
பாகிஸ்தானு முசரப்பு ஐயா பாக்க தான் மொரட்டுத்தனமா இர்ப்பாரு போலக்கீது, மன்ஸு சொம்மா கொய்ந்த மன்ஸுபா. அக்காங், இன்னா மேட்டர்ன்னு கேக்குறிங்களா! நம்ம பெரதமரும், முசரப்பு ஐயாவும் அமேரிக்காவுல போயி கை குலுக்கிக்கசொல்லோ முசரப்பு ஒரு போட்டோவ கைல குட்த்துக்கீறாரு. போட்டோவ பாத்த மன்மோகன் ஐயா படா ஃபீலிங்ஸு ஆகிப்புட்டாரு. பின்னா இன்னான்றிங்கோ நாளிக்கு எய்வத்திரெண்டு வயசாவப போற நம்ம பெரதமரு கொய்ந்த புள்ளியா இர்க்கசொல்லோ பட்ச்ச இஸ்கூலு போட்டோவல்ல முசரப்பு குட்த்தாரு. அத்த பாத்து பெரதமரு பீலிங்ஸு ஆவலைன்னா தான் பெர்ய விசியம்.
இப்டி கலக்குனது பத்தாதுன்னு கட்டம் கட்டி கலக்க ஆரம்பிச்சிட்டாரு முசரப்பு. போட்டோ குட்த்த கையோட "இந்தாபா நீயி அந்த இஸ்கூலுல பட்ச்சப்போ எட்த்த மார்க்கு"ன்னு சொல்லி மார்க்கு லிஸ்ட்ட கைல குட்த்துட்டாரு. அமேரிக்கா போயி இப்டி ஆட்டோகிராப்பு ஃபீலிங்ஸு வரும்ன்னு நம்ம பெரதமரு நென்ச்சே பாத்துருக்க மாட்டாரு. முசரப்பு நீயி கில்லாடி நைனா....
கொசுறு: நாளைக்கு இஸ்கூலு சர்ட்டிபிகெட்டு கணுக்குப்படி பொறந்தநாளு கொண்டாடப்போற பெரதமரு ஐயாவுக்கு குப்ஸாமி கைலேந்து பொறந்தநாளு வாய்த்துகள்.
3 comments:
ஏன் குப்புசாமி பிறந்த நாள் ஸ்கூல் சர்ட்டிபிகேட்-ல தப்பா பதிவாயிடுச்சா?
கொரலு வுட்டது Mohan,Riyadh
கலக்கிபுட்டே தலை
கொரலு வுட்டது கலை
பார்த்துப்பா ராஜா கை குடுத்துப்புட்டு காஷ்மீர்க்கு மறுபடியும் ராணுவத்தை அனுப்பி வைச்சுடப்போறார்!!!
கொரலு வுட்டது Ravi
Post a Comment