Wednesday, August 25, 2004

அடுத்த சிஎம்மு

நம்ம வூரு பத்திரிகைங்களுக்கு வேற பொளப்பே கெடியாதுபா. எப்போ பாரு எவன் இன்னா பண்ணான், எந்தப் பொண்ணு ஆரால கெட்டுப்போனான்னு எதுனா எய்திக்கின்னே இர்ப்பாங்கோ. கேட்டாக்கா இன்வஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு இங்கிலிபீஸுல எதுனா சொல்லுவாங்கோ. இன்வெஸ்ட்டிகேடிவ்வா எய்தணும்ன்னா நாட்டுல எய்த மேட்டரா இல்ல? எந்த அமைச்சரு இன்னா ஊளலு பண்றான்னு எய்து. எந்த கவுருமெண்டு அதிகாரி தன்னோட ஜோலிய ஒய்ங்கா செய்யலைன்னு எய்து. அத்தெல்லாம் வுட்ருவாங்கோ, பொம்பள பின்னாடி அலையிறது தான் இப்போ இன்வெஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு சொல்றாங்கோ.

முன்னே கொஞ்ச நாளு அல்லாரும் செரினான்னு ஒரு பொண்ணு பின்னாலேயே சுத்திக்கின்னு இர்ந்தாங்கோ. அத்து மூஞ்ச அங்க இங்க திருப்புனா கூட அதுக்கு எதுனா காரணம் சொல்லிக்கின்னு இர்ந்தாங்கோ. அத்த எய்தி முட்ச்சாச்சு. இப்போ புச்சா கெளம்பிக்கீற மேட்டரு நம்ம செயலச்சுமியக்கா. செரினா மேட்டர்ல கூட பின்னால இர்ந்தது பெரிய அர்சியல் ஆளுங்கோன்னு கொஞ்சம் போட்டோல்லாம் அடக்கி வாசிச்ச பத்திரிகைங்கோ இந்த மேட்டருல ஒரே போட்டோவா போட்டு கிளிச்சி எட்க்கிறாங்கோ. அந்த அக்காவும் நீயி எத்த வேணா எய்திக்கோ எப்டி வேணா போட்டோ புட்ச்சிக்கோன்னு போஸ் குடுக்கிது.

சரி, மேட்டருக்கு வருவோம். இப்போங்காட்டி தமிள்நாடு இஸ்டேட்டு எலிக்ஸன் வர்துன்னு வெய்யிங்கோ, நம்ம தாத்தா கலீஞரு அப்டியே செயலச்சுமியக்காவ அமுக்கி தன்னோட கச்சிக்கு இஸ்துக்கின்னு வந்துடுவாரு. பர்கூரு தொகுதில அம்மாவுக்கு ஆப்போஸிட்டு செயலச்சுமி தான். செயலலிதாவா செயலச்சுமியான்னு ஆயிப்புடும். கெலிக்கிறது யாரா இர்க்கும்ன்னு நெனிக்கிறிங்கோ?? சுகுரா செயலச்சுமியக்கா தான் கெலிக்கும். அப்பாலிக்க அட்த்த கொஞ்சம் வர்ஸத்துல யக்கா தான் சிஎம்மு.

2 comments:

ராஜா said...

இன்னா குப்ஸூ, சி.எம் அளவுக்கு இந்தக்காவ நீ கற்பன பண்ணுறதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்ல? நம்ம தாத்தா அந்தளவுக்கா மர கழண்டு கெடக்குறாரு? நீ அந்த வெங்கடேச பண்ணயாரு சம்சாரம் மேட்டர மன்ஸ்ல வச்சிகினு பேசுறனு நெனக்குறேன். அதுவேறப்பா. அந்தம்மாகிட்ட எலக்ஷன் செலவுக்கு கோடி கணக்குல டப்பு கீது. சிம்பதில ஓட்டு போட சாதி சனங்க கீது. இந்தக்காக்கிட்ட யார் யார் கஸ்டமருங்கோன்ற லிஸ்ட் தான் கீது. தெனம் ஒரு லிஸ்ட் எடுத்து உட்டுகினே கீது. நேத்து நம்ம போலீஸ் மாமாங்கோ லிஸ்டு. நாளைக்கு தொழில் அதிபருங்கோ லிஸ்டு. காலைலங்காட்டியும் பேப்பர தொரந்தாலே மேட்டர் கப்படிக்குது.

KVR said...

ஐய்யே ராசா, அர்சியல்ல எத்து வோணும்ன்னா நடக்கும் கண்ணு. அத்த வுடு, நீயி சொல்ற கப்பு தாங்க முடியாம தான் ராசா இத்த எய்துனதே.