Thursday, September 28, 2006

அந்தர்பல்டி திருமா

அந்தர்பல்டி அவார்டு ஒரு சீசனுல மரவெட்டி மருத்துவரு கையிலே இர்ந்துச்சு. அப்பாலிக்கா அத்த கருப்புத்துண்டு பார்ட்டி எட்த்துகின்னாரு. அவரோட கொஞ்ச நாளு ரவுண்டு வுட்ட மப்புல இப்போ நம்ம திர்மா அந்தர்பல்டி அவார்டு வாங்கிக்கினாரு. சோக்கா கீது இவங்க அடிக்கிற பல்டியெல்லாம். ஒலிம்பிக்ஸுனு ஏதோ கீதாமே, அத்துல அட்ச்சா எதுனா களுத்துல மாட்டி அனுப்பிவுடுவாங்கோ.

முன்னே ஒருக்கா கலீஞரு கூட நிண்ணு ஒரு சீட்டு கெலிச்சாரு. அப்பாலிக்கா இன்னா நென்ச்சாருன்னு தெர்ல முட்டாயி வாணாம்ன்னு தூக்கிப் போடுற கொளந்த கணுக்கா அய்துகினே "எனுக்கு எம்.எல்.ஏ சீட்டு வாணாம்"ன்னு பூட்டாரு. மறுக்கா மரவெட்டி ஐயா கலீஞரு தாத்தா கையிலே சேர்ந்துக்கோபான்னு கூப்டப்போ, தாத்தா "வோணும்ன்னா உங்கிட்டே கீற சீட்டுல அவுனுக்கு ரெண்டு குடு"ன்னு சொன்னாரு. அப்போ "எச்சி சோறு எனுக்கு வாணாம்"ன்னு சோக்கா டயலாக்கு வுட்டு அம்மா கையிலே 9 சீட்டு வாங்குனாரு.

இப்போ மறுக்கா வந்து கலீஞருக்கு மஞ்சா சால்வ போத்தி "காலத்தின் கட்டாயம், நான் அங்கே அவமானப்படுத்தப்பட்டேன்"ன்னு டயலாக்கு வுடுறாரு. கலீஞரும் பெர்ய மன்ஸோட "எங்கையிலே கீற சீட்டுல வுனுக்கும் தரேன் கண்ணு"ன்னு டயலாக்கு வுடுறாரு. டயலாக்கெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா, குப்ஸாமிக்கு ஒரே ஒரு டவுட்டு. முன்னே "மரவெட்டி கையிலே கீற சீட்டுல ரெண்டு குடு"ன்னு சொன்னப்போ எச்சிலு சோறா தெர்ஞ்சது இப்போ தன்னோட கையிலேர்ந்து தாத்தா எட்த்து குடுக்கசொல்லோ "புச்சா வடிச்ச சுடுசோறா" தெர்யிதா? சோக்கா கீதுபா ஒங்க நாயமெல்லாம்.

திருமா அந்தர்பல்டி அட்ச்சாச்சு. இன்னும் மிச்சம் கீற கருப்புத்துண்டு பார்ட்டி, சித்தப்பா சரத்குமாருல்லாம் இன்னா டயலாக்கு வுடலாம்ன்னு மைண்ட மிக்ஸில அட்ச்சி ரோசனப் பண்றாங்கோ. சீக்கிரம் நீங்களும் வந்து தாய் களகத்துல சீட்டப் புடிங்கபா.

6 comments:

newsintamil said...

சூப்பரு!

oosi said...

/*
"மரவெட்டி கையிலே கீற சீட்டுல ரெண்டு குடு"ன்னு சொன்னப்போ எச்சிலு சோறா தெர்ஞ்சது இப்போ தன்னோட கையிலேர்ந்து தாத்தா எட்த்து குடுக்கசொல்லோ "புச்சா வடிச்ச சுடுசோறா" தெர்யிதா? */

சரியா சொன்னீங்க போங்க ....

இங்கேயும் பாருங்க

தம்பி said...

சோக்கா சொன்னபா குப்ஸாமி! காட்டுல இருக்க கொரங்கே ஆச்சரியபடற அளவுக்கு இங்கிட்டும் அங்கிட்டும் தாவிகிட்டு இருக்கானுங்க.

திருமாவ பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு குப்ஸாமிகிட்ட கேட்டு சொல்லுங்க :)

சபாபதி சரவணன் said...

குப்ஸாமி,

மெய்யாலுமே டமாசா எய்துற மாமேய்.

பாவம் திர்மா அண்த்த, அக்கா குட்த சோறு பத்லனிட்டு தாத்தாவாண்ட சோறு துண்ண வன்ட்டாறு. தாத்தா வெறும் கர்ண்டிய திர்ப்பி திர்ப்பி காம்ச்சி டபாய்க்க போறாரு.

எலிக்ச்சினு வன்ட்டாலே இதுமாரி காமிடி சீன பாத்து பாத்து வயிறு வலிக்கிது மச்சி.

ஆமா கொசப்பேட்ல எந்த சந்துல கீற? நம்ம வூடு மேகலா எதுற்ல. ஞாய்ட்டு கெய்மன்னா கொசப்பேட்ட மார்கெட்ல தான் கவ்ச்சி வாங்க வர்வேன். வெல இன்னா சீப்புல்ல ?

பாபு said...

எனக்கென்னவோ, திண்டிவனம் ராமமூர்த்திக்கும், டி.ராஜேந்தருக்கும் அம்மா கொடுத்த கசப்பு மருந்தை திருமா இப்ப திருப்பி கொடுத்திருக்கார்னு தோணுது. ஒருத்தருக்கொருத்தர் மருந்து கொடுத்துக்கிட்டு அவஙவங்களோட அகங்கார வியாதியை குணப்படுத்திக்கிட்டா சரிதானே.மத்தபடி, அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானுங்களே.

துளசி கோபால் said...

அடப்போப்பா குப்ஸ்.
அரச்ச்சியல்லெ இதெல்லாம் சகஜமாமே. இதுக்கு இன்னான்றே?