Monday, April 10, 2006

எலவசமாம் எலவசம்

எலவசம் குடுக்குற மேட்டருல கருப்புத்துண்டு வைகோவுக்கும் தாத்தாவுக்கும் எதுனா உள்குத்து கீதோன்னு தோணுதுபா. நீயி அம்மா சைடு போயி கொரலு வுடு, நானும் எதிர்கொரலு வுடுறேன்னு தாத்தாவே அனுப்பிருப்பாரோன்னு தோணுது. "நா அடிக்கிற மேரி அடிக்கிறேன், நீயி அயுவுற மேரி அயுவு" கத தான். ரெண்டு ரூவாய்க்கு எப்டி அண்ணாத்தே அரிசி குடுப்பேன்னு இவரு கேக்க, "இப்டி குடுப்பேன் தம்பி"ன்னு இவரு எதிர்கொரலு குடுக்குறாரு. "டிவி பொட்டி எப்டி அண்ணாத்தே குட்ப்ப"ன்னு இவரு கேக்க, "இப்டி இப்டி குட்ப்பே"ன்னு அவரு மறுக்கா எதிர்கொருலு வுடுறாரு. கட்டே கடேசியா கருப்புத்துண்டு அட்ச்சாரு பாரு அடி, அது அம்மாவுக்கு செம்ம அடி. "டிவி குட்த்தா போதுமா, கேபிளு எலவசமா குட்ப்பியா"ன்னு கொரலு வுட்டாரு. "ஆனையே குடுக்குறேன், அங்குசமா குடுக்க மாட்டேன், வோணும்ன்னா அதுவும் குட்ப்பேன்"ன்னு தாத்தா எதிர்கொரலு வுடுறாரு.

இப்டியே அம்மா கட்சில சைடு வுட்டுக்கின்னு தாத்தாவுக்கு கொளுகப்பரப்பு செய்றாரு கருப்புத்துண்டு. சூப்பரு ஐடியா தான் போலக்கீது. தாத்தா சீட்டுல வந்து குந்திகினா, "அண்ணாத்தே, நா அப்டி கேள்வி மேல கேள்வியா கேக்கசொல்லோ தான நீயி கெலிச்ச"ன்னு மேடையிலே ஒரு அளுவாச்சிய போட்டுடுவாரு கருப்புத்துண்டு. "நீரடிச்சி நீரு வெலகுமா தம்பி"ன்னு தாத்தாவும் ஒரு அளுவாச்சிய போட்டு ஒண்ணு சேத்துக்குவாரு. அதுலயும் தாத்தா பெர்ய கில்லாடி, ரைட்டு ஃஹேண்ட கருப்புத்துண்டு மேல போட்டுக்கின்னு லெஃப்ட்டு ஃஹேண்டால பேராண்டி கைல "இத்த சன் டிவில காட்ட வாணாம்"ன்னு சொல்லிடுவாரு.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

11 comments:

தயா said...

நெசமாலுமா?

இன்னாபா தீடீர்னு இப்படி ஷாக் குடுக்குற!

மெய்யாலுமே இப்டி கூட இருக்குமா? ரிவெஞ் எடுக்குறாரா கோபாலு?

அண்ணா தம்பி எபிஸோடு இப்ப தான் முடிஞ்சுகீது. அக்கா தம்பி கதை எத்தனை எபிஸோடோ?

கிளைமாக்ஸல நீ சொன்னா மாதிரி கூட நடக்கலாம்

Unknown said...

கொரலு உடவாப்பா...
செம காமெடி நைனா இந்த தபா....


நானும் நம்ம சங்கத்து பசங்களும் முடிவு பண்ணிட்டோம்ப்பா.. எங்களுக்கு ஆரு பிளாஸ்டிக் டிவியும் அதான்ப்பா... புச்சா கடையிலே பெர்ச் பெர்சா வச்சுருக்கானுங்களே அந்த டிவியும் ... அப்பால .... டி.வி.டி.. பிளெயரும்... எலெக்ஷ்ன்க்கு முன்னாடியே எடுத்த வரிக்கும் இருக்க தலீவர் படத்து டிவிடி யும் சொம்மாத் தராங்களோ அவங்களுக்கு தான் ஓட்டை அமுக்கப் போறோம்....

Unknown said...

தேவ், சூப்பர். அப்படி யாராவது கொடுப்பதாக இருந்தால் விமானம் பிடித்து வந்து ஓட்டுப் போட நான் தயார் :-)

Unknown said...

//கிளைமாக்ஸல நீ சொன்னா மாதிரி கூட நடக்கலாம்//

இந்தப் படத்திற்கு ரெண்டு க்ளைமாக்ஸ் இருக்கு. அம்மா ஜெயித்தால் நம்ம மரவெட்டி ஐயா சகோதரிப்பாசத்தில் அங்கே போய்விடுவார் (பாண்டிச்சேரி இட ஒதுக்கீடு கோபம்). தாத்தா ஜெயித்தால் கருப்புத்துண்டு கண்கலங்கி இங்கே வந்துவிடுவார்.

கவுண்டமணி இவர்களுக்காக தானே சொன்னார் "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"

இப்னு ஹம்துன் said...

ஷோக்கா எளுதிக்கீறிங்க அண்த்தே. இத்த 'அம்மா' கைல கொட்த்து படிக்கச் சொல்லணும் போல கீது.

Unknown said...

//இத்த 'அம்மா' கைல கொட்த்து படிக்கச் சொல்லணும் போல கீது. //

குப்ஸாமி பத்திரமா ரிக்ஸா ஓட்டுறது உங்களுக்கு பிடிக்கலையா? வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடுவாங்க அம்மா...

ஜோ/Joe said...

மெய்யாலுமா? படா சோக்காகீதுப்பா!

துளசி கோபால் said...

என்னா தம்பி குப்ஸ்,

வந்தாலும் வந்தே, இப்படிப் பட்டையைக் கிளப்பிட்டீயே நைனா. படா தமாசாக் கீது போ.

யாத்ரீகன் said...

குப்ஸூ சூஊஊஊஊஊஊப்பர்மா :-)))

ஜெ. ராம்கி said...

//இந்தப் படத்திற்கு ரெண்டு க்ளைமாக்ஸ் இருக்கு. அம்மா ஜெயித்தால் நம்ம மரவெட்டி ஐயா சகோதரிப்பாசத்தில் அங்கே போய்விடுவார் (பாண்டிச்சேரி இட ஒதுக்கீடு கோபம்). தாத்தா ஜெயித்தால் கருப்புத்துண்டு கண்கலங்கி இங்கே வந்துவிடுவார்.//


ஸாருக்கு ஒரு ஆட்டோ பார்ஸல்!

பாரதிய நவீன இளவரசன் said...

ஒரு சீரியசான விஷயத்தை நீங்கள் படு தாமாஷாக சொல்லியிருந்தாலும், நாட்டு நடப்பு என்னவோ அப்படித்தான் இருக்கிறது.

வால்டர் வெற்றிவேல் பட கவுண்ட மணி ஸ்டைலில் `அரசியல்ல, இதெல்லாம் சகஜமப்பா!' என்பதுதான் யதார்த்தமான உண்மை என்றாலும், அரசியற் கட்சிகளின் தலைமையளவில் நடைபெறும் திரைமறைவு பேரங்கள் எல்லாம், கடைநிலை கட்சிக்காரனுக்குத் தெரியுமா?!