Sunday, May 30, 2004

தம்மு

தம்மட்ச்சா கேன்ஸரு வரும். தம்மட்சா நெஞ்சுவலி வந்து அல்பாய்ஸுல பூடுவோம். தம்மடிக்கற்து ஒடம்புக்கு கெடுதலு. தெனம் தெனம் கேட்டுக்கின்னு கீறோம். ஆனா யார்ன்னா அத்த வுட்டு வெளில வராங்களா? கெடியாது. நம்மூர்ல தம்மடிக்காமலே பாதி பேருக்கு கேன்ஸரு வந்துரும். பஸ்ஸு பொக, தண்ணிலாரி பொக, ஆட்டோ பொக, இருக்குற மில்லுங்க அல்லாம் வெளில வுடுற பொக. இப்டி வர்ற அல்லா பொகையும் நம்ம வுள்ள இஸ்துக்கின்னு கீறோம். இதெல்லாம் நாமளா இஸ்டப்பட்டு இஸ்துக்கின்னுகீற பொக இல்ல. ஆனா தம்மடிக்கிறது மட்டும் நாமளா இஸ்டத்தோட இஸ்துக்கின்னு கீறோம்.

ஒரு மன்ஸன் நைட்டு தூங்க போவ சொல்லோ வாயிலே அரிசிய போட்டு வெச்சிக்கின்னு அத்த மறுநாளு காலங்காத்தால வெளில துப்புறான்னு வெய்யி, அத்த எதுனா கோளி துண்ணுச்சுன்னா அந்தக் கோளிக்கு அன்னியோட சமாதி தான். மன்ஸன் ஒடம்பே வெசம் தான். இதுல இருக்குற வெசம் போதாதுன்னு மன்ஸன் தம்மடிக்கிறது, கல்ப் அடிக்கிறதுன்னு புச்சு புச்சா வெசத்த சேத்துக்குறான். கல்ப் அட்சா அத்த அடிக்கிற மன்ஸனுக்கு மட்டும் தான் கெட்டது. ஆனா தம்மடிக்கிறது பெர்ய பேஜார் மேட்டரு. அவனையும் அடிக்கும், சுத்தி இருக்கிறவனையும் அடிக்கும். அத்த மேரி, ஒரு மன்ஸன் ஒரு நாளைக்கு பத்து தம்மு அடிக்கிறான்னு வெய்யி. அந்த பத்து தம்ம மொதோ நாளு ராத்திரி ஒரு டம்பளரு தண்ணில பத்து தம்ம வூறப்போடு. மறுநாளு அந்தத் தண்ணி குட்ச்சா ஆளு பனால். தம்மு அம்புட்டு வெசம்.

தம்மடிக்கிறது ஆம்புளைக்கு அளகு, இளுக்க இளுக்க இன்பம்ன்னு அடிக்க சொல்லோ சொல்லுவாங்கோ. ஆனா அத்த அட்ச்சா நம்ம நெஞ்சுவலி வந்து அல்பாயுசுல போறதுக்கு தியேட்டராண்ட டிக்கெட்டு எடுக்க க்யூவுல அட்ச்சிக்கின்னு நிக்கிற மேரி தான். தம்மட்ச்சா நெஞ்சுவலி, கூடவே வயுத்தெரிச்சலு, கேன்ஸரு அல்லாம் தோஸ்துங்க கணுக்கா வந்து ஒட்டிக்கும். இதுல்லாம் கூட மேட்டரே இல்ல, மேட்டருக்கே ஆப்பு வெக்கிது நம்ம தம்மு. ஆம்புளைக்கு அளகுன்னு சொல்லிக்கிற தம்மு தான் மேட்டருக்கு ஆப்பு வெக்கிது.

இன்னா நயினா, ஓவரா கலீஜ்ஜு பண்றேன்னு கேக்காதிங்கோ. தம்மடிக்கிறது கெடுதலு, அத்த தான் குப்ஸாமி சொல்ல முடியும். நிறுத்திடுபா'ன்னு சொல்ற ரைட்ஸு நம்ம கைல இல்லபா. வோணா ஒண்ணு சொல்லுவேன், அத்த மட்டும் மன்ஸுலே வெச்சிக்கோங்கோ. தம்மடிங்கோ வாணான்னு சொல்லல. அட்த்தவங்களுக்கு டிஸ்டர்பு இல்லாம அடிங்கோ. தம்மடிக்கணும்ன்னு தோணுச்சா, நேரா எங்கனா மன்ஸன் இல்லாத தூரமா போயி அட்ச்சிட்டு வந்துடுங்கோ. முக்கியமா கொய்ந்த புள்ளிங்கோ இர்க்கசொல்லோ அடிக்காதிங்கோ. ஒங்களுக்கு புட்ச்ச கொயிந்திய நீங்களே களுத்த நெரிச்சு கொல்ற மேரி தான் அது.

நாளிக்கி பொய்ல எதிர்ப்பு தெனாமாம். அந்த நல்ல தெனத்துலேந்து பத்து தம்மடிக்கிற ஆளுங்கோ எட்டா கொறச்சிக்கோங்கோ. அத்த மேரியே அடிக்கிற அல்லாரும் கொஞ்சம் கொறச்சுக்கப் பாருங்கோ. மன்ஸன் நென்ச்சா முடியாததாபா.

6 comments:

icarus prakash said...

முடியலையேப்பா.... ( வேலுநாயக்கர் ஸ்டைலில் படிக்கவும் )

Anonymous said...

அரசாங்க எச்சரிக்கை புகை பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என சிகரட் அட்டைப் பெட்டியில் எழுதியிருப்பது போல இந்த புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்கும் யாராவது சிகரட் நிறுவனங்கள் தான் ஸ்பொன்சர் பண்ணுவார்கள் என நினைக்கிறேன்

ஈழநாதன்

Shankar said...

sookkaa sonna nainaa! nenja nakkittiyee baa! meyyaalume peelaayi solreen. veLLaattaa eydhinaalum visayaththooda eydhura baa neeyi!

Mookku Sundar said...

இன்னாபா...சமூக பொருப்பு பிச்சிக்கிதா,,,உடு மாமே..ஸொன்னா திருந்துவானுங்களா இவ்னுன்கோ...
பட்டு துருந்தட்டும் நாய்னா..

நீ குடு என்க்கு ஒரு காஜா பீடி..

Anonymous said...

என்ன குப்ஸாமி அண்ணாச்சி!

தம்மடிக்கிறது கெடுதலு, அத்த தான் குப்ஸாமி சொல்ல முடியும். நிறுத்திடுபான்னு சொல்ற ரைட்சு நம்ம கைல இல்லபான்னு எலுதிக்கின. என்ன அண்ணாச்சி டபாய்க்கிறயா? மன்ஸன்னா தில்லு வேணும்பா மேட்டர முகத்தாண்ட ஒடைக்கிற தில்லும்ப. இப்ப எங்க போயிச்சி ஒந்தில்லு.

அண்ணாச்சி நீ சொல்றது எதமேரி கீது தெர்யுமா? ரோட்ல பஸ் வருதுன்னுதான் சொல்லமுடியும். ஓரமா போன்னு சொல்ற ரைட்சு நம்ம கைல இல்லபான்னு சொல்ரா மேரிகீது.

நமக்கு சொதந்திர தாகம் ஊட்னது பேனா புட்சவங்களும் மைக் புட்சவங்களும்தான்னு நான் சொல்லி உனக்கு தெர்யவேண்டியதில்ல அண்ணாச்சி. ஸொல்றத முகத்தாண்ட நச்சுன்னு ஸொன்னாதான் கதை நடக்குதுபா இவங்கல்ட்ட. நம்மாளுவோ சவ்தியெல்லாம் போனதால மொதலாளிக்கிட்டேயே தம்மு கொடு மாமேன்னு கேட்டு பலக்கவுள்ளவனுவோ. அல்ப ஆயுசுல போறதுக்காக இப்டி தம்ம கட்ச்சு கட்ச்சு முலுங்குறானுவ.

எதிர்கொரலு உற்ரது யார்னு கொலம்பாதே அண்ணாச்சி, நான்தான் ஒங் புது தோஸ்து. போனவாரம் வலப்பூ செய்றதுக்காக சந்தேகங்கேட்டு ஜித்தாவிலேந்து நெர்ய மெய்லு உட்டேன்ல.

ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெர்யுது அண்ணாச்சி, ஒன்ன மேரி கொஸப்பேட்டை டாட் காம் போட்டா எந்த இலக்கண மிஸ்டேக்கும் எலுத்து மிஸ்டேக்கும் வராதுன்னு.

வர்ட்டா…

KVR said...

முஃப்தி அண்ணாத்தே,

நம்ம கொய்ந்திங்கள பத்தி தெர்யாம பேசக்கூடாதுபா. நிற்த்துன்னு சொன்னாக்கா இஸ்டார்ட்டு பண்ற பார்ட்டிங்கோ நெற்யாகீது இங்கே. அத்தால தான் இத்த குட்ச்சா இம்மா ப்ராப்ளம் வரும், வோணும்ன்னா இஸ்துக்கோ வாணான்னா வுட்டுடுன்னு சொல்லிக்கீறேன். கெட்டள போடுற ரேஞ்சிக்கு நம்ம இன்னும் போவல நைனா...