மரத்த வெச்சவன் தண்ணி வூத்துவான், மரத்த வெட்னவன் இன்னா செய்வான்?. "மர்த்த நடுங்கப்பா, மர்த்த நடுங்கப்பா"ன்னு சொல்லி செஞ்ச பாவத்துக்கு புண்ணியம் தேடிப்பான். நம்ம மரவெட்டி ஐயாவும் இப்போ அத்த தான் செய்துகின்னு கீறாரு. அல்லாரும் மரம் நடணும், வூட்டுக்கு வூடு மரம் வளக்கணும், அப்டி செய்யாங்காட்டி எதுனா வரி அதிகமா போட சொல்லணும்ன்னு சொல்லிக்கீறாரு. ஐயாவோட புள்ள மட்டும் நிதியமைச்சரா இர்ந்தா இன்னேரத்துக்கு நாட்டுல நெறியா பேரு வரி கட்ற நெலமைக்கு வந்திருப்பாங்கோ.
சொல்றதெல்லாம் சோக்கா தான் கீது மரவெட்டி ஐயா. மரம் நடுறது நல்ல ரோசன தான். ஆனா அத்தெல்லாம் நீங்க வெட்டி வெட்டி ரோட்டுல சாய்ச்சப்போ ரோசன பண்ணவே இல்லியா. இத்த தான் "வூருக்கு ஒரு நாயம் வூட்டுக்கு ஒரு நாயம்"ன்னு சொல்லுவாங்களா?
1 comment:
பழைய மரத்துக்கெல்லாம் வயசாகிப் போச்சு! அதனால், அவற்றை நீக்கிவிட்டு, புத்தம் புதிய. மணிமணியான இளைய மரங்களை அன்புடன் நடச் சொல்கிறார்.
Post a Comment