Sunday, September 25, 2005

சோ(சொ)த்தை வாதம்

நம்மூருல பாலிடிக்ஸுல இல்லாமலே பாலிடிக்ஸு சேஞ்சுகினுகீற மன்சங்கள்ல இவுரு பெரிய ஆளுபா. இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு. இப்போ இன்னான்னா ஆனந்த வெகடன்ல விசயகாந்து கெலிப்பாரா, அம்மா செய்றதுல்லா கரீட்டாங்குறதுலேந்து சானியா போடுற துணி வரைக்கும் கேட்டு வெச்சிக்கீறாங்கோ. இவுரும் எல்லாத்துக்கும் வெளக்கம் குட்த்துக்கீறாரு. அதுல ஒரு கேள்விக்கு இவுரு குட்த்துக்கீற பதிலு தான்பா படா சோக்கா கீது...

--------------------------------------------------------------------------------------

‘‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் உங்களுக்கு ஏன் ஒப்புதல் இல்லை?’’

‘‘இப்ப பெண்களுக்கு எந்த இடத்தில் தடை இருக்கு... யார் தடுக்கிறாங்க? பெண்கள் எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறார்கள்.

ஆனால், அரசியலில் இப்படி இட ஒதுக்கீடு என்றால், சில தொகுதிகளில் சில கட்சிகள், தகுதியுள்ள பெண் வேட்பாளர்கள் தங்களிடம் இல்லாமல், வேறு வழியே இல்லாத நிலையில் அரசியலில் ஆர்வம் இல்லாத பெண்களையெல் லாம் கொண்டுவந்து நிறுத்த வேண்டியிருக்கும்.

அதுமட்டுமல்ல... அரசியல் என்பது கிட்டத்தட்ட முழுநேரப் பணி. இதில் ஆர்வப்பட்டுப் பெண்கள் பலரும் வந்துவிட்டால் என்ன ஆகும்? புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது.

சில குடும்பங்களில் பொருளாதார ரீதியா தேவை இருக்கும்போது கணவன்& மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போவது சரி. அது தவிர்க்க முடியாதது. அதுக்காக எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்றால் அதைப் பெண் சுதந்திரம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொரு விஷயம்... இதைப் பற்றி எல்லாம் இங்கே பெண்கள் குரல் எழுப்பவோ, பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது தங்கள் உரிமை என்றெல்லாம் போராடவோ விரும்பவில்லை. அவங்க எல்லோரும் கணவன், பசங்க, குடும்பம் என்று ஆரோக்கியமான பாச பந்தத் தோடு மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்பறாங்க. சில பெண்கள் அமைப்பின் தலைவர்கள்தான் இட ஒதுக்கீடுனு தலையில் தூக்கிவெச்சுட்டு ஆடறாங்க!’’


--------------------------------------------------------------------------------------

பொம்பளைங்களுக்கு எடஒதுக்கீடு வாணாமாம், ஏன்னா அவுங்க அல்லாரும் பாலிடிக்ஸு பேச வண்ட்டா அப்பாலிக்கா வூட்ட பாத்துக்க ஆளே இல்லாம பூடுமாம். அட அட அட இன்னா ஃபீலிங்கோட சொல்லிக்கீறாருபா இவுரு. அட்த்ததா இன்னா சொல்லிக்கீறாருன்னா "பொம்பளைங்கோ ஆரும் இத்தெல்லாம் வோணும்ன்னு கேக்கல, செல பொம்பளைங்கோ கூட்டம் கூட்டிகின்னு தான் அப்டி கேக்குறாங்கோ"ன்னு வேற சொல்லிக்கீறாரு.

ஆம்பள பாலிடிக்ஸுல போவசொல்லோ அந்த வூட்ட பொம்பளைங்க பாத்துக்கலியா, அத்த மேரி நாலு வூட்டுல ஆம்பளைங்கோ வூட்டையும் கொளந்தக்குட்டிங்களயும் பாத்துகினா இன்னாவாம். பொம்பளைக்கு பாலிடிக்ஸுல இஸ்டம் இர்ந்தா அவுங்கள வர வுடுங்கபா, அத்து வுட்டுப்போட்டு வூட்டப் பாத்துக்கணும், அவுங்களுக்கு இதுல இஸ்டம் இல்லன்னு இன்னும் 1947 கதியெல்லாம் சொல்லிக்கினு இர்க்காதிங்கோ....