Sunday, March 21, 2004

தாத்தா அட்ச்ச அந்தர்பல்டி

முன்ன ஒரு தபா தாத்தா எள வயசுல துள்ளிக் குதிச்சி திரிஞ்சப்போ ஒரு எலிக்ஸன் வந்துச்சுபா. அந்த எலிக்ஸனுக்கு கொஞ்ச நாளு முன்னாடி தான் எளவயசு தாத்தாவ மிசால போட்டாங்க அப்போதைய ஜான்சி ராணி. ஆனா எலிக்ஸன் வந்ததும் எளவயசு தாத்தாவும் ராணியும் கூட்டாஞ்சோறு கூடி துண்ற கணுக்கா ஒண்ணு சேர்ந்துகினாங்கோ. ராணியம்மா தமில்நாட்டுக்கு வர்றதா நூஸ் கெடிச்சதும் "நேருவின் மவளே வருக, நல்லாச்சி தருக"ன்னு போஸ்டர் அட்ச்சு ஒட்டுனாரு.

தாத்தா வயசானாலும் அந்தப் பளைய பண்பாடு மறக்காம இப்போதைய குட்டிராணிக்கு "இந்திராவின் மருமவளே வருக, வந்து நா கைக்காட்டுற ஆளுக்கு மந்திரி பதவி தருக"ன்னு போஸ்டரு அட்ச்சிப்புட்டாரு. நம்மூரு தாத்தாவுக்கு டெல்லி தாத்தால்லாம் கொறஞ்சவங்களா இன்னா... அன்னிக்கு என்னோட கூட்டு கும்மாங்குத்துப் போட்டப்போ "வெளிநாட்டு மருமவ ஆச்சிக்கு வரக்கூடாது"ன்னு சொன்னியேபா, இப்போ இன்னா டகுல்பாஜி வேல காட்டுறேன்னு கேட்டாங்கோ. நம்ம டகுபல்பாஜி கிங் "தோடா, நா எப்போ சொன்னேன்"ன்னு டகுல் மேல டகுலு வுட்டுக்கீறாரு. இவரு டகுல தான் ஒட்டுமொத்த இந்தியாவே பல காலமா பாத்துகின்னு கீதே. டெல்லி தாத்தா "மாமு, ஓ வேலியெல்லாம் வேற ஆரண்ட வேணா வெச்சிக்கோ, என்னாண்ட வாணாம்"ன்னு சொல்லி "இதோ பாரு, நீ கையெளுத்து போட்டுக் குட்த்த பேப்பரு"ன்னு மேட்டர எடுத்து வெளில உட்டுட்சிங்கோ.



தாத்தாவுக்கு இப்போ இன்னா பண்றதுன்னு ஒண்ணும் பிரியல. குட்டிராணிக்கு போன போட்டு "நீ ஒண்ணும் மன்ஸுல வெச்சிக்காதே கொய்ந்த, நா ஒன்னிய பெரதமராக்குறேன்"ன்னு சமாதானம் சொல்லிக்கின்னு கீறாரு போல. ஒண்ணுமே புரியல அரசியல்ல, என்னமோ நடக்குது மர்மமா கீது, ஒண்ணுமே புர்யல அரசியல்ல.....

No comments: