Thursday, February 02, 2006

அன்பான காரு

நம்மூருல மினிஷ்டரா இர்க்கசொல்லோ இன்னா மேரி கில்பான்ஸ்ல்லாம் பண்ணலாம்ன்னு பாருங்கபா. எல்த்து மினிஷ்டரு அன்புமணி கீறாரே, அவுரு ஜனவரி 29ம் தேதி ஈரோட்டாண்ட விசிட்டு அட்ச்சாராம். அவுருக்கு ரவுண்ட்ஸு வுட ஒரு டுபாக்கூரு ஜீப்ப குட்த்துட்டாங்களாம். ஒடனே ரைட்டு ஹாண்டு லெஃப்ட்டு ஹாண்டு கண்மணிங்கோ சொம்மா இர்க்குமா. எங்க தலீவருக்கு புச்சா ஒரு காரு கொண்டாந்து அதுல வுடுரோம்டா ரவுண்ட்ஸுன்னு சொல்லிகினு ஒரு கார்ல கொடி கட்டிக்கினு வந்துட்டாங்க (மினிஷ்ட்டருன்னா தேசிய கொடி கட்ன கார்ல தான போவணும்).

மினிஷ்ட்டருக்கு காரு கொண்டாந்த கண்மணிங்கோ கொடியெல்லாம் கரீட்டா கட்டிட்டாங்க. ஷோரூம்லேர்ந்து எட்த்துகினு வரசொல்லோ ஒரு நம்பரு பிளேட்டும் ஒட்டிகினு வந்துருக்கலாம். அத்த மட்டும் டீல்ல வுட்டுட்டாங்கோ. மினிஷ்ட்டரா இர்க்கசொல்லோ நம்பரு பிளேட்டு இல்லாம ரவுண்டு வுட்டா போலீஸு வந்து கேள்வியா கேட்டுகின்னு இர்க்கப்போவுது.

7 comments:

Anonymous said...

எங்க ரொம்ப நாளா கொரலு வரைலையேன்னு நெனச்சேன்,
சோக்கா கேள்வி கேட்டே வாத்தியாரே

கொரலு வுட்டது ila

Anonymous said...

என்ன தல ரொம்பநாள் கழிச்சு பாக்குறோம் உங்கள...

பாத்து தல இத்த கேட்டதுக்கு சுத்த டமில்ல பேசாத உங்க வீட்டு முன்னாடி கலாச்சாரக்காவலர்கள் போராட்டம் நடத்தப்போறாங்க....

அடிக்கடி காலாய்ச்சிக்கின்னே இரு தல....கொரலு வுட்டது யாத்திரிகன்

Anonymous said...

-கொசப்பேட்டை வந்துட்டீங்களா? உங்களுக்கு நான் சிறந்த பதிவர் லிஸ்ட்ல சீட் போட்டேன். ஆனா நீங்க ரொம்ப நாளா சத்தம் போட காணாமா? என்னடா ஆச்சு போலிஸ் ல கம்ப்ளேண்ட் க்டொஉக்கலாம்னு பார்த்தேன்.

கொரலு வுட்டது balachandar ganesan

Anonymous said...

நல்லாத்தேன் கேட்ருக்கீக. எதுக்கும் சாக்கிரதையா இருங்கய்யா:-)

கொரலு வுட்டது Nila

Anonymous said...

கவுண்டமணி ஸ்டைலில் வாசிக்கவும் :

"யாஆஆஆரப்பாஆஆஆத்து என்ன கேள்வி கேட்ட *$%*# மினிஸ்டர் வண்டிக்கு நம்பர் ப்ளேட்டா? நியாயமாப் பாத்தா பென்ஸ் கார்தான் வந்திருக்கணும். நாங்கள்ளாம் யாஆஆரு. ரோடுல போவணும்னாலும் ப்ளைட்லதான் போவோம். எங்களுக்கு இந்த நம்பர் ப்ளேட்டு. நோ என்ட்ரி. ட்ராபிக் சிக்னலு இதெல்லாம் கிடையாதுன்னு உனக்குத் தெரியுமா தெரியாதாடா... #$@3#$*&"

கொசப்பேட்ட; திரும்ப வந்ததுக்கு சந்தோஷம். அடிக்கடி வந்து இப்படி கொரல் விட்டா இன்னும் சந்தோஷம்! நல்வரவு!

கொரலு வுட்டது சுந்தர்

Anonymous said...

குப்ஸ்,

இன்னா நாயம்பா? ஒண்ரைணா டாக்ஸ் டோக்கன் இல்லாட்டி சந்துக்கு சந்து ஆட்டோவ ஓரங்கட்டி சலான் குடுக்ராங்கோ, மினிஸ்டருன்னா நம்பர் ப்ளேட்டே இல்லாம வண்டி ஓட்டிக்லாமா?

அது செரி ஒண்ர லட்சம் - ஆன்ரோடு ஆட்டோ எங்க? பத்து லட்சம் - ஆன்ரோடு சஃபாரி எங்க? ஏணி வெச்சாலும் எட்டுமா?

ஆமா, சஃபாரில கேன் ஹோல்டரு கீத, அது பெப்ஸி கோக்கு கேனுக்குதான சூட்டாவும், எளநியெல்லாம் வெக்க முடியாத...டாட்டா கம்பெனிக்கு நோட்டீஸ் குடுத்து ப்ரொடக்ஸன் நிர்த்திருவாங்களா?

வுடு ஜூட்.

பாய் திர்லக்கண்ணி பாய்

கொரலு வுட்டது

Anonymous said...

எதிர்கொரலு குட்த்த அல்லாருக்கும் குப்ஸ் ஒரு சலாம் சொல்லிக்கிறான்பா. எலிக்ஸன் வந்திட்ச்சில்ல, இனிமே குப்ஸுக்கு நெறியா ஜோலி இர்க்கும்.

கொரலு வுட்டது kosappettai kupsaami