பயாஸ்கோப்பு எட்த்துபுட்டு அதுக்கு போஸ்டரு அடிக்காம, டிவி பொட்டில காட்டாம, நூஸ் பார்ட்டிங்களுக்கு துட்டு குட்க்காம வெளம்பரம் பண்ணனுமா, மேட்டரு ரொம்ப ஈஸிபா. பட்த்துல படா பேஜாரான மேட்டர்லாம் கீதுன்னு காவிப்பார்ட்டிங்கோ கைல சொல்லிட்டா போதும். படம் தெரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே கொரலு வுட ஆரம்பிச்சுடுவாங்கோ. ஒடனே நூஸ் பார்ட்டிங்களும் "இன்னாபா படம் இது, கண்ட கருமத்தை எல்லாம் புட்ச்சி போட்டு வெச்சிக்கீறாங்கோ"ன்னு எய்த ஆரம்பிச்சிடுவாங்கோ.
மெய்யாலுமே பட்த்துல தம்மாதுண்டு கலீஜி மேட்டரு கூட இர்க்காது, ஆனா இவனுங்கோ வுடுற கொரலுல படத்துக்கு பிரியாவே வெளம்பரம் கெட்ச்சிடும். குப்ஸாமி மேரி நல்லப்புள்ளிங்க அல்லாம் கூட இஸ்கிரீன்ல இன்னா தான் காட்றாங்கோன்னு தியேட்டராண்ட போயி கியூவுல நிண்ணு பயாஸ்கோப்பு பாத்துட்டு வர்வாங்கோ. படத்த எட்த்தவனுக்கு துட்டு செலவு இல்லாம வெளம்பரமும் ஆச்சு, படமும் செம்ம ரன்னிங்கு.
இப்போ புச்சா கேர்ள்பெரண்டுன்னு ஒரு படம் வந்துக்கீது. காவிப்பார்ட்டிங்கோ குதிக்க ஆரம்பிச்சாச்சு. படம் கண்டிப்பா பிச்சிக்கின்னு ஓடும். எட்த்த புண்ணியவானுக்கு நல்ல துட்டு வசூல். தமிளுல இஸ்து போத்திக்கின்னு ஆக்ட்டு வுட்ட இஸாவுக்கு இப்போ செம்ம டைமு போல, வர்மா அண்ணாத்தே ராசி, பார்ட்டிக்கு செம்ம ஓட்டம். இன்னும் நாலு படம் இப்டி ஆக்ட்டு வுட்டு அக்கா அப்டிக்கா எங்கனா போயி செட்டில் ஆயிடும். யக்கோவ் நீயி கலக்கு.......
3 comments:
அத்த ஏன் கேக்கறே குப்ஸாமீ... இதே மேரிதான் ம் மன்சா கொயரளா நட்ச படம் ஒண்ணுத்த புட்சிகினு ஊடு கட்னாங்க. ஏக்சோட்டிசி லவ் ஸ்டோரியோ இன்னமோ. சர்த்தான்.. இன்னாதா கீதுன்னு போய்ப் பாத்தா... அத்தேரிகி..வாங்கன பாப்கார்னை துன்னுட்டு அல்லாரும் பாதிலேயே எஸ்கேப்..இல்லாததை அல்லாரும் ஊதி ஊதி பெர்சாகிக்கி படத்த சூப்பர் இட்டு ஆக்கப் போறானுங்க
தலீவா, என்னோட ஒரு பாட்டில்ல கட்டிங் வுட்டு ஒரு பீடிய மாத்தி மாத்தி வளிச்சாப்ல கரீட்டா புட்ச்சியே மேட்டர. அத்தே தான் என்னோட பாயிண்டும், அக்காங்....
thalvia
inga Bangalorela navarang thetrela G.F padaththa paakuRaththukku
trousure pOtta pasanagalaam ..oh sorry sorry (periya aalunga vEttikkuLLA trousure pOttirukkalaam )
trousure mattum pOtta sinna pasangalaam
kiLambittaanunga ..
posterla 'A" certificate vERa pOdalaiyaam
athanaala antha padaththai anga pODa vidala
maravantu
Post a Comment