Sunday, September 25, 2005

சோ(சொ)த்தை வாதம்

நம்மூருல பாலிடிக்ஸுல இல்லாமலே பாலிடிக்ஸு சேஞ்சுகினுகீற மன்சங்கள்ல இவுரு பெரிய ஆளுபா. இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு. இப்போ இன்னான்னா ஆனந்த வெகடன்ல விசயகாந்து கெலிப்பாரா, அம்மா செய்றதுல்லா கரீட்டாங்குறதுலேந்து சானியா போடுற துணி வரைக்கும் கேட்டு வெச்சிக்கீறாங்கோ. இவுரும் எல்லாத்துக்கும் வெளக்கம் குட்த்துக்கீறாரு. அதுல ஒரு கேள்விக்கு இவுரு குட்த்துக்கீற பதிலு தான்பா படா சோக்கா கீது...

--------------------------------------------------------------------------------------

‘‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் உங்களுக்கு ஏன் ஒப்புதல் இல்லை?’’

‘‘இப்ப பெண்களுக்கு எந்த இடத்தில் தடை இருக்கு... யார் தடுக்கிறாங்க? பெண்கள் எல்லா வகையிலும் வளர்ந்து வருகிறார்கள்.

ஆனால், அரசியலில் இப்படி இட ஒதுக்கீடு என்றால், சில தொகுதிகளில் சில கட்சிகள், தகுதியுள்ள பெண் வேட்பாளர்கள் தங்களிடம் இல்லாமல், வேறு வழியே இல்லாத நிலையில் அரசியலில் ஆர்வம் இல்லாத பெண்களையெல் லாம் கொண்டுவந்து நிறுத்த வேண்டியிருக்கும்.

அதுமட்டுமல்ல... அரசியல் என்பது கிட்டத்தட்ட முழுநேரப் பணி. இதில் ஆர்வப்பட்டுப் பெண்கள் பலரும் வந்துவிட்டால் என்ன ஆகும்? புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது.

சில குடும்பங்களில் பொருளாதார ரீதியா தேவை இருக்கும்போது கணவன்& மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போவது சரி. அது தவிர்க்க முடியாதது. அதுக்காக எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்றால் அதைப் பெண் சுதந்திரம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொரு விஷயம்... இதைப் பற்றி எல்லாம் இங்கே பெண்கள் குரல் எழுப்பவோ, பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது தங்கள் உரிமை என்றெல்லாம் போராடவோ விரும்பவில்லை. அவங்க எல்லோரும் கணவன், பசங்க, குடும்பம் என்று ஆரோக்கியமான பாச பந்தத் தோடு மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்பறாங்க. சில பெண்கள் அமைப்பின் தலைவர்கள்தான் இட ஒதுக்கீடுனு தலையில் தூக்கிவெச்சுட்டு ஆடறாங்க!’’


--------------------------------------------------------------------------------------

பொம்பளைங்களுக்கு எடஒதுக்கீடு வாணாமாம், ஏன்னா அவுங்க அல்லாரும் பாலிடிக்ஸு பேச வண்ட்டா அப்பாலிக்கா வூட்ட பாத்துக்க ஆளே இல்லாம பூடுமாம். அட அட அட இன்னா ஃபீலிங்கோட சொல்லிக்கீறாருபா இவுரு. அட்த்ததா இன்னா சொல்லிக்கீறாருன்னா "பொம்பளைங்கோ ஆரும் இத்தெல்லாம் வோணும்ன்னு கேக்கல, செல பொம்பளைங்கோ கூட்டம் கூட்டிகின்னு தான் அப்டி கேக்குறாங்கோ"ன்னு வேற சொல்லிக்கீறாரு.

ஆம்பள பாலிடிக்ஸுல போவசொல்லோ அந்த வூட்ட பொம்பளைங்க பாத்துக்கலியா, அத்த மேரி நாலு வூட்டுல ஆம்பளைங்கோ வூட்டையும் கொளந்தக்குட்டிங்களயும் பாத்துகினா இன்னாவாம். பொம்பளைக்கு பாலிடிக்ஸுல இஸ்டம் இர்ந்தா அவுங்கள வர வுடுங்கபா, அத்து வுட்டுப்போட்டு வூட்டப் பாத்துக்கணும், அவுங்களுக்கு இதுல இஸ்டம் இல்லன்னு இன்னும் 1947 கதியெல்லாம் சொல்லிக்கினு இர்க்காதிங்கோ....

22 comments:

Anonymous said...

ஆருப்பா அந்த அறிவுக்கொழுந்து 'இவரு'?

வாய்ல நல்லா வருது!

-மதி

கொரலு வுட்டது மதி கந்தசாமி

Anonymous said...

//ஆருப்பா அந்த அறிவுக்கொழுந்து 'இவரு'? //

அடடா, பதிவு போட்ட அவசரத்திலே சொன்னவரு போட்டோவை போட மறந்துட்டேன். இப்போ போட்டாச்சு, இவரு தான் அவரு.

கொரலு வுட்டது KVR

Anonymous said...

ரொம்ப கரெக்ட் பா நீ சொல்றது!

கொரலு வுட்டது kalai

Anonymous said...

வீட்ல சோறாக்கி துணி தோச்சு எல்லாம் செஞ்சபின்ன அரசியலுக்கு வரலாமா?
முழுநேர பணியில் பெண்கள் கூடாதென்றால், மருத்துவராக, செவிலிகளாக கூட பெண்கள் இருக்க கூடாது.
பெண்கள் வேலைக்கே போக கூடாது. நிலம் நோக்கி நடந்து, கணவனை பரத்தையர் வீட்டிற்கு கூடையில் அமர்த்தி கொண்டு சென்று, முடிந்தால் டாஸ்மாக் போய் குடிப்பதற்கும் வாங்கி தந்து வாந்தியெடுத்தால் அள்ளி என்று எத்தனையோ வேலை இருக்கு சாரே. இதில் அரசியல் எதுக்கு

கொரலு வுட்டது padma

Anonymous said...

test

கொரலு வுட்டது Dondu

dondu(#4800161) said...

"இப்ப பெண்களுக்கு எந்த இடத்தில் தடை இருக்கு... யார் தடுக்கிறாங்க?"
இது சோ அவர்கள் கூறியது.

"பொம்பளைக்கு பாலிடிக்ஸுல இஸ்டம் இர்ந்தா அவுங்கள வர வுடுங்கபா,"
இது நீங்கள் கூறியது.

விருப்பம் இருக்கும் பெண்கள் வருவதை யார்தான் தடுக்க முடியும்? சொல்லப் போனால் அவர்களுக்கு யார் அனுமதியும் தேவையில்லை. அதைத்தான் சோ கூறுகிறார். அவங்களை வரவிட வேண்டும் என்று நீங்கள் கூறுவதுதான் சற்றுப் பிற்போக்காகத் தெரிகிறது.

ஆண்கள் யார் அவர்களை அனுமதிக்க? இட ஒதுக்கீடு வந்தால் என்ன நடக்கும்? அவர்களை பினாமியாக்குவதுதான் நடக்கும். இதற்கு போய் மெனக்கெட்டு ஏன் இட ஒதுக்கீடு என்றெல்லாம் தொல்லை என்றுதான் சோ கேட்கிறார். நானும் அதையேதான் கேட்கிறேன்.

மற்றத் தலைவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். அவர்களுக்கெல்லாம் சோ பேசுவது புரியாதுதான்.

"இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு."
இதில் உங்களுக்கென்ன வயிற்றெரிச்சல்? அவர் பதில் இவர்களுக்குத் தேவையானால் கேட்கிறார்கள். அவ்வளவுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஓ! சோ சொன்ன பொன்மொழிகளா?

டோண்டு என்ன சொல்லுவார்னு நினைச்சுட்டே வந்தா, நல்லா சப்பைக்கட்டுதான் கட்டியிருக்கார்.

சோ சொன்ன

//அதுமட்டுமல்ல... அரசியல் என்பது கிட்டத்தட்ட முழுநேரப் பணி. இதில் ஆர்வப்பட்டுப் பெண்கள் பலரும் வந்துவிட்டால் என்ன ஆகும்? புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது.

சில குடும்பங்களில் பொருளாதார ரீதியா தேவை இருக்கும்போது கணவன்& மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போவது சரி. அது தவிர்க்க முடியாதது. அதுக்காக எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்றால் அதைப் பெண் சுதந்திரம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. //

இதை என்ன சொல்லி சமாளிப்பார் டோண்டு? ஹஹ்!

[நேரவிரயம் என்று தெரிந்தும் ஒரு பின்னூட்டம்]

-மதி

கொரலு வுட்டது மதி கந்தசாமி

Anonymous said...

//இட ஒதுக்கீடு வந்தால் என்ன நடக்கும்? அவர்களை பினாமியாக்குவதுதான் நடக்கும்.
//
டோண்டு அய்யா கூறிய மாதிரி இது ஆங்காங்கே நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும் இது பற்றிய எனது பதிவில் உள்ளாட்சி மன்றங்களில் பெண்களின் நிலை மாலன் அவர்கள் அந்த நிலை மாறிக்கொண்டுள்ளது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார், மேலும் இதையெல்லாம் காரணம் கூறி பெண்கள் இடஒதுக்கீட்டை அரசியலில் மறுப்பது கடுமையான பிற்போக்குத்தனம் என்பதில் வேற்றுகருத்து இல்லை.

//அரசியல் என்பது கிட்டத்தட்ட முழுநேரப் பணி. இதில் ஆர்வப்பட்டுப் பெண்கள் பலரும் வந்துவிட்டால் என்ன ஆகும்? புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது.

சில குடும்பங்களில் பொருளாதார ரீதியா தேவை இருக்கும்போது கணவன்& மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போவது சரி. அது தவிர்க்க முடியாதது. அதுக்காக எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்றால் அதைப் பெண் சுதந்திரம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.
//
'சோ' இப்படி பேசியதில் ஆச்சரியமில்லை, 'சோ' இப்படியெல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

//மற்றத் தலைவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். அவர்களுக்கெல்லாம் சோ பேசுவது புரியாதுதான்.
//
யாரு 'சோ' வா? போங்க சார், உங்க நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவேயில்லை போல...

//"இன்னா மேட்டரா இர்ந்தாலும் அத்த இவராண்ட வேற கேள்வி கேட்டுப்புடுவாங்க. இவுரும் வெளக்கமா பதிலு சொல்லுவாரு."
//
தமாசு பக்கமென்று ஒன்று வேண்டாமா, அதான், மேலும் துக்ளக் கேள்விபதில்கள் பகுதிதான் இருப்பதிலேயே நகைச்சுவை பகுதி அதிலும் பார்த்தீர்களென்றால் சிலர் வயிர் எரியும் போது நகைச்சுவையாக இருக்குமே, அதை நான் துக்ளக் கேள்விபதில்கள் பகுதியில் ரசித்துள்ளேன்...

கொரலு வுட்டது குழலி

Anonymous said...

ஆஅ

கொரலு வுட்டது

Anonymous said...

பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது நல முயற்சி. வரவேற்கத்தக்கதே. ஆனால் ஆண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் (அல்லது 2 மணி நேரம், எது முன்னால் நடக்கிறதோ அது) இருந்து போராடுவோம் என்பதை...

மேல்kind

கொரலு வுட்டது சு. க்ருபா ஷங்கர்

dondu(#4800161) said...

இந்த விஷயத்தில் சோ கூறியதுடன் நான் 100% ஒத்துப் போகிறேன்.

ஆற்றல் இருந்து வருபவர் வரட்டும். அதைப் போய் இட ஒதுக்கீடு என்றெல்லாம் நிருவகப்படுத்துவது தேவையில்லை என்று சோ கூறுகிறார். நானும் அதை உறுதியாக நம்புகிறேன்.

இதே கருத்தைத்தான் எல்லா கட்சிகளும் கொண்டுள்ளன. ஆனால் வெளியில் கூறத் தயங்குகிறார்கள் அவ்வளவே.

நம் வலைப்பதிவர்கள் பலருக்கும் அதே எண்ணம்தான். ஆனால் தங்களுக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தி விடுவார்களோ என்றுதான் அவர்கள் அச்சம். எனக்கு இணையத் தாசில்தார்களிடம் நல்லப் பெயர் வாங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. அது எனக்குத் தேவையுமில்லை.

முதலில் கட்சிக்காரர்கள் தங்கள் வேட்பாளர் லிஸ்டில் 33% கொடுக்கட்டும். பிறகு வாய்கிழியப் பேசலாம். இங்குள்ளப் பதிவாளர்களில் அக்கட்சிகளுக்கான கொ.ப.செ.க்கள் உள்ளனர். அவர்கள் இதற்கு பதிலளிக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு அய்யா //ஆற்றல் இருந்து வருபவர் வரட்டும்// என்று மட்டும் 'சோ' கூறவில்லை,
கூடவே கீழ்கண்ட மாதிரியும் கூறியுள்ளார்

//புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது
//

இது என்ன போக்கு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், இந்த 33% இட ஒதுக்கீட்டை எந்த கட்சியும் முழு மனதோடு செய்ய ஆரம்பிக்கவில்லை என்பது உண்மைதான், 33% ஒதுக்கீடு வரும் வரை யாரும் செய்யவும் மாட்டார்கள் என்பதும் உண்மை, பிறகு எப்போது தான் கொண்டு வருவது, இப்படியான சட்டங்கள் மூலம் தான் கட்சிகளுக்கும் நெருக்கடி தந்து அமல் படுத்த முடியும். 'சோ' வை வெறுமனே இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றார் என்பதற்காக மட்டும் அப்படி குறிப்பிடவில்லை, அவர் குறிப்பிட்ட
//புருஷனும் அரசியலுக் குப் போகட்டும். மனைவியும் அரசியலுக்கு வரட்டும்Õனு ஆகிப் போச்சுன்னா... அப்புறம் வீடு, குடும்பத்தையெல்லாம் யார் கட்டிக் காப்பாத்துவது? இப்படியே போனால், அது நம்ம சமுதாய நலனுக்கு உகந்ததா இருக்காது
//
இந்த கருத்துக்கும் சேர்த்துதான் பிற்போக்குவாதி என குறிப்பிட்டது. இதெல்லாம் அவர் இரத்ததிலேயே ஊறிய சித்தாந்தம்,நம்பிக்கை அதை இங்கே உளறிக்கொண்டுள்ளார் அவ்வளவே, இது தெரியாத விடயமில்லை...

கொரலு வுட்டது குழலி

Anonymous said...

பதிவுக்கு ந்ன்றி கேவிஆர். தெய்வம் (சுப்ரமணி)வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றது. தெய்வத்தின் குரலில் சற்றே அடக்கி வாசிக்கிறார் சோ. என்ன இருந்தாலும் அவர் குரு அல்லவா?


கொரலு வுட்டது Thangamani

Anonymous said...

ஆமாம்ப்பா, வேலைக்குப் போறப்பொம்பிளைங்க எல்லாம் ஒயுக்கம் கெட்டவுங்க. ஆனா மாசம் பொறந்தா 'டாண்'னு வர்ற காசு மட்டும் புருசன்
கைக்கு அப்படியே போயிரணும்.
அப்பாலிக்கா, நம்ம பத்மா சொன்னாப்புலே கூடையிலே 'இவனை'தூக்கிக்கினு பலான இடத்துக்கும், டாஸ்ம்மாக்குன்னு ஏதோ கருமாந்திரம் இருக்காமே அங்கேயும் கொண்டுபோகத்தாவலை?

ஐய்ய, சொல்லேன்


கொரலு வுட்டது

Anonymous said...

சோ சொன்னது சரி.ஆணோ பெண்ணோ போட்டி போட்டு தான் வரணும்.சலுகை யெதற்கு?வல்லவன் வாழ்வான்.

கொரலு வுட்டது nannthan

Anonymous said...

உலகு அளவில பார்த்தா பெண்கள் அரசியல்ல இருக்கும் சதவிதம் கம்மி தான், அதற்காக மத்த நாட்டுல இந்த மாதிரி இட ஒதுக்கீடு இருக்கா ? பின்ன இங்க மட்டும் என்ன?

அவரு பெண்கள் அரசியல் வர குடாது நு சொல்ரது தப்பு தான், அனா தனி ஒதுகீடு குடுக்க குடாது நு சொல்ரதுல தப்பு ஏதும் எனக்கு தெரியல்ல..

கொரலு வுட்டது prasad

Anonymous said...

கொஞ்ச பேராவது இட ஒதுக்கீடு தவிர சோ சொன்ன பத்தாம் பசலி கருத்துக்களை தவறுண்ணு ஒத்துகிட்டாங்க .ஆனா நம்ம டோண்டு சார் இருக்காரே? இங்க அதையும் நியாயப்படுத்துவாரு .அப்புறம் குஷ்பு விஷயதுல வேற மாதிரி சொல்லுவாரு .சோ ரசிகர் சோ மாதிரி குழப்புறதுல அவருக்கு சளச்சவர் இல்ல போல ..அங்க வந்து பெண்கள் விரும்புனா யார் கூட எப்ப வேணா உடலுறவு வச்சுக்கலாம்னு சொல்லுவார்(அதில எனக்கு ஒன்னும் மாற்றுக் கருத்து இல்லை)..அதுல குடும்ப ஊறவு ஒண்ணும் கெட்டுப்போவாதாம் . ஆனா எல்லா பெண்களும் அரசியலுக்கோ அல்லது வேலைக்கொ போக ஆசைப்பட்ட மட்டும் குடும்ப உறவு கெட்டு போகுதாம் .என்ன வாதமோ ,என்ன நீதியோ?

கொரலு வுட்டது Joe

tandylane0725 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

http://www.juicyfruiter.blogspot.com

Anonymous said...

குழலி, நகைச்சுவை வேணும்னா தைலாபுரம் பக்கம் ஆரம்பத்தில இருந்து பேசினத லைப்ரரில உட்கார்ந்து தேடி படிச்சா வவுத்து வலியே வந்திடுமே. டிரை பண்ணி பாரும்.

ஓகை said...

இன்னா கேவீயார் சார்,

நல்லாகிறிங்களா? மரத்தடில பாத்தது. இப்பத்தான் வலைப்பூவுல பாக்கறதுக்கு நேரம் வந்திகிது. ஆனா எனுக்கு நேரம் நல்லா இல்ல சாரு. இல்லாங்காட்டி எதிர்கொரலு உட வருவனா? சரி நம்ம பாய்ண்ட் எல்லாம் எட்த்து உட்டுகினேன். புட்சுக்கொங்கோ. அப்பறம் போட்டு தாக்குங்கோ.

1. இவராண்ட கேள்வி கேட்டா மாத்திரம் இல்லை. கேக்காட்டியும் நெறைய சொல்லிகினேகீறார் துக்ளக்கில. கேக்காமயே சொல்ரவர் கேட்டுகினா சொல்லித்தான சார் ஆவனும். என்ன மதிச்சு கேள்வி கேட்டுகினா மூஞ்சிய திருப்பிகினா போவேன்? எனுக்கு இன்னா தோனுதோ அத்த சொல்ல தாவல?

2. பொம்பளைங்கோ அர்சியலுக்கு வர்ரதுக்கு இப்பொ இன்னா தடன்ரார்? தாழ்த்தபட்டவங்கோ பிற்படுத்தப் பட்டவங்கோ இவங்க முன்னேர்ரதுக்கு போட்டி கடுமையா இருக்கறதுனால இடவொதுக்கீடு தேவப்படுது. அதே கணக்கா இந்த விஸ்யத்தில ஒன்னுமே இல்லியே அப்டீன்றார்ன்னு எனுக்கு தோனுது. எனக்கு தனிப்பட்ட கர்த்து இன்னான்னா மொதல்ல படிக்கிறதுக்கு பொம்பளைங்களுக்கு கட்டாயமா 50 பர்சண்டொ இல்ல அதுக்கு மேலயோ ஒதுக்கீடு கொடுக்கனும். நாம சொல்றத ஆரு கேப்பா?

3. அப்டி 33 குட்த்தாக்கா பினாமிங்களா நிர்த்துவாங்கோ இன்றார். நடக்காதுன்றீங்க! ஒலகம் பூராவே பொம்பளைங்களுக்கு அர்சியல்ல ஆர்வம் கம்மி இல்லியா?

4.அர்சியல் மாறி பேஜாரானது அப்பறம் முக்கியனானது பத்திரிக்கைத்துறை. அங்கியே ரொம்பப் பேரு இல்லியே! ஏன்னா இதெல்லாம் கொஞ்சம்(ரொம்ப) பேஜாரான வேலை. பொம்பளைங்களுக்கு சரிபட்டு வருனும்னா அவங்க ஏகப்பட்ட அஜீஸ்முண்டு செய்யத் தாவல? 234 ல 1/3 ன்னா 78 எம்மெல்யே ஒட சரியா போச்சா? எத்தினி பேர் வரனும்? இந்த ஒதுக்கீடு சலுகயோ இல்ல உரிமயோ இல்லாம அவங்களுக்கு சுமையா போயிடுமோன்னு கொஞ்சம் யோசிக்க தாவல? சமுதாயத்துக்காகத்தான அர்சியல்? அர்சியலுக்காக சமுதாயத்த மாத்தரதா?

5. எத்தினி பொம்பளைங்க 33% வேணுமுன்னு கேட்டுகினுகீறாங்க? அல்லாம் அர்சியல்வாதிங்கதான் சொல்றாங்கோ. அப்பறம் எனுக்கு ஒரு சந்தேகம். அது இன்னாது 33? ஏன் 50 வாணாவா? நாயமா பாத்தா அவுங்க விகிதாச்சாரம் இப்பொ ரொம்பவும் கம்மின்ரதுனால கண்டிப்பா 50 வாணாம்?

6. நம்ம பதிவுல தேர்தல்2060ன்னு ஒரு கத எழுத்கிறன். படிச்சு பாருங்க சார்? சொம்மா சூப்பரா கீதுன்னு ஒர்த்தர் சொல்றார்.(அது நாந்தான்) அதுல நான் 50 குடுத்துட்டேன். மெய்யாலுமா.

7. கடசியா இன்னா சார் சொல்லிகீறிங்கோ? அவங்களுக்கு இஸ்டம் இருந்தா வர வுடுங்கோ இன்றீங்கோ. இப்ப ஆரு தடுத்துகினுகிறாங்கோ. பிரியல சார்.

ஆரு சொல்றாங்கோன்னு பாக்காம இன்னா சொல்றாங்கோன்னு பாருங்கன்னு அண்ணா சொல்லிகிறார். அண்ணா சொல்லிகிறார்னு கேட்டாலும் சரி இல்லன்னாலும் சரி, இன்னா சொல்லிகிறார்னு பாப்போம் சார்.

இன்னா வர்ட்டா?

கஜா
(நடராஜன்)

முத்து(தமிழினி) said...

சப்பாசு சப்பாசு...

சீனு said...

எனக்கென்னவோ, சொம்மனாங்காட்டியும் கலாய்க்கனும்னுங்காட்ட்டியும் சோ-வை திட்டர மாதிரி கீது நைனா. அவரு ஸ்டேட்மென்டை நல்லா பிரிஞ்சு பேசுப்பா.