Saturday, May 02, 2009

Land rover - for sale - Rs 1, 25,000 only


இன்னா கண்ணுங்களா, கொஸப்பேட்ட குப்ஸாமி இங்கிலிபீசு பேஸ்றான்னு நென்ச்சிட்டிங்களா? எனுக்கு தெர்ஞ்ச ஒரு பார்ட்டி "இன்னா குப்ஸாமி எம்மா நாளு ரிக்ஸா வளிச்சிக்கின்னு இர்ப்ப, ஒரு லேண்ட் ரோவரு காரு சுளுவா கெடிக்கிது, ரூவா ரெடி பண்ணுபா வாங்கிக்கின்னு சோக்கா ரவுண்டு உடலாம்"ன்னு ஐடியா குட்த்துச்சு. குப்ஸாமி கைல புது ரிக்ஸா வாங்கவே பைசா கெடியாது, இதுல எங்கேர்ந்து லேண்டு ரோவரு!!! ஆனா, சொம்மா இர்க்க முடியுமா? கார விக்கப் போற பார்ட்டி யாருன்னு கேட்டேன். பார்ட்டி படா பார்ட்டி போல, ஆனா எலிக்ஸனுக்கு செலவு செய்ய பைசா இல்லைன்னு கைல கீற கார விக்கப் போறாராம். ஆர்ன்னா கார வெலைக்கு வாங்கினா குப்ஸாமிக்கு ஏஜெண்ட்டு கமிஸனா ஒரு கட்டிங்க போட்டுடுங்கபா....

காரு ஓனரு டீட்டெய்ல்ஸ்

ஓனரு பேரு: மு.க. அளகிரி
அப்பா பேரு: மு. கருணாநிதி
கார் மாடல்: லேண்ட் ரோவர்
அடக்க வெல: ரூவா ஒரு லச்சத்து இருவதாயிரம்
விக்கிறதுக்கு ரீஜன்: எலிக்ஸனுக்கு பைசா இல்ல.
விக்க நெனைக்கிற வெல: ஒரு லச்சத்து இருவத்தையாயிரம் (காரோட பேன்ஸி நம்பரு TN 05 - 6666, இதுக்கே துட்ட குட்த்து வாங்கிடலாம். பாவம் புள்ளைக்கு பைசா இல்ல, அத்தால ஐயாயிர ரூவா எக்ஸ்ட்ரா கெட்ச்சா போதும்ன்னு விக்கிறாரு)

இந்த காரு பாஸ்ட்டா வித்துட்டா அட்த்ததா ஒரு ஹோண்டா சிட்டி காரும் வெலைக்கு வருதாம். நம்பரு TN 58 - 1. இதுவும் பேன்ஸி நம்பரு காரு, வெல ரூவா 1,40,000. கூட பத்தாயிர ரூவா குட்த்தா காரு உங்குளுக்கு, ஆரு வோணும்ன்னா அப்ரோச்சு பண்ணுங்கபா.

Thursday, April 02, 2009

எலெக்ஷன் காமெடீஸ்

எலிக்ஸனு வந்தாலும் வந்துச்சுபா, இந்த பாலிடிக்ஸு பண்றவங்கோ ரவுஸு படா காமெடியா கீதுபா. ஒவ்வொரு காமெடியா பாக்கலாம்

டாப் ஒன் காமெடி

சிஎம்மு தாத்தா “வெற்றி நமதே”ன்னு எலிக்ஸனு கொரலு வுட்டுக்கீறாரு. வுட்ட கொரலுல மொதோ கொரலு “இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், உரிமையுடனும் வாழ வழிவகை செய்யப்படும்”. இன்னா தாத்தா பெர்ய காமெடி அட்ச்சிக்கின்னு கீறியேபா. இம்மா நாளு இத்தன மினிஸ்டர கைல வெச்சிக்கின்னு சொம்மா ரிஸைன் பண்றோம்ன்னு கொரலு வுட்டத தவுற ஒண்ணுமே செய்யல, அடுத்த தபா எலிக்ஸன்ல கெலிச்சு தான் செய்யப் போறிங்களாக்கும்? ரெண்டாவது காமெடி “மீனவர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்”. லாஷ்ட்டு அஞ்சு வர்ஸத்துல எத்தன மீனவருங்கோ எலங்க ராணுவத்து கையால குண்டு வாங்கி மண்டையப் போட்டாங்கன்னு கணக்கு எட்த்துப் பாரு தாத்தா, அப்பாலிக்கா தெர்யும் உங்க ஆச்சியிலே எம்மா பாதுகாப்போட மீனவருங்கோ இர்ந்தாங்கன்னு. தாத்தாவோட “வெற்றி நமதே” கொரலு அல்லாமே படா காமெடியா கீறதால அட்த்த லெவலுக்கு எஸ்கேப்பாவலாம்.

டாப் டூ காமெடி

தங்கபாலு “காங்கிரஸ் கட்சியில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், தன்னிச்சையாக அறிக்கை விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்”ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. இன்னிக்கு சிஎம்மு தாத்தா “வெற்றி நமதே” கொரலு வராங்காட்டி நம்ம தங்கபாலு கொரலு தான் படா காமெடியா இர்ந்துருக்கும், ஜஸ்ட்டு மிஸ்ஸு. கோல்ட்மில்க் சாரு, “காங்கிரஸு கச்சில ராங்கு காட்டுறவங்கோ யார்ன்னா இர்ந்தா சோனியாம்மா நடவடிக்கை எடுப்பாங்கோ”ன்னு சொல்லுங்கோ, அது இன்னாது நீங்களே அல்லாம் செய்ற மேரி “நடவடிக்கை எடுப்பேன்”ன்னு சொல்லிக்கீறிங்கோ. ஒரு டவுட்டு தலீவா, அது இன்னாது பேட்டி குடுக்கசொல்லோ மூலம் வந்தவரு கணுக்கா குந்திக்கின்னு வெளக்கண்ண குட்ச்ச மேரி மூஞ்ச வெச்சிக்கின்னே பேட்டி குடுக்குறியே, ஏன்பா அப்டி? ஒரு மேட்டரு தெர்யுமா உனுக்கு, ஒபிஎஸ்ஸு ஒன்னிய பாத்து “நானாவது ஒரு அம்மாவுக்கு பயந்துகின்னு சீட்டு நுனில குந்திக்கின்னு இர்ந்தேன், ஒன்னோட நெலம படா பேஜாருபா, ரோட்ல போறவன் வர்றவனுக்கு கூட பயந்துக்கின்னு கீற நெலமைலகீற”ன்னு கூவிக்கின்னுகீறாராம்.

டாப் த்ரீ காமெடி

வைகோ இன்னைக்கு கோர்ட்டுக்கு வக்கிலு ட்ரெஸெல்லாம் மாட்டிக்கின்னு தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கம்பி எண்ணிக்கின்னு கீற நாஞ்சிலு சம்பத்த வெளில உடுங்கபா’ன்னு கொரலு வுட வந்துக்கீறாரு. இன்னாபாது ஒரு கச்சிய கட்டிக்காத்துக்கின்னு(??!!!)கீறவரு, இப்டி வக்கிலு ட்ரெஸெல்லாம் மாட்டிக்கின்னு வந்துட்டியே தலீவா இன்னா மேட்டருன்னு கேட்டேன். “குப்ஸாமி என்னோட நெலம தெர்யாம இப்டி கேட்டியே குப்ஸாமி”ன்னு கதறி கதறி அய்துப்புட்டாரு. “இன்னா மேட்டரு தலீவா, தெளிவா சொல்லுபா”ன்னு கேட்டேன். “குப்ஸாமி, என்னோட கச்சியிலே இப்போ நானும் சம்பத்தும் மட்டும் தான் இர்க்கோம், சம்பத்தும் அடுத்த எலிக்ஸனுக்கு என்னாண்ட இர்ப்பாரோ இன்னான்னு தெர்யாது. இப்போ யாரா இர்ந்தாலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல புட்ச்சி உள்ளாறப் போட்டுறாங்கோ. அவுங்கள வெளில எடுக்கற வக்கிலு பொழப்புக்கு மாறிட்டா பொழப்பும் ஓடிக்கின்னு இர்க்கும், கைல கொஞ்சம் துட்டும் பாக்கலாம்ன்னு தா தம்பி சம்பத்து மேட்டர்லேந்து தொயில ஆரம்பிச்சிக்கீறேன்பா”ன்னு மேட்டர அவுத்துவுட்டாரு. புச்சா ஆரம்பிச்சிக்கீற தொயிலாவது நல்லபடியா வர்ட்டும் தலீவான்னு வாய்த்து சொல்லிட்டு வந்துட்டேன்.

Tuesday, March 31, 2009

குப்ஸாமி is back

இன்னாமா கண்ணுங்களா, எப்டி கீறிங்கோ, சோக்காக்கீறிங்களா? எம்மா நாளாச்சுபா ஒங்களல்லாம் பாத்து. குப்ஸாமி ரிக்ஸா வளிக்கற்துல பிஸீயா பூட்டேன், அத்தால தாம்பா ஒங்கள கண்டுக்க முடியல. இப்போ இன்னாத்து வந்துக்கீறேன்னு கேக்குறிங்களா, எலிக்ஸன் வந்துடுச்சு, மைக்செட்டு போஸ்டரு பிரியாணில்லாம் பாஸ்ட்டு, இப்போ டிஜிட்டல் போர்டு, டிவி, ஓட்டுக்கு ஐயாயிர்ரூவா துட்டு இத்தானாமே பேஸனு. அதான் கொஞ்சம் கெலிச்சிக்கிட்டு போலாம்ன்னு ரிக்ஸாவுக்கு டாட்டா காட்டிக்கின்னு வந்துட்டேன்.

இந்த தபா எலிக்ஸனுல அல்லாருக்கும் டாட்டா காட்டுனது டாக்டரும் கஜேந்திரரும் தான். சின்ன டாக்டரு தான் "யப்பா, இன்னாபா நீயி, எனுக்கு மந்திரி போஸ்ட்டு குட்த்தாங்கோ, ராஜ்யசபா எம்பி சீட்டு குட்த்தாங்கோ, அவுங்கள வுட்டுப்புட்டு அம்மா கைல சரண்டரு ஆவச் சொல்றியே"ன்னு ஃபீலானாரு. பெர்ய டாக்டரு "மவனே, நீ முன்னாடி மந்திரியா அஞ்சு வர்ஸம் குப்பக் கொட்டுனது பத்தியே ஃபீலிங்காவுற, நானு நீயி இன்னும் அஞ்சு வர்ஸத்துக்கு மந்திரி ஆவணும்ன்னு கணுக்குப் போட்டுக்கின்னு கீறேன்பா"ன்னு எதிர் ஃபீலிங்கு வுட்டுக்கிறாரு. வுட்ட ஃபீலிங்கு கரீட்டு தான் போல, இந்த தபாவும் ஒரு ராஜ்ய சபா சீட்டு உசார் பண்ணிட்டாரு.

கஜேந்திரரு சிஎம்மு தாத்தா போட்ட ரூட்டுக்கே வண்டிய வுட்டுட்டாரு. கஜேந்திரரு நம்மலாண்ட ஒட்டிக்கிட்டு ஓட்டுக் கேக்கறத விட தனியா நிக்கசொல்லோ அம்மா ஓட்ட நெறியா பிரிப்பாருன்னு தாத்தா போட்ட கணக்கு ஒர்க்கவுட்டு ஆயிபூட்ச்சி. இப்போ திமுக கூட்டணியோ கொபசெ கணுக்கா கஜேந்திரரு மைக் செட்ட புட்ச்சிக்கின்னு டாக்டரையும் அம்மாவைவும் கீச்சிக்கின்னு கீறாரு.

இந்த எலிக்ஸனோட பெர்ய காமெடியனே வைகோ தான். எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நல்லவரா கீறாரு. ஒரு சீட்டு கம்மியாகீதுன்னு திமுக கூட்டணில கலண்டுகின்னு வந்த வைகோ இப்போ "சகோதரி, நீயி எத்தன சீட்டு வோணும்ன்னாலும் குடு சகோதரி, அட சீட்டே குடுக்க வாணாம் சகோதரி, உனுக்காக நா கொரலு வுடுறேன்"ன்னு நிக்கிறாரு. அம்மாவும் நம்ம கச்சிக்கு கொரலு குடுக்க மைக்செட்டு முன்ஸாமி கணுக்கா ஆளு வோணுமேன்னு வெச்சிக்கின்னு கீறாங்கோ.

ஆமா, இவங்க அல்லாரும் போன மாசம் வரிக்கும் ஈழப் பெர்ச்சன, எலங்கை ராணுவம்ன்னு கொரலு வுட்டுக்கின்னு இர்ந்தாங்களே, இப்போ எங்கபா ஒரு கொரலையும் காணோம்? கஜினி படத்து சூர்யா கணுக்கா பாலிடிக்ஸு பண்றவங்கோ மற்ந்துபூட்டாங்களா? இல்லாங்காட்டி ஓட்டுப் போடுற மக்கள கஜினி ஆக்கிட்டாங்களா?