நா ஆட்டோக்காரி ஆட்டோக்காரி
நாலுந்தெரிஞ்ச ரூட்டுக்காரி
நல்லவங்க கூட்டுக்காரி
இப்டிக்கா நம்ம அம்மா ஒரு கானாவ எட்த்துவுட்டா எப்டி இர்க்கும். அத்தாம்பா வர்ற எலிக்ஸன்ல நடக்கப்போவுது. இனிமே ஆட்டோக்காரங்கோ அல்லாரும் சூப்புருஇஸ்ட்டார வுட்டுப்போட்டு அம்மா போட்டோவ தான் ஆட்டோக்குள்ளே ஒட்டிக்கின்னு சுத்தப்போறாங்களாம்.
இன்னா மேட்டருன்னு தெர்யாம கொளம்பிப் போவாதிங்கோ. அம்மா ஆட்டோக்காரங்களுக்கு புச்சா நெறியா சலுவ காட்டிக்கீறாங்களாம். ஏளு வர்ஸமா ஆட்டோ ஓட்டிக்கின்னுகீரவங்களுக்கு மொதல்ல 500 ரூவா துட்டு கட்டணும்ன்னு இர்ந்துச்சாம், அத்த இனிமே 200 ரூவா குட்த்தா போதும் நைனான்னு சொல்லிப்புட்டாங்களாம். நம்ம சென்னப்பட்டணத்துல புச்சா இன்னும் 5000 ஆட்டோ வுடப்போறாங்களாம்.
சலுவ அல்லாம் சோக்கா தான் கீது. ஆனா சொன்ன மேட்டருல ஒண்ணு மட்டும் கொஞ்சம் ஃபீலிங்க கெளப்புது. இன்னா மேட்டருன்னா, இனிமே இஸ்கூலு புள்ளிங்கள இட்டுகின்னு போற ஆட்டோ அல்லாம் எக்ஸ்ட்ராவா இன்னும் அஞ்சு கொளந்தைங்கள வோணும்ன்னா கூட்டுக்கின்னு போலாமாம். இப்போவே ஆட்டோல இஸ்கூலு கொளந்தைங்கோ புளிமூட்ட அட்ச்ச கணுக்கா தான் போவுதுங்கோ, இதுல இன்னும் அஞ்சு பேருன்னா கொளந்தைங்கோ கெதி இன்னா ஆவறது? ஓவரா லோடு ஏத்தி அப்பாலிக்கா கொளந்தைங்களுக்கு எதுனா ஆய்ட்டா ஆரு வந்து பதிலு சொல்லுவாங்கோ. யம்மோவ், எதுனா பாத்து செய்ங்கம்மோவ்....
8 comments:
இதுல ஆட்டோ ஓட்டுறவுர்களுக்கு சலுகை இருக்கோ இல்லையோ, அதை உரிமை வச்சி இருக்குற போக்குவரத்து காவலர்களுக்கு பெரும் கொண்டாட்டமா இருக்கும்.
என்னைக்கு தான் நம்ம அரசியல்வாதிகள் மக்கள் உதவிக்கு உருப்படியான திட்டம் கொண்டு வருவார்களோ
கொரலு வுட்டது செந்தில்
கட்சிகாரன் எல்லோருக்கும் உதவ இதுஒரு திட்டம். அடித்தது லக்கி பிரைஸ்.
கொரலு வுட்டது pandian
கார்ட்டூன் சூப்பரா கீது
கொரலு வுட்டது Uma
//ஆரு வந்து பதிலு சொல்லுவாங்கோ. யம்மோவ், எதுனா பாத்து செய்ங்கம்மோவ்....//
ஆரும் வந்து பதில் சொல்லிக்க வேனாம்பா...அம்மா கட்சிக்கி ஆட்டோகாரன் ஓட்டு ஒரு 10 உயும்ல... அதான் வோனும்..
வீ . எம்
கொரலு வுட்டது
//ஆரு வந்து பதிலு சொல்லுவாங்கோ. யம்மோவ், எதுனா பாத்து செய்ங்கம்மோவ்....//
ஆரும் வந்து பதில் சொல்லிக்க வேனாம்பா...அம்மா கட்சிக்கி ஆட்டோகாரன் ஓட்டு ஒரு 10 உயும்ல... அதான் வோனும்..
வீ . எம்
சுபெர் அன்னாசி. வெடு ஒன்னு துன்டு ரென்டு. ஆருமெ அன்னாசிய அட்சிக முடியாது.
கொரலு வுட்டது ராஜெசு
என்ன கொசபேட்டை ஆள் அரவமே இல்லை ?
கொரலு வுட்டது செந்தில்
//என்ன கொசபேட்டை ஆள் அரவமே இல்லை ?//
கொஞ்சம் பிஜியாக்கீறேன் செந்திலு. வரேன் வரேன்.
கொரலு வுட்டது kosappettai kuppusaami
Post a Comment