Tuesday, October 05, 2004

அம்மா கொரலு

அடடா வூரு ஒலகமெல்லாம் "அம்மா" இங்கிலிபீஸுல கொரலு வுட்டுக்கீறாராங்கோன்னு பேசிக்கின்னு கீதே குப்ஸாமிக்கு அத்த பாக்குற கொறாம கெடிக்கிலியேன்னு ஃபீலாகி இர்ந்தேன்பா. நம்ம பிபிசி ரொம்ப நல்ல மன்ஸங்கோ, எட்த்த பேட்டிய அப்டியே படமா அவங்க தளத்துலே குட்த்துக்கீறாங்கோ. பாக்கசொல்லோ படா சோக்காக்கீது மேட்டரு. அம்மா கையிலே இர்ந்த பேப்பருங்கள கரண் தப்பார் மேல தூக்கி அடிக்காத கொற தான். அம்புட்டு ஜூடா கொரலு வுடுறாங்கோ.

செல மேட்டருல்லாம் இன்னா பேசணும்ன்னு முன்னாடியே ரோசன பண்ணிக்கின்னு வந்துருப்பாங்கோ போலக்கீது. சம்மந்தமே இல்லாம அஜீத்தும் விஜயும் பயாஸ்கோப்புல டயலாக்கு வுடுற கணுக்கா செல டயலாக்கு வுட ஆரம்பிச்சிட்டாங்கோ. நா தானா வளந்த மரம், நா காலையிலே நாலு மணிக்கு எய்ந்து பல்லு வெளக்கி குள்ச்சி ஜோலிய இஸ்டார்ட்டு பண்ணுனா நைட்டு கட்டைய நீட்டுற வர ஜோலிய தான் பாக்குறேன் அது இதுன்னு செம்ம டயலாக்கு. இத்த மேரி டயலாக்கு வுட்டே செல எடத்துல அம்மா கரண் அண்ணாத்தே கையிலே மாட்டிக்கின்னாங்கோ. "நீ ஏன் அத்த செய்தே"ன்னு கேட்டா கொய்ந்த புள்ள கணுக்கா "அவுரு செய்யலியா, இவுரு செய்யலியா. அவராண்ட போயி கேக்க வேண்டியது தானே"ன்னு எதிர்கொரலு வுடுறாங்க. பேப்பர பாத்து ஏன் படிக்கிறிங்கோன்னு கேட்டா சூடாவுறாங்கோ.

இங்கிலிபீஸு டிவிபொட்டில இஸ்பீச்சு குட்த்து "தமிள்நாட்டுல ஒய்ங்கா இங்கிலிபீஸ்ல கொரலு வுட தெர்ஞ்ச நா ஒருத்தி தான். வோணும்ன்னா தாத்தாவ அப்டி எதுனா பேச சொல்லுங்கோ பாக்கலாம்"ன்னு எலிக்ஸம் டைமுல சீன் போட்றதுக்காக கொரலு குட்க்க தலய ஆட்டிருப்பாங்கோ போலக்கீது. ஆனா அத்தே அவுங்களுக்கு ஆப்பு அட்ச்சி போச்சி. அத்தால கடேசில "ஒண்ணோட பேசுனதே வேஸ்ட்டு நைனா"ன்னு கொரலு வுட்டுட்டு போய்ட்டாங்கோ. யம்மோவ் இந்த மேட்டர லூஸ்ல வுடுங்கோ, நம்ம அப்பாலிக்கா சிஎன்என்ஐ கூட்டியாந்து நாமளே கேள்ளி கேக்குறவனுக்கு கேள்விய குட்த்து எய்தி வெச்சிக்கின்னு வந்த பேப்பர பட்ச்சி பளிக்கு பளி வாங்கிபுடலாம். அப்பாலிக்கா "பிபிசி இப்போ தயாநிதி மாறன் கைல கீது, அத்தால தான் அப்டி என்னிய பளி வாங்கிப்புட்டாங்கோ. நா ஒரு பொம்பளன்னு என்னிய இப்டி எல்லாம் பண்றாங்கோ"ன்னு மூக்கு சிந்தி அட்த்த சிஎம்மு ஆகிப்புடலாம்.

அம்மாவோட கொரலு வீடியோ: http://www.bbc.co.uk/tamil/jaya_thapar.ram
அம்மாவோட கொரலு ஆடியோ: http://www.bbc.co.uk/tamil/jayaaudio.ram
அம்மா கொரலு இங்கிலிபீஸுல படிக்க: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml

அம்மா கொரலு பத்தின சுரேஸு அண்ணாத்தே கருத்து: http://groups.yahoo.com/group/Maraththadi/message/20524

10 comments:

Anonymous said...

super :)

கொரலு வுட்டது Kasi

Anonymous said...

:)
(கொரலு விட பயம்.)

கொரலு வுட்டது suratha

Anonymous said...

ப்ரமாதம்

கொரலு வுட்டது கோபி

Anonymous said...

அம்மாவுக்கே ஆப்

கொரலு வுட்டது

Anonymous said...

அம்மாவுக்கே ஆப்பா?கொரலு வுட்டது

Anonymous said...

இதெல்லம் நல்லா இல்லை .... ஆட்டோ !!!!!!

கொரலு வுட்டது nzz

Anonymous said...

எனக்கு புல்லு அரிக்கிதுபா.. இன்த க்ரன் தப்பாரு வூடு எஙக பா கீது ?

கொரலு வுட்டது nattu

Anonymous said...

என்னபா குப்ஸ் அம்மா பிபிசி ல பேசின இங்கிலிபீஸ் சிடியா உட்டு 2005 தேர்தலை கலக்கபோறாங்களாம் கருணாநிதி அம்மாவுக்கு எதிரா நிப்பாட்டா க்ரன் தப்பாருவை கூப்பிட போறாராம்.

கொரலு வுட்டது ravi

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சரியா சொன்னபா. கரன் தாப்பர போடால போடனும். இன்ன நென்ச்சுக்கினு இக்கான் இந்த தாப்பரு.

கொரலு வுட்டது madayan