Monday, March 21, 2005

மூட(முடியாத)நம்பிக்கை

நம்மூருல லார்டு கணேஸு பால் குட்ச்சாரு, கொரங்கு மன்ஸன் வந்தான், மாட்டு கண்ணுல எம்சியாரு தெர்ஞ்சாரு. இப்போ புச்சா ஒரு கெளவி வந்து வெங்காயம் வோணும்ன்னு கேக்குதாம். அதுவும் "பசிக்குதுபா, வெங்காயம் குடு"ன்னு கேக்குமாம். தம்மாதுண்டு வெங்காயம் தானேன்னு குட்த்துப்புட்டா அப்பாலிக்கா நீயி கண்ணம்மாபேட்டையாண்ட ஒதுங்கிட வேண்டியது தானாம். வெங்காயத்துக்கும் மன்ஸன் மண்டைய போடுறதுக்கும் இன்னாடா லிங்குன்னு கேட்டா ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறானுங்கோ.

இத்தெல்லாம் தமிள்நாட்டுல நடுக்குதான்னு ஆரும் ஃபீலாவ வாணாம், நம்ம டில்லில நடுக்குது. வூருலக்கீற அல்லா மக்களும் இப்போ கெளவிங்கள பாத்தாலே பேஜாராவுறாங்களாம். நல்லவேளபா, கெளப்பிவுட்டவன் "வெங்காயம் குட்த்தா மண்டைய போட்டுடுவ"ன்னு கெளப்பிவுட்டான், "கெளவி ஒண்ணு வந்து குடிக்க ஒரு கிளாஸு தண்ணி கேக்கும், குட்த்துடாதே. குட்த்தா மண்டைய போட்டுடுவ"ன்னு சொல்லிருந்தா இன்னா ஆவுறது. சொம்மாவே நம்ம மன்ஸங்கோ தண்ணி குட்க்க ரோசன பண்ற மன்ஸங்கோ, இதுல இப்டில்லாம் சொல்லி வெச்சா அப்பாலிக்கா தாகத்துல தவிச்சு மண்டைய போட்டா கூட தண்ணி தர மாட்டாங்கோ.

தெனமலரு அத்த நூஸா போட்டுக்கீறாங்கோ. நீங்களும் பாருங்கோ.

7 comments:

Anonymous said...

ஏம்பா குப்ஸு, நானும் இப்போதான் அந்த நூசப் பட்சேன். நம்ம தெனமலரோட யோக்கியம் தான் அல்லாருக்கும் தெரியுமே.

கொரலு வுட்டது Kups Rasigan

Anonymous said...

யார்பா அது குப்ஸ் ரசிகன். வுட்டா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு அப்பாலிக்கா என்னையும் ஒரு சிஎம்மு ஆக்கிடுவிங்க போல

கொரலு வுட்டது kosappettai kuppusaamy

Anonymous said...

apadi oru aasai vera irukka kosappettaikku?

கொரலு வுட்டது Uma

Anonymous said...

அடப்பாவமே.. வயதான முதியவர்கள்தானா கிடைத்தது இந்த மூடநம்பிக்கை வாதிகளுக்கு? அய்யோ பாவம்.. கடும்வெயிலில் அவதிப்பட்டாலும்கூட யாரும் கைபிடித்து நிழலுக்கு அழைத்துச் செல்ல அஞ்சுவார்களே.. உலகம் எங்க போவுது?

கொரலு வுட்டது மூர்த்தி

Anonymous said...

எனக்கு ஒரு மெயில் வந்துச்சி!!!

Take a couple of minutes to go through this mail. If useful may advise others also Please pass this on to others. This happened in Paris recently and may happen elsewhere also. A few weeks ago, in a movie theatre, a person felt something poking from her seat. When she got up to see what it was, she found a needle sticking out of the seat with a note attached saying "You have just been infected by HIV". The Disease Control Center (in Paris) reports many similar events in many other cities recently. All tested needles were HIV Positive. The Center also reports that needles have been found in cash dispensers at public banking machines. We ask everyone to use extreme caution when faced with this kind of situation. All public chairs/seats should be inspected with vigilance and caution before use. A careful visual inspection should be enough. In addition, they ask that each of you pass this message along to all members of your family and your friends of the potential danger.

Recently, one doctor has narrated a somewhat similar instance that happened to one of his patients at Priya Cinema in Delhi (India). A young girl, engaged and about to be married in a couple of months, was pricked while the movie was going on. The tag with the needle had the message " Welcome to the World of HIV family". Though the doctors told her family that it takes about 6 months before the virus grows strong enough to start damaging the system and a healthy victim could survive about 5-6 years, the girl died in 4 months, perhaps more because of the "Shock thought". We all have to be careful at public places, rest God help! Just think about saving a life by forwarding this message. Please, take a few seconds of your time to pass along.

With Regards,
S. Dinesh Gopinath,
I.A.S, Director of Medical & Research Div, Chennai.


கொரலு வுட்டது மூர்த்தி

Anonymous said...

னல்லா இருக்குப்பா!

கொரலு வுட்டது pasupathi

Anonymous said...

மூர்த்தி,

நம்ம ஜனங்களுக்கு எச்.ஐ.வி பத்தி எத்தனை விழிப்புணர்ச்சி முகாம் நடத்துனாலும் புரியறதில்லை.

எச்.ஐ.வி வைரஸ் உயிருள்ள ரத்தத்தால மட்டும் தான் பரவும்.

ஊசி மூலமா தியேட்டர்ல நோட்டிஸ் ஒட்டி கொண்டுபோய் வைக்கிற நேரத்துல அந்த ஊசியில உள்ள ரத்தமே செத்துப் போயிருக்கும்.

அதனால, எயிட்ஸ் இப்படியெல்லாம் பரவாது!!

கொரலு வுட்டது கோபி