Tuesday, March 23, 2004

சின்ன தாத்தா பெரிய தாத்தா



டெல்லிலக்கீற பெர்ய தாத்தா "நாங்காட்டி எலிக்ஸன்ல நிக்கலைன்னா நாட்டுல நெறியா பேஜாரு வந்துடும்பா, அத்தால தான் எலிக்ஸன்ல நிக்கிறேன்"னு இஸ்டேட்டுமெண்டு வுட்டுக்கீறாரு. கொயிந்த மேரி சிரிக்கிற ஏ அரும தாத்தா, மெய்யாலுமே நாடு பேஜாராப் பூடும்ன்னு எலிக்ஸன்ல நிக்கிறியா இல்ல காவி கச்சி பேஜாராப்பூடும்ன்னு எலிக்ஸன்ல நிக்கிறியா??

பெர்ய தாத்தா வூருக்காரப்புள்ள ஓடி ஒளைச்சு இந்தியாவோட மானங்காத்துச்சுன்னு "மானக்காத்த பேராண்டி"ன்னு இஸ்டேட்டுமெண்டு வுட்டுக்கீறாரு. இஸ்டேட்டுமெண்டு வுட்ட தாத்தா, ஒன்னோட பளைய தோஸ்து தாக்ரே தாத்தா "இன்னாபா இந்தியா கிரிக்கெட்டு டீமுல மூணு முஸ்லீமு பசங்கோ"ன்னு கொரலு வுட்டுக்கீறாராமே, தாக்ரே தாத்தாகினே "அந்த மூணு பசங்களால தா நம்ம ஆளுங்கோ கெலிச்சாங்கோ"ன்னு போயி சொல்லுபா.

பெர்ய தாத்தா கிரிக்கெட்டு இஸ்டேட்டுமெண்டு வுட்டா ரதத்துல ரவுண்டு அடிக்கிற தாத்தா போற எடத்துலல்லாம் புச்சு புச்சா இஸ்டேட்டுமெண்டு வுடுறாரு. அவருக்கு இஸ்டேட்டுமெண்டு தெலகம்ன்னு தான் பேரு குடுக்கணும்பா. புச்சா வுட்ட இஸ்டேட்டுமெண்டு "அயோத்தில இராமருக்கு கோயிலு கட்டவேண்டியது அவசியம்"ன்னு. நாட்டுல குந்த குடுசக் கூட இல்லாம ரோட்டோரமா உசுர கையிலே புட்ச்சுக்கின்னு குடியிருக்கறவனுக்கு வூடு கட்டிக்குடு, படிக்க பள்ளிக்கொடம் கூட இல்லாம இருக்குற பாளா போன வூருலல்லாம் பள்ளிக்கொடம் கட்டிக்குடு. அட அதெல்லாம் கூட வாணாம்பா ஆத்துர அவசரத்துக்கு ஒதுங்க ரோட்டோரமா கக்கூஸாவது கட்டிக்குடு. அத்தெல்லாம் வுட்டுப்போட்டு இராமருக்கு கோயிலு கட்டணும், அதுவும் அயோத்தில தான் கட்டணும்ன்னு அடம் புடிக்கிறியே தாத்தா. வூரு ஒலகத்துல ஒன்னோட கூத்தால நடந்த சாவுல்லாம் பத்தாதுன்னு திரும்ப இரதத்த கெளப்பிக்கின்னு இன்னாத்துக்கு கோக்குமாக்கா இஸ்டேட்டுமெண்டு வுடுற....

No comments: