Sunday, September 25, 2005

சோ(சொ)த்தை வாதம்

நம்மூருல பாலிடிக்ஸுல இல்லாமலே பாலிடிக்ஸு சேஞ்சுகினுகீற மன்சங்கள்ல இவுரு பெரிய ஆளுபா. இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு. இப்போ இன்னான்னா ஆனந்த வெகடன்ல விசயகாந்து கெலிப்பாரா, அம்மா செய்றதுல்லா கரீட்டாங்குறதுலேந்து சானியா போடுற துணி வரைக்கும் கேட்டு வெச்சிக்கீறாங்கோ. இவுரும் எல்லாத்துக்கும் வெளக்கம் குட்த்துக்கீறாரு. அதுல ஒரு கேள்விக்கு இவுரு குட்த்துக்கீற பதிலு தான்பா படா சோக்கா கீது...

--------------------------------------------------------------------------------------

‘‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் உங்களுக்கு ஏன் ஒப்புதல் இல்லை?’’

‘‘இப்ப பெண்களுக்கு எந்த இடத்தில் தடை இருக்கு... யார் தடுக்கிறாங்க? பெண்கள் எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறார்கள்.

ஆனால், அரசியலில் இப்படி இட ஒதுக்கீடு என்றால், சில தொகுதிகளில் சில கட்சிகள், தகுதியுள்ள பெண் வேட்பாளர்கள் தங்களிடம் இல்லாமல், வேறு வழியே இல்லாத நிலையில் அரசியலில் ஆர்வம் இல்லாத பெண்களையெல் லாம் கொண்டுவந்து நிறுத்த வேண்டியிருக்கும்.

அதுமட்டுமல்ல... அரசியல் என்பது கிட்டத்தட்ட முழுநேரப் பணி. இதில் ஆர்வப்பட்டுப் பெண்கள் பலரும் வந்துவிட்டால் என்ன ஆகும்? புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது.

சில குடும்பங்களில் பொருளாதார ரீதியா தேவை இருக்கும்போது கணவன்& மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போவது சரி. அது தவிர்க்க முடியாதது. அதுக்காக எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்றால் அதைப் பெண் சுதந்திரம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொரு விஷயம்... இதைப் பற்றி எல்லாம் இங்கே பெண்கள் குரல் எழுப்பவோ, பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது தங்கள் உரிமை என்றெல்லாம் போராடவோ விரும்பவில்லை. அவங்க எல்லோரும் கணவன், பசங்க, குடும்பம் என்று ஆரோக்கியமான பாச பந்தத் தோடு மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்பறாங்க. சில பெண்கள் அமைப்பின் தலைவர்கள்தான் இட ஒதுக்கீடுனு தலையில் தூக்கிவெச்சுட்டு ஆடறாங்க!’’


--------------------------------------------------------------------------------------

பொம்பளைங்களுக்கு எடஒதுக்கீடு வாணாமாம், ஏன்னா அவுங்க அல்லாரும் பாலிடிக்ஸு பேச வண்ட்டா அப்பாலிக்கா வூட்ட பாத்துக்க ஆளே இல்லாம பூடுமாம். அட அட அட இன்னா ஃபீலிங்கோட சொல்லிக்கீறாருபா இவுரு. அட்த்ததா இன்னா சொல்லிக்கீறாருன்னா "பொம்பளைங்கோ ஆரும் இத்தெல்லாம் வோணும்ன்னு கேக்கல, செல பொம்பளைங்கோ கூட்டம் கூட்டிகின்னு தான் அப்டி கேக்குறாங்கோ"ன்னு வேற சொல்லிக்கீறாரு.

ஆம்பள பாலிடிக்ஸுல போவசொல்லோ அந்த வூட்ட பொம்பளைங்க பாத்துக்கலியா, அத்த மேரி நாலு வூட்டுல ஆம்பளைங்கோ வூட்டையும் கொளந்தக்குட்டிங்களயும் பாத்துகினா இன்னாவாம். பொம்பளைக்கு பாலிடிக்ஸுல இஸ்டம் இர்ந்தா அவுங்கள வர வுடுங்கபா, அத்து வுட்டுப்போட்டு வூட்டப் பாத்துக்கணும், அவுங்களுக்கு இதுல இஸ்டம் இல்லன்னு இன்னும் 1947 கதியெல்லாம் சொல்லிக்கினு இர்க்காதிங்கோ....

Sunday, August 07, 2005

சோக்கா அட்ச்சபா யுவராசு

நைனா, நாலு நாளா நீயி தடவுன தடவலுக்கு அல்லாம் சேத்து வெச்சி இன்னிக்கு குட்த்திட்டியேபா. இத்த மேரி இன்னும் நெறியா 100 அட்ச்சி பெரியா ஆளா வாபா.

பெரிய தலைங்கோ புட்டுக்கின நேரத்துல வந்து கை குட்த்த யுவராசுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ போடுங்கபா....

Wednesday, July 13, 2005

பதினெட்டு வயசு சுப்ரமணியசாமி

நம்ம சுப்ரமணிய சாமிக்கு இப்போ பதினெட்டு வய்சு ஆவுதுன்னு வெச்சிக்கோங்க, அவுரு இன்னா மேரி இஷ்டோரியெல்லாம் நம்ம கைல வுடுவாரு. சொம்மாவே ஜப்பான்ல ஜாக்கிசான் கூட்டாகோ அமேரிக்கால மைக்கெல் ஜாக்ஸன் கூட்டாகோன்னு அட்ச்சி வுடுற பார்ட்டி, பதினெட்டு வய்ஸுன்னா "பில்கேட்ஸ் என்னாண்ட தான் ரோசன கேட்டு புச்சா சாப்ட்டுவேரு போடுவாரு"ன்னு வுடுவாருல்ல, இப்போ அத்த மேரி புச்சா ஒரு பையன் கத வுட்டுக்கின்னு கீறாரு.

பேரு பாண்டியா, நம்ம "காக்க காக்க"ல பயாஸ்கோப்பு காட்டுன பாண்டியா இல்ல, இவுரு வேற. அஜுல் பாண்டியா. இவுரு வூட்டுக்குள்ள போனா வூடு முளுக்க சர்டிபிகெட்டாம், அல்லாத்துலையும் அண்ணாத்தே மொதோ ஆளா வந்திக்கிற மேரி சர்ட்டிபிகெட்டாம். இவுரு வுடுற கதியெல்லாம் கேட்டா தான் ஜூப்பரா கீது.

கதியெ ஒவ்வொண்ணா சொல்றேன்.

1. இவுரு மைக்ரோசாப்ட்டு கம்பெனியிலே Immenient (sic) Chief Executive Officer of Technologyயா ஜோலி செய்றாராம்.

2. இவுராண்ட பில்கேட்ஸு "நைனா உனுக்கு வாரத்துக்கு $5000 கூலி தாரேன், என்னோட சேந்துக்கோ"ன்னு கெஞ்சினாராம். இவுரு "அத்தெல்லாம் வாணாம்பா, எனுக்கு நா படிக்கிற என்ஜினியரிங்கு முடிக்கணும், ஹார்வோர்டு யுனிவர்சிட்டில எம்பில்லு படிக்கணும், அதுக்கெல்லாம் நெறியா டைமு வேணும். அத்தால எப்போலாம் முடியுதோ அப்போலாம் உனுக்கு நா எல்பு பண்றேன்"ன்னு சொன்னாராம். அதுக்கு பில்கேட்ஸும் மண்டைய மண்டைய ஆட்டுனாராம்.

3. பில்கேட்ஸுக்கு எதுனா ரோசன வோணும்ன்னா இந்த அண்ணாத்த கைல தான் கேப்பாராம், இவுரும் பில்கேட்ஸாண்ட கேட்டுகின்னு தான் அல்லாமும் செய்வாராம்.

போற போக்குல பாண்டியா அண்ணாத்தே பில்கேட்ஸு ஈமெயிலு ஐடின்னு ஒரு கொசு மெயில் ஐடி குட்த்துக்கீறாரு. அத்த டெஸ்ட் பண்ணி பாக்கசொல்லோ அத்து வேலைக்கு ஆவல, அத்த மேரி டெல்லில கீற மைக்ரோசாப்ட்டுல "இத்த மேரி ஒர்த்தரு கதி சொல்லிக்கின்னு கீறாரே, அத்தெல்லாம் மெய்யாலுமே உண்டா"ன்னு நம்ம டைம்ஸ் ஆப் இந்தியா கேட்டுக்கீறாங்கோ. அவுங்க அதுக்கு "ஆக்காங், அத்தெல்லாம் ஒர்த்தரும் அப்டி கெடியாது. இவனாங்காட்டி எதுனா கதி சொல்லட்டும், அப்பாலிக்கா புட்ச்சு உள்ளே போட்டுடணும்"ன்னு சொல்லிக்கீறாங்கோ.

வுட்டாக்கா நம்ம சுப்ரமணிய சாமியே பாண்டியா கைல க்ளாஸு எட்த்துக்கணும் போல கீது, அந்த மேரி ரீலு வுடுறாரு தலீவரு.

இன்னா மேட்டருன்னு தலைய பிச்சிக்கிறவங்கோ இங்கே போயி பிச்சிக்கோங்கபா...

Thursday, May 26, 2005

ஆட்டோக்காரி

நா ஆட்டோக்காரி ஆட்டோக்காரி
நாலுந்தெரிஞ்ச ரூட்டுக்காரி
நல்லவங்க கூட்டுக்காரி

இப்டிக்கா நம்ம அம்மா ஒரு கானாவ எட்த்துவுட்டா எப்டி இர்க்கும். அத்தாம்பா வர்ற எலிக்ஸன்ல நடக்கப்போவுது. இனிமே ஆட்டோக்காரங்கோ அல்லாரும் சூப்புருஇஸ்ட்டார வுட்டுப்போட்டு அம்மா போட்டோவ தான் ஆட்டோக்குள்ளே ஒட்டிக்கின்னு சுத்தப்போறாங்களாம்.

இன்னா மேட்டருன்னு தெர்யாம கொளம்பிப் போவாதிங்கோ. அம்மா ஆட்டோக்காரங்களுக்கு புச்சா நெறியா சலுவ காட்டிக்கீறாங்களாம். ஏளு வர்ஸமா ஆட்டோ ஓட்டிக்கின்னுகீரவங்களுக்கு மொதல்ல 500 ரூவா துட்டு கட்டணும்ன்னு இர்ந்துச்சாம், அத்த இனிமே 200 ரூவா குட்த்தா போதும் நைனான்னு சொல்லிப்புட்டாங்களாம். நம்ம சென்னப்பட்டணத்துல புச்சா இன்னும் 5000 ஆட்டோ வுடப்போறாங்களாம்.

சலுவ அல்லாம் சோக்கா தான் கீது. ஆனா சொன்ன மேட்டருல ஒண்ணு மட்டும் கொஞ்சம் ஃபீலிங்க கெளப்புது. இன்னா மேட்டருன்னா, இனிமே இஸ்கூலு புள்ளிங்கள இட்டுகின்னு போற ஆட்டோ அல்லாம் எக்ஸ்ட்ராவா இன்னும் அஞ்சு கொளந்தைங்கள வோணும்ன்னா கூட்டுக்கின்னு போலாமாம். இப்போவே ஆட்டோல இஸ்கூலு கொளந்தைங்கோ புளிமூட்ட அட்ச்ச கணுக்கா தான் போவுதுங்கோ, இதுல இன்னும் அஞ்சு பேருன்னா கொளந்தைங்கோ கெதி இன்னா ஆவறது? ஓவரா லோடு ஏத்தி அப்பாலிக்கா கொளந்தைங்களுக்கு எதுனா ஆய்ட்டா ஆரு வந்து பதிலு சொல்லுவாங்கோ. யம்மோவ், எதுனா பாத்து செய்ங்கம்மோவ்....

Friday, April 29, 2005

கோரம்(Quorum) இல்லாத கோரம்

நம்மூருல வெள்ளிக்கெளம அத்தால இஸ்கூலு போவாணாம்ன்னு இஸ்கூலு புள்ளிங்கோ இஸ்கூலுக்கு கல்தா குட்க்க முடியாது. ஆபீஸுல சோலிப் பாக்குற பெர்ய மன்ஸங்கோ எதுனா ரீஜன் சொல்லி லீவு போட முடியாது. ஆனாக்க நம்ம மக்களு ஓட்டுக் குத்தி எலிக்ஸன்ல கெலிச்சி போய் வர டிரெய்னு டிக்கெட்டுலேந்து போட்டுக்குற சொக்க வெரிக்கும் அல்லாத்தையும் கவுருமெண்டு துட்டுல சோக்கு காட்டிக்கின்னு டில்லில குந்திக்கின்னு கீறாங்களே நம்ம எம்பிங்கோ, அவுங்க வெள்ளிக்கெளம அன்னிக்கு பார்லிமெண்டு கூட்டுனா வர மாட்டாங்கோ.

பிஜெபி "நா ஆட்டைக்கு வரல"ன்னு முறுக்கிக்கினு போயி மூலைல குந்திக்கினாங்கோ. காங்கிரஸு கூட்டணில மொத்தமே 36 எம்பிங்க தா வந்தாங்களாம். மத்தவங்க அல்லாம் வெள்ளிக்கெளம நமாஸ் போவணும்ன்னு செலரு, அட்த்த ரெண்டு நாளு லீவுபா அத்தால ரூம்ல சொம்மா சோக்குக் காட்டிக்கினுகீறேன்னு சொல்லிக்கீறாங்கோ. இந்தி பயாஸ்கோப்புல மஞ்ச சட்டையும் பச்சப் பேண்ட்டும் போட்டுக்கினு ஜிகினா டாண்ஸு ஆடுவாரே கோவிந்தான்னு ஒர்த்தரு, அவ்ருக்கு அவரோட படம் ஒண்ணு புச்சா வெளில வர்த்தாம், அத்து இன்னாவுமோ ஏதாவுமோன்னு படா ஃபீலிங்குல கீறாராம், அத்தால வர்லியாம்.

ஒங்கள அல்லாம் சொல்லி மிஷ்டேக்கு கெடியாது, ஒட்டுக் குத்தி கொண்டு போயி ஒக்கார வெச்சோம்ல, எங்கள சொல்லணும்.

Thursday, April 07, 2005

அம்மா Vs பேரன்

முன்னே ஒருக்கா (அம்)மாமமன்றம் கூட்டம் போட்டப்போ ஆரு ஃபோர்டு கொண்டு வந்தாங்கோ, ஆரு ஹுண்டாய் கொண்டுவந்தாங்கோன்னு தாத்தா ஆளுங்களும் அம்மா ஆளுங்களும் அட்ச்சிக்கினாங்கோ. ஹுண்டாய் கம்பெனிக்கு புல்லு வெட்டுனது நானுன்னு ஒருத்தரும் கள புடுங்குனது நானுன்னு ஒருத்தருமா அட்ச்சிக்கினது பாக்க சோக்கா இர்ந்துச்சு. இப்போ அட்த்த அடிதடி ஆரம்பிக்கப் போவுது. இது நோக்கியா மேட்டரு.

நோக்கியா கம்பெனி நம்ம சென்னப்பட்டனத்துல கம்பெனி இஸ்டார்டு பண்ணப் போறாங்களாம். அது அவங்களோட பத்தாவது பிராஞ்சாம். அது பத்தி பேசுறப்போ தாத்தாவோட இந்தி ஷ்பீக்கிங் பேராண்டி மாறரு "தன்னால தான் இந்தக் கம்பெனி நம்மூருக்கு வந்துக்கீது"ன்னு கொரலுவுட்டாரு. "இது மாத்ரம் இல்லபா, இன்னும் நெறியா கம்பெனி என்னாண்ட சிக்னலு குட்த்துக்கீறாங்கோ"ன்னு எக்ஸ்ட்ரா கொரலு வேற வுட்டாரு.

இத்த பாக்கசொல்லோ அம்மா மட்டும் சொம்மா இர்ப்பாங்களா. இன்னிக்கு (அம்)மாமன்றத்துல "தோ பாரு நைனா, நோக்கியா கம்பெனி சென்னைக்கு வர்றதுக்கு ரீஜனு நான் தான்பா"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. அதுவும் சொம்மா கொரலு கெடியாது, ரூல் 110 கீழே வுட்ட கொரலு அது. அந்த ரூலுல அம்மா கொரலு வுட்டா "முட்டாயி குடுக்கல, பிஸ்கோத்து குடுக்கல"ன்னுல்லாம் கோச்சிகினு வூடால கொரலு வுடுற தாத்தா கச்சி ஆளுங்கோ ஆரும் எதிர்கொரலு வுட முடியாது. இப்போல்லாம் அம்மா பேசுனாலே அது ரூலு 110ல தான் பேசுறாங்கோ. அது மரக்கெளைய ஒட்ச்ச நூஸா இர்ந்தாலும் சரி, கம்பெனி இஷ்டார்ட்டு பண்ற மேட்டரா இர்ந்தாலும் சரி.

நம்மூருல பொட்டி தட்டுறவங்கோ நெறியா கீற வூரு மூணு. பெண்களூரு, ஐதராபாத்து, அட்த்து நம்ம சென்னை. இந்த மூணுல கப்பலு, பிளைட்டு, ரோடு ரூட்டு மூணுமா கீற எடம் நம்மூரு தான். கம்பெனி தொறக்க வர்றவங்கோ இத்தெல்லாம் கீதான்னு தான் பாப்பாங்கோ, அம்மா கொரலு வுட்டதால கொண்டாந்தோமா, பேராண்டி கொரலு வுட்டதால கொண்டாந்தோமான்னு ரோசன பண்ண மாட்டாங்கோ. அத்தால ரெண்டு பேரும் இன்னா வேணா கொரலு வுட்டுக்கோங்கோ, ஆரும் கண்டுக்க மாட்டோம். ஆனா கடேசில வாய்க்கும் கைக்கும் சண்ட வந்தது மேரி ஆகி அப்பாலிக்கா இந்த வூரு வாணாம்பான்னு நோக்கியா கம்பெனி பொட்டிய கட்டிக்கின்னு கெளம்பாம இருக்கணும்.

பிட் நோட்டீஸ்: இந்த மேரி பேராண்டி பேசுனதுமே அட்த்து அம்மாவும் கொரலு வுடுவாங்கோ, நீ எதுனா சொல்லுபான்னு நம்ம காதுல வந்து ஓதுன கொல்கத்தா பிரின்ஸு செந்திலுக்கு டாங்க்ஸுபா

Tuesday, April 05, 2005

ஐஸ்பாய் Vs அம்மா

நம்ம ஐஸ்பாய் விவேக்கு எதுனா நல்லது பண்ணி அட்த்த சிஎம்மா வந்துடுவாருன்னு அம்மாவுக்கு பயம் வந்துட்ச்சு போலக்கீது. சுனாமில அடிப்பட்ட மக்களுக்கு வூடு கட்டித் தர விவேக்கு அம்மா கைல எடம் கேக்க, அம்மா "அத்தெல்லாம் முடியாது போபா"ன்னு அட்ச்சி தொர்த்திட்டாங்கோ. மன்ஸன் ஃபீலானானும் வெளில காட்டிக்காம ரீஜண்ட்டா "எடம் கெடிக்கல, அத்தால நா பாண்டிசேரி பக்கமா ஒதுங்கிக்கிறேன்"ன்னு கொரலு வுட்டுட்டுப் பூட்டாரு.

இந்த மேட்டர நம்ம (அம்)மாமன்றத்துல எதிர்கச்சி கொய்ந்திங்கோ கேட்டு வெக்க, அம்மா கபால்ன்னு எய்ந்து (ஆர கேள்வி கேட்டாலும் அம்மா தான் ரிப்ளை வுடுவாங்கோ, அம்மாவையே கேக்குறப்போ வேற ஆரு சொல்லுவா!!!) "தோடா, துக்கடா பையன். இன்னா செஞ்சுட்டான்னு இம்மா ஃபீலாவுற நீயி. அந்தப் பையன் ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடல. கவுருமெண்ட்டு செஞ்சதுல பத்து பர்ஸெண்ட்டு கூட செய்யல. இத்த போயி பெர்ஸா பேச வண்ட்டியா நீயி"ன்னு கேக்குறாங்கோ.

சோக்கா கீதும்மே உன்னோட பேச்சு. (அம்)மாமன்றத்துல பேச எய்தி குடுக்குற கவிஞரு, தாடிக்கார தோஸ்த்து எய்துன கொறள பத்தி அம்மா கைல சொல்லாம வுட்டுட்டாரு போலக்கீது. அத்தால அத குப்ஸாமி இப்போ அம்மாவுக்கு எட்த்து குடுக்குறான்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Tuesday, March 29, 2005

கேப்டரு பேட்டி

செப்டம்பர்ல புச்சா கச்சி ஆரம்பிச்சு அட்த்த மாசமே சிஎம்மு ஆவப்போற கேப்டரு கஜேந்திரர் விஜயகாந்தருடன் கொஸ்பேட்ட குப்ஸாமியின் சந்திப்பு

கொ.கு: வண்க்கம் கேப்டரு

கே: வணக்கம் கொசப்பேட்டை குப்புசாமி அவர்களே. நீங்கள் சொன்ன வணக்கத்திலேயே நீங்கள் எனது உண்மையான தொண்டர் என்பது தெளிவாகிறது. எல்லோரும் என்னை "கேப்டன்" என்று ஏகவசனத்தில் சொல்கிறார்கள். நீங்கள் ஒருவர் தான் என்னை மிக்க மரியாதையுடன் "கேப்டர்" என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் இனி என் மனைவிடம் கலந்தாலோசித்து எனது மச்சினர் வழியாக என் ரசிக சிகாமணிகள் இனி என்னை "கேப்டர்" என்று மரியாதையுடன் விளிக்க வேண்டும் என்று அறிவுருத்துகிறேன்.

கொ.கு: டாங்ஸுபா. வுன்னோட கச்சி மேட்டரு பத்தி பேசலாம்ன்னு வந்துக்கீறேன் தலீவா.

கே: ஆமாம் குப்புசாமி. வரும் செப்டம்பரில் எனது கட்சிப்பெயரை அறிவிப்பேன்.

கொ.கு: கச்சிப் பேரு இன்னா தலீவா?

கே: எனக்கு மொத்தம் 35,000 ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவற்றில் 3,50,000 ரசிகர்கள் உள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 1750000. இவர்கள் எல்லோரையும் கட்சிக்கு பெயர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவர்கள் சொல்லும் பெயரை நானும், என் மனைவி மச்சினனும் சேர்ந்து குலுக்கிப்போட்டுத் தேர்ந்தெடுப்போம்.

கொ.கு: ஆஹா, கல்க்கிற தலீவா. அப்போ இந்த தபா சிஎம்மு நீ தான்னு சொல்லு.

கே: நான் யாரோட சீட்டையும் பிடிக்க ஆசப்படல, என்னோட சீட்ட யாரும் பிடிக்கவும் முடியாது. சிஎம் சீட் எனக்கு என்று மக்கள் சொன்னால் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

கொ.கு: ஆஹா பயாஸ்கோப்புல பேஸ்ர மேரியே பேஸ்ர தலீவா. அட்ச்சி தூள் கெளப்பு. இன்னா மேரி ஆச்சி அமைக்கப்போற தலீவா?

கே: எனக்குப் பிடிக்காத ஊழல் மற்றும் சாதி அரசியலை ஒழிக்கப் பாடுபடுவேன்.

கொ.கு: அப்போ பாஜக தலீவரு ஒன்னோட மீட்டிங்குல கலந்துகின்னு "கேப்டரு எங்க சைடு"ன்னு சொல்லாம சொல்லுறாரே, அது இன்னா அர்சியலு தலீவா?

கே: சாதி அரசியலை தான் ஒழிக்கப் பாடுபடுவேன் என்று சொன்னேன். மத அரசியலை அல்ல. மத அரசியல் செய்யும் பாஜகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.

கொ.கு: ஊலல் பண்ற அர்சியலும் புடிக்காதுன்னு சொல்லிக்கீறிங்கோ?

கே: நன்றாக கவனியுங்கள் குப்புசாமி. "எனக்குப் பிடிக்காத ஊழல்" என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எனக்குப் பிடித்த ஊழல் செய்யும் அரசியல்வாதிகளோடு கூட்டு வைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.

கொ.கு: சூப்பரு கொளுக தலீவா. நீயி கச்சி ஆரம்பிக்கசொல்லோ என்னிய கொளுக பரப்புச் செயலாளரா போட்டுக்கோபா. ஒன்னோட சேந்து நானும் கச்சிய வளக்குறேன். வர்ட்டா.

கே: என் குடும்பத்தாரோடும் என் ரசிக சிங்கங்களோடும் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவாகச் சொல்கிறேன் குப்புசாமி. உங்களை மாதிரி சுத்தமாக தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் எனது கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தால் அது எனக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றே நம்புகிறேன். போய் வாருங்கள்.

Monday, March 21, 2005

மூட(முடியாத)நம்பிக்கை

நம்மூருல லார்டு கணேஸு பால் குட்ச்சாரு, கொரங்கு மன்ஸன் வந்தான், மாட்டு கண்ணுல எம்சியாரு தெர்ஞ்சாரு. இப்போ புச்சா ஒரு கெளவி வந்து வெங்காயம் வோணும்ன்னு கேக்குதாம். அதுவும் "பசிக்குதுபா, வெங்காயம் குடு"ன்னு கேக்குமாம். தம்மாதுண்டு வெங்காயம் தானேன்னு குட்த்துப்புட்டா அப்பாலிக்கா நீயி கண்ணம்மாபேட்டையாண்ட ஒதுங்கிட வேண்டியது தானாம். வெங்காயத்துக்கும் மன்ஸன் மண்டைய போடுறதுக்கும் இன்னாடா லிங்குன்னு கேட்டா ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறானுங்கோ.

இத்தெல்லாம் தமிள்நாட்டுல நடுக்குதான்னு ஆரும் ஃபீலாவ வாணாம், நம்ம டில்லில நடுக்குது. வூருலக்கீற அல்லா மக்களும் இப்போ கெளவிங்கள பாத்தாலே பேஜாராவுறாங்களாம். நல்லவேளபா, கெளப்பிவுட்டவன் "வெங்காயம் குட்த்தா மண்டைய போட்டுடுவ"ன்னு கெளப்பிவுட்டான், "கெளவி ஒண்ணு வந்து குடிக்க ஒரு கிளாஸு தண்ணி கேக்கும், குட்த்துடாதே. குட்த்தா மண்டைய போட்டுடுவ"ன்னு சொல்லிருந்தா இன்னா ஆவுறது. சொம்மாவே நம்ம மன்ஸங்கோ தண்ணி குட்க்க ரோசன பண்ற மன்ஸங்கோ, இதுல இப்டில்லாம் சொல்லி வெச்சா அப்பாலிக்கா தாகத்துல தவிச்சு மண்டைய போட்டா கூட தண்ணி தர மாட்டாங்கோ.

தெனமலரு அத்த நூஸா போட்டுக்கீறாங்கோ. நீங்களும் பாருங்கோ.

Sunday, March 20, 2005

கஜேந்திரா மெடிகல் காலேஜு

"இன்னா அண்ணாத்தே நீயி. சொம்மா இன்ஜினீரிங் காலேஜு ஆரம்பிச்சிக்கீற. இந்த காலேஜுக்கு புள்ளிங்கோ சேரணும்ன்னா ரெண்டு லச்சம் தான் குடுக்கணும், இத்தே ஒரு மெடிகலு காலேஜு தொர்ந்துருந்தா பத்து பதினஞ்சு லச்சமா பாக்கலாம்ல"ன்னு எதுனா அல்லங்கை பார்ட்டிங்கோ கஜேந்திரரு கைல சொல்லிக்கீறாங்கோ போலக்கீது. அண்ணாத்தே சிலுத்து எய்ந்து "தொரடா ஒரு மெடிகல் காலேஜு"ன்னு கெளம்பிட்டாரு.

உள்ளூருல அம்மாவ கொஞ்சம் பகைச்சிக்கின்னதால காலேஜு கீலேஜுன்னு பேச்செடுத்தா அம்மா பிச்சு கடாசிடுவாங்கன்னு கஜேந்திரருக்கு நல்லாவே தெர்யும். அத்தால பாண்டிச்சேரியிலே போயி காலேஜு தொர்க்கப்போறாராம்.

"வருங்கால மொதல்வரு வருங்கால மொதல்வரு"ன்னு அவரோட ரசிக சிகாமணிங்கோ கொரலு வுடுறதோட மெய்யான மீனிங்கு இப்போ தான் வெளங்குது. கஜேந்திரரு "காலேஜு மொதல்வரு" ஆகுறத தான் இப்டி சொல்லிக்கீறாங்கோ போலக்கீது. இனிமே "வருங்கால மொதல்வரு"ன்னு சொல்லாதிங்கப்பா, அவுரு இப்பொவே "மொதல்வரு" தான்.

Saturday, February 26, 2005

எளங்கோ போட்ட அந்தர் பல்டி

காங்கிரஸு பாலிடிக்ஸு பெர்ய பாலிடிகிஸா கீதுபா, அதுலியும் நம்ம எளங்கோவன் கீறாரே அவுரு பாலிடிகிஸு தான் சூப்பர் பாலிடிகிஸு. நம்ம ஆளுக்கு ரொம்ப நாளாவே சிஎம்மு சீட்டு மேல ஒரு கண்ணு. இன்னாடா இது, நம்ம தாத்தா வளத்துவுட்டவங்கோ அல்லாரும் இன்னிக்கு தன்னோட பேரனுங்கள கூட மந்திரி ஆக்கிப்புட்டானுங்கோ, நாம மட்டும் பெஞ்சி தேச்சிக்கின்னு கீறோமேன்னு படா ஃபீலிங்கு. இந்த மேரி ஒரு ஃபீலிங்கு இருக்குற ஆளு நம்மூருல இர்ந்தா அது நம்ம குடும்பத்துக்கு ஆவாதுன்னு தான் தமிள்நாட்டு தாத்தா கலீஞரு "நீயி போயி டில்லில பெஞ்சி தேயி ராசா"ன்னு டிக்கெட்டு குட்த்து அனுப்பிப்புட்டாரு. இர்ந்தாலும் நம்ம எளங்கோவனுக்கு சிஎம்மு சீட்டு கனா கண்ண வுட்டுப் போவல. ஃபீலிங்கும் கொறயல.

அந்த ஃபீலிங்குல கொஞ்ச நாளு முன்னால "தமிள்நாட்டுல கூட்டணி ஆச்சி கேப்போம்"ன்னு கொரலு வுட்டாரு. அத்த புட்ச்சிக்கின்னு சுதர்ஸன நாச்சியப்பரும் "அத்த நா வளிமொளியிறேன்"ன்னு சப்போர்ட்டு கொரலு வுட்டாரு. சப்போர்ட்டு கெடிச்சதும் எளங்கோவருக்கு ஒட்டுமொத்த தமிள்நாடே தன்னோட பின்னாடி ஃபீலிங்கோட அலையிற மேரி கனா வந்துட்ச்சு. "கூட்டணி இன்னாபா கூட்டணி, நீயி இங்கேயும் அப்பாலிக்கா பிஸ்கோத்து மந்திரி சீட்டு குடுப்ப. அத்தெல்லாம் வாணாம், எங்குளுக்கு வோணும்ன்னா சீஎம்மு சீட்டு கூட கேப்போம்"ன்னு படா ஃபீலிங்கோட பேசிப்புட்டாரு.

சொம்மா இர்ந்த சங்க வூதி கெடுத்த ஆண்டி கணக்கா ஆயிபுட்ச்சி எளங்கோவரு கத. பீகாரு மேட்டரு, பட்ஜெட்டு மேட்டருல கம்மூனிஸ்ட்டுன்னு காங்கிரஸு கதி கலங்கி கெடுக்குற நேரத்துல பேரன மெயின் சீட்டுல குந்த வெச்ச குஷியில தாத்தா மட்டும் நாங்க அல்லாம் எப்பவும் ஒண்ணா தான் இர்ப்போம்ன்னு கொரலு வுட்டு காங்கிரஸு வயித்துல பீர வார்த்துக்கின்னு இர்ந்தாரு. இந்த நேரத்துல செண்ட்ரலுக்கே ஆப்பு வெக்கிற மேரி எளங்கோவரு டயலாக்கு வுட "தோ பாரும்மே, நீயா கூப்டங்காட்டி தான் நா என்னோட பேரன மந்திரி சீட்டுல குந்த வெச்சேன். ஒன்னோட பிஸ்கோத்து புள்ளிங்கோ இத்த மேரி டயலாக்கு வுட்டா அப்பாலிக்கா அல்லாரும் டாட்டா காட்டிகினு வெளில வருவோம்"ன்னு பூச்சாண்டி வேலைய காட்டிக்கீறாரு தாத்தா.

தாத்தா பூச்சாண்டியிலே ஆடிப்போன அம்பிகா சோனி "சின்னப்புள்ளிங்கோ ஆரும் இத்த மேரி கொரலு வுடக்கூடாது. நம்ம எப்பவும் தாத்தோவோட தோஸ்து தான்"ன்னு தாத்தாவ தாஜா பண்ணிக்கீறாங்கோ. செண்ட்ரலுலேர்ந்து சூட ரெண்டு வுளுந்ததும் எளங்கோவரு "நா அப்டி சொல்லல நயினா. வளக்கம் போல காமராசரு ஆச்சிய பத்தி பேசுறப்போ கொஞ்சம் ஃபீலாய்ட்டேன்"ன்னு டயலாக்கு வுட்டுக்கீறாரு. எளங்கோவரு இன்னா அந்தர் பல்டி அட்ச்சாலும் தாத்தா எளங்கோவருக்கு சூடா எதுனா குடுக்காம சொம்மா இர்க்கமாட்டாரு. அல்லாம் தாத்தா கூட்டுற குடும்ப கூட்டத்துக்கு பெறகு தெர்ஞ்சிடும்.

Wednesday, February 16, 2005

காதலுக்கு ஆப்பு

இப்போல்லாம் பயாஸ்கோப்பு எடுக்குற ஆளுங்களுக்கு பிரியா நோட்டீஸு போட்டு அட்டிடீஸ்மெண்ட்டு குட்த்துக்கின்னு கீறாங்கோ அல்லாரும். இங்கிலிபீஸுல பேரு வெச்சின்னா நம்ம மரவெட்டி ஐயாவும் அவரோட அம்பு தம்பி மீசக்கார அண்ணாத்தேயும் சேந்து வெளம்பரம் குட்ப்பாங்கோ. ஆனா "காதல்"ன்னு பேரு வெச்சா அவங்களால ஒண்ணும் பண்ண முடியாது. படம் அம்பது நாளு பிச்சிக்கின்னு ஓடுனது "கொய்ந்த பசங்கோ" ஷங்கருக்கு பத்தாது போல. இன்னாடா பண்ணலாம்ன்னு ரோசன பண்ணி இஸ்கூலுல சொல்லி "நீயி அடிக்கிற மேரி அடி, நா அயுற மேரி அயுவுறேன்"ன்னு சொல்லிருப்பாரு போல. இஸ்கூலுக்காரங்கோ "ஐய்யோ எங்க இஸ்கூலு பேர பயாஸ்கோப்புல காட்டி எங்க இமேஜு பீஸா பூடும் போலக்கீது. அத்தால ஒண்ணு படத்த நிறுத்து, இல்லாங்காட்டி இருவது லச்சரூவா துட்டு குடு"ன்னு கேஸு போட்டுக்கிறாங்கோ.

இந்த கேஸு வந்த நேரம் படம் இன்னும் பிச்சிக்கின்னு ஓடும். ஷங்கருக்கு இன்னும் வந்து துட்டு கொட்டும். அப்பாலிக்கா இருவது இன்னா முப்பது வோணும்ன்னாலும் குட்த்துடுவாரு. செலவே இல்லாம அல்லா நூஸ்பேப்பருலேயும் காதலு படத்த பத்தி பேச வெச்சி படத்தையும் சொம்மா சோக்கா ஓட்டணும்ன்னா இருவது லச்சம் சொம்ம ஜுஜூபி மேட்டருபா, அக்காங்...