Monday, October 18, 2004

வீரப்பன படம் புட்ச்ச தினமலரு

ஒரு வழியா செத்த பாம்ப அட்ச்ச கணுக்கா வீரப்பன கொன்னுட்டாங்க, இல்லாங்காட்டி தற்கொல பண்ணிக்கின்னாரு (ரெண்டுல எது நடந்துச்சுன்னு அந்தாளே வந்து சொன்னான்னா தான் தெர்யும்). இனிமே அம்மா கச்சியும் தாத்தா கச்சியும் அவுங்கவுங்க சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு வீரப்பன புடிக்க இன்னா செஞ்சோம்ன்னு லிஸ்ட்டு போடுவாங்கோ. கோபாலண்ணே லைட்டா ஒரு சொட்டு கண்ணீரு வுடுவாரு. நம்ம மரவெட்டி ஐயா "நம்மாளு ஒர்த்தன் பூட்டானேன்னு அளறதா, மத்த கச்சிக்காரங்கோ கூட சேர்ந்து கொரலு வுடுறதா"ன்னு தெர்யாம முளிச்சிக்கின்னு இர்ப்பாரு. இதெல்லாம் சோக்கா நடுக்கும்.

இன்னிக்கு தினமலரு பத்திரிகை "நா தான் மொதல்ல படம் போட்டவன்"னு டமாரம் அட்ச்சிக்கின்னு சின்ன மீச வீரப்பன படம் புட்ச்சி போட்டுக்கீது. கூடவே கடலூர்ல பட்ச்சிக்கின்னு கீற வீரப்பனோட பொண்ணையும் படம் புட்ச்சி போட்டுக்கீது. அத்த பாக்க சொல்லோ தான் மன்ஸு படா ஃபீலாவுது. இன்னா மன்ஸங்கையா நீங்க. தப்பு செஞ்சவன் அவன், அவன் தான் மண்டைய போட்டுட்டான். இந்த சின்னபுள்ள இன்னா பாவம் பண்ச்சு. பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா? இம்மா நாளு அது ஆரோட புள்ளன்னு கூட தெர்யாம வாள்ந்துக்கின்னு இர்க்கும். இப்போ வூரு ஒலகம் முய்க்க தம்பட்டம் அட்ச்சிப்புட்டிங்கோ. இனி அந்தக் கொளந்தைய பாத்து அல்லாரும் கலாய்க்கிறதும் திட்டுறதும் சாபம் வுடுறதுமா இர்ப்பாங்கோ. அந்தப் பிஞ்சு மன்ஸு இன்னாமா ஃபீலாவும். இத்தெல்லாம் ஆரும் ரோசன பண்றதே கெடியாது. வீரப்பன படம் புட்ச்சி போடு, அவன் கூட சேந்து ஆட்டம் போட்டவன எல்லாம் படம் புட்ச்சிப் போடு, இந்தப் புள்ளைய படம் புட்ச்சிப் போட்டு ஏன்யா அதுங்க வாள்க்கைய கெடுக்குறிங்கோ...

18 comments:

Anonymous said...

அம்மா கைகுலுக்க மாட்டாங்க அப்டீன்னாங்களே (கரன் தாபார் - பி.பி.சி. நேர்காணல்). எல்லோரும் இங்க பாருங்க..

வெளிநாட்டு ஆசாமிங்களுக்கு மாத்திரம் கையை நீட்டுவாங்க போலுருக்கு

http://www.jayatvnews.org/headlines7.htm

கொரலு வுட்டது Mahesh

Anonymous said...

சரிதாம்பா! ஆனாக்க உயிரோட புடிக்க முடியலயே! எத்தனை பேரு ரிப்பேரு ஆயிருக்குமோ? எதாச்சும் உள்கை இருக்குமா?

கொஸப்பேட்டை அண்ணாத்தே! தினமலர்க்கும் "எதிக்ஸ்"க்கும் ரொம்ப தூரம்! கண்டுகாதேபா!

கொரலு வுட்டது Suresh

Anonymous said...

//பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா?//

நல்ல (சிந்திக்க வேண்டிய) கேள்வி தான்...


கொரலு வுட்டது கிறிஸ்டோபர்கொரலு வுட்டது கிறிஸ்டோபர்

Anonymous said...

//பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா?//

நல்ல (சிந்திக்க வேண்டிய) கேள்வி தான்...


கொரலு வுட்டது கிறிஸ்டோபர்

Anonymous said...

கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவாங்கிரது உன்மை ஆயிடுச்சு பாத்தீங்கல்ல

கொரலு வுட்டது karthik

Anonymous said...

குப்ஸாமி தம்பி,

நீ சொல்றதுலே நாயம் இருக்கு. அப்பன் செஞ்ச
பாவத்துக்கு கொயந்த என்னா பண்ணும்?

நம்ம ஆளுங்க கீறாங்களெ, எதுனா எழுதி பரபரப்பா ஆக்கிரணும்.

என்னாத்தை சொல்ல? போ

கொரலு வுட்டது துல்சி கோபால்

Anonymous said...

அண்ணே அப்படிக் கேளுங்கண்ணே

கொரலு வுட்டது ஈழநாதன்

Anonymous said...

கொசபெட்டை அன்னாசி, கெட்டிஙலய் ஒரு கெல்வி. அப்படி பொடு - நவின்

கொரலு வுட்டது navin

Anonymous said...

சரியான கேள்வி. தினமலரை மக்கள் வெறுத்தொதுக்கும் தினம் தொலைவில் இல்லை.

கொரலு வுட்டது பாரி

Anonymous said...

இத்தெல்லாம் கேக்குறத்துக்கு ஆளில்லைன்னுதான் இப்டி ஆடுறானுவ. குப்ஸாமி அண்ணாச்சி! இதுக்காவ நாம ஒரு கச்சி சேப்போமா?

கொரலு வுட்டது

Anonymous said...

வீரப்பன் நல்லவனா கெட்டவனா என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு பேசுவோம். அந்தப் பிஞ்சு உள்ளத்தின் மனம் நோகும்படி செய்யும் அனைவரும் கண்டிக்கப் படவேண்டியவர்கள். சமுதாய சீர்கேடுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கொஸப் பேட்டைக்கு ஜே...!!! (இது அந்த ஜே இல்ல!)

கொரலு வுட்டது Moorthi

Anonymous said...

கலக்கலா கேட்டப்பா...! இந்தப் பத்திரிக்கைக்காரங்களே இப்படித்தான்...பாவம், அந்தப் பொண்ணு!
- அருண் வைத்யநாதன்

கொரலு வுட்டது Arun

Anonymous said...

KVR, in one of the websites I read that people from all over the press rushed to the school where Veerapan's daughter was studying and waitedfor scoop and news. Unfortunately, the school decided not to take that student anymore. I think, it would be unfair to blame only Dinamalar for such activities. Most press people are like that. They dont hesitate in going from Kamalhasan's bedroom to celebrity's children lifes. So, there should be mutually agreed and enforced guildelines (I am not sure if there are any already) about meeting victims children or publishing photos of them during events like this. In places like USA, the family or a spokesperson from a family issues a press statement. The press does not go beyond it without the consent of the family.

கொரலு வுட்டது PK Sivakumar

Anonymous said...

கடோசியா இஸ்கோலுலெ கவுந்துகினாங்க போல கீதுபா!!

கொரலு வுட்டது Udayakumar

Anonymous said...

பிகேஎஸ், நீங்கள் சொல்வது சரி தான். நான் தினமலரை அன்று சொல்லக் காரணம், தானே முதன்முதலாக வீரப்பன் சம்மந்தப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக மார்தட்டிக்கொண்டதால் தான்.

குற்றம் சாட்டப்பட்டவரே குற்றம் நிருபிக்கப்படும் வரையில் அவரது அனுமதி இல்லாமல் அவரது புகைப்படங்களை பத்திரிகையில் பிரசுரிக்கக்கூடாது என்ற அளவில் சட்டம் எதாவது வர வேண்டும் (தேடப்படும் குற்றவாளி என்பது வேறு வகை). அதே போல அவரது குடும்பத்தினர் அந்த குற்றத்தில் சம்மந்தப்படாதவரையில் அவர்களது புகைப்படங்களை அவர்களது அனுமதி இல்லாமல் பிரசுரிக்கக்கூடாது என்றும் வர வேண்டும்.

பத்திரிகைகள் செய்த இந்த நல்ல காரியத்தால் இத்தனை நாள் படிக்க அனுமதித்த நிர்வாகம் இப்போது அந்தப் பெண்ணை பள்ளியை விட்டு வெளியேற்றிவிட்டது. வீரப்பனின் மகளும் ஒரு கடத்தல்காரியாக தான் இருக்க வேண்டுமா? அவளால் படித்து ஒரு நல்ல நிலைக்கு போக முடியாதா? ஊடகங்கள் வழியாக ஒரு மொட்டை கிள்ளி நசுக்கிக்கொண்டு இருக்கிறோம் நாம்.

கொரலு வுட்டது KVR

Anonymous said...

வீரப்பன் மகளை கடலூர் பள்ளியிலிருந்து அழைத்து வரும் படத்தை தி ஹிண்டு நாளிதழில் தான் பார்த்தேன். ஆகையால் இந்தக் கண்டனம் அந்தப் படத்தைப் பிரசுரித்த எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும்.
ஆனால் அந்தப் பென்ணை அழைத்து வரும் போலீஸ் அதிகாரி ஏதோ சாதனை புரிந்தவர்போல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தால் அங்கே பல காமிராக்கள் கிளிக் செய்ய ரெடியாயிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

கொரலு வுட்டது

Anonymous said...

க்fஹ்fக்ஹ்ஹ்ஜ்ஹ்ஜ்ஜ்ஜ்க்fப்ச்ட்fவ்வ்வ்சசக்ர்ஹ்ஹ்ப்f

கொரலு வுட்டது fக்ஹ்ஹ்ஹ்fக்ஹ்ஹ்ஹ்

Anonymous said...

குப்புசாமி அண்ணாத்தெ,மேட்டர் எல்லாம் மீட்டருக்கு மேலெ சொல்ரபா,
இந்த நெல்லை தமிழனின் பாராட்டுக்கள்

கோபி

கொரலு வுட்டது gopinath