வணுக்கம் அண்ணாத்தே, அங்கே சொல்லோணும்ன்னு நென்ச்ச மேட்டர இங்கேயே சொல்லிப்புடுறேன். கேப்டனைய்யா ஆக்ட்டு வுடுறுவங்கோ சங்கத்து கடன அடச்சது, சிவாசி ஐயா செத்து போனப்போ அல்லா நடிகருங்களும் லாரி மேலே போயி குந்திகின்னப்போவும் ஒத்த ஆளா கீளே நின்னுக்கிட்டு கூட்டத்தை எல்லாம் சரி பண்ணது அல்லாமே அவரோட தெறமைய காட்டுது, இல்லேன்னு நானுஞ்சொல்லல.
ஆனா கண்ணாலம் கட்டி குட்க்கிறது, சோறு போடுறதெல்லாம் அந்தக் கணுக்குல சேத்துக்க முடியாதுபா. கேப்டனு எம்சியாண்ட செஞ்ச அத்தே வேலிங்கள தான் இப்போ செஞ்சிக்கின்னு கீறாரு. எம்சியாரு ஆக்ட்டு வுட சொல்லோவே அரசியல்லேயும் ஒத்த கால வெச்சிக்கின்னு இர்ந்தாரு, ஆனா நம்மாளு அத்த மேரி செய்யாம நேரடியா சிஎம் சீட்டுக்கு வரணும்ன்னு கெனா காண்றாரு. அத்த தான் வாணான்னு சொல்றேன்.
அரசியலுக்கு வரணுமா நேரடியா வா, வந்து மக்களுக்கு எதுனா பண்ணு, அப்பாலிக்கா சிஎம் ஆவுற கெனாவெல்லாம் வர வெச்சிக்கோ. சினிமால கீற வெளிச்சத்த காட்டி சீனு போட்டு அத்த வெச்சி சிஎம் ஆவலாம்ன்னு கெனா வாணாம், இத்தான் நாஞ்சொல்றது.
குப்ஸாமி சொல்றது இப்போ வேணா ராங்கா உனுக்கு தோணும் அண்ணாத்தே, இன்னும் ரெண்டு வருசம் களிச்சுப் பாரு, அப்பாலிக்கா குப்ஸாமி சொல்றது கரீட்டுன்னு தெர்யும்.
1 comment:
நண்பர்களே! இங்கே நடந்த விவாதம் தொடர்பான என் எண்ணங்களை என் வலைப்பதிவில் இட்டிருக்கிறேன். அதற்கான சுட்டி http://raja.yarl.net/archives/001433.html . உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
Post a Comment