Tuesday, December 12, 2006

கவுருமெண்ட்டு சொத்து நம்ம சொத்து

தாத்தா கலீஞரு அல்லாருக்கும் அள்ளி அள்ளி குட்த்துகினே கீறாருபா. பயாஸ்கோப்பு பொட்டி குட்த்தாரு, ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்குறேன் குடுக்குறேன்னு டகால்ட்டி காட்டுறாரு, டாஸ்மாக்கு ஆளுங்களுக்கு எக்ஸ்ட்ரா துட்டு குட்த்தாரு, பயாஸ்கோப்பு பார்ட்டிங்களுக்கு தமிளுல பேரு வெச்சா டாக்ஸு வாணாம்ன்னு சொல்லிட்டாரு. இப்டி அல்லாருக்கும் குட்த்துகினே கீறப்போ கரவேட்டி பார்ட்டிங்களுக்கு மட்டும் ஒண்ணுமே குடுக்கலையேன்னு மன்ஸுக்குள்ளே ஃபீலாகி இர்ப்பாரு போலக்கீது. இப்போ அவுங்களுக்கும் குட்த்துக்கீறாரு.

இன்னா குட்த்துக்கீறாரு தெர்யிமா? கட்சிக் கூட்டம்ன்னு பேரு பண்ணிகினு மைக் செட்டு மாணிக்கமெல்லாம் இன்னா அளும்பு பண்ணாலும், எந்த கவுருமெண்ட்டு சொத்த வீணாக்குனாலும் அந்தக் கட்சி ஃபைனுல்லாம் கட்ட வாணாம். இதுக்கு அவுரு சொல்லிக்கீற ரீஜனு படா சோக்குபா. கட்சி மைக்கு செட்டு கட்டி கூட்டம் கூட்ட சொல்லோ ஆராவது வந்து பேஜார் பண்ணா அதுக்கு எப்டி அந்தக் கட்சி பொறுப்பாவும். அத்தால அந்தக் கட்சி கையிலே பைசா கேக்கக்கூடாதுன்னு சொல்லிக்கீறாரு. பெர்ய மன்ஸன் பெர்ய மன்ஸன் தான்பா. இன்னாமா சொல்லிக்கீறாரு.

இப்போ ஒரு கண்ணால மண்டபத்துல கண்ணாலம் வெக்கிறோம், எதோ கொய்ந்திங்கோ ரெண்டு மூணு சாமான ஒட்ச்சிடுது, இல்லாங்காட்டி ஆரோ ரெண்டு மூணு எவர்சிலுவரு பாத்திரத்த ஆட்டயப் போட்டுடுறாங்கோ. கண்ணால மண்டப ஓனரு வந்து நம்ம கைல "கண்ணு, இத்த நீயி செய்ல, ஆரோ கண்ணால மண்டபத்துக்கு வந்தவங்கோ செஞ்சுக்கீறாங்கோ. அத்தால இதுக்கெல்லாம் நீயி பைசா குடுக்க வாணா கண்ணு"ன்னு சொல்ற மேரி கீதுபா. கரவேட்டி கண்ணுங்களா, இனிமே நீங்க எத்த ஒட்ச்சாலும் துட்டு குடுக்க வாணாம்பா, என்சாய் பண்ணுங்கோ. வர்ட்டா......

2 comments:

நன்மனம் said...

செய்தியை படித்தவுடன் தோன்றியது.....

மக்களுக்கு நிகழ்த்திய "பச்சை துரோகம்"

Hariharan # 26491540 said...

திருக்குவளையில் நலிந்த பிரிவில் பிறந்து ஐந்துமுறை முதல்வராகி கால்நூற்றாண்டு ஆட்சியில் சூத்திரனாகிய கருணாநிதி என்பதால்தானே பார்ப்பன சதியினால் இப்படியெல்லாம் தமிழர் நலனுக்கான திட்டங்களைத் திட்டிப் பதிவுபோடுகிறாய்.

பிராமணனின் குடுமியை அறுத்தெறிந்த பகுத்தறிவுவாதிகள் நாங்கள்! அதேநேரத்தில் எந்த ஒரு தனிபிராமணரையும் வெறுக்காத மனிதாபிமானிகள்!

குப்புசாமியே வர்ணாசிரமத்தை சிரமப்பட்டு இன்னும் காவடி எடுக்கிறாயே! உன் ஆணவக் குடுமியை அறுத்தெறிவோம்!

எந்தத் தனிமனிதக் குப்புஸாமியையும் மனிதநேயத்துடனே பார்ப்போம்!

தமிழ்மணத்தில் தமிழின் தமிழான எனக்கும் எனது தாய்க்கழகக் கொளுகைகளுக்கும் போதாத காலம் இது. மஞ்சள் துண்டு ரகசியம் சொன்னவரிடம் இன்னொருமுறை ரகசியமாக கேட்டு வந்து அப்புறம் போடுவேன் பெரீரீய்ய்ய அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஊசியை உனக்கு அப்பத் தெரியும் நான் எப்படிப்பட்ட அரசியல் சாணக்கியன் என்று! பகுத்தறிவா கொக்கா!?