மதுர மேக்கு தொகுதில காங்கிரஸு 31 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல கெலிச்சிக்கீறாங்கோ. இன்னா தான் தினகரனு, ரவுடி அளகிரி, கவர்ல பணம்ன்னு அல்லாரும் ரவுண்டு கட்டி அட்ச்சாலும் சொல்லி அடிக்கிற கில்லின்னு திர்ம்ப ஒருக்கா அளகிரி அட்ச்சிக்கீறாரு.
காங்கிரஸு ராஜேந்திரன் - 60,785 ஓட்டு
அதிமுக செல்லூர் ராஜு - 29,959 ஓட்டு
தேமுதிக சிவமுத்துக்குமரன் - 21,241 ஓட்டு
இந்த எலிக்ஸன்ல ஆரு படா குஷி ஆகிடுவாங்கன்னு பாக்கசொல்லோ, காங்கிரஸு கட்சி தலீவி சோனியாவ விட, அவங்க பாச அப்பா தமிழ்நாட்டுத் தாத்தா கலீஞர விட, அவரு புள்ள அளகிரிய விட, தமிள்நாட்டுல இன்னும் காங்கிரஸு இருக்குன்னு கெனா கண்டுகின்னுக்கீற சில்லுண்டி காங்கிரஸு பெர்ஸுங்கள விட, கஜேந்திரரு விஜயகாந்து தான் குஷியா இர்ப்பாரு.
அதிமுகல நின்ன செல்லூர் ராஜு உள்ளூர் வெயிட்டு, அத்தால திமுகவே கலீஜாகி தான் நின்னுச்சு. ஆனா சைக்கிளு கேப்பு கஜேந்திரரு சர்ச்சு கோயிலுன்னு ரவுண்டு கட்டி அட்ச்சிட்டு இப்போ 21,241 ஓட்டு வாங்கிக்கீறாரு. இப்போ சொல்லுங்கபா ஆரு படா குஷியா இர்ப்பாங்கோன்னு?
3 comments:
Welcome Back KVR
:)
உண்மைதான். இனிமேலாவது விஜயகாந்த்த குடிகாரர்னு நேரடியாகவோ குடிபுகுந்ததுன்னு நாசூக்காவோ திட்டாம கருத்தியல் வழியில எதிர்க்கப் பழகிக்கனும். இல்லைன்னா....விஜயகாந்த்தை இவங்களே வளத்து விட்டிருவாங்க. அட என்ன கருமம்டா கருத்து இருக்கு எதுக்கன்னு கேட்டீங்கன்னா...அந்தக் கருமம் எங்கையுமே இல்லையேங்குறதுதான் நெலமை. என்னவோ போங்க.
Thalai..
madras tamil suupeeeer!!
Post a Comment