூட செய்யல. இத்த போயி பெர்ஸா பேச வண்ட்டியா நீயி"ன்னு கேக்குறாங்கோ.
சோக்கா கீதும்மே உன்னோட பேச்சு. (அம்)மாமன்றத்துல பேச எய்தி குடுக்குற கவிஞரு, தாடிக்கார தோஸ்த்து எய்துன கொறள பத்தி அம்மா கைல சொல்லாம வுட்டுட்டாரு போலக்கீது. அத்தால அத குப்ஸாமி இப்போ அம்மாவுக்கு எட்த்து குடுக்குறான்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிதுUnknownnoreply@blogger.com20