Monday, March 29, 2004

குப்ஸாமி எலிக்ஸன்ல நிக்கப் போறாரு

நெறியா பேரு "இன்னா குப்ஸாமி, ஏம்பா தமிள இப்படி போட்டு கொலப் பண்றே"ன்னு கேக்குறாங்கோ. குப்ஸாமி இத்தக் கேட்டுக் கேட்டு மன்ஸு ரொம்ப ஃபீலாகி இர்ந்தான்பா. ஆனா இன்னிக்கு நம்ம பத்ரி அண்ணாத்தே வலப்பதிவு பக்கமா ஒதுங்கினா புச்சா ஒரு மேட்டரு குப்ஸாமிக்கு வெளங்குனுச்சு. நம்ம தமிளுக்கு தான் எலிக்ஸன்ல நிக்க படா சோக்கா பல்பு எரியுதாம்.

பதர் சயீத்ன்னு ஒரு பெர்ய மன்ஸரு குப்ஸாமிக்கு போட்டியா நம்ம பனகல் பார்க்காண்ட மீட்டிங்கு போட்டு பேசிருக்காரு. சொம்மா சொல்லக்கூடாதுபா குப்ஸாமிய காட்டிலும் சூப்புரு தமிளு தா அவரோடது. ("பதர் சயீத்" பெர்ய மன்ஸன் இல்லே பெர்ய மன்ஸின்னு பத்ரியண்ணாத்தே குப்ஸாமிக்கு சொல்லிக்கீறாரு. ராங்கு இன்பர்மேஸன் குட்த்ததுக்கு ஜாரிபா)

அண்ணாத்தேயோட இஸ்பீச்சுல கொஞ்சம் இங்கண சாம்பிளு குட்த்துக்கீறேன், பாருங்கபா (அண்ணாத்தே இல்ல அம்மிணி)

"நம்ம எம்.பி., இப்ப சொன்னரு, அம்மாக்கு என்னா புட்க்கும். உண்மாய், நாண்யம், உழைய்ப்பு. இந்த மூனும் எங்கிட்ட இர்க்கு. அதனால என்ன வேய்ப்பாளரா நிர்த்தி வெச்சாங்க. என்க்கு கட்டாயமா ஓட் போட்வீங்க. எனக்கு ஜெயிக்க விட்டா நாட்க்கு நல்து செய்வன். என்க்கு டமில், இங்க்லீஷ், ஹிந்தி, பிரென்ச், உருது தெர்யும். எது தெர்யன்மோ அது என்க்கு தெர்யுது." - பதர் சயீத்

குப்ஸாமிக்கு இப்போ இன்னா வெளங்கிக்கீதுன்னா, தமிள்நாட்டுல எலிக்ஸன்ல நிக்கணும்ன்னா நல்ல மேரி தமிளெல்லாம் பேசவே கூடாது. கலீஜா பேசுனா தான் எலிக்ஸன்ல நிக்க வெப்பாங்களாம்.

அத்தால இன்னிக்கே ரிக்ஸா வளிக்கிற தொளில உட்டுப்போட்டு குப்ஸாமி ஒரு கட்சி ஆரம்பிச்சி எலிக்ஸன்ல நிக்கப் போறான்.

குப்ஸாமியோட களகத்துப் பேரு: சென்னைத்தமிள் முன்னேற்ற களகம்
குப்ஸாமியோட சின்னம்: டாஸ்மாக்கு பிராந்தி பாட்டிலு
குப்ஸாமியோட கொளுகை: காருல போற பசங்கள ரிக்ஸா வண்டி இளுக்க வெக்கணும், ரிக்ஸா வளிக்கிறவங்களுக்கு காரு வாங்கிக் குடுக்கணும்.

குப்ஸாமிய வெளிநாட்டுக்காரன்னோ வெளி இஸ்டேட்டுக்காரன்னோ ஒருத்தரும் கொரலு வுட முடியாது. ஏன்னா குப்ஸாமி கூவத்து தண்ணி குட்ச்சு, சுண்டக்கஞ்சியும் சுரும்பு கருவாடுமா வளந்த சென்னப்பட்டணத்து கிங்கு.

போடுங்கம்மா ஓட்டு குப்ஸாமி பாட்டிலு சின்னத்தப் பாத்து

குப்ஸாமிக்கு எட்த்துச் சொன்ன பத்ரியண்ணாத்தேக்கு டாங்ஸ். பதர் சயீத் அம்மணி போட்டோ ஒண்ணு நம்ம களகத்துல எணையப்போறவங்களுக்கு.....
Saturday, March 27, 2004

டையலாக்கு மன்னருபாளாப்போன அரசியல பேசி ரொம்பவே போரடிச்சிப்பூட்சுபா. சுண்டக்கஞ்சிக்கு ஊறுகா மேரி சொம்மா பயாஸ்கோப்பு பக்கமா ஒரு ரவுண்டு வுடலாம்ன்னு கீறேன்.

நம்ம டையலாக்கு மன்னரு அஜீத்து புச்சா ஒரு டையலாக்கு வுட்டுக்கீறாரு. "அடுத்த வர்சங்காட்டி பாரு நைனா, இந்த அஜீத்து ஆருன்னு காட்றேன்"ன்னு. இந்த வர்சத்துல அண்ணாத்தைக்கு 3 பயாஸ்கோப்பு பொட்டி வெளில வருதாம். அது வந்தா அண்ணாத்தே ரேஞ்சு வானத்த தொட்டுடுமாம்.

ஒரு மன்ஸன் நாளிக்கு இருப்பானா, கட்டைல போவானான்னே எவனுக்கும் தெர்ய மாட்டேங்குது, இவுரு அடுத்த வர்சத்துல தா ஆருன்னு காட்டப்போறாராம். நைனா நீயி எல்லா நல்லா சோக்கா தான் பண்ற. அயகயகா கோட்டும் சூட்டும் போட்டுக்கிற, பயாஸ்கோப்பு மட்டும் காட்டாம சைடு காருல்லாம் ஓட்டுற, பொம்ம பிளைட்டு கூட ஓட்டுற. ஆனா ஓவரா டையலாக்கு வுடுறபா, அத்தான் கேக்க சகிக்கலைபா.

முன்ன ஒரு தபா "ஆஞ்சநேயா" பயாஸ்கோப்பு வெளில வர்ற நேரத்துல "அடுத்த சூப்புரு இஸ்டாரு நா தான்பா"ன்னு டையலாக்கு வுட்ட. இன்னா ஆச்சு, படம் வெளில வந்த வேகமும் தெர்யல, போன வேகமும் தெர்யல. அந்தக் கெரவம்புட்ச்ச படத்த பாத்த எனக்கு படத்தோட பேருக்கு இன்னா மீனிங்குன்னு கூட தெர்யல.

சின்ன சின்ன பசங்கல்லாம் இன்னாமா கெலிக்கிறாங்கோ, இன்னா ரிசல்டு குடுக்கிறாங்கோ, எதுனா உன்னிய மேரி டையலாக்கு வுடுறாங்களா. நம்ம விக்ரமு, சூரியா, ரெண்டு கிலோ எலும்பு ஒரு கிலோ தோளோட பயாஸ்கோப்பு காட்டி நாலு படத்துல மூணு கெலிச்ச தனுசு. அல்லாரும் இன்னாமா பதவுசா குந்திக்கின்னு கீறாங்கோ, நீ மாத்ரம் இன்னாதுக்குபா ஓவரா டையலாக்கு வுடுற.

தாத்தாவுக்கு வந்த நானோதயம்

டெல்லிலக்கீற பெர்ய தாத்தாவுக்கு புச்சா ஒரு நானோதயம் வந்துக்கீதுபா. அத்து இன்னான்றிங்கோ "அவசரத்துல அமைச்சா அந்தக் கூட்டனி பாதில புட்டுக்குமாம்". நானோதயம்ன்னா இத்தான்பா நானோதயம். அதுவும் எப்போ வந்துக்கீது தெர்யுமா, முன்ன ஒரு தபா அம்மா கூட கைகோத்துகின்னு நின்னு 13 மாசத்துல அம்மா கலட்டிவுட்டு, இப்போ திரும்பா அம்மா இல்லையேல் தாத்தா இல்லைன்னு டயலாக்குல்லாம் வுட்டப்பொறவு இந்த நானோதயம்.

ஆனா இந்த நானோதயத்த அவரு வேற தெசைல சைடு வுட்டுக்கீறாரு. அதாவது, காங்கிரஸு ஓடி ஓடி கூட்டாஞ்சோறு கூட்டு சேர்க்கிறதை தா தாத்தா அப்படி சொல்லிக்கீறாரு. வயசான கொஞ்சம் ஞாபகசக்தி பீஸாப்பூடுமாம். தாத்தாவுக்கு அப்டி ஆயிடுச்சு போல. ஒரு மாசம் முன்ன போயஸ் கார்டனு வாசல்ல "அம்மா துணை"ன்னு எய்தி வெச்சிக்கின்னு தாத்தாவோட ஆளுங்கல்லாம் நிண்ணதை தாத்தா மறந்துட்டாரு போல. தாத்தா, காங்கிரஸு அவசர கூட்டணின்னா ஒங்க கூட்டனி இன்னா பலகாலமா நெலைச்சி நிக்கிற கூட்டணியா?

"நாற்காலிக்கு சண்ட போடும் நாடு நம் பாரதநாடு, நாஞ்சொன்னா கேப்பது ஆரு, நாளு நீ பேப்பரப் பாரு"

Tuesday, March 23, 2004

சின்ன தாத்தா பெரிய தாத்தாடெல்லிலக்கீற பெர்ய தாத்தா "நாங்காட்டி எலிக்ஸன்ல நிக்கலைன்னா நாட்டுல நெறியா பேஜாரு வந்துடும்பா, அத்தால தான் எலிக்ஸன்ல நிக்கிறேன்"னு இஸ்டேட்டுமெண்டு வுட்டுக்கீறாரு. கொயிந்த மேரி சிரிக்கிற ஏ அரும தாத்தா, மெய்யாலுமே நாடு பேஜாராப் பூடும்ன்னு எலிக்ஸன்ல நிக்கிறியா இல்ல காவி கச்சி பேஜாராப்பூடும்ன்னு எலிக்ஸன்ல நிக்கிறியா??

பெர்ய தாத்தா வூருக்காரப்புள்ள ஓடி ஒளைச்சு இந்தியாவோட மானங்காத்துச்சுன்னு "மானக்காத்த பேராண்டி"ன்னு இஸ்டேட்டுமெண்டு வுட்டுக்கீறாரு. இஸ்டேட்டுமெண்டு வுட்ட தாத்தா, ஒன்னோட பளைய தோஸ்து தாக்ரே தாத்தா "இன்னாபா இந்தியா கிரிக்கெட்டு டீமுல மூணு முஸ்லீமு பசங்கோ"ன்னு கொரலு வுட்டுக்கீறாராமே, தாக்ரே தாத்தாகினே "அந்த மூணு பசங்களால தா நம்ம ஆளுங்கோ கெலிச்சாங்கோ"ன்னு போயி சொல்லுபா.

பெர்ய தாத்தா கிரிக்கெட்டு இஸ்டேட்டுமெண்டு வுட்டா ரதத்துல ரவுண்டு அடிக்கிற தாத்தா போற எடத்துலல்லாம் புச்சு புச்சா இஸ்டேட்டுமெண்டு வுடுறாரு. அவருக்கு இஸ்டேட்டுமெண்டு தெலகம்ன்னு தான் பேரு குடுக்கணும்பா. புச்சா வுட்ட இஸ்டேட்டுமெண்டு "அயோத்தில இராமருக்கு கோயிலு கட்டவேண்டியது அவசியம்"ன்னு. நாட்டுல குந்த குடுசக் கூட இல்லாம ரோட்டோரமா உசுர கையிலே புட்ச்சுக்கின்னு குடியிருக்கறவனுக்கு வூடு கட்டிக்குடு, படிக்க பள்ளிக்கொடம் கூட இல்லாம இருக்குற பாளா போன வூருலல்லாம் பள்ளிக்கொடம் கட்டிக்குடு. அட அதெல்லாம் கூட வாணாம்பா ஆத்துர அவசரத்துக்கு ஒதுங்க ரோட்டோரமா கக்கூஸாவது கட்டிக்குடு. அத்தெல்லாம் வுட்டுப்போட்டு இராமருக்கு கோயிலு கட்டணும், அதுவும் அயோத்தில தான் கட்டணும்ன்னு அடம் புடிக்கிறியே தாத்தா. வூரு ஒலகத்துல ஒன்னோட கூத்தால நடந்த சாவுல்லாம் பத்தாதுன்னு திரும்ப இரதத்த கெளப்பிக்கின்னு இன்னாத்துக்கு கோக்குமாக்கா இஸ்டேட்டுமெண்டு வுடுற....

Sunday, March 21, 2004

ஓடி ஓடி ஒளைக்கணும்

நம்ம எம்சியாண்ட பாடுன (வாயசச்ச) பாட்டு ஆருக்கு வெளங்குனுச்சோ இல்லியோ நம்ம கிரிக்கெட்டு தெலகம், மானம் காக்கவந்த மாவீரன் டிராவிடுக்கு நல்லாவே வெளங்கிக்கீதுபா. கூடவே ஓடி ஒளைச்ச கைப்பு அண்ணாத்தேக்கும் நல்லாவே வெளங்கிக்கீது.போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடன்னு ஒவ்வொருத்தரும் கணக்கா 20, 25 ரன்னு எடுத்துகின்னு ஏ வேல முடிஞ்சு போச்சுபான்னு மட்டைய சொளட்டிக்கின்னு வெளில வந்தப்போ தூணா நிண்ணு இந்தியாவோட மானம் காத்துட்டாருபா நம்ம டிராவிட்டு. அல்லாருமா சேந்து மானம் காத்த மாவீரனுங்களுக்கு ஒரு ஓ போடுவோம்பா.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

தாத்தா அட்ச்ச அந்தர்பல்டி

முன்ன ஒரு தபா தாத்தா எள வயசுல துள்ளிக் குதிச்சி திரிஞ்சப்போ ஒரு எலிக்ஸன் வந்துச்சுபா. அந்த எலிக்ஸனுக்கு கொஞ்ச நாளு முன்னாடி தான் எளவயசு தாத்தாவ மிசால போட்டாங்க அப்போதைய ஜான்சி ராணி. ஆனா எலிக்ஸன் வந்ததும் எளவயசு தாத்தாவும் ராணியும் கூட்டாஞ்சோறு கூடி துண்ற கணுக்கா ஒண்ணு சேர்ந்துகினாங்கோ. ராணியம்மா தமில்நாட்டுக்கு வர்றதா நூஸ் கெடிச்சதும் "நேருவின் மவளே வருக, நல்லாச்சி தருக"ன்னு போஸ்டர் அட்ச்சு ஒட்டுனாரு.

தாத்தா வயசானாலும் அந்தப் பளைய பண்பாடு மறக்காம இப்போதைய குட்டிராணிக்கு "இந்திராவின் மருமவளே வருக, வந்து நா கைக்காட்டுற ஆளுக்கு மந்திரி பதவி தருக"ன்னு போஸ்டரு அட்ச்சிப்புட்டாரு. நம்மூரு தாத்தாவுக்கு டெல்லி தாத்தால்லாம் கொறஞ்சவங்களா இன்னா... அன்னிக்கு என்னோட கூட்டு கும்மாங்குத்துப் போட்டப்போ "வெளிநாட்டு மருமவ ஆச்சிக்கு வரக்கூடாது"ன்னு சொன்னியேபா, இப்போ இன்னா டகுல்பாஜி வேல காட்டுறேன்னு கேட்டாங்கோ. நம்ம டகுபல்பாஜி கிங் "தோடா, நா எப்போ சொன்னேன்"ன்னு டகுல் மேல டகுலு வுட்டுக்கீறாரு. இவரு டகுல தான் ஒட்டுமொத்த இந்தியாவே பல காலமா பாத்துகின்னு கீதே. டெல்லி தாத்தா "மாமு, ஓ வேலியெல்லாம் வேற ஆரண்ட வேணா வெச்சிக்கோ, என்னாண்ட வாணாம்"ன்னு சொல்லி "இதோ பாரு, நீ கையெளுத்து போட்டுக் குட்த்த பேப்பரு"ன்னு மேட்டர எடுத்து வெளில உட்டுட்சிங்கோ.தாத்தாவுக்கு இப்போ இன்னா பண்றதுன்னு ஒண்ணும் பிரியல. குட்டிராணிக்கு போன போட்டு "நீ ஒண்ணும் மன்ஸுல வெச்சிக்காதே கொய்ந்த, நா ஒன்னிய பெரதமராக்குறேன்"ன்னு சமாதானம் சொல்லிக்கின்னு கீறாரு போல. ஒண்ணுமே புரியல அரசியல்ல, என்னமோ நடக்குது மர்மமா கீது, ஒண்ணுமே புர்யல அரசியல்ல.....

Friday, March 19, 2004

ஆப்புக்கே ஆப்பு

வா மாமே ஆப்பு, உன்னிய இத்தன நாளு கண்டுக்காமலே பூட்டேன்பா. சோக்கா தான் வலப்பதிவு பண்ணிக்கீற. நம்ம மர்த்தடி பத்தி கூட குண்ஸா எய்திக்கீறியே மச்சி.

மாமே, எனிக்கொரு கொளுக வுண்டு மாமே. கலாய்க்கிறதா இர்ந்தாலும் தில்லா நேரா கலாய்ப்பேன். நீ சோக்கா கலாய்க்கிற, ஆனா மொகமூடி போட்டுக்கின்னு கலாய்க்கிற. மன்ஸன்னா தில்லு வோணும்பா. சொல்ற மேட்டர, "இத்தோ பார்றா சொல்றவன் நா தான்"னு நேர்ல நிண்ணு சொல்ற தில்லு வோணும். அது இல்லாங்காட்டி பேடின்னு ஒலகம் சொல்லும். பேடின்னா இன்னா மீனிங்குன்னு நா சொல்லி ஒனக்கு தெர்யணும்ன்னு அவசியம் இல்ல, நீ அல்லாம் தெர்ஞ்ச பெருமாளு.

அடுத்த தபா ஆப்பு வெக்கிறதா இர்ந்தா (அத்தானே ஒண்ணோட பொயப்பே) தில்லா மொகமூடி களட்டிப் போட்டுட்டு வெய்யி மாமே, நானும் ஒனக்கு சலாம் போடுவேன்.

வர்ட்டா.....

கொஸப்பேட்ட குப்ஸாமி

Thursday, March 18, 2004

சீட்டு வோணுமா கச்சி மாறிக்கோ

நம்மூருல எலிக்ஸன் வந்தாலும் வந்துது கரவேட்டிங்க கூத்து தாங்க முடியலபா. அம்மா ஒரு சைடுல புச்சு புச்சா சலுவ குடுக்குறாங்கோ, தாத்தா இந்த வயிசிலேயும் கருப்பு கண்ணாடி போட்டுகின்னு மைக்கு முன்னாடி குந்துனா போதும் கைல ஒரு கடுதாசிய வச்சிக்கினு இன்னாரு இன்னிய தேதி இன்னது பேசுனாங்கோ, செஞ்சாங்கோன்னு கொரலு வுடுறாரு. இந்தக் கூத்துல்லாம் போதாதுடா சாமின்னு சூப்புரு இஸ்டாரு ஆளுங்க "எங்க தலீவன அன்னிக்கு தாக்குனல்லா, இந்த இன்னிக்கு வாங்கிக்கோபா ரிவிட்டு"ன்னு சொம்மா ரகள வுடுறாங்கோ.

இதெல்லாம் இன்னாபா மேட்டரு, ஒவ்வொரு தபா எலிக்ஸன் நடக்கிறப்போவும் வர்ற மேட்டரு தானேன்னு பாத்தா திடீர்ன்னு கச்சி வேட்டில்லாம் காவி கட்டிக்கின்னு கிளம்ப ஆரம்பிச்சிடுச்சிங்கோ. இன்னாடாது செஞ்ச பாவம் களுவ காசிய பாக்க போறாங்க போலக்கீதுன்னு நென்ச்சா அத்தான்பா இல்ல, காவி வேட்டி கட்டிகின்னு ரத ஊருவலம் வர்ற தலீவராண்ட போயி நின்னா கையோட "இந்தா புட்ச்சிக்கோ"ன்னு ஒரு எம்பி சீட்டு குடுக்கிறாராம்ல. ஒவ்வொரு கச்சியிலேயும் "இன்னா தலீவா நீ சீட்டு குட்க்கலைன்னா நா காவி வேட்டிக்கி மாறிபுடுவேன்"ன்னு தா இப்போ எல்லா கரவேட்டியும் மெரட்டுதுங்களாம்.

"கச்சி வேட்டில்லாம் காவிக்கு மாறுனா சீட்டு கெடிக்கும், அந்தக் காவி வேட்டிக்கே சீட்டு இல்லைன்னா ஆராண்ட போயி அளறது"ன்னு ஒர்த்தரு பொலம்பிகின்னு கீறாரு. வுட்டா அளுகின்னே போயி புதுக்கோட்ட பக்கமா தனியா நின்னே கெலிச்சுப்புடுவாரு போல...

இந்த பாளா போன அரசியலு ஏவூட்டுக்கு பக்கத்தால ஓடுற கூவத்த விடல்ல நாத்தமா நாறுது, இத்தப் பத்தி பேசி இன்னா புண்ணியம் போ, நா சோளிய பாக்கப் போறேன்பா.

வர்ட்டா......

கொஸப்பேட்ட குப்ஸாமி

Monday, March 15, 2004

விருது வாங்கலையோ விருது

வண்க்கம் மக்களா,

நம்ம மர்த்தடியாண்ட குந்திகினு இர்ந்தப்போ சுரேசண்ணாத்தே சோக்கா அஞ்சு கேள்வி கேட்டுருக்காரு விருது கெடைக்கிறதப் பத்தி.

1. வெகுஜன பத்திரிகையில் எழுதி பிரபலமான ஒருவர் விருது வாங்கினால் ஏன் இவ்வளவு எதிர்ப்பு எழுகிறது?

நைனா, வெகுசனம் படிக்கிற பொஸ்தகத்துல எய்துனவங்கோ விருது வாங்குனா மட்டுமா கொரலு வுடுறாங்கோ, சொம்மா எலக்கியம் பேசுனா கூட தான் கொரலு வுடுறாங்கோ. நம்ம தலீவர் பாட்சா பட்த்துல சொல்ற ஒரு டயலாக்கு தான் நாபகத்துக்கு வருதுபா. "இந்தியாக்காரன் பேசாம இருந்தா செத்துப் போயிடுவான்".

2. விருது வாங்கியவரின் இலக்கியத்தன்மையையும் மட்டும் ஆராயாமல் அவருடைய அரசியல் செல்வாக்கையும் ஆராய்வது அவசியமா? அதில் ஏதாவது உண்மை இருக்கக்கூடுமா?

இனிமே விருது வாங்கணும்ன்னா அவனுக்கு ஒரு அரசியல்வாதியையும் தெர்யக்கூடாதுன்னு ஒரு ரூல் போட்றுங்கபா, அப்பாலிக்கா ஒர்த்தரும் கொரலு வுட மாட்டாங்கோ.

3. மற்ற மாநிலங்களிலும் இந்த மாதிரியான சர்ச்சைகள் வழக்கமான ஒன்றுதானா?

நம்ம வூட்ல குப்ப கெடக்குறது நமக்கு தெர்யும், அடுத்தவன் வூட்ல??????

4. கவிதை எழுதி புகழடைந்தவருக்கு நாவல் பிரிவில் விருது வழங்கப்பட்டிருப்பது விநோதமாக இல்லையா?

இப்டியே கேட்டுகினு போனா, சினிமால கேமராமேனா இர்ந்த பாலுமகேந்திராவுக்கு எப்டி டைரக்ஸனுக்கு விருது கொடுக்கலாம், நடிகனா இர்க்குற ஒருத்தன் நல்லா படம் எடுத்தா அவனுக்கு எப்டி சூப்பர் டைரக்டருன்னு சொல்லலாம்ன்னு கேள்வி கேட்டுகினே போவலாம்பா. நாட்ல கேள்விக்கா பஞ்சம்.....

5. இந்த வருட விருதுக்கமிட்டியில் யார்யார் இருந்தார்கள்?

ஹீ ஹீ ஹீ, இன்னா சார் நீ எதுனா சைட்ல வெட்டி அடுத்த தபா விருத ஜெலிக்கலாம்ன்னு ரோசனையா?? சொம்மா தமாசுக்கு நைனா...

கொஸப்பேட்ட குப்ஸாமி

Sunday, March 14, 2004

பேட்ட வெண்பாஸ்

வண்க்கம்பா,

நம்ம தோஸ்துங்க நெறியா பேரு மர்த்தடில குந்திகினு கவித எய்துறாங்கபா. அதுவும் மரபு கவுதயாம். மரபு கவுதன்னா அதுக்கு ஒரு ரூல்ஸ் கீதாம். கவுத எய்தணும்ன்னு நெனைக்கிறவங்க மொதல்ல வெண்பா எய்திப்பயகுங்கோன்னு ஒரு தபா நம்ம கவியரசரு சொன்னதா பரட்ட வந்து நம்ம கைல சொன்னான். ஒரு குத்து கானா போட்டா கூத்தடிக்க தெர்யும், கவுதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்பா, அத்தால அத்த நா காதுல போட்டுக்கல.

அப்பாலிக்கா மர்த்தடி பக்கமா ஒரு நாளு சைடு வுட்டா நெறியா பேரு வெண்பா கத்துக்கிறேன்னு சொல்லிகினு குஜாலா எய்திகின்னு கீறாங்கோ. நம்ம குருஜி அரியண்ணாத்தேக்கு சலாம் போட்டு ஒரு நாலு பேட்ட வெண்பா எய்திக்கீறேன்பா. நமக்கு தெர்ஞ்ச எகனமொகன போட்டு எய்தினேன். அத்த மர்த்தடில போட்ட அல்லா பெர்ய மன்ஸங்களுக்கும் நெம்ப டாங்ஸ்பா......


நம்ம பேட்ட வெண்பாஸ்

சல்பேட்டா மாமனுக்கு சல்சலக்குக் காட்டிபுட்டு
குல்கந்து சொர்ணம்நீ குன்ஸாதான் போனீயே
அல்லாரும் பாக்கசொல்ல அல்ட்டாப் இடுப்பசச்சு
சொல்லும்மே ***லைப்பாயி சோப்பு***

(இந்தப் பேட்ட வெண்பா என்னோட கனவு குஜிலி ஈரநில நந்திதாவுக்கு)

o

இல்லாத எல்க்கணத்த இஸ்துகினு வந்துந்தான்
பொல்லாத சேட்டையெல்லாஞ் செய்மாமு - கல்ப்படிச்சி
புண்ணான சோமாறி பிஸ்கோத்து நீயிப்போ
இன்னாத்த ஓண்ணாலும் எய்து

o

டாஸ்மாக்கு பாட்டிலுக்கு டக்கரான பீர்கூட்டி
ராஸ்கோல்நான் ஊத்திகிறேன் ராத்திரி - "இஸ்கூல்போ
ஆடாதே அல்ட்டாதே அடங்கியிரு" சொல்வாராம்
தோடாடேய் வன்ட்டார் தொரை

o

கும்மாளம் போட்டுகினு குஜ்லிபடம் பாத்தவன
அம்சமா இஸ்துகினா ஆண்டாளு - எம்பாவி
மன்ஸ புடிச்சி மயக்கினவ மாய்மாள்த்த
குண்சாதான் எய்தேண்டா குணாலு

ooo

அப்பாலிக்கா பாக்கலாபம்பா. வர்ட்டா.

கொஸப்பேட்ட குப்ஸாமி

சலாம் போட்டுகிறேன் நைனா

வண்க்கம் தோஸ்த்ஸ்,

எப்டிபா கீறிங்கோ. ஒலகம் முய்க்க நம்ம தமிளாளுங்க புளாக்கு புளாக்குன்னு ஏதோ சவுண்டு வுட்டிகினுகீறாங்களே, அத்து இன்னான்னு பாக்க வந்துகீறேன்பா. சொம்மா சொல்லக்கூடாது, சோக்கா தான் கீது.

ஒலகம் முய்க்க புளாக்கு (அதுக்கு நம்ம தமிளுல வலப்பதிவாம்ல) கீது, நீ இன்னாடா புச்சா அதுல கிளிக்கப்போறேன்னு கேக்கறிங்களா? நமக்கு தெர்ஞ்சது ரெண்டே ரெண்டு மேட்டரு தான்பா. ஒண்ணு ரிக்ஸா வளிக்கிறது, அப்பாலிக்கா ஊத்திகினு வந்து நம்ம சென்னப்பட்டனத்து தமிள ஒலகம் முய்க்க தெர்ய வெக்கிறது, கூடவே கொஞ்சூண்டு குசும்பு கலாய்ச்சலும். படிக்காத பய, நாலு எய்து தெர்யாதவன். எதுனா எக்குத்தப்பா கலாய்ச்சுபுட்டா மன்ஸ்ல வெச்சிக்காதிங்கபா.

நம்ம கிறுக்கல் பரியண்ணே புளாக்கு சைட்ல நேத்து ஒரு சவாரி இர்ந்துச்சு. போய் பாத்தா நம்ம மாலரு புளாக்குன்னா ஒரு இது வாணாமான்னு (என்னமோ அந்தரங்க தொனியாம்) கேட்டுருந்தாரு. பட்ச்ச நமக்கு ஒரே ஃபீளாய்டுச்சுபா. அத்தான் ஒடனே நமக்குன்னு ஒரு இஸ்பெஸல் புளாக்கு போட்டுட்டேன்.

ரிக்ஸா சவாரி ஒண்ணு வர்து, சோளிய பாக்கணும்பா, அப்பாலிக்கா தோஸ்துங்க கூட சுண்டக்கஞ்சி கூட்டுக்கு வர்றேன். வர்ட்டா.......

கொஸப்பேட்ட குப்ஸாமி