Tuesday, November 23, 2004

சட்டமன்றம் (எ) கூத்துமன்றம்

அம்மா டிவில சட்டமன்றத்துல நடுக்குற மேட்டருல்லாம் காட்றாங்கோ, அத்த பாக்கசொல்லோ செம்ம கலீஜா கீது. கலீஜுல படா கலீஜு இன்னான்னு கேட்டா அது அம்மா வாய்ஸு தான். பயாஸ்கோப்புல ஆக்ட்டு வுடசொல்லோ எட்த்த ட்ரெயினிங்கு அம்மாவுக்கு இப்போ சோக்கா வொர்க்கவுட்டு ஆவுது. ஏத்த எறக்கமா டயலாக்கு வுடுறாங்கோ. அத்த வுட பெர்ய கலீஜு இன்னான்னா தன்னோட தலீமயிலே கீற கவுருமெண்டு செஞ்சுதுன்னு எதையுமே சொல்றதுன்னு கெடியாது, அல்லாமே "நான் செஞ்சேன் நான் கிழிச்சேன்"ன்னு இன்னாமோ இவுங்க சம்பாரிச்ச காசுலேந்து எட்த்து செய்யிற மேரி டயலாக்கு வுடுறாங்கோ. அவுங்க தான் அப்டி கீறாங்கோன்னா கூட கீற அல்லங்கை மினிஷ்டருங்கோ லொள்ளு கேக்கவே வாணாம், அம்புட்டு பெர்ய லொள்ளா கீது.

மினிஷ்டருங்கோ சட்டமன்றத்துக்கு வர்றதே அம்மா கொரலு வுடுறப்போ கரீட்டா எட்த்து குடுக்குற கேப்புல டேபிளு தட்டுறதுக்கு மட்டும் தான் போல. அப்டியே அவுங்க ரெண்டு நிமிட்டு கொரலு வுட்டாலும் அதுல அம்மா பேர கூட சொல்லாம "டாக்டரு எதயதெய்வம் பொர்ச்சித்தலீவி அம்மா"ன்னு சொல்லி முடிக்கவே ஒரு நிமிட்டு ஆகிப்புடும் (ஆரும் மறந்து கூட பேர சொல்லிடக்கூடாது, அப்டி ஒரு ஆர்டரு கீது போல). அப்பாலிக்கா எதிர்கட்சில குந்திக்கின்னு கீறவங்கள நையாண்டி செய்ய அடுத்த ஒரு நிமிட்டு, கொரலு ஓவர், அத்தோட குந்திப்பாங்கோ. எந்த மினிஷ்டரும் தன்னோட தொறைலேந்து இத்த செஞ்சோம்ன்னு சொல்லக்காணோம். அம்மா தான் இப்டி பண்ணாங்கோ அப்டி பண்ணாங்கோன்னு கொரலு வுடுறாங்கோ, அல்லாமே அம்மாவே செஞ்சா அப்பாலிக்கா நீங்கள்லாம் எதுக்கு குந்திக்கின்னு கீறிங்கோ. அல்லாரும் வூட்டுல குந்திக்கின்னு கறிசோறு தின்னுப்புட்டு பல்லு குத்திக்கின்னு இர்க்கலாம்ல.

இதுல நேத்திக்கு நடந்தது படா தமாசு. உண்டாய் கம்பெனியும், போர்டு கம்பெனியும் ஆரு ஆச்சில கொண்டு வந்தாங்கோன்னு தாத்தாவும் அம்மாவும் அட்ச்சிக்கீறாங்கோ. தாத்தா வெளில குந்திக்கின்னு கொரலு வுடுறாரு, அவுருக்கு அம்மா வுள்ள குந்திக்கின்னு எதிர்கொரலு வுடுறாங்கோ. அல்லங்கையி நயினாரு நாகேந்திரரு எய்தி வெச்ச பேப்பர படிக்கசொல்லோ முன்னாள அதே மொதலமைச்சரு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த பெர்ஸுன்னு கூட மன்ஸுல நெனிக்காம "அவுரு பேசுறது சின்னப்புள்ளத்தனமா இருக்கு"ன்னு கொரலு வுடுறாரு. அத்த அப்டி சொல்லாதேன்னு ஆர்னா எதிர்கொரலு வுட்டா அதுக்கு அம்மா எய்ந்து "சின்னப்புள்ளத்தனம்"ன்னா இங்கிலிபீஸுல "சைல்டிஸு", அந்த வார்த்த ஒண்ணும் சொல்லக்கூடாத வார்த்த கெடியாதுன்னு சப்பக்கட்டு கட்டுறாங்கோ. இதுக்கெல்லாம் மேல பேரவைத் தலீவருன்னு குந்திக்கின்னுகீற பெரிய அல்லங்கையி காளிமுத்து ஐயாவும் "ஆமா ஆமா"ன்னு ஜால்ரா தட்டுறாரு. இன்னிக்கி "சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்லுவாங்கோ, நாளிக்கு நம்ம பேட்டைக்கே பெஷலா கீதே ஒரு வார்த்த அத்த கூட சொல்லுவாங்கோ, அதுக்கு அம்மா எய்ந்து "அதுக்கு இங்கிலிபீசுல மம்மின்னு அர்த்தம், மம்மின்னு சொல்லறது தப்பு கெடியாது"ன்னு சொல்லுவாங்கோ. சோக்கா கீதுபா இந்தச் சட்டமன்றம்.

"சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்றதுக்கு இன்னாத்துக்கு மக்களுங்க கிட்டே ஓட்டு வாங்கி இங்கே வந்து குந்திக்கின்னு இர்க்கோணும், அப்டியே தமாசு நடிகரு வடிவேலு கையிலே அஞ்சு நாளைக்கு கால்சீட்டு வாங்கிருந்தா அவுரு இன்னும் சோக்கா சொல்லுவாரு, நல்ல மினிஷ்ரருங்கோ, அவுங்களுக்கு ஒரு நல்ல மொதலாளியம்மா.

4 comments:

Anonymous said...

ஐயா குப்ஸ்,
சும்மா கலக்கறீங்க! சட்டசபையிலே இவங்க அடிக்கற கூத்து பார்க்க சகிக்கலை. சட்டமன்ற கூட்டம் நடத்தறதுக்கு பதிலா, அந்த காசுல, ஏழைங்களுக்கு எதனாச்சும் நல்லதவாது செய்லாமில்லே :-)
டைம் கிடைச்சா, என் ப்ளாக் பக்கம் தலை காட்டி, உங்க கமெண்ட்ஸ்-ஐ கொடுங்க!
என்றென்றும் அன்புடன்,
பாலா

கொரலு வுட்டது BALA

Anonymous said...

அம்மா எது சொன்னாலும் கரெக்ட் ந்னு மக்கள் நினைக்கிறாங்க.

கொரலு வுட்டது Gopinath

Anonymous said...

அத்-அ உட்டுதலுபா, இவ்லோ பேசுர நம்மல்ல யெத்தன பேர் ஓட்டு போட்டோம் , மன்ச்ச தொட்டு சொல்லுங்பா


கொரலு வுட்டது செந்தில்

Anonymous said...

தமிழ் வாழ்க...குப்புசாமி சென்னை தமிழை எப்ப விட போறிங்க?

கொரலு வுட்டது balachandar