எலிக்ஸனு வந்தாலும் வந்துச்சுபா, இந்த பாலிடிக்ஸு பண்றவங்கோ ரவுஸு படா காமெடியா கீதுபா. ஒவ்வொரு காமெடியா பாக்கலாம்
டாப் ஒன் காமெடி
சிஎம்மு தாத்தா “வெற்றி நமதே”ன்னு எலிக்ஸனு கொரலு வுட்டுக்கீறாரு. வுட்ட கொரலுல மொதோ கொரலு “இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், உரிமையுடனும் வாழ வழிவகை செய்யப்படும்”. இன்னா தாத்தா பெர்ய காமெடி அட்ச்சிக்கின்னு கீறியேபா. இம்மா நாளு இத்தன மினிஸ்டர கைல வெச்சிக்கின்னு சொம்மா ரிஸைன் பண்றோம்ன்னு கொரலு வுட்டத தவுற ஒண்ணுமே செய்யல, அடுத்த தபா எலிக்ஸன்ல கெலிச்சு தான் செய்யப் போறிங்களாக்கும்? ரெண்டாவது காமெடி “மீனவர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்”. லாஷ்ட்டு அஞ்சு வர்ஸத்துல எத்தன மீனவருங்கோ எலங்க ராணுவத்து கையால குண்டு வாங்கி மண்டையப் போட்டாங்கன்னு கணக்கு எட்த்துப் பாரு தாத்தா, அப்பாலிக்கா தெர்யும் உங்க ஆச்சியிலே எம்மா பாதுகாப்போட மீனவருங்கோ இர்ந்தாங்கன்னு. தாத்தாவோட “வெற்றி நமதே” கொரலு அல்லாமே படா காமெடியா கீறதால அட்த்த லெவலுக்கு எஸ்கேப்பாவலாம்.
டாப் டூ காமெடி
தங்கபாலு “காங்கிரஸ் கட்சியில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், தன்னிச்சையாக அறிக்கை விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்”ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. இன்னிக்கு சிஎம்மு தாத்தா “வெற்றி நமதே” கொரலு வராங்காட்டி நம்ம தங்கபாலு கொரலு தான் படா காமெடியா இர்ந்துருக்கும், ஜஸ்ட்டு மிஸ்ஸு. கோல்ட்மில்க் சாரு, “காங்கிரஸு கச்சில ராங்கு காட்டுறவங்கோ யார்ன்னா இர்ந்தா சோனியாம்மா நடவடிக்கை எடுப்பாங்கோ”ன்னு சொல்லுங்கோ, அது இன்னாது நீங்களே அல்லாம் செய்ற மேரி “நடவடிக்கை எடுப்பேன்”ன்னு சொல்லிக்கீறிங்கோ. ஒரு டவுட்டு தலீவா, அது இன்னாது பேட்டி குடுக்கசொல்லோ மூலம் வந்தவரு கணுக்கா குந்திக்கின்னு வெளக்கண்ண குட்ச்ச மேரி மூஞ்ச வெச்சிக்கின்னே பேட்டி குடுக்குறியே, ஏன்பா அப்டி? ஒரு மேட்டரு தெர்யுமா உனுக்கு, ஒபிஎஸ்ஸு ஒன்னிய பாத்து “நானாவது ஒரு அம்மாவுக்கு பயந்துகின்னு சீட்டு நுனில குந்திக்கின்னு இர்ந்தேன், ஒன்னோட நெலம படா பேஜாருபா, ரோட்ல போறவன் வர்றவனுக்கு கூட பயந்துக்கின்னு கீற நெலமைலகீற”ன்னு கூவிக்கின்னுகீறாராம்.
டாப் த்ரீ காமெடி
வைகோ இன்னைக்கு கோர்ட்டுக்கு வக்கிலு ட்ரெஸெல்லாம் மாட்டிக்கின்னு தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கம்பி எண்ணிக்கின்னு கீற நாஞ்சிலு சம்பத்த வெளில உடுங்கபா’ன்னு கொரலு வுட வந்துக்கீறாரு. இன்னாபாது ஒரு கச்சிய கட்டிக்காத்துக்கின்னு(??!!!)கீறவரு, இப்டி வக்கிலு ட்ரெஸெல்லாம் மாட்டிக்கின்னு வந்துட்டியே தலீவா இன்னா மேட்டருன்னு கேட்டேன். “குப்ஸாமி என்னோட நெலம தெர்யாம இப்டி கேட்டியே குப்ஸாமி”ன்னு கதறி கதறி அய்துப்புட்டாரு. “இன்னா மேட்டரு தலீவா, தெளிவா சொல்லுபா”ன்னு கேட்டேன். “குப்ஸாமி, என்னோட கச்சியிலே இப்போ நானும் சம்பத்தும் மட்டும் தான் இர்க்கோம், சம்பத்தும் அடுத்த எலிக்ஸனுக்கு என்னாண்ட இர்ப்பாரோ இன்னான்னு தெர்யாது. இப்போ யாரா இர்ந்தாலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல புட்ச்சி உள்ளாறப் போட்டுறாங்கோ. அவுங்கள வெளில எடுக்கற வக்கிலு பொழப்புக்கு மாறிட்டா பொழப்பும் ஓடிக்கின்னு இர்க்கும், கைல கொஞ்சம் துட்டும் பாக்கலாம்ன்னு தா தம்பி சம்பத்து மேட்டர்லேந்து தொயில ஆரம்பிச்சிக்கீறேன்பா”ன்னு மேட்டர அவுத்துவுட்டாரு. புச்சா ஆரம்பிச்சிக்கீற தொயிலாவது நல்லபடியா வர்ட்டும் தலீவான்னு வாய்த்து சொல்லிட்டு வந்துட்டேன்.
2 comments:
மெய்யாலுமே செம்ம காமிடியாக்கீது மாமேய்...
அத்தயும் நீ கூவும்போது மெர்சலக்கீதுபா...!?
அட! வாய்யா குப்ஸுத்தம்பி,
நல்லா கீறயா? எலிக்சனு வந்தங்காட்டித்தான் நீ இர்க்கற மேட்டரே வர்து.
படா டமாசா கீதுப்பா பெருசுங்க பேச்செல்லாம்.
அப்பப்ப எட்துவுடு.
தமில்நாட்டுலே நட்கறதெல்லாம் நாங்களும் தெர்ஞ்சுக்கதேவல?
Post a Comment