Thursday, March 18, 2004

சீட்டு வோணுமா கச்சி மாறிக்கோ

நம்மூருல எலிக்ஸன் வந்தாலும் வந்துது கரவேட்டிங்க கூத்து தாங்க முடியலபா. அம்மா ஒரு சைடுல புச்சு புச்சா சலுவ குடுக்குறாங்கோ, தாத்தா இந்த வயிசிலேயும் கருப்பு கண்ணாடி போட்டுகின்னு மைக்கு முன்னாடி குந்துனா போதும் கைல ஒரு கடுதாசிய வச்சிக்கினு இன்னாரு இன்னிய தேதி இன்னது பேசுனாங்கோ, செஞ்சாங்கோன்னு கொரலு வுடுறாரு. இந்தக் கூத்துல்லாம் போதாதுடா சாமின்னு சூப்புரு இஸ்டாரு ஆளுங்க "எங்க தலீவன அன்னிக்கு தாக்குனல்லா, இந்த இன்னிக்கு வாங்கிக்கோபா ரிவிட்டு"ன்னு சொம்மா ரகள வுடுறாங்கோ.

இதெல்லாம் இன்னாபா மேட்டரு, ஒவ்வொரு தபா எலிக்ஸன் நடக்கிறப்போவும் வர்ற மேட்டரு தானேன்னு பாத்தா திடீர்ன்னு கச்சி வேட்டில்லாம் காவி கட்டிக்கின்னு கிளம்ப ஆரம்பிச்சிடுச்சிங்கோ. இன்னாடாது செஞ்ச பாவம் களுவ காசிய பாக்க போறாங்க போலக்கீதுன்னு நென்ச்சா அத்தான்பா இல்ல, காவி வேட்டி கட்டிகின்னு ரத ஊருவலம் வர்ற தலீவராண்ட போயி நின்னா கையோட "இந்தா புட்ச்சிக்கோ"ன்னு ஒரு எம்பி சீட்டு குடுக்கிறாராம்ல. ஒவ்வொரு கச்சியிலேயும் "இன்னா தலீவா நீ சீட்டு குட்க்கலைன்னா நா காவி வேட்டிக்கி மாறிபுடுவேன்"ன்னு தா இப்போ எல்லா கரவேட்டியும் மெரட்டுதுங்களாம்.

"கச்சி வேட்டில்லாம் காவிக்கு மாறுனா சீட்டு கெடிக்கும், அந்தக் காவி வேட்டிக்கே சீட்டு இல்லைன்னா ஆராண்ட போயி அளறது"ன்னு ஒர்த்தரு பொலம்பிகின்னு கீறாரு. வுட்டா அளுகின்னே போயி புதுக்கோட்ட பக்கமா தனியா நின்னே கெலிச்சுப்புடுவாரு போல...

இந்த பாளா போன அரசியலு ஏவூட்டுக்கு பக்கத்தால ஓடுற கூவத்த விடல்ல நாத்தமா நாறுது, இத்தப் பத்தி பேசி இன்னா புண்ணியம் போ, நா சோளிய பாக்கப் போறேன்பா.

வர்ட்டா......

கொஸப்பேட்ட குப்ஸாமி

No comments: