எப்டி கீறிங்கோ மக்களே? சோக்கா கீறிங்களா? "சென்னை 368" டைட்டிலு பாத்து இன்னா நென்ச்சிங்கோ? வெங்கட் பிரபு "சென்னை 600028" எட்த்து சொம்மா பிச்சிக்கின்னு ஓடினதும் நம்ம குப்ஸாமியும் அதே மேரி பயாஸ்கோப்பு எடுக்கப் போறான்னு நென்ச்சிங்களா? அத்தான் கெடியாது. இன்னியோட நம்ம சென்னப்பட்டணத்து வய்ஸு 368 ஆகுதுபா. ஆகஸ்ட் 22 1639ல பொற்ந்த சென்னப்பட்டணம் 368 வர்ஸமா அத்தோட ரவுஸு கொறையாம கீதுபா. குப்ஸாமிக்கு கவுஜ எய்தவும் தெர்யாது கானா பாடவும் தெர்யாது. ஆனாலும் கையி சொம்மா இர்க்க மாட்டேங்குதுபா. அத்தால நம்ம சென்ன பட்டணத்துக்கு ஒரு பொற்ந்தநாளு வாய்த்து எய்த்திக்கீறேன்.
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
கண்குளிர சைட்டடிக்க குயின்மேரிஸு
கண்டதுமே தெரிச்சு ஓட மீனாட்சிகாலேஜு
மனுசனோட புத்திய தீட்ட கன்னிமாரா
சும்மா இருக்குறவன சுத்தல்ல வுடுற சுண்டக்கஞ்சி
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
காத்து வாங்க இருக்கதைய்யா மெரினா பீச்சி
மணி ஏழடிச்சா காட்டிடுமே ஏ படக்காச்சி
முண்ணூறு வருஸமான செண்ட்ஜார்ஜு கோட்ட
இன்னிக்கும் இஸ்ட்ராங்கா நிக்கிதய்யா அடிதடியோட
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
சாம்பார் இட்டிலி துண்ணனுமா சரவணபவன் இருக்கு
சால்னாவும் பரோட்டாவும் ரவுண்டு கட்ட முனியாண்டி விலாஸு
சைனீஸு நூடுல்ஸுக்கு இருக்குபாரு அஞ்சாறு நூடுல்ஸு ஹவுஸு
அஞ்சப்பரும் பொன்னுசாமியும் அங்கங்கே இருந்தும்
ஐய்யா கையேந்திபவன் நாஷ்தா டேஷ்ட்டு கொறையல இன்னும்
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
மூண்ணூத்தி அறுவத்தெட்டு வர்ஸமென்னா
உனுக்கு எண்ணூறு வர்ஸமானாலும் ஜொலிப்பு காட்டுவா
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
- கொஸப்பேட்ட குப்ஸாமி
Wednesday, August 22, 2007
சென்னை 368
Friday, June 29, 2007
மதுரை மேற்கு - காங்கிரஸ்(??) வெற்றி
மதுர மேக்கு தொகுதில காங்கிரஸு 31 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல கெலிச்சிக்கீறாங்கோ. இன்னா தான் தினகரனு, ரவுடி அளகிரி, கவர்ல பணம்ன்னு அல்லாரும் ரவுண்டு கட்டி அட்ச்சாலும் சொல்லி அடிக்கிற கில்லின்னு திர்ம்ப ஒருக்கா அளகிரி அட்ச்சிக்கீறாரு.
காங்கிரஸு ராஜேந்திரன் - 60,785 ஓட்டு
அதிமுக செல்லூர் ராஜு - 29,959 ஓட்டு
தேமுதிக சிவமுத்துக்குமரன் - 21,241 ஓட்டு
இந்த எலிக்ஸன்ல ஆரு படா குஷி ஆகிடுவாங்கன்னு பாக்கசொல்லோ, காங்கிரஸு கட்சி தலீவி சோனியாவ விட, அவங்க பாச அப்பா தமிழ்நாட்டுத் தாத்தா கலீஞர விட, அவரு புள்ள அளகிரிய விட, தமிள்நாட்டுல இன்னும் காங்கிரஸு இருக்குன்னு கெனா கண்டுகின்னுக்கீற சில்லுண்டி காங்கிரஸு பெர்ஸுங்கள விட, கஜேந்திரரு விஜயகாந்து தான் குஷியா இர்ப்பாரு.
அதிமுகல நின்ன செல்லூர் ராஜு உள்ளூர் வெயிட்டு, அத்தால திமுகவே கலீஜாகி தான் நின்னுச்சு. ஆனா சைக்கிளு கேப்பு கஜேந்திரரு சர்ச்சு கோயிலுன்னு ரவுண்டு கட்டி அட்ச்சிட்டு இப்போ 21,241 ஓட்டு வாங்கிக்கீறாரு. இப்போ சொல்லுங்கபா ஆரு படா குஷியா இர்ப்பாங்கோன்னு?
Tuesday, December 12, 2006
கவுருமெண்ட்டு சொத்து நம்ம சொத்து
தாத்தா கலீஞரு அல்லாருக்கும் அள்ளி அள்ளி குட்த்துகினே கீறாருபா. பயாஸ்கோப்பு பொட்டி குட்த்தாரு, ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்குறேன் குடுக்குறேன்னு டகால்ட்டி காட்டுறாரு, டாஸ்மாக்கு ஆளுங்களுக்கு எக்ஸ்ட்ரா துட்டு குட்த்தாரு, பயாஸ்கோப்பு பார்ட்டிங்களுக்கு தமிளுல பேரு வெச்சா டாக்ஸு வாணாம்ன்னு சொல்லிட்டாரு. இப்டி அல்லாருக்கும் குட்த்துகினே கீறப்போ கரவேட்டி பார்ட்டிங்களுக்கு மட்டும் ஒண்ணுமே குடுக்கலையேன்னு மன்ஸுக்குள்ளே ஃபீலாகி இர்ப்பாரு போலக்கீது. இப்போ அவுங்களுக்கும் குட்த்துக்கீறாரு.
இன்னா குட்த்துக்கீறாரு தெர்யிமா? கட்சிக் கூட்டம்ன்னு பேரு பண்ணிகினு மைக் செட்டு மாணிக்கமெல்லாம் இன்னா அளும்பு பண்ணாலும், எந்த கவுருமெண்ட்டு சொத்த வீணாக்குனாலும் அந்தக் கட்சி ஃபைனுல்லாம் கட்ட வாணாம். இதுக்கு அவுரு சொல்லிக்கீற ரீஜனு படா சோக்குபா. கட்சி மைக்கு செட்டு கட்டி கூட்டம் கூட்ட சொல்லோ ஆராவது வந்து பேஜார் பண்ணா அதுக்கு எப்டி அந்தக் கட்சி பொறுப்பாவும். அத்தால அந்தக் கட்சி கையிலே பைசா கேக்கக்கூடாதுன்னு சொல்லிக்கீறாரு. பெர்ய மன்ஸன் பெர்ய மன்ஸன் தான்பா. இன்னாமா சொல்லிக்கீறாரு.
இப்போ ஒரு கண்ணால மண்டபத்துல கண்ணாலம் வெக்கிறோம், எதோ கொய்ந்திங்கோ ரெண்டு மூணு சாமான ஒட்ச்சிடுது, இல்லாங்காட்டி ஆரோ ரெண்டு மூணு எவர்சிலுவரு பாத்திரத்த ஆட்டயப் போட்டுடுறாங்கோ. கண்ணால மண்டப ஓனரு வந்து நம்ம கைல "கண்ணு, இத்த நீயி செய்ல, ஆரோ கண்ணால மண்டபத்துக்கு வந்தவங்கோ செஞ்சுக்கீறாங்கோ. அத்தால இதுக்கெல்லாம் நீயி பைசா குடுக்க வாணா கண்ணு"ன்னு சொல்ற மேரி கீதுபா. கரவேட்டி கண்ணுங்களா, இனிமே நீங்க எத்த ஒட்ச்சாலும் துட்டு குடுக்க வாணாம்பா, என்சாய் பண்ணுங்கோ. வர்ட்டா......
Tuesday, November 28, 2006
சானியா மிர்ஸா பத்தாவது இடத்திற்கு முன்னேற்றம்
குப்ஸாமிக்கு டென்னிஸு புடிக்கும், அதுக்கு மொதோ ரீஜனு பீட் சாம்ப்ரஸு, அப்பாலிக்கா ஃபெடரரு. இப்போ கொஞ்ச வர்ஸமா ரொம்ப ரொம்ப புடிக்கிது. ரீஜனு கீதுபா, அல்லாம் சானியா மிர்ஸா தான். அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்துல கொஸப்பேட்ட குப்ஸாமி பேரு ஆயுளு உறுப்பினரு, அகில ஒலக செயலாளருன்னு போட்ருக்கும். அப்டி ஒரு கில்மா சானியா மேல.
சானியா ஒலக ராங்கிங்குல கொஞ்ச கொஞ்சமா டவுனாகின்னே கீதா, அத்தால இப்போ கொஞ்ச நாளா குப்ஸாமி படா ஃபீலிங்கு ஆயிட்டான். ஃபீலிங்குல இர்ந்த குப்ஸாமிக்கு பட்ட பட்டயா ஊறுகா தொட்டுக்கின்னு பத்து பாட்டிலு பட்ட சரக்க அட்ச்ச மேரி ஒரு நூஸு கெட்ச்சிக்கீது. சானியா மிர்ஸா டென்னீஸு ஆட்டக்காரங்கள்ல பத்தாவது எடத்துல கீதாம். அது எப்டிபா ஆட்டத்துல தோத்துகினே இந்தப் பொண்ணு பத்தாவது எட்த்துக்கு வந்துச்சுன்னா பாக்க சொல்லோ "அயகான டென்னிஸு ஆட்டக்காரிங்கள்ல பத்தாவது எடம்" சானியாவுக்கு கெட்ச்சிக்கீதாம்.
இத்த மேரி ஒரு லிஸ்ட்டு போட்டது சீனாக்காரனுங்கோ. சீனாக்காரனுக்கு மூளையே மூளபா. அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்து சார்பா சீனாக்காரனுங்களுக்கு ஒரு டாங்க்ஸ் பார்ட்டி வெக்கணும். வர்ட்டா..............
Thursday, September 28, 2006
அந்தர்பல்டி திருமா
அந்தர்பல்டி அவார்டு ஒரு சீசனுல மரவெட்டி மருத்துவரு கையிலே இர்ந்துச்சு. அப்பாலிக்கா அத்த கருப்புத்துண்டு பார்ட்டி எட்த்துகின்னாரு. அவரோட கொஞ்ச நாளு ரவுண்டு வுட்ட மப்புல இப்போ நம்ம திர்மா அந்தர்பல்டி அவார்டு வாங்கிக்கினாரு. சோக்கா கீது இவங்க அடிக்கிற பல்டியெல்லாம். ஒலிம்பிக்ஸுனு ஏதோ கீதாமே, அத்துல அட்ச்சா எதுனா களுத்துல மாட்டி அனுப்பிவுடுவாங்கோ.
முன்னே ஒருக்கா கலீஞரு கூட நிண்ணு ஒரு சீட்டு கெலிச்சாரு. அப்பாலிக்கா இன்னா நென்ச்சாருன்னு தெர்ல முட்டாயி வாணாம்ன்னு தூக்கிப் போடுற கொளந்த கணுக்கா அய்துகினே "எனுக்கு எம்.எல்.ஏ சீட்டு வாணாம்"ன்னு பூட்டாரு. மறுக்கா மரவெட்டி ஐயா கலீஞரு தாத்தா கையிலே சேர்ந்துக்கோபான்னு கூப்டப்போ, தாத்தா "வோணும்ன்னா உங்கிட்டே கீற சீட்டுல அவுனுக்கு ரெண்டு குடு"ன்னு சொன்னாரு. அப்போ "எச்சி சோறு எனுக்கு வாணாம்"ன்னு சோக்கா டயலாக்கு வுட்டு அம்மா கையிலே 9 சீட்டு வாங்குனாரு.
இப்போ மறுக்கா வந்து கலீஞருக்கு மஞ்சா சால்வ போத்தி "காலத்தின் கட்டாயம், நான் அங்கே அவமானப்படுத்தப்பட்டேன்"ன்னு டயலாக்கு வுடுறாரு. கலீஞரும் பெர்ய மன்ஸோட "எங்கையிலே கீற சீட்டுல வுனுக்கும் தரேன் கண்ணு"ன்னு டயலாக்கு வுடுறாரு. டயலாக்கெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா, குப்ஸாமிக்கு ஒரே ஒரு டவுட்டு. முன்னே "மரவெட்டி கையிலே கீற சீட்டுல ரெண்டு குடு"ன்னு சொன்னப்போ எச்சிலு சோறா தெர்ஞ்சது இப்போ தன்னோட கையிலேர்ந்து தாத்தா எட்த்து குடுக்கசொல்லோ "புச்சா வடிச்ச சுடுசோறா" தெர்யிதா? சோக்கா கீதுபா ஒங்க நாயமெல்லாம்.
திருமா அந்தர்பல்டி அட்ச்சாச்சு. இன்னும் மிச்சம் கீற கருப்புத்துண்டு பார்ட்டி, சித்தப்பா சரத்குமாருல்லாம் இன்னா டயலாக்கு வுடலாம்ன்னு மைண்ட மிக்ஸில அட்ச்சி ரோசனப் பண்றாங்கோ. சீக்கிரம் நீங்களும் வந்து தாய் களகத்துல சீட்டப் புடிங்கபா.
Thursday, August 31, 2006
கானா கோபால்சாமி

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அங்கே சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம்ம்ம்ம்ம்
நன்றி: தினமலர்.காம்
Sunday, August 27, 2006
கட்டிப்புடி வைத்தியம்
உம்மா அரசரு ஒலக நாயகரு வசூல்ராசாவா வந்து கட்டிப்புடி வைத்தியம் கத்துக் குட்த்தாரே ஞாபகம் கீதாப்பா. அவுருக்கு அந்த வைத்தியத்த இஸ்கூல்ல கிளாஸ் எட்த்தவரு பிரிட்டன்ல கீற நம்மூரு வைத்தியரு பெஞ்சமின் தியோதரு போலக்கீது. இந்தக் கட்டிப்புடி வைத்தியத்த நம்மாளு செப்டம்பர் 1991லேந்து சோக்கா செஞ்சுகின்னு கீறாரு. 63 வய்ஸு ஆன பொறவு கூட கட்டிப்புடி வைத்தியத்த தலீவரு வுடல போலக்கீது, வைத்தியத்துக்கு வந்த ஒரு அம்மா கையிலே கட்டிப்புடி வைத்தியத்த காட்ட, அந்தம்மா போலீஸுக்கு பூட்ச்சி. இப்போ தாத்தா ஜெயில் கம்பி கூட கட்டிப்புடி வைத்தியம் செஞ்சுகின்னு கீறாரு.
இந்த மேட்டர நம்ம கஜேந்திரரு கையிலே போட்டு வெக்கலாம்ன்னு குப்ஸாமி நென்ச்சிக்கின்னு கீறான்பா. இன்னாத்துக்குன்னு கேக்குறிங்களா? கஜேந்திரரு கையிலே சொன்னாக்கா, அவுரு பயாஸ்கோப்புல ஒரு சீன செட் பண்ணி "நீயெல்லாம் ஒரு டாக்டராடா, கடவுளுக்கு அப்புறம் நம்ம மக்கள் காப்பாத்துவார்ன்னு நம்பி வர்றது உங்களை மாதிரி டாக்டர் கிட்டே தான். புருஷனுக்கு அப்புறம் நம்ம பொம்பளைங்க அவங்க உடம்பை வெளியிலே காட்டுறதும் உங்களை மாதிரி டாக்டர்ங்க கிட்டே தான். அப்படி நம்பி வர்றவங்களை ஏமாத்துற நீயெல்லாம் ஒரு டாக்டராடா"ன்னு டயலாக்கு வுடுவாரு. வுடுற டயலாக்குல டாக்டருங்களுக்கு ஒரு நாக்கவுட்டு குட்த்த மேரியும் இர்க்கும், மருத்துவரு ஐயாவுக்கும் சின்ன மருத்துவருக்கும் ஒரு பஞ்ச் வுட்ட மேரியும் இர்க்கும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!!!!!!!!!!!!!!!!