Thursday, September 02, 2004

சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

மர்த்தடி போட்டிக்காக பெரசன்னா நெல்லைய பத்தி வெண்பா எய்திக்கீறாரு. பட்ச்சா சோக்கா கீது. அத்த பாத்து நம்ம சென்னைய பத்தி, அதோட புகள பத்தி ரெண்டு வரி எட்த்து வுடலான்னு ஆச வந்துடுச்சு.

******************************************

அண்ணாந்து பாக்கவைக்கும் எல்ஐசி கட்டடமும்
கண்ணடிக்கும் நேரத்தில் கட்டுவுடும் ஆட்டோவும்
எந்தூரு போனாலு மெங்கேயு மிர்க்காது
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

எண்ணூரு போறதுக்கு எட்டுமணி பஸ்புடிச்சா
பண்ணாட பையனுங்கோ பர்ஸடிக்க சான்ஸுவுண்டு
கொண்டுவந்த பைசாவ கொள்ளையிலே வுட்டவன்நீ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

கொல்லுற வெய்யிலு கொள்த்துறது தெர்யாம
கல்லாட்டம் குந்திகின்னு காதலிப்போம்; அல்பாய்ஸ்ல
கண்ணாலம் கட்டாம கல்ண்டகத எத்தனையோ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

******************************************

இப்போதைக்கு இவ்ளோ தான். அப்பாலிக்கா என்னிக்காவது மூடு இர்ந்தா மிச்ச மீதி. வர்ட்டா....

10 comments:

Anonymous said...

நான் தமிழில் எழுதியிருந்தேன். வெண்பாவை நானறிந்தவரையில் தமிழில்தான் எழுதமுடியும். நீங்கள் எந்த மொழியில் எழுதியிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை. படுத்தியவர் விளங்கப்படுத்தவும்.

--ஹரன்பிரசன்னா

KVR said...

இதுவும் தமிளு தான்பா. பிர்யாத புள்ளியா கீறியே...

Anonymous said...

இப்பம் ஃபயர்ஃபாக்ஸ்ல பாக்க சொல்ல மெய்யாலுமே சோக்கா கீதுபா. தாங்கஸு.

நவன் பகவதி

Anonymous said...

சென்னைத்தமிழ் உனக்கும் படிப்பவர்க்கும் சிரிப்பாக இருக்கலாம்.ஆனால் மரத்தடியின் வெண்பாவைக் கிண்டல் செய்து எழுத உனக்கு எப்படி மனம் வந்தது?தமிழை எப்படி எல்லாம் வளர்க்கலாம் என மரத்தடியும்...காப்பிக்கடையும் சிந்தித்து உழைத்துக் கொண்டிருப்பது உன் கண்ணுக்குப் பிடிக்கவில்லையா?நீ என்ன மெட்றாஸ்ல பெரிய ரவுடியா?மவனே...கைல மாட்னே...பிச்சிடுவேன்!

வலைப்பூக்கள் என்றால் எழுதுவோரின் எண்ணங்கள்...கிறுக்கல்கள்தான்...அதற்காக உன் சொந்தக் கற்பனையை எழுதுவதும் தவறில்லைதான்.ஆனால் மரத்தடி..ராயர் காப்பி கிளப் போன்றவைகளை இனி நீ கிண்டல் செய்தால் எழுத கை இருக்காது!!!

KVR said...

அடடே ஆருபா அது பேரு கூட போடாம கொரலு வுடுற தெகிரியசாலி. நைனா, கொரலு வுடுறப்போ உன்னோட பேரையும் சொல்லலாம்ல.

Anonymous said...

மாப்லா யாருடா அடு கொரலு வொடுரது நாம சுடன்டிர நாட்டுல இர்ருகொம் மவனெ புரின்சுகொ . நீ கை வெட்டினா நான் அப்பொரம் ஒன்னுயெ வேட்டிடுவென் . ஒடிபோ நாயே

கொரலு வுட்டது dharani

Anonymous said...

எந்த பேமாணி, கஸ்மாலம் அது அநாதை கொரலு வுட்றது.
மவனெ இணையம் என்ன ஙொப்பன் வூட்ட சொத்தாடா? இப்பிடி எய்து அப்பிடி எய்துங்கிற.
நீயி என் கையிலெ இல்லை கண்ணுல மாட்டினாலும் தூக்கிப்போட்டு ஒதைப்பேன்.

மரத்தடிலே சில நல்ல மனுஸனுங்க இருக்கசொல்ல,
உன்னிய மாதிரி கஸ்மாலமும் கூடக்கீது அப்பிடிங்கிறதுக்கு நீயே
இந்த உலகத்துக்கு சாட்சிடா மவனே.


குப்ஸாமி ஒங் சென்னை கவுதை மெய்யாலுமே சூப்பருபா...
தெரிஞ்ச பசங்களுக்கெல்லாம் ஒரு காப்பி அனுபிச்சிருக்கேன்பா...

கொலைக்கிர நாய்களை சட்டைபன்னாம கன்டினு பண்ணுபா.கொரலு வுட்டது ராஜ்

Anonymous said...

குப்ஸு.. மெய்யாலுமே சோக்கா தான் கவுத எலுதி உட்டு இர்கப்பா..இட்த்ப் போயி பெர்சா பேச வன்ந்துட்டான் யா...யார் பா அவுனு? engli peechula type panrathukulla tangu vaar kalandu poidichi...

கொரலு வுட்டது Bala

Anonymous said...

இன்னாபா இது, நாகரிகம் நு ஒரு வார்த்தை அல்லா தமிழ் வழக்குலயும் உன்டுபா

நியாபகம் இருக்கட்டுமே !!!கொரலு வுட்டது செந்தில்

Anonymous said...

குரல்யட்ப் க்னௌப்ல் அலுட்த வாழ வுல் தைக்பர் ,அஹொப்ர்ட்;
அ7உர்த்யைஒ க்ஹரொஉஅப்ப்; அர்டொய்
டௌர;

கவுத வெளங்குதா?

கொரலு வுட்டது கட்ட