Tuesday, November 28, 2006

சானியா மிர்ஸா பத்தாவது இடத்திற்கு முன்னேற்றம்

குப்ஸாமிக்கு டென்னிஸு புடிக்கும், அதுக்கு மொதோ ரீஜனு பீட் சாம்ப்ரஸு, அப்பாலிக்கா ஃபெடரரு. இப்போ கொஞ்ச வர்ஸமா ரொம்ப ரொம்ப புடிக்கிது. ரீஜனு கீதுபா, அல்லாம் சானியா மிர்ஸா தான். அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்துல கொஸப்பேட்ட குப்ஸாமி பேரு ஆயுளு உறுப்பினரு, அகில ஒலக செயலாளருன்னு போட்ருக்கும். அப்டி ஒரு கில்மா சானியா மேல.

சானியா ஒலக ராங்கிங்குல கொஞ்ச கொஞ்சமா டவுனாகின்னே கீதா, அத்தால இப்போ கொஞ்ச நாளா குப்ஸாமி படா ஃபீலிங்கு ஆயிட்டான். ஃபீலிங்குல இர்ந்த குப்ஸாமிக்கு பட்ட பட்டயா ஊறுகா தொட்டுக்கின்னு பத்து பாட்டிலு பட்ட சரக்க அட்ச்ச மேரி ஒரு நூஸு கெட்ச்சிக்கீது. சானியா மிர்ஸா டென்னீஸு ஆட்டக்காரங்கள்ல பத்தாவது எடத்துல கீதாம். அது எப்டிபா ஆட்டத்துல தோத்துகினே இந்தப் பொண்ணு பத்தாவது எட்த்துக்கு வந்துச்சுன்னா பாக்க சொல்லோ "அயகான டென்னிஸு ஆட்டக்காரிங்கள்ல பத்தாவது எடம்" சானியாவுக்கு கெட்ச்சிக்கீதாம்.

இத்த மேரி ஒரு லிஸ்ட்டு போட்டது சீனாக்காரனுங்கோ. சீனாக்காரனுக்கு மூளையே மூளபா. அகில ஒலக சானியா மிர்ஸா பிகிலடிச்சோர் மன்றத்து சார்பா சீனாக்காரனுங்களுக்கு ஒரு டாங்க்ஸ் பார்ட்டி வெக்கணும். வர்ட்டா..............

4 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-))))

ராஜன் said...

நான் ஏதோ திறமைய காட்டி பத்தாவது எடத்துக்கு வந்துட்டாங்களான்னு நினைச்சி வந்துப்பார்த்தேன்... இது அது இல்லை......

Anonymous said...

ஆமா பா நாகூட விளையாடுலதான் வந்துகினுகீறாங்கோனு நென்சிகினு வந்துகினே ஆனா இது வேற பா என்ன


பொர்தவர்ல விளையாடு விளையாடாதான் இர்கனும் என்ன குமாறு

Anonymous said...

இத்தெ மாதிரி கிரிகெட்டுக்கெல்லாம் கெடியதா . அத்ல கோட பரிசு தரமாடாங்கப்பா