நம்ம வூருல இன்னா விசேஷம் வந்தாலும் நடக்காத ஒரு கூத்து இந்தப் புள்ளையார் சதுர்த்தி வந்தா மட்டும் நடக்கும்ப்பா. வூருல ஒண்ணுத்துக்கும் ஒதவாம சுத்திக்கின்னு கீற பசங்கோ அல்லாரு வூட்டுலையும் துட்டு வசூல் பண்ணி புள்ளையாருக்கு செலை வைக்கிறது, அன்னிக்கு ஆடாத ஆடமெல்லாம் ஆடுறதை நா கணக்குலியே எட்த்துக்கல. ஆனா கட்டே கடேசியா புள்ளியார கொண்டுபோய் கடல்ல போடுவாங்கோ பாருங்கோ, அத்தான்பா மெய்யாலுமே கொடுமையான மேட்டரு.
கண்ட பெயிண்ட்டு, எதுனா ரசாயனமெல்லாம் கலந்து தான் அந்தப் புள்ளியார செய்றாங்கோ, அத்த கொணாந்து கடல்ல கலந்தா அது மன்ஸனுக்கு மீனுக்கு அல்லாம் எம்மாம் பெரச்சனைய கொணாந்து வுடும். ஆருமே அத்த பத்தி ரோசனப் பண்றது கெடியாது. வூர்வலமா சுத்தி வந்து புள்ளியார கடல்ல வீசிப்புட்டு அத்த ரெண்டு மிதியும் மிதிச்சிட்டு போவாங்கோ. குப்ஸாமி இதையெல்லாம் கேட்டாக்கா ஹிந்து இண்டாலரண்ஸ்ன்னு கூட ஆர்னா சொன்னாலும் சொல்லுவாங்கோ.
இந்த தபா நல்லவேளியா நம்ம வூரு கோர்ட்டுல இது ஸ்டே குட்த்துட்டாங்கோ. ஆரும் இந்த தபா ரசாயனம் கலந்த புள்ளியார் செலைய கடல்ல கலக்கக்கூடாதுன்னு. ஆனாலும் நம்ம காவி கச்சி சிஸ்யப்புள்ளிங்கோ அன்னிக்கு சுகுரா கொண்டுபோயி செலைய கடல்ல கலந்துவுடும். அப்பாலிக்கா பெரச்சனை தான்.
சரி, புள்ளியார கொண்டு போயி இன்னாத்து கடல்ல கலக்கணும். புள்ளியாரு ஒன்னாண்ட வந்து "எனுக்கு கலரு கலரா பெயிண்டு அட்ச்சி நீயும் கொஞ்சம் மூஞ்சில பெயிண்டு தேய்ச்ச்க்கின்னு டமுக்குடப்பா ஆட்டம் போட்டுக்கின்னு போயி என்னிய கடல்ல தூக்கிப்போடு"ன்னு கேட்டாரா? கெடியாதே. இதெல்லாம் நம்மளா செஞ்ச பளக்கம் தானே. ஈ எறும்புல்லாமும் பசி இல்லாம இர்க்கோணும்ன்னு வூட்டு வாசல்ல அரிசிமாவு கோலம் போட சொன்னாங்கோ. நம்மாளு அதுக்கு கலரு குடுக்கிறேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் கலந்து போட்டுக்கின்னு கீறாங்கோ. அத்த மேரி தண்ணில கீற உசுருங்களுக்கும் எதுனா குடுக்கணும்ன்னு அரிசிமாவுல புள்ளியாரு செஞ்சி அத்த கொண்டு போயி ஆறு, கொளம், குட்ட, கடலுன்னு எங்க தண்ணிய பாக்குறியோ அத்துல போடுன்னு வெச்சாங்கோ.
குப்ஸாமி வூட்டுல இன்னிய வரைக்கும் களிமண்ணாலையோ, கண்ட ரசாயனத்துலியோ புள்ளியாரு பொம்ம செஞ்சு தண்ணில வுட்டது கெடியாதுபா. எப்பவும் அரிசி மாவு தான். அதுவும் நம்ம ஆத்தா அந்தப் புள்ளியார செய்ய சொல்லோ "நம்மல்லாம் இன்னா கண்ணு புள்ளியாரு செய்றோம். அந்தக் காலத்துல மூணு குறுணி அரிசிய போட்டு புள்ளியாரு செய்வாங்களாம். அது தான் முக்குறுணி புள்ளியார்ன்னு பேரு வந்திச்சி"ன்னு சொல்லிக்கின்னே செய்யும். நம்ம கவுருமெண்ட்டு கூட களிமண்ணால செஞ்ச புள்ளியார தண்ணில தூக்கிப்போட ஒண்ணும் சொல்லல. ஆனா அத்த தூக்கிப்போட்டா தண்ணி இருக்குற எடம் துந்து பூடாதா? அரிசி செஞ்சத போட்டா அங்கே இருக்குற மீனுக்கு நல்லது. களிமண்ணையும் ரசாயனத்தையும் போட்டா அல்லாருக்கும் கெடுதல் தான்பா.
சரி, இப்போ இன்னாதுக்கு இப்டி கூவிக்கின்னு கீற குப்ஸாமின்னு கேக்காதிங்கோ. இத்த படிக்கிற பத்து பேருல ரெண்டு பேராவது களிமண்ணு புள்ளியாரு, ரசாயன பொம்ம புள்ளியாருன்னு போவாம வூட்டுலியே அரிசியிலே செஞ்சு அத்த கொண்டு போயி தண்ணியிலே தூக்கிப்போடுவிங்கன்னு நென்ச்சி தான் சொல்றேன். அல்லாரும் சந்தோசமா புள்ளியாரு சதுர்த்தி கொண்டாடுங்கபா. வர்ட்டா....
14 comments:
ஆண்டவா, கடல்ல கரைக்கப்போற புள்ளையாரையெல்லாம் நீ காப்பாத்து
புள்ளையாரை கரைக்கிறதை பத்தி குறைசொல்றவங்களை நான் பாத்துக்கிறேன்!
கொரலு வுட்டது J. Rajni Ramki
னால கீதுபா
கொரலு வுட்டது Murugaiyan
எங்க ஊர்ல முக்குறுணி அரிசிப் பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டு, மூணு குறுணி (மரக்கால்) அரிசி போட்டு கொழுக்கட்டை பண்ணி படைச்சூட்டு எல்லாரும் சாப்பிடுவாங்க!
அப்பறம், அங்க களிமண்ணுக்குப் பதிலா வண்டல் மண்ணிலதான் புள்ளையார் செய்வம். அதனால குளத்தில ஆத்தில கரைச்சா நல்லதுதான்.
கொரலு வுட்டது
great work KVR..very informative.learnt a few interesting things from this topic.
-Sriram.
கொரலு வுட்டது sriram
நம்ம பசங்க நல்லபடியா சாமி கும்பிட்டுனுதான் இருந்தாங்கோ...இந்த காவி கச்சி வளந்த பொறவு தான் நெலம மாறிச்சி. நீங்க ஒரு 10 வருசம் பேக்குல போயி பாத்தீங்கன்னா உண்மை வெளங்கும்...பக்தியை வெறியாக்கிய பெருமை காவிக் கச்சியையே சாரும். அதுக்கு முன்னாடி திருட்டு...ச்சே..திராவிடக் கட்சிங்க எல்லாம் இந்த அளவுக்கு பெரச்சனை பன்னலைங்க.
கொரலு வுட்டது Moorthi
அறிவுள்ளவர்கள் செய்கிற காரியமில்லை இந்த மாசுபடுத்தும் சிலை கரைப்பு.
கொரலு வுட்டது சுந்தரவடிவேல்
குப்ஸூட்ல மாறியே அல்லாரும் புள்ளாரு சதுத்தி கொண்டாட்னாக்க மன்சுக்கு நல்லாக்கும்பா. குப்ஸே! புள்ளியாரு ஓவ்யம் டக்கரா கீதுபா
கொரலு வுட்டது கோபி
நல்லா சொன்னே குப்ஸாமி, நறுக்ன்னு.
கொரலு வுட்டது காசி
தம்பி குப்ஸூ,
மூர்த்தி சொன்னப்லே மிந்தியெல்லாம் இதுமாரி
இல்லேப்பா. பாம்பே, பூனா இங்கெல்லாம்தான் இப்டி இருந்துச்சு. இப்ப
அநியாயத்துக்கு பண்றாங்களேப்பா
கொரலு வுட்டது Tulsi Gopal
கலக்கிட்டே குப்ஸு -படுவா
கொரலு வுட்டது baduwa
சூப்பெருப்பா
இன்னைக்குதான் பாத்தேன் இன்த செய்தி பத்திரிகை.
கொரலு வுட்டது arunachalam
³§Â! ¸Äì¸Ä¡ ¦¸¡Îò¾ Á þýÉ¡ ¬¾í¸õ þ¨¾ Ó¾Ä ¿õ ¦¸¡öõÀ ¾ÄÅ¢¸û À¢츧¸¡Ïõ.
கொரலு வுட்டது suresu
என்னைய நேயு.கொல்லகார சஙரசரி
பத்த்ய் பெசவெ மட்டிய
கொரலு வுட்டது kabilan
கரிட்டா சொல்லிகினியே நைனா. நல்லாதான் இருக்கு கன்டினியூ பண்ணு.
கொரலு வுட்டது sEkar
Post a Comment