Sunday, April 23, 2006

எலவசமாம் எலவசம் - பார்ட் 2

தாத்தா ஒரு சைடுல ரெண்டு ரூவாய்க்கு அரிசி, ரெண்டு ஏக்கரு நெலம், கலரு பயாஸ்கோப்பு பொட்டி, அத்துல பயாஸ்கோப்பு பாக்க கேபிளு டிவி அல்லாம் குட்க்கிறேன்னு சொல்றாரு. அம்மா ஒரு சைடுல, ரெண்டு ரூவா இர்ந்தா அரிசி போடுவேன்னுல்லாம் கறாரா இர்க்க மாட்டோம்பா நாங்கோ, உனுக்கு துண்றதுக்கு சோறு வோணுமா நேரா ரேசனு கடையாண்ட வா, பத்து கிலோ அரிசிய அப்டியே அமுக்கிக்கின்னு போன்னு சொல்றாங்கோ. இவுங்கல்லாம் வுடுற கொரலு போதாதுன்னு நம்ம கஜேந்திரரு ஒரு சைடுல "இன்னாத்துக்கு நீயி கடையாண்ட வரணும்? ஒன்னோட ஊட்டுக்கு வந்து குடுக்கச் சொல்றேன் பாஞ்சி கிலோ அரிசி"ன்னு சொல்றாரு. அத்தோட வுட்டாரா!!! பலசரக்கு சாமான் வாங்க ஐநூறு ரூவா தர்றேன், ரெண்டு புள்ள பெத்துக்குற அல்லாருக்கும் அந்த ரெண்டு புள்ளிங்களும் மூணு வயிசு ஆவுற வர என்னோட கொய்ந்திங்கோ மேரி பாத்துக்க மாசம் ஐநூறு ரூவா தர்றேன்னு சொல்றாரு. அல்லாமும் குட்த்துட்டு கூடவே ஒரு சீமப்பசுவும் குடுக்குறாராம். இந்த எலிக்ஸனே ஒரு எலவச எலிக்ஸனா இர்க்கும் போலக்கீது.

இத்தல்லாம் பாக்கசொல்லோ குப்ஸாமிக்கு ரிக்ஸா மிதிச்சு சம்பாரிக்க வாணாம்ன்னு தோணுது. இன்னோரு மேட்டரும் குண்ஸா வந்து மன்ஸுக்குள்ளே குந்திக்கிச்சு. அத்து இன்னான்றிங்களா? எலவசமா இத்தெல்லாம் தர்ற தாத்தா, அம்மா, கஜேந்திரரு அல்லாரையும் சிஎம்மு ஆக்கிபுட்டா இன்னா? கஜேந்திரரு வூட்டாண்ட வந்து குடுக்குற பாஞ்சி கிலோ அரிசி போதலன்னா ரேசனு கடையாண்ட போயி அம்மா பேரச் சொல்லி பத்து கிலோ அரிசி வாங்கிக்கலாம். எலவசமா கெடைக்கிற இருவத்தஞ்சி கிலோ அரிசி பத்தாங்காட்டி மட்டும் தாத்தா குடுக்குற அரிசிய ரெண்டு ரூவாய்க்கு வாங்கி துண்ணலாம். பயாஸ்கோப்பு பொட்டி தாத்தா குடுப்பாரு, அத்த வெச்சி பயாஸ்கோப்பு பாத்துக்கலாம். கஜேந்திரரு பசுமாடு குடுப்பாரு, பாலக் கறந்து நல்லா குடிக்கலாம். தாத்தா குடுக்குற ரெண்டு ஏக்கரு நெலத்த வச்சி சொம்மா வேடிக்கப் பாக்கலாம் (அல்லாமே எலவசமா குடுக்குறப்போ இன்னாத்துக்கு வேல செய்யணும்).

இன்னாபா சொல்றிங்கோ, அல்லாரையுமே சிஎம்மு ஆக்கிப்புடலாமா?

8 comments:

Pot"tea" kadai said...

அப்பால துன்னுபுட்டு காலாற நடக்க சொல்ல "டாஸ்மாக்"ல ஒரு கட்டிங் & ஆப்பாயில் ப்ரீயா குத்தாக்கா அப்டியே வந்து கவுந்துட்லாம்...
என்னா சொல்ற நைனா!!!

KVR said...

//அப்பால துன்னுபுட்டு காலாற நடக்க சொல்ல "டாஸ்மாக்"ல ஒரு கட்டிங் & ஆப்பாயில் ப்ரீயா குத்தாக்கா அப்டியே வந்து கவுந்துட்லாம்...
என்னா சொல்ற நைனா!!!//

இன்னா அண்ணாத்தே, இப்டி டமால்ன்னு ஃபீலிங்க வுட்டுட்ட?? கொஸப்பேட்ட குப்ஸாமி எலிக்ஸன்ல நிக்கசொல்லோ பிரீயா குடுக்க எதுனா வாணாமா? குப்ஸாமி சிஎம்மு சீட்டுக்கு நிக்கசொல்லோ அல்லாருக்கும் ராவானா வூத்திக்க டாஸ்மாக்கும் சைடுல ஆப்பாயிலும் வுண்டுபா....

(இத்தங்காட்டி எட்த்துவுட்டா அல்லாரும் குப்ஸாமிக்கு தான் ஓட்டு போடுவாங்கோ)

துளசி கோபால் said...

தம்பி குப்ஸ்,
என்னாபா நான் நெனச்சதையே சொல்லிக்கீறே. வூட்டாண்டை இதாம்ப்பா பேச்சு. பேசாம ஊருக்குவந்து
சேர்ந்துட்டோம்னு வை. பத்துகிலோவே நமக்குத் தாராளம். இல்லே பாஞ்சு கிலோன்னா அதுலெ அஞ்சை
இட்டிலி அரிசியாக் குடுத்தாங்கன்னா போதும்.

எத்தையோ ஆக்கித்தின்னமா, டிவி பார்த்தமான்னு இருந்துறலாம். ஆமா, மாட்டுக்குப் புண்ணாக்கு புல்லு
இதுக்கெல்லாம் காசு தனியாத் தராங்களாமா? இல்லெ நம்ம ரெண்டு ஏக்கருலே புல் மேஞ்சாப் போதுமா?
அங்கேயெ ஒரு ஓரமாக் குட்சை போட்டுக்கிணு இருந்துறப்போறேன்.

அப்பாலே நீ மந்திரியாவச் சொல்லெ, அந்த முட்டையை அப்டியே வூட்டுக்கு அனுப்பு,இன்னா?
ஆப்பாயில் என்னாத்துக்கு? ஆம்லெட்டாப் போட்டுக்கறேன்.

KVR said...

//ஆப்பாயில் என்னாத்துக்கு? ஆம்லெட்டாப் போட்டுக்கறேன்//

யக்கோவ், கரீட்டாச் சொன்னபோ... எனுக்கும் இந்த ஆப்பாயிலு புடிக்காது, ஆம்லெட்டு தான் செட்டாவும்.

Pot"tea" kadai said...

மங்களூராண்ட குந்தீகினு ஒரு அண்ணாத்தே சொம்மா கொரலு வுட்டுக்கீனுக்கீறாருன்னு நென்ச்சிகீனு இர்ந்துட்டேன். இப்போ தான் இந்த மண்ணாங்கட்டி மண்டயில ஏரிக்குதுபா...நம்ம குப்ஸ் தான் தமியினி கனால வன்ட்டுக்றார்னு...நல்லாக்கீதுமா ஒங்க அலியன்ஸு...

இப்படிக்கூட ஆயிடுமாண்ணே

ஆனா கட்டிங் மேட்ருல கவுத்துடாதபா.

Anonymous said...

hi,
i happened to see two proxy blogs similar to yours.

http://kvrasa.blogspot.com/
http://kosappottai.blogspot.com

please contact google and try to remove those blogs. i definetely recommend not to read of those stuffs. too bad wordings.

regards,

KVR said...

//hi,
i happened to see two proxy blogs similar to yours.//

நண்பரே,

உங்களுக்கு எனது நன்றி.

இன்று எனது பதிவில் இந்த போலி KVR பற்றி பதிந்துள்ளேன்.

கூகிளுக்கு அனுப்பினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

Hindu Marriages In India said...

படு சூப்பர்