Wednesday, August 22, 2007

சென்னை 368

எப்டி கீறிங்கோ மக்களே? சோக்கா கீறிங்களா? "சென்னை 368" டைட்டிலு பாத்து இன்னா நென்ச்சிங்கோ? வெங்கட் பிரபு "சென்னை 600028" எட்த்து சொம்மா பிச்சிக்கின்னு ஓடினதும் நம்ம குப்ஸாமியும் அதே மேரி பயாஸ்கோப்பு எடுக்கப் போறான்னு நென்ச்சிங்களா? அத்தான் கெடியாது. இன்னியோட நம்ம சென்னப்பட்டணத்து வய்ஸு 368 ஆகுதுபா. ஆகஸ்ட் 22 1639ல பொற்ந்த சென்னப்பட்டணம் 368 வர்ஸமா அத்தோட ரவுஸு கொறையாம கீதுபா. குப்ஸாமிக்கு கவுஜ எய்தவும் தெர்யாது கானா பாடவும் தெர்யாது. ஆனாலும் கையி சொம்மா இர்க்க மாட்டேங்குதுபா. அத்தால நம்ம சென்ன பட்டணத்துக்கு ஒரு பொற்ந்தநாளு வாய்த்து எய்த்திக்கீறேன்.

சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு

கண்குளிர சைட்டடிக்க குயின்மேரிஸு
கண்டதுமே தெரிச்சு ஓட மீனாட்சிகாலேஜு
மனுசனோட புத்திய தீட்ட கன்னிமாரா
சும்மா இருக்குறவன சுத்தல்ல வுடுற சுண்டக்கஞ்சி

சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு

காத்து வாங்க இருக்கதைய்யா மெரினா பீச்சி
மணி ஏழடிச்சா காட்டிடுமே ஏ படக்காச்சி
முண்ணூறு வருஸமான செண்ட்ஜார்ஜு கோட்ட
இன்னிக்கும் இஸ்ட்ராங்கா நிக்கிதய்யா அடிதடியோட

சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு

சாம்பார் இட்டிலி துண்ணனுமா சரவணபவன் இருக்கு
சால்னாவும் பரோட்டாவும் ரவுண்டு கட்ட முனியாண்டி விலாஸு
சைனீஸு நூடுல்ஸுக்கு இருக்குபாரு அஞ்சாறு நூடுல்ஸு ஹவுஸு
அஞ்சப்பரும் பொன்னுசாமியும் அங்கங்கே இருந்தும்
ஐய்யா கையேந்திபவன் நாஷ்தா டேஷ்ட்டு கொறையல இன்னும்

சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு

மூண்ணூத்தி அறுவத்தெட்டு வர்ஸமென்னா
உனுக்கு எண்ணூறு வர்ஸமானாலும் ஜொலிப்பு காட்டுவா
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
- கொஸப்பேட்ட குப்ஸாமி

16 comments:

சந்தனமுல்லை said...

சும்மா டக்கரா கீதுப்பா..;-)

தமிழ்பிரியை said...

சென்னை பாஷையில் சூப்பரா கவிதை எழுதி கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

சென்னை குரல் said...

ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு

நட்புடன் ஜமால் said...

டாப்புங்கோ ...

KVR said...

//டாப்புங்கோ ...//

வாங்க ஜமால். நானே மறந்து போன என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டுருக்கிங்க :-).

கவிதா | Kavitha said...

டக்கருங்கோ..!!

KVR said...

//டக்கருங்கோ//

ஜமால் டாப்புங்கோன்னாரு, நீங்க டக்கருங்கோன்னு சொல்றிங்க. அடுத்து யார்னா வந்து டரியலுங்கோன்னு சொல்லப் போறாங்க.

சந்தனமுல்லை said...

டரியலுங்கோ!! :-)

KVR said...

//டரியலுங்கோ!! :-)//

அப்போ முன்னே "சும்மா டக்கரா கீதுப்பா..;-)" சொன்ன சந்தனமுல்லை யாரு????

வடிவேலுமுல்லை: அது அப்போ இது இப்போ...

சந்தனமுல்லை said...

//வடிவேலுமுல்லை: அது அப்போ இது இப்போ...//

ஆகா..இப்படி எத்தனைபேருங்கோ கிளம்பியிருக்கீங்க?!!

ஏதோ //அடுத்து யார்னா வந்து டரியலுங்கோன்னு சொல்லப் போறாங்க.// நீங்க ஆசைப்பட்டீங்களேன்னு போட்டா..

KVR said...

//ஏதோ "அடுத்து யார்னா வந்து டரியலுங்கோன்னு சொல்லப் போறாங்க." நீங்க ஆசைப்பட்டீங்களேன்னு போட்டா..//

அடடா, இது தெரியாம உங்கள கலாய்ச்சிட்டேனா. ஒகே ஒகே வாபஸ். இனிமே யாரும் வடிவேலுமுல்லைன்னு சொல்லக்கூடாது. சொன்னா நான் கேடயமால்லாம் நிக்க முடியாது. சந்தனமுல்லையே பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க....

சந்தனமுல்லை said...

//இனிமே யாரும் வடிவேலுமுல்லைன்னு சொல்லக்கூடாது. //
ஆகா..இப்போ வரைக்கும் யாரும் சொல்லலை..நீங்கதான் சொல்லிக்கிட்டிருக்கீங்க..
//சொன்னா நான் கேடயமால்லாம் நிக்க முடியாது. சந்தனமுல்லையே பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க....//

அண்ணாத்தே! இப்படில்லாம் தப்பிக்கவே முடியாது...ஓக்கே..:-)

KVR said...

//அண்ணாத்தே! இப்படில்லாம் தப்பிக்கவே முடியாது...ஓக்கே..:-)//

:-)))))))))))))))))))))))))))))))))))))))

கவிதா | Kavitha said...

//அண்ணாத்தே! இப்படில்லாம் தப்பிக்கவே முடியாது...ஓக்கே..:-)//

ராஜா...இது தேவையா..?

வீடு வீடா கேட்டு கேட்டு வாங்கறீங்களே.. உங்க பாசத்தை நான் மெச்சினேன்.. !! :)

இரத்தினபுகழேந்தி said...

சென்னை தமிழுக்கு என்றும் மவுசுதான்
வாழ்த்துகள்