எலிக்ஸன் வந்தாலும் வந்துச்சு ஒரே அரசியலா பேச வேண்டியதா பூட்ச்சிபா. இன்னா பண்றது அந்த டைமுக்கு அந்த மேட்டரு. என்னிய மேரியே நம்ம சன் டிவிக்கும் அரசியல் பேசி போரடிச்சிப் பூட்ச்சு போலக்கீது. புச்சா இப்போ பள்ளிக்கொடங்கள கைல எட்த்துக்கின்னாங்கோ. இவுங்க எந்தப் பள்ளிக்கொடம் நல்லாக்கீதுன்னு பட்ச்ச பெரிய மன்ஸங்களாண்ட கேட்டு சொல்லுவாங்களாம், அத்துல போயி துட்டு குட்த்து நம்ம பட்ச்சிக்கணுமாம்.
நேத்திக்கு மதுரைல இர்ந்து ஆரம்பிச்சாங்கோ. காட்டுன இஸ்கூலுல மொதல்ல வந்தது டிவிஎஸு. இஸ்கூல என்னமோ நல்ல இஸ்கூலு தான். ஆனா ஒரு மேட்டரு தான் இடிக்கிது. இந்த இஸ்கூல படிக்கணும்ன்னா புள்ளிங்களோட நைனாவும் ஆத்தாவும் பட்ச்சிருக்கணுமாம். அப்பனும் ஆத்தாளும் படிக்காட்டி புள்ளிங்கோ படிக்காதா? அப்பன் ஆத்தா படிக்காதவங்களா இர்ந்தா புள்ளிங்கோ அப்டியே வீணாப் போற பள்ளிக்கொடத்துல தான் படிக்கணுமா?
இது இன்னா நாயம்னே தெர்லபா. புள்ளிக்கு படிக்கிற தெறம கீதான்னு பாரு, துட்டு வாங்குற பள்ளிக்கொடமா இர்ந்தா துட்டு கெடிக்குமான்னு வோணும்ன்னாலும் பாரு. அத்த வுட்டுப்போட்டு அப்பனும் ஆத்தாளும் பட்ச்சிருந்தா தான் நீயும் படிக்க முடியும்ன்னு சொல்றது இன்னா நாயம்னே தெர்லபா. இஸ்கூலுன்னா இன்னாத்துக்கு கீது. புள்ளிங்கள நல்லா படிக்க வெச்சு, நல்ல மன்ஸங்களா வெளில அனுப்ப தானே. அப்டி இர்க்க சொல்லோ இன்னாத்துக்கு இந்த மேரில்லாம் கேக்கணும்.
குப்பைல கூட குந்துமணி கெடிக்கும், சேத்துல செந்தாமர மொளிக்கும்ன்னு இஸ்கூலுல படிக்க சொல்ல சொல்றாங்கோ. ஆனா அதே இஸ்கூலுல தான் இந்த மேரி மேட்டரும் நடக்குது. "ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே, என்னாமோ நட்க்குது மாய்ம்மாய் இர்க்குது, ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே"
13 comments:
'குங்குமப் பொட்டு கவுண்டர்' பார்த்துட்டீங்களா?
கேள்வி வெளங்குலியே தலீவா. நா எய்துன மேட்டருக்கும் அதுக்கும் எதுனா லிங்கு கீதா?
அசிங்க அசிங்கமா வாயில வருது.
லிங்கு கீது. நீ ஸொன்ன மேட்டரை சுட்டுத்தான் ,சத்யராஜு, ரம்பாவை
வெச்சு குங்கும பொட்டு கவுண்டர்னு பயாஸ்கோப்பு புட்சாங்கோ
-prakash
Great thoughts!
I appreciate you for doing this!
Hell with TVS and schools like that!
Can you please take this issue to some bigger level!
Govt. should revoke the license for this kind of schools!
இதற்கு பயந்தே வருங்கால அப்பா , அம்மாவெல்லாம் கல்லூரியில் ஒழுங்காக படித்து தக்கிமுக்கி ஒரு "டிகிரி" யாவது வாங்கிடறாங்களாம்.
இன்னும் கொஞ்ச நாளில் இதுவே "டபிள் டிகிரி" அப்புறம் "டாக்டரேட்" கேட்டாலும் கேட்பாங்க.
இதற்கு பயந்தே வருங்கால அப்பா , அம்மாவெல்லாம் கல்லூரியில் ஒழுங்காக படித்து தக்கிமுக்கி ஒரு "டிகிரி" யாவது வாங்கிடறாங்களாம்.
இன்னும் கொஞ்ச நாளில் இதுவே "டபிள் டிகிரி" அப்புறம் "டாக்டரேட்" கேட்டாலும் கேட்பாங்க.
பெர்காசு அண்ணாத்தே, குப்ஸாமி வய்ஸான ரம்பா படத்தை எல்லாம் பாக்குறதே இல்லியே.
அன்புள்ள "யாரோ",
இந்த விஷயங்களை பெரிய அளவுக்கு ஊதிக்காட்டுவதால் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அரசாங்கத்திற்கு இதெல்லாம் தெரியாதா என்ன? அவர்களிடம் சொன்னால் "அதான் கேள்வியே கேக்காம சேத்துக்க அரசாங்க பள்ளிக்கூடம் இருக்கே, அங்கே போங்க"ன்னு சொல்லிடுவாங்க.
போராட்டமெல்லாம் செய்வதை விட படிப்பறிவில்லாத பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், வீட்டில் படிக்க வசதி இல்லாத பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தரலாம். பெருமைக்காக சொல்லவில்லை, ஓய்வு பெற்ற பிறகு தற்போது என் தந்தை அதை தான் செய்துகொண்டு இருக்கிறார்.
Dear KVR,
Nice article.
(Given link to kosappaettai in my blog :) )
Dear KVR,
I totally agree with you and your guess is correct.
Please see the reply from our state minister Manbumigu. Semmalai
http://www.vikatan.com/jv/2004/may/30052004/jv0108.shtml
I appreciate your father's effort.
"படிச்சவங்கதான் கேள்வி கேட்காம கேக்குற காசைக் குடுப்பாங்க" அப்படின்னு நெனைக்கலாம்!
Post a Comment