Saturday, February 25, 2006

சூப்பர் கூட்டணி

நம்மூர்ல பெர்ய கன்ஃபூஸன்ல கீறது யார்பான்னு கேட்டா அல்லாரும் "தாத்தா கலீஞரு"ன்னு கரீட்டா சொல்லுவாங்கோ. அல்லாம் கூட்டணி மேட்டரு தான். கருப்புத்துண்டு மாமா ஒரு சைடா இஸ்துகின்னு போவேன்னு கொரலு வுடுறாரு. பீச்சாங்கை சைடுல மரவெட்டி ஐயா "குட்த்தா கருப்புத்துண்டுக்கு குட்குறத வுட ரெண்டு கூட குடு, இல்லாங்காட்டி என்னிய வுடு"ன்னு கொரலு வுடுறாரு.

தாத்தா கன்ஃபூஸன் வெளில தெர்ஞ்ச கன்ஃபூஸன், அம்மா கன்ஃபூஸனே இல்லாத மேரி காட்டிக்கின்னு பெர்ய கன்ஃபூஸன்ல கீறாங்கோ. கதவ தொற்ந்து வெச்சிக்கீறேன், ஜன்னல தொற்ந்து வெச்சிக்கீறேன்னு டயலாக்கு வுட்டுக்கின்னு சுத்துறாங்கோ.

ரெண்டு பேர்க்குமே ஒரே கன்ஃபூஸன் கூட்டணி தான். இந்த கன்ஃபூஸன களட்டிவுடணும்ன்னா இன்னா செய்யலாம்ன்னு ரெண்டு பேரும் ரோசன சேஞ்சிருப்பாங்கோ போல. "இன்னிய சீஃப் மினிஷ்டரு நானு, அன்னிய சீஃப் மினிஷ்டரு நீயி, இன்னாத்து கண்டவனுக்கு கதவ தொற்ந்து வெச்சிக்கின்னு இர்க்கோணும். நம்ம ரெண்டு பேருமே கூட்டணி வெச்சிக்கின்னா இன்னா தாத்தா"ன்னு அம்மா கேட்டுருப்பாங்கோ போலக்கீது. தாத்தாவும் "இந்த ஐடியா ஜூப்பரா கீதே"ன்னு நென்ச்சிருப்பாரு போலக்கீது. இந்த எலிக்ஸன்ல ரெண்டு கச்சியும் கூட்டணி போட்டு நிக்கப்போறாங்கோ.

இன்னா நயினா, டவுட்டா கீதா?? டவுட்டு இர்ந்தா இந்த போட்டோவ பாருபா



அம்மா கச்சியும் தாத்தா கச்சியும் ஒட்டுக்கா சேந்து ஓட்டுக் கேக்குறாங்கோ......

1 comment:

Anonymous said...

படத்த கலர்ல போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்ல.

ப. மோகன்
ரியாத்.