Sunday, June 04, 2006

டையமண்டு கவிஞரின் கண்ணகி பொராணம்

சிஎம்மு தாத்தாவுக்கு நேத்து பொறந்தநாளு. "வாய்த்த வயசு கெடியாதுபா, வணங்குறேன்"ன்னு அல்லாரும் டயலாக்கு வுட்டுகின்னே காலுல வுய்ந்துருப்பாங்கோ. தாத்தா எலிக்ஸனுக்கு முன்னாடி சொன்ன மேரி அரிசி குடுக்க ஆரம்பிச்சிட்டாரு, கொஞ்ச நாளுல டிவி பொட்டியும் குடுப்பேன்னு சொல்லிக்கீறாரு. கண்ணகி செலைய கூட மருக்கா தொறந்து வெச்சிக்கீறாரு. அல்லாம் சோக்கா தான் கீது.

அல்லா மேட்டரையும் சொம்மானா பாத்துக்கின்னு இர்ந்த குப்ஸாமிக்கு கண்ணகி மேட்டருல தான் ஒரு டகால்டி கெட்ச்சிதுபா. இன்னாங்குறிங்களா? சொல்றேன் சொல்றேன். பகுத்தறிவு பாசறையிலே பாலு குட்ச்சி வளந்துபுட்டு மஞ்சத்துண்டு போட்டா மன்ஸுக்கு எதமா கீதுன்னு சொல்லிக்கின்னு கீற தாத்தா குந்திகின்னு இர்ந்த மீட்டிங்கில கவிப்பேரரசு டயமண்டு கவிஞரு ஒரே டயலாக்கா வுட்டுக்கின்னு கீறாரு.

"கண்ணகி சிலை வெறும் உலோகம் இல்லை, எங்கள் உலகம்".

ஒகே கரீட்டு.

"தலைவிரி கோலத்துடன் கண்ணகி சிலை இருப்பது சென்னை நகரத்திற்கும் தமிழகத்திற்கும் அபசகுணம் என்பதால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது"

இதுவும் ஒகே, வெச்சுக்குவோம்.

"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"

இது தான் கவிஞரே இடிக்கிது. எங்கேயோ இருக்குற இந்தோனேஷியாவுல பூமி குலுங்க, அதோட அதிர்ச்சி தமிள்நாடு தாண்டியும் அட்ச்சிது. கண்ணகி செலங்காட்டி அங்க இர்ந்தா அம்மிணி டிராஃபிக்கு போலீஸு கணுக்கா சுனாமிய வேற ரூட்டுக்கு டைவர்ட்டு பண்ணி வுட்டுருக்கும்ன்னு சொல்லுறது கொஞ்சம் டூ மச்சா கீது கவிஞரே. அதுவும் பகுத்தறிவு பாசறையிலே தாத்தா குட்ச்ச மிச்ச பால குட்ச்சி வளந்தவரு நீங்க. தாத்தா பக்கத்துல குந்திகின்னே இப்டி பேஸ்றிங்களே, நாயமா கீதா?

23 comments:

மஞ்சூர் ராசா said...

காலையில் இந்த செய்தியை படித்தப்போது நானும் நினைத்தேன். இவ்வளவு மூடநம்பிக்கையுடன் பேசும் வைரமுத்து பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஒரு பக்கா அரசியல் வாதிக்கான அனைத்து லட்சணங்களும் நன்றாக தெரிகிறது. அடுத்து எதையோ பெரிதாக எதிர்ப்பார்ப்பது நன்றாக புரிகிறது.

கருணாநிதியின் பேச்சின் கடைசி பத்தியையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதைப்பற்றியும் எழுதலாமே.

இப்னு ஹம்துன். said...

மூளையை கொஞ்சம்
கழற்றி வைக்கிறேன்
உன் முதுகுக்கு
சவுக்காரம் போடணும்!
அவர் (தான் என்றில்லை) பாட மறந்த வரிகள்.

PRABHU RAJADURAI said...

'கவிதைக்கு பொய் அழகு'ன்னு அவருதான் ஒத்துக்குறாரே...லூசுல வுடுங்கப்பா!

மாயவரத்தான்... said...

ஹிஹி.. யாரையோ அரெஸ்ட் பண்ணினனதால தான் சுனாமி வந்திச்சுன்னு யாரோ சொல்லப் போக அதை யாரோ நக்கல்விட்டாங்களே?!

ramachandranusha said...

இப்னு, உங்க கவிதை சூப்பர் :-)))

Anonymous said...

அடடே இன்னும் sk, samudra, டோண்டு, ஜெயக்குமார் சார்லாம் காமெண்டு சொல்லல்லையா? வரட்டும். நா அப்புறமா வந்து சொல்லிடுறேன் :)

ராம்கி said...

மன்னிச்சுடலாம்... சிவாஜிக்காக! :-)

KVR said...

//ஒரு பக்கா அரசியல் வாதிக்கான அனைத்து லட்சணங்களும் நன்றாக தெரிகிறது. அடுத்து எதையோ பெரிதாக எதிர்ப்பார்ப்பது நன்றாக புரிகிறது.
//

மஞ்சூர் ராசா,

உண்மை தான். ஒவ்வொருவருக்கும் ஒரு அடுத்த நிலை தேவைப்படுகிறது. இவருக்கு அரசியல்.

//கருணாநிதியின் பேச்சின் கடைசி பத்தியையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதைப்பற்றியும் எழுதலாமே. //

படித்தேன். ஆனால் மனசுக்குள் எழுத உடனடியாக தூண்டியது இது தான். கருணாநிதி பேச்சினை பற்றி இனி எழுதினால் அது பழங்கஞ்சி.

KVR said...

இப்னு, வைரத்தினுடைய சிஷ்யர் ஆக முழு தகுதியும் இருக்கு போல :-)

KVR said...

//'கவிதைக்கு பொய் அழகு'ன்னு அவருதான் ஒத்துக்குறாரே...லூசுல வுடுங்கப்பா! //

பொய் வேறு, திரிக்கிறது வேறு ஆச்சே. கண்ணகி எங்கள் உலகம்னு சொன்னதோட நிறுத்தி இருந்தா யாரு கேக்கப் போறா இவரை...

KVR said...

//ஹிஹி.. யாரையோ அரெஸ்ட் பண்ணினனதால தான் சுனாமி வந்திச்சுன்னு யாரோ சொல்லப் போக அதை யாரோ நக்கல்விட்டாங்களே?! //

நம்மல்லாம் இன்னாருதுன்னு பார்த்து நக்கல் விடுறது இல்லை, நக்கல் விடணும்ன்னு முடிவு பண்ணிட்டா அடிச்சி ஆடிட வேண்டியது தான். நடுநிலைமை நடுநிலைமை ;-)

KVR said...

//அடடே இன்னும் sk, samudra, டோண்டு, ஜெயக்குமார் சார்லாம் காமெண்டு சொல்லல்லையா? வரட்டும். நா அப்புறமா வந்து சொல்லிடுறேன் :) //

ஐயா, எதுவும் வில்லங்கமா சொல்லி வைக்காம இருந்தா சரி.

KVR said...

//மன்னிச்சுடலாம்... சிவாஜிக்காக! :-) //

அண்ணாமலையிலேர்ந்து இதையே தான் சொல்றிங்க.

சிவாஜியிலே ஓபனிங் சாங் என்ன சார்?

ILA(a)இளா said...

ஆட்சிகள் மாறினால் காட்சிகளும் மாறுமாமே.

நன்றி ராஜா, உங்க ப்லாக் பதிவு என்னையும் ஒரு தமிழ் பதிவு ஆரம்பிக்க தூண்டுதலாக அமைந்தது
http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_28.html

KVR said...

//ஆட்சிகள் மாறினால் காட்சிகளும் மாறுமாமே.//

உண்மை தான் இளா.

BTW, நீங்களும் வாத்தியார் வீட்டு ராசா தானா?

ILA(a)இளா said...

இப்போ ஐயன் தலைமை ஆசிரியர் ஆகிட்டாருங்க

KVR said...

//இப்போ ஐயன் தலைமை ஆசிரியர் ஆகிட்டாருங்க //

இங்கே வாத்தியார் தலைமை வாத்தியாராகவும் ஆகி இப்போ ஓய்வும் பெற்றாச்சு...

தேவ் | Dev said...

அப்பாடி இனிமே சென்னைக்குச் சுனாமி வராது டோய்...

ஏங்க அசலூர்ல்ல என்ன என்னமோப் படிச்சுப் போட்டு சுனாமிப் பத்தி ஆராச்சிப் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணுர பசங்க எல்லாருக்கும் இந்த மேட்டர உடனே பேக்ஸ் பண்ணா உங்களுக்கு புண்ணியமாப் போகும்ய்யா

ஜயராமன் said...

இந்த விழாவில் கலைஞரின் பேச்சும் நகைச்சுவைக்கு சிறிதும் குறைவில்லை.

இதை வெறும் சிலை என்று நினைத்துவிடாதீர்கள். இது தமிழகத்தின் தன்மானம், இது, அது என்றெல்லாம் டயலாக் விட்டு ஒரே தமாஷ் பண்ணிபிட்டார்.

ஆக மொத்தம், என்னமோ இந்த சிலையில தான் (விட்டலாச்சார்யா படம்) மாதிரி தமிழனின் உயிர் இருக்கிறது மாதிரி இவங்க அடிக்கிற லூட்டி.

ம்யூஸியத்தில கடாசின சிலையை எடுத்து தொடச்சி நட்டுவைக்கிறதுல என்னப்பா இத்தனை பெரிய பிலிம் காட்டல். இதுல என்னத சாதிச்சிட்டாங்க?

ஒரே தமாசி.

நன்றி

KVR said...

//ம்யூஸியத்தில கடாசின சிலையை எடுத்து தொடச்சி நட்டுவைக்கிறதுல என்னப்பா இத்தனை பெரிய பிலிம் காட்டல். இதுல என்னத சாதிச்சிட்டாங்க?//

ஜெயராமன், இது சாதனையா இல்லையா என்பதல்ல பிரச்சனை. தேவை இல்லாமல் ஒரு மூடநம்பிக்கையின் அடிப்படையில் இந்தச் சிலை பெயர்க்கப்பட்டு கண்காட்சியகத்தின் மூலையில் எறியப்பட்டு இருந்தது. அதனை திரும்ப கொண்டு வந்தது நல்ல செயலே. நான் கிண்டலடித்திருப்பது வைரமுத்துவின் மூடநம்பிக்கை அடிப்படையிலான பேச்சை மட்டுமே. சிலையை அல்ல!!!

Ram.K said...

அட்ராசக்க்க அட்ராசக்க்க

:)

Anonymous said...

சங்கர (லீலை) சாமியார்க்கு ஆப்பு வைக்க அய்டியா குட்த்த மலையாள கரையோர ஜோதிடர் தான் நம்ம புர்ச்சி தல்விக்கு இந்த செலய எடுத்தாத்தான் ஆயுள் முதல்வரா கீலாம்ன்டு அய்டியா குட்த்தும் ஆட்ச்சி ஊத்திக்கிச்சுபா....

சாத்தான் said...

இத்த இப்பத்தான் கவுஞ்ச்சேன். சோக்கா எல்தி கீற. தினமலர்காரன் சொம்மாவா கட்சீல மண்டு கவிஞர்னு பேர சுருக்குனான்? கவியர்சுக்கு மஞ்சா சோறு கெடியாது.