Thursday, April 07, 2005

அம்மா Vs பேரன்

முன்னே ஒருக்கா (அம்)மாமமன்றம் கூட்டம் போட்டப்போ ஆரு ஃபோர்டு கொண்டு வந்தாங்கோ, ஆரு ஹுண்டாய் கொண்டுவந்தாங்கோன்னு தாத்தா ஆளுங்களும் அம்மா ஆளுங்களும் அட்ச்சிக்கினாங்கோ. ஹுண்டாய் கம்பெனிக்கு புல்லு வெட்டுனது நானுன்னு ஒருத்தரும் கள புடுங்குனது நானுன்னு ஒருத்தருமா அட்ச்சிக்கினது பாக்க சோக்கா இர்ந்துச்சு. இப்போ அட்த்த அடிதடி ஆரம்பிக்கப் போவுது. இது நோக்கியா மேட்டரு.

நோக்கியா கம்பெனி நம்ம சென்னப்பட்டனத்துல கம்பெனி இஸ்டார்டு பண்ணப் போறாங்களாம். அது அவங்களோட பத்தாவது பிராஞ்சாம். அது பத்தி பேசுறப்போ தாத்தாவோட இந்தி ஷ்பீக்கிங் பேராண்டி மாறரு "தன்னால தான் இந்தக் கம்பெனி நம்மூருக்கு வந்துக்கீது"ன்னு கொரலுவுட்டாரு. "இது மாத்ரம் இல்லபா, இன்னும் நெறியா கம்பெனி என்னாண்ட சிக்னலு குட்த்துக்கீறாங்கோ"ன்னு எக்ஸ்ட்ரா கொரலு வேற வுட்டாரு.

இத்த பாக்கசொல்லோ அம்மா மட்டும் சொம்மா இர்ப்பாங்களா. இன்னிக்கு (அம்)மாமன்றத்துல "தோ பாரு நைனா, நோக்கியா கம்பெனி சென்னைக்கு வர்றதுக்கு ரீஜனு நான் தான்பா"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. அதுவும் சொம்மா கொரலு கெடியாது, ரூல் 110 கீழே வுட்ட கொரலு அது. அந்த ரூலுல அம்மா கொரலு வுட்டா "முட்டாயி குடுக்கல, பிஸ்கோத்து குடுக்கல"ன்னுல்லாம் கோச்சிகினு வூடால கொரலு வுடுற தாத்தா கச்சி ஆளுங்கோ ஆரும் எதிர்கொரலு வுட முடியாது. இப்போல்லாம் அம்மா பேசுனாலே அது ரூலு 110ல தான் பேசுறாங்கோ. அது மரக்கெளைய ஒட்ச்ச நூஸா இர்ந்தாலும் சரி, கம்பெனி இஷ்டார்ட்டு பண்ற மேட்டரா இர்ந்தாலும் சரி.

நம்மூருல பொட்டி தட்டுறவங்கோ நெறியா கீற வூரு மூணு. பெண்களூரு, ஐதராபாத்து, அட்த்து நம்ம சென்னை. இந்த மூணுல கப்பலு, பிளைட்டு, ரோடு ரூட்டு மூணுமா கீற எடம் நம்மூரு தான். கம்பெனி தொறக்க வர்றவங்கோ இத்தெல்லாம் கீதான்னு தான் பாப்பாங்கோ, அம்மா கொரலு வுட்டதால கொண்டாந்தோமா, பேராண்டி கொரலு வுட்டதால கொண்டாந்தோமான்னு ரோசன பண்ண மாட்டாங்கோ. அத்தால ரெண்டு பேரும் இன்னா வேணா கொரலு வுட்டுக்கோங்கோ, ஆரும் கண்டுக்க மாட்டோம். ஆனா கடேசில வாய்க்கும் கைக்கும் சண்ட வந்தது மேரி ஆகி அப்பாலிக்கா இந்த வூரு வாணாம்பான்னு நோக்கியா கம்பெனி பொட்டிய கட்டிக்கின்னு கெளம்பாம இருக்கணும்.

பிட் நோட்டீஸ்: இந்த மேரி பேராண்டி பேசுனதுமே அட்த்து அம்மாவும் கொரலு வுடுவாங்கோ, நீ எதுனா சொல்லுபான்னு நம்ம காதுல வந்து ஓதுன கொல்கத்தா பிரின்ஸு செந்திலுக்கு டாங்க்ஸுபா

6 comments:

Anonymous said...

பிட் நோட்டீஸ்: இந்த மேரி பேராண்டி பேசுனதுமே அட்த்து அம்மாவும் கொரலு வுடுவாங்கோ, நீ எதுனா சொல்லுபான்னு நம்ம காதுல வந்து ஓதுன கொல்கத்தா பிரின்ஸு செந்திலுக்கு--
எப்படி ஓதுனாரு? நோக்கியா மேட்டர நோக்கியோ?ன்னா?

கொரலு வுட்டது suresh

Anonymous said...

கல்லொ குப்சமி
ரொம்ப நல்ல இருன்துது.
முரளி

கொரலு வுட்டது murali

Anonymous said...

போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டை முன்னேற்ற பாடுபடுகிறார்கள் போல!

எது எப்படியோ... குடுமிப்பிடி சண்டைக்கு நடுவிலும் 'காசு காரியத்தில் குறியாக இருக்கும் தாண்டவக்கோனார்' நோக்கியா-வை பாராட்டலாம்.

கொரலு வுட்டது Bala Subra

Anonymous said...

இந்தமேரிக்கா சண்டை போட்டு 10 பர்செண்டு கமிசன் கேட்டதாலதான் சிங்கப்பூர்க் காரங்க சென்னைல தொறக்கவேண்டிய கம்பெனிய பெங்களூரு கொண்டு போனதா இங்க ஒரே பேச்சு.

கொரலு வுட்டது மூர்த்தி

Anonymous said...

"போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டை முன்னேற்ற பாடுபடுகிறார்கள் போல! " :)

இத்த ஏன் குப்ஸ் குறையா சொல்ற நீ?

கொரலு வுட்டது Uma

Anonymous said...

குப்ஸாமி,

கலிநரு தாத்தா புச்சா ஒர் பிர்ச்சினை பாத்தியா, நம்ம ஏர்போர்ட்டு மேட்டருலே..அம்மாவும் கலிநரும் அட்சிக்கிறாங்கோ...


கொரலு வுட்டது நாடோடி