எப்டி கீறிங்கோ மக்களே? சோக்கா கீறிங்களா? "சென்னை 368" டைட்டிலு பாத்து இன்னா நென்ச்சிங்கோ? வெங்கட் பிரபு "சென்னை 600028" எட்த்து சொம்மா பிச்சிக்கின்னு ஓடினதும் நம்ம குப்ஸாமியும் அதே மேரி பயாஸ்கோப்பு எடுக்கப் போறான்னு நென்ச்சிங்களா? அத்தான் கெடியாது. இன்னியோட நம்ம சென்னப்பட்டணத்து வய்ஸு 368 ஆகுதுபா. ஆகஸ்ட் 22 1639ல பொற்ந்த சென்னப்பட்டணம் 368 வர்ஸமா அத்தோட ரவுஸு கொறையாம கீதுபா. குப்ஸாமிக்கு கவுஜ எய்தவும் தெர்யாது கானா பாடவும் தெர்யாது. ஆனாலும் கையி சொம்மா இர்க்க மாட்டேங்குதுபா. அத்தால நம்ம சென்ன பட்டணத்துக்கு ஒரு பொற்ந்தநாளு வாய்த்து எய்த்திக்கீறேன்.
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
கண்குளிர சைட்டடிக்க குயின்மேரிஸு
கண்டதுமே தெரிச்சு ஓட மீனாட்சிகாலேஜு
மனுசனோட புத்திய தீட்ட கன்னிமாரா
சும்மா இருக்குறவன சுத்தல்ல வுடுற சுண்டக்கஞ்சி
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
காத்து வாங்க இருக்கதைய்யா மெரினா பீச்சி
மணி ஏழடிச்சா காட்டிடுமே ஏ படக்காச்சி
முண்ணூறு வருஸமான செண்ட்ஜார்ஜு கோட்ட
இன்னிக்கும் இஸ்ட்ராங்கா நிக்கிதய்யா அடிதடியோட
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
சாம்பார் இட்டிலி துண்ணனுமா சரவணபவன் இருக்கு
சால்னாவும் பரோட்டாவும் ரவுண்டு கட்ட முனியாண்டி விலாஸு
சைனீஸு நூடுல்ஸுக்கு இருக்குபாரு அஞ்சாறு நூடுல்ஸு ஹவுஸு
அஞ்சப்பரும் பொன்னுசாமியும் அங்கங்கே இருந்தும்
ஐய்யா கையேந்திபவன் நாஷ்தா டேஷ்ட்டு கொறையல இன்னும்
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
மூண்ணூத்தி அறுவத்தெட்டு வர்ஸமென்னா
உனுக்கு எண்ணூறு வர்ஸமானாலும் ஜொலிப்பு காட்டுவா
சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு
ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு
- கொஸப்பேட்ட குப்ஸாமி
skip to main |
skip to sidebar
கொஸப்பேட்டை குப்புசாமியின் குசும்புகள்
வுட்ட கொரலுங்கோ
-
▼
2007
(2)
- ▼ August 2007 (1)
-
►
2004
(78)
- ► October 2004 (4)
- ► September 2004 (7)
- ► August 2004 (11)
- ► April 2004 (13)
- ► March 2004 (11)
சுண்டக்கஞ்சி
நம்ம வூடுங்கோ
Back on top ^
created by Nuvio | Webdesign
Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib