Tuesday, July 20, 2004

ஆலோஸ்கேனுக்கு ஆப்பு

புளாக்கரு வெச்சிக்கீற மன்ஸங்கோ அதுல எதிர்கொரலு வுடுற மேட்டர எப்டி செய்றதுன்னு நம்ம கிறுக்கு சங்கரு சொல்லிக்கீறாரு. அப்டியே பேக்புளாக்குக்கு எப்டி ஆப்பு வெக்கிறதுன்னும் சொல்லிக்கீறாரு. புச்சா புளாக்கரு எதிர்கொரலு போடுறவங்கோ பளைய ஆலோஸ்கேனு எதிர்கொரலு இர்ந்தா இன்னா பண்றது, அத்த வெச்சிக்கணுமேன்னு ஃபீலாவாங்கோ. கிறுக்கும் அத்தப் பத்தி ஃபீலாகி "யார்னா அதுக்கு ஒரு வளி சொன்னிங்கன்னா அப்டியே நம்ம கைல கொஞ்சம் சொல்லுங்கபா"ன்னு சொல்லிக்கீறாரு.

கிறுக்கு, வளி கீதுபா கீது.

இந்தா புட்ச்சிக்கோ

ஆலோஸ்கேனு போட்டா

<a href="javascript:HaloScan('<$BlogItemNumber$>');"
target="_self"><script type="text/javascript">postCount('<$BlogItemNumber$>');
</script></a>
ன்னு ஒரு மேட்டர நம்ம புளாக்குல போட்டு வெப்போம்ல, அதுக்கு பதிலா

<script>if (hs["<$BlogItemNumber$>"]) {document.write('<a
href="javascript:HaloScan(\'<$BlogItemNumber$>\');" target="_self">Comments (' +
hs["<$BlogItemNumber$>"] + ')</a> | ');}</script>
ன்னு போட்டுக்கின்னா ஆலோஸ்கேன்ல எதிர்கொரலு இர்ந்தா அது கண்ணுக்கு தெர்யும், இல்லாங்காட்டி வராது. புச்சா போடுற மேட்டருக்கெல்லாம் புளாக்கரு எதிர்கொரலு வசதியே ஊஸ் பண்ணிக்கலாம்.

இன்னா கிறுக்கு, இத்து சோக்கா கீதா?

2 comments:

Boston Bala said...

Very useful. Will give it a spin and let U know. Many Thanks Kosapet Kupsaam.

Anonymous said...

அடே அப்பா! சூப்பர் ராஜா!

நான் ஹாலோஸ்கேன்க்கு வேற ஒரு மாதிரி எழுதிப்பாத்துருந்தேன். கொஞ்சம் பெருசு! ரெண்டு ஃபங்க்ஷன் கால் பண்ற மாதிரி.

இது நல்லா அதைவிட சின்னதா இருக்கு. தூள்.

க்ருபா