Wednesday, July 13, 2005

பதினெட்டு வயசு சுப்ரமணியசாமி

நம்ம சுப்ரமணிய சாமிக்கு இப்போ பதினெட்டு வய்சு ஆவுதுன்னு வெச்சிக்கோங்க, அவுரு இன்னா மேரி இஷ்டோரியெல்லாம் நம்ம கைல வுடுவாரு. சொம்மாவே ஜப்பான்ல ஜாக்கிசான் கூட்டாகோ அமேரிக்கால மைக்கெல் ஜாக்ஸன் கூட்டாகோன்னு அட்ச்சி வுடுற பார்ட்டி, பதினெட்டு வய்ஸுன்னா "பில்கேட்ஸ் என்னாண்ட தான் ரோசன கேட்டு புச்சா சாப்ட்டுவேரு போடுவாரு"ன்னு வுடுவாருல்ல, இப்போ அத்த மேரி புச்சா ஒரு பையன் கத வுட்டுக்கின்னு கீறாரு.

பேரு பாண்டியா, நம்ம "காக்க காக்க"ல பயாஸ்கோப்பு காட்டுன பாண்டியா இல்ல, இவுரு வேற. அஜுல் பாண்டியா. இவுரு வூட்டுக்குள்ள போனா வூடு முளுக்க சர்டிபிகெட்டாம், அல்லாத்துலையும் அண்ணாத்தே மொதோ ஆளா வந்திக்கிற மேரி சர்ட்டிபிகெட்டாம். இவுரு வுடுற கதியெல்லாம் கேட்டா தான் ஜூப்பரா கீது.

கதியெ ஒவ்வொண்ணா சொல்றேன்.

1. இவுரு மைக்ரோசாப்ட்டு கம்பெனியிலே Immenient (sic) Chief Executive Officer of Technologyயா ஜோலி செய்றாராம்.

2. இவுராண்ட பில்கேட்ஸு "நைனா உனுக்கு வாரத்துக்கு $5000 கூலி தாரேன், என்னோட சேந்துக்கோ"ன்னு கெஞ்சினாராம். இவுரு "அத்தெல்லாம் வாணாம்பா, எனுக்கு நா படிக்கிற என்ஜினியரிங்கு முடிக்கணும், ஹார்வோர்டு யுனிவர்சிட்டில எம்பில்லு படிக்கணும், அதுக்கெல்லாம் நெறியா டைமு வேணும். அத்தால எப்போலாம் முடியுதோ அப்போலாம் உனுக்கு நா எல்பு பண்றேன்"ன்னு சொன்னாராம். அதுக்கு பில்கேட்ஸும் மண்டைய மண்டைய ஆட்டுனாராம்.

3. பில்கேட்ஸுக்கு எதுனா ரோசன வோணும்ன்னா இந்த அண்ணாத்த கைல தான் கேப்பாராம், இவுரும் பில்கேட்ஸாண்ட கேட்டுகின்னு தான் அல்லாமும் செய்வாராம்.

போற போக்குல பாண்டியா அண்ணாத்தே பில்கேட்ஸு ஈமெயிலு ஐடின்னு ஒரு கொசு மெயில் ஐடி குட்த்துக்கீறாரு. அத்த டெஸ்ட் பண்ணி பாக்கசொல்லோ அத்து வேலைக்கு ஆவல, அத்த மேரி டெல்லில கீற மைக்ரோசாப்ட்டுல "இத்த மேரி ஒர்த்தரு கதி சொல்லிக்கின்னு கீறாரே, அத்தெல்லாம் மெய்யாலுமே உண்டா"ன்னு நம்ம டைம்ஸ் ஆப் இந்தியா கேட்டுக்கீறாங்கோ. அவுங்க அதுக்கு "ஆக்காங், அத்தெல்லாம் ஒர்த்தரும் அப்டி கெடியாது. இவனாங்காட்டி எதுனா கதி சொல்லட்டும், அப்பாலிக்கா புட்ச்சு உள்ளே போட்டுடணும்"ன்னு சொல்லிக்கீறாங்கோ.

வுட்டாக்கா நம்ம சுப்ரமணிய சாமியே பாண்டியா கைல க்ளாஸு எட்த்துக்கணும் போல கீது, அந்த மேரி ரீலு வுடுறாரு தலீவரு.

இன்னா மேட்டருன்னு தலைய பிச்சிக்கிறவங்கோ இங்கே போயி பிச்சிக்கோங்கபா...

17 comments:

Anonymous said...

குப்ஸு,
இவ்ளோ நாளா எங்கே போயிட்ட கண்ணு?இது ஆர்பா பாண்டியா? ஒண்ணும் புர்யலமா..
குப்ஸ் அட்மைரர்...

கொரலு வுட்டது contivity

Anonymous said...

ஆகா மன்சிக்கோபா குப்ஸ் அட்மைரரு, மேட்டரச் சொல்லாம மீட்டரப் போட்டுட்டேன் போலக்கீது. இப்போ தெளிவா ஒளறிட்டேன்பா, ஒகேவா...

கொரலு வுட்டது kosappettai kupsaami

Anonymous said...

absolutely delightful! Write more maamey.

கொரலு வுட்டது suman

Anonymous said...

சர்யான முட்ச்சம்கி போலகிது

கொரலு வுட்டது

நிழல்மனிதன் said...

சர்யான முட்ச்சம்கி போலகிது

Anonymous said...

Kupps vandheeyaa! Kannaalam ellam nalla nadandhuchaa?

கொரலு வுட்டது Uma

Anonymous said...

//Kupps vandheeyaa! Kannaalam ellam nalla nadandhuchaa?//

யக்கா, வணுக்கங்கா, அல்லாம் சோக்கா நட்ந்துச்சுக்கா. போன வாரமே சவாரிக்கு வண்டேன்க்கா, ஆனா ரொம்ப பிஜியா இர்ந்ததால இந்தப் பக்கம் சவாரி போவ முடியலக்கா.

கண்ணாலம் பத்தி கேட்டதுக்கு நெம்ப டாங்ஸுக்கா.கொரலு வுட்டது kosappettai kupsaami

Anonymous said...

ஆகா இப்போ தான் எல்லாம் புரியுதுபா... சரியான டகால்ட்டி ஆளாகீறான்பா..
அதுசரி.. கேக்குறவன் கேனையனா இர்ந்தா... இப்டித்தான்..

கொரலு வுட்டது

Anonymous said...

மேலே கொரலுவுட்டது நாந்தான்பா

கொரலு வுட்டது

contivity said...

இன்னா நைனா ப்ளாக்கரு சொதப்புது.. மேலே ரெண்டு கமெண்டுலயும் பேர முழுங்கிச்சு..

Anonymous said...

சுப்பிரமண்யன் ஸ்வாமி கார்வார்ட்டில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் மேதை உனக்கு எப்படி அதெல்லாம் புரியும்.

கொரலு வுட்டது whooo

Anonymous said...

subramanian swamy holds a phd in
economics from harvard university.he taught there for many years.

Anonymous said...

இன்னா குப்ஸூ, இம்மா நாளு ஆளயே காணம்?

கொரலு வுட்டது கோபி

Anonymous said...

Whether S.Swami holds Phd or not....he is still a moron. He is an example of a stupid intelligent. Anyone can do stupid things in an intelligent way and thats what he is doing...

கொரலு வுட்டது Kandasami

Anonymous said...

வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!

கொரலு வுட்டது mayavarathaan

Anonymous said...

சுப்பிரமணிய சாமிகளை விட, டேஞ்சரான ஆசாமிகள், இப்படி வலைப்பதிவு பின்னூட்டங்களில் விளம்பரம் செய்பவர்கள் ;-) , சரிதனே குப்ஸ் ?!

செந்தில்

கொரலு வுட்டது செந்தில்

Anonymous said...

//சுப்பிரமணிய சாமிகளை விட, டேஞ்சரான ஆசாமிகள், இப்படி வலைப்பதிவு பின்னூட்டங்களில் விளம்பரம் செய்பவர்கள் ;-) , சரிதனே குப்ஸ் ?!//

செந்தில் உங்க காதுல ஒரு விஷயம் சொல்றேன் வாங்க. அந்த மறுமொழி போட்டது ஒரிஜினல் மாயவரத்தான் இல்லை, டூப்ளிகேட். இங்கே சில அன்னியன்கள் சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க சில நேரத்திலே அம்பியாக இருப்பாங்க, சில நேரத்திலே அன்னியனா மாறுவாங்க. அவங்க பண்ற அறிவுஜீவி வேலை தான் இதெல்லாம். லூஸ்ல விடுங்க.


கொரலு வுட்டது kosappettai kuppusami