Saturday, December 04, 2004

DPS Dhamakka

இந்தக் காலத்து இஸ்கூலு புள்ளிங்கோ இன்னா கொராமயெல்லாம் செய்யுமுன்னு ஒண்ணுமே பிரியலபா. இந்த ஒரு வாரமா டில்லில கீற டிபிஎஸ்ஸு இஸ்கூலு புள்ளிங்கோ ரெண்டு பண்ணிக்கீற காரியம் அல்லா நூஸ்பேப்பருலையும் போட்டு தாக்கிக்கின்னு கீறாங்கோ. பதினோறாம்ப்பு படிக்கசொல்லோ ஒரு பொண்ணும் பையனுமா சேந்துகின்னு ஜல்ஸா வேல காட்டி அத்த படமும் புட்ச்சி இஸ்கூலுல படிக்கிற மத்த புள்ளிங்களுக்கு நூறு ரூவாய்க்கு வித்திக்கீறாங்கோ. நூறு ரூவாய்க்கு இத்த விக்கிதுங்களே, ஏதோ வயித்து பொளப்புக்கு இல்லாம செஞ்சுபூட்ச்சிங்க போலக்கீது பாவம்ன்னு நெனிக்க வாணாம். பொண்ணோட நைனா ராணுவத்துல இர்ந்தவராம், புள்ளியோட நைனா பெர்ய கையாம். சொம்மா ஒரு குஜாலுக்கு இந்தப் புள்ளிங்கோ ரெண்டுமா சேர்ந்து இப்டி செஞ்சு அத்த வித்துக்கீதுங்கோ.

நம்மூருல தம்மாதுண்டு படம் கெட்ச்சாலே அது வூரு ஒலகமெல்லாம் பூடும். வீடியோ படமா கெட்ச்சா சொம்மா இர்க்குமா. அல்லாரும் அத்த கூவி கூவி விக்கிறாங்கோ, இதுல பெர்ய கொடும இன்னான்னா அந்த விடியோ ஒண்ணு அந்த இஸ்கூலு பிரின்சிபாலுக்கும் கெட்ச்சிக்கீது. போலீஸு கையிலே "இன்னா நைனா இத்தெல்லாம்"ன்னு ஆருனா கேட்டாக்கா "எங்களாண்ட ஆரும் கம்ப்ளையிண்டு பண்ணல, அத்தால நாங்க ஒண்ணும் செய்யல"ன்னு சொல்லுது. கடையிலே அத்த கூவி கூவி விக்கிறவங்கோ "போலீஸ்ல்லாம் ஒண்ணுஞ்ச்செய்யாதுபா, அவுங்களே நம்ம கையிலேந்து வாங்கி போயி பாத்துக்கின்னு கீறாங்கோ"ன்னு கூலா சொல்றாங்களாம்.

பாவம் நம்ம அப்துல் கலாமு, அவுரு இன்னான்னா 2020ல இந்தியா பெர்ய வல்லரசா மாறிப்பூடும்ன்னு கனவு கண்டுகின்னு கீறாரு.

Tuesday, November 23, 2004

சட்டமன்றம் (எ) கூத்துமன்றம்

அம்மா டிவில சட்டமன்றத்துல நடுக்குற மேட்டருல்லாம் காட்றாங்கோ, அத்த பாக்கசொல்லோ செம்ம கலீஜா கீது. கலீஜுல படா கலீஜு இன்னான்னு கேட்டா அது அம்மா வாய்ஸு தான். பயாஸ்கோப்புல ஆக்ட்டு வுடசொல்லோ எட்த்த ட்ரெயினிங்கு அம்மாவுக்கு இப்போ சோக்கா வொர்க்கவுட்டு ஆவுது. ஏத்த எறக்கமா டயலாக்கு வுடுறாங்கோ. அத்த வுட பெர்ய கலீஜு இன்னான்னா தன்னோட தலீமயிலே கீற கவுருமெண்டு செஞ்சுதுன்னு எதையுமே சொல்றதுன்னு கெடியாது, அல்லாமே "நான் செஞ்சேன் நான் கிழிச்சேன்"ன்னு இன்னாமோ இவுங்க சம்பாரிச்ச காசுலேந்து எட்த்து செய்யிற மேரி டயலாக்கு வுடுறாங்கோ. அவுங்க தான் அப்டி கீறாங்கோன்னா கூட கீற அல்லங்கை மினிஷ்டருங்கோ லொள்ளு கேக்கவே வாணாம், அம்புட்டு பெர்ய லொள்ளா கீது.

மினிஷ்டருங்கோ சட்டமன்றத்துக்கு வர்றதே அம்மா கொரலு வுடுறப்போ கரீட்டா எட்த்து குடுக்குற கேப்புல டேபிளு தட்டுறதுக்கு மட்டும் தான் போல. அப்டியே அவுங்க ரெண்டு நிமிட்டு கொரலு வுட்டாலும் அதுல அம்மா பேர கூட சொல்லாம "டாக்டரு எதயதெய்வம் பொர்ச்சித்தலீவி அம்மா"ன்னு சொல்லி முடிக்கவே ஒரு நிமிட்டு ஆகிப்புடும் (ஆரும் மறந்து கூட பேர சொல்லிடக்கூடாது, அப்டி ஒரு ஆர்டரு கீது போல). அப்பாலிக்கா எதிர்கட்சில குந்திக்கின்னு கீறவங்கள நையாண்டி செய்ய அடுத்த ஒரு நிமிட்டு, கொரலு ஓவர், அத்தோட குந்திப்பாங்கோ. எந்த மினிஷ்டரும் தன்னோட தொறைலேந்து இத்த செஞ்சோம்ன்னு சொல்லக்காணோம். அம்மா தான் இப்டி பண்ணாங்கோ அப்டி பண்ணாங்கோன்னு கொரலு வுடுறாங்கோ, அல்லாமே அம்மாவே செஞ்சா அப்பாலிக்கா நீங்கள்லாம் எதுக்கு குந்திக்கின்னு கீறிங்கோ. அல்லாரும் வூட்டுல குந்திக்கின்னு கறிசோறு தின்னுப்புட்டு பல்லு குத்திக்கின்னு இர்க்கலாம்ல.

இதுல நேத்திக்கு நடந்தது படா தமாசு. உண்டாய் கம்பெனியும், போர்டு கம்பெனியும் ஆரு ஆச்சில கொண்டு வந்தாங்கோன்னு தாத்தாவும் அம்மாவும் அட்ச்சிக்கீறாங்கோ. தாத்தா வெளில குந்திக்கின்னு கொரலு வுடுறாரு, அவுருக்கு அம்மா வுள்ள குந்திக்கின்னு எதிர்கொரலு வுடுறாங்கோ. அல்லங்கையி நயினாரு நாகேந்திரரு எய்தி வெச்ச பேப்பர படிக்கசொல்லோ முன்னாள அதே மொதலமைச்சரு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த பெர்ஸுன்னு கூட மன்ஸுல நெனிக்காம "அவுரு பேசுறது சின்னப்புள்ளத்தனமா இருக்கு"ன்னு கொரலு வுடுறாரு. அத்த அப்டி சொல்லாதேன்னு ஆர்னா எதிர்கொரலு வுட்டா அதுக்கு அம்மா எய்ந்து "சின்னப்புள்ளத்தனம்"ன்னா இங்கிலிபீஸுல "சைல்டிஸு", அந்த வார்த்த ஒண்ணும் சொல்லக்கூடாத வார்த்த கெடியாதுன்னு சப்பக்கட்டு கட்டுறாங்கோ. இதுக்கெல்லாம் மேல பேரவைத் தலீவருன்னு குந்திக்கின்னுகீற பெரிய அல்லங்கையி காளிமுத்து ஐயாவும் "ஆமா ஆமா"ன்னு ஜால்ரா தட்டுறாரு. இன்னிக்கி "சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்லுவாங்கோ, நாளிக்கு நம்ம பேட்டைக்கே பெஷலா கீதே ஒரு வார்த்த அத்த கூட சொல்லுவாங்கோ, அதுக்கு அம்மா எய்ந்து "அதுக்கு இங்கிலிபீசுல மம்மின்னு அர்த்தம், மம்மின்னு சொல்லறது தப்பு கெடியாது"ன்னு சொல்லுவாங்கோ. சோக்கா கீதுபா இந்தச் சட்டமன்றம்.

"சின்னப்புள்ளத்தனம்"ன்னு சொல்றதுக்கு இன்னாத்துக்கு மக்களுங்க கிட்டே ஓட்டு வாங்கி இங்கே வந்து குந்திக்கின்னு இர்க்கோணும், அப்டியே தமாசு நடிகரு வடிவேலு கையிலே அஞ்சு நாளைக்கு கால்சீட்டு வாங்கிருந்தா அவுரு இன்னும் சோக்கா சொல்லுவாரு, நல்ல மினிஷ்ரருங்கோ, அவுங்களுக்கு ஒரு நல்ல மொதலாளியம்மா.

Monday, October 18, 2004

வீரப்பன படம் புட்ச்ச தினமலரு

ஒரு வழியா செத்த பாம்ப அட்ச்ச கணுக்கா வீரப்பன கொன்னுட்டாங்க, இல்லாங்காட்டி தற்கொல பண்ணிக்கின்னாரு (ரெண்டுல எது நடந்துச்சுன்னு அந்தாளே வந்து சொன்னான்னா தான் தெர்யும்). இனிமே அம்மா கச்சியும் தாத்தா கச்சியும் அவுங்கவுங்க சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு வீரப்பன புடிக்க இன்னா செஞ்சோம்ன்னு லிஸ்ட்டு போடுவாங்கோ. கோபாலண்ணே லைட்டா ஒரு சொட்டு கண்ணீரு வுடுவாரு. நம்ம மரவெட்டி ஐயா "நம்மாளு ஒர்த்தன் பூட்டானேன்னு அளறதா, மத்த கச்சிக்காரங்கோ கூட சேர்ந்து கொரலு வுடுறதா"ன்னு தெர்யாம முளிச்சிக்கின்னு இர்ப்பாரு. இதெல்லாம் சோக்கா நடுக்கும்.

இன்னிக்கு தினமலரு பத்திரிகை "நா தான் மொதல்ல படம் போட்டவன்"னு டமாரம் அட்ச்சிக்கின்னு சின்ன மீச வீரப்பன படம் புட்ச்சி போட்டுக்கீது. கூடவே கடலூர்ல பட்ச்சிக்கின்னு கீற வீரப்பனோட பொண்ணையும் படம் புட்ச்சி போட்டுக்கீது. அத்த பாக்க சொல்லோ தான் மன்ஸு படா ஃபீலாவுது. இன்னா மன்ஸங்கையா நீங்க. தப்பு செஞ்சவன் அவன், அவன் தான் மண்டைய போட்டுட்டான். இந்த சின்னபுள்ள இன்னா பாவம் பண்ச்சு. பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா? இம்மா நாளு அது ஆரோட புள்ளன்னு கூட தெர்யாம வாள்ந்துக்கின்னு இர்க்கும். இப்போ வூரு ஒலகம் முய்க்க தம்பட்டம் அட்ச்சிப்புட்டிங்கோ. இனி அந்தக் கொளந்தைய பாத்து அல்லாரும் கலாய்க்கிறதும் திட்டுறதும் சாபம் வுடுறதுமா இர்ப்பாங்கோ. அந்தப் பிஞ்சு மன்ஸு இன்னாமா ஃபீலாவும். இத்தெல்லாம் ஆரும் ரோசன பண்றதே கெடியாது. வீரப்பன படம் புட்ச்சி போடு, அவன் கூட சேந்து ஆட்டம் போட்டவன எல்லாம் படம் புட்ச்சிப் போடு, இந்தப் புள்ளைய படம் புட்ச்சிப் போட்டு ஏன்யா அதுங்க வாள்க்கைய கெடுக்குறிங்கோ...

Saturday, October 16, 2004

கடிக்குமா காட்டாமணக்கு?

முன்னே ஒருக்கா நம்ம அம்மா "அல்லாரும் மாற்றுப்பயிர் வூஸ் பண்ணுங்கோ, தண்ணி கொறவா இர்ந்தாலும் இத்த செய்யலாம்"ன்னு கொரலு குட்த்தாங்கோ. அத்த பாத்து குப்ஸாமி கூட குஸியா கொரலு வுட்டான். அப்பாலிக்கா அதுலேயும் பாலிடிக்ஸு பண்ண ஆரம்பிச்சாங்கோ. வெவசாயிக்கு நல்லது செய்யலைன்னாலும் பர்வாயில்லே, அத்த போட்டாக்கா இந்தப் பெர்ச்சன வரும் அந்தப் பெர்ச்சன வரும்ன்னு நூஸ் குட்க்க ஆரம்பிச்சாங்கோ செல ஆளுங்கோ.

இப்போ ஸூனியர் வெகடன்ல நம்ம வெவசாய மினிஷ்டரு "அத்தெல்லாம் ஒரு பெர்ச்சனையும் வராது"ன்னு சொல்லி அதுக்கு வெளக்கமெல்லாம் குட்த்துக்கீறாரு. வெளக்கமெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா ஒரு மேட்டரு இடிக்கிது. காட்டாமணக்கு ஆறு வர்ஸம் களிச்சு தான் பைசா குடுக்குமாம். அதுவரைக்கு வளத்துக்கின்னு வரணுமாம். அம்மா கவுருமெண்ட்டு வெவசாயிங்கோ கைலேந்து காட்டாமணக்கு வாங்க தனியார் ஆளுங்கள ரெடி பண்ணிக்கின்னு கீதாம். சரி ரெடி பண்ணிடுறாங்கன்னே வெச்சிக்குவோம். அப்பாலிக்கா இன்னா நடுக்கும்? இன்னும் ஒரு வர்ஸம் களிச்சு எலிக்ஸன் வரும். அப்போ அம்மா கெலிக்காம தாத்தா கெலிச்சா இன்னா நடுக்கும்? அம்மா காட்டாமணக்கு வாங்குவாங்கோன்னு வெவசாயிங்க கைல காட்டிவுட்ட தனியாரு ஆளுங்கள தாத்தா வூட்டுக்கு அனுப்பிடுவாரு. அப்பாலிக்கா காட்டாமணக்கு போட்ட வெவசாயிங்கோ கன்னத்துல கை வெச்சிக்கின்னு தாத்தா ஆரைன்னா புச்சா கைய காட்டுவாரான்னு குந்திக்கின்னு இர்க்கோணும். வெளய வெச்ச காட்டாமணக்கு ஒன்னித்துக்கும் ஒதவாம பூடும்.

"வூருக்கு எளச்சவன் புள்ளையாரு கோயில் ஆண்டி"ன்னு ஒரு டயலாக்கு கீது, இனிமே அத்த மாத்தி "வூருக்கு எளச்சவன் எங்கூரு வெவசாயி"ன்னு மாத்திடலாம்.

Wednesday, October 13, 2004

கிரிக்கெட் எம்சியாரு

வர வர நம்மூரு இஸ்டண்ட்டு அர்சியல்வாதிங்கள விட ஆஸ்திரேலியா கிரிக்கெட்டு டீமு சொம்மா சோக்கா படம் காட்டுறாங்கோபா. நம்மூரு ஆளுங்களும் கெலிக்கிற கச்சி தான் என் கச்சின்னு ஆஸ்திரேலியா டீமூக்கு சூடம் காட்டுறாங்கோ. பாண்டிங்கு கட்ட வெரல ஒட்சிக்கின்னு போனாலும் போனாரு கில்கிரிஸ்ட்டு சொம்மா கலாசிக்கின்னு கீறாரு. நம்மூரு கிரிக்கெட்டு டீமுக்கு பத்திரிகைல நூஸ் குட்க்கிறாங்களோ இல்லியோ ஆஸ்திரேலியா டீமு நூஸ் சுகுரா வர்து.

கில்கிரிஸ்ட்டு இப்போ எம்சியாண்ட கணுக்கா ஆகிப்புட்டாரு. கொய்ந்த புள்ளிங்கோ கூட போட்டோ எட்த்துக்கிறது இன்னா, ரோட்டுக்கடையிலே ஆப்பம் பாயா வாங்கி துன்றது இன்னா, செம்ம கலக்கல் தான். நம்ம குப்பத்து சனங்களும் "மவராசன் எம்சியாண்ட செவப்பால்ல இருக்கான்"ன்னு ஃபீலாகிக்கீறாங்கோ. அட்த்த தபா வரசொல்லோ கில்கிரிஸ்ட்டும் அவரோட ஆளுங்களும் நம்ம குப்பத்து பாசைய கத்துக்கின்னு வந்து "இன்னபா எப்டிக்கீறே. நாஸ்தா துன்னியா"ன்னு கேக்கப்போறாங்கோ.

Tuesday, October 05, 2004

அம்மா கொரலு

அடடா வூரு ஒலகமெல்லாம் "அம்மா" இங்கிலிபீஸுல கொரலு வுட்டுக்கீறாராங்கோன்னு பேசிக்கின்னு கீதே குப்ஸாமிக்கு அத்த பாக்குற கொறாம கெடிக்கிலியேன்னு ஃபீலாகி இர்ந்தேன்பா. நம்ம பிபிசி ரொம்ப நல்ல மன்ஸங்கோ, எட்த்த பேட்டிய அப்டியே படமா அவங்க தளத்துலே குட்த்துக்கீறாங்கோ. பாக்கசொல்லோ படா சோக்காக்கீது மேட்டரு. அம்மா கையிலே இர்ந்த பேப்பருங்கள கரண் தப்பார் மேல தூக்கி அடிக்காத கொற தான். அம்புட்டு ஜூடா கொரலு வுடுறாங்கோ.

செல மேட்டருல்லாம் இன்னா பேசணும்ன்னு முன்னாடியே ரோசன பண்ணிக்கின்னு வந்துருப்பாங்கோ போலக்கீது. சம்மந்தமே இல்லாம அஜீத்தும் விஜயும் பயாஸ்கோப்புல டயலாக்கு வுடுற கணுக்கா செல டயலாக்கு வுட ஆரம்பிச்சிட்டாங்கோ. நா தானா வளந்த மரம், நா காலையிலே நாலு மணிக்கு எய்ந்து பல்லு வெளக்கி குள்ச்சி ஜோலிய இஸ்டார்ட்டு பண்ணுனா நைட்டு கட்டைய நீட்டுற வர ஜோலிய தான் பாக்குறேன் அது இதுன்னு செம்ம டயலாக்கு. இத்த மேரி டயலாக்கு வுட்டே செல எடத்துல அம்மா கரண் அண்ணாத்தே கையிலே மாட்டிக்கின்னாங்கோ. "நீ ஏன் அத்த செய்தே"ன்னு கேட்டா கொய்ந்த புள்ள கணுக்கா "அவுரு செய்யலியா, இவுரு செய்யலியா. அவராண்ட போயி கேக்க வேண்டியது தானே"ன்னு எதிர்கொரலு வுடுறாங்க. பேப்பர பாத்து ஏன் படிக்கிறிங்கோன்னு கேட்டா சூடாவுறாங்கோ.

இங்கிலிபீஸு டிவிபொட்டில இஸ்பீச்சு குட்த்து "தமிள்நாட்டுல ஒய்ங்கா இங்கிலிபீஸ்ல கொரலு வுட தெர்ஞ்ச நா ஒருத்தி தான். வோணும்ன்னா தாத்தாவ அப்டி எதுனா பேச சொல்லுங்கோ பாக்கலாம்"ன்னு எலிக்ஸம் டைமுல சீன் போட்றதுக்காக கொரலு குட்க்க தலய ஆட்டிருப்பாங்கோ போலக்கீது. ஆனா அத்தே அவுங்களுக்கு ஆப்பு அட்ச்சி போச்சி. அத்தால கடேசில "ஒண்ணோட பேசுனதே வேஸ்ட்டு நைனா"ன்னு கொரலு வுட்டுட்டு போய்ட்டாங்கோ. யம்மோவ் இந்த மேட்டர லூஸ்ல வுடுங்கோ, நம்ம அப்பாலிக்கா சிஎன்என்ஐ கூட்டியாந்து நாமளே கேள்ளி கேக்குறவனுக்கு கேள்விய குட்த்து எய்தி வெச்சிக்கின்னு வந்த பேப்பர பட்ச்சி பளிக்கு பளி வாங்கிபுடலாம். அப்பாலிக்கா "பிபிசி இப்போ தயாநிதி மாறன் கைல கீது, அத்தால தான் அப்டி என்னிய பளி வாங்கிப்புட்டாங்கோ. நா ஒரு பொம்பளன்னு என்னிய இப்டி எல்லாம் பண்றாங்கோ"ன்னு மூக்கு சிந்தி அட்த்த சிஎம்மு ஆகிப்புடலாம்.

அம்மாவோட கொரலு வீடியோ: http://www.bbc.co.uk/tamil/jaya_thapar.ram
அம்மாவோட கொரலு ஆடியோ: http://www.bbc.co.uk/tamil/jayaaudio.ram
அம்மா கொரலு இங்கிலிபீஸுல படிக்க: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml

அம்மா கொரலு பத்தின சுரேஸு அண்ணாத்தே கருத்து: http://groups.yahoo.com/group/Maraththadi/message/20524

Saturday, September 25, 2004

ஞாபகம் வர்தே ஞாபகம் வர்தே...

ஆட்டோகிராப்பு போட்ட சேரன் மட்டும் தான் பட்ச்ச பளைய இஸ்கூலு, பிரண்ட்ஸுங்கோன்னு பாத்து "ஞாபகம் வர்தே ஞாபகம் வர்தே"ன்னு பாடணுமா. இப்போங்காட்டி நம்ம மன்மோகன் ஐயா கைல "ஒங்க மன்ஸுல இன்னா பாட்டு நைனா ஓடிக்கின்னு கீது"ன்னு கேட்டாக்கா அவுரு மன்ஸுக்குள்ள இத்தே பாட்ட தான் பாடிக்கின்னு இர்ப்பாரு.

பாகிஸ்தானு முசரப்பு ஐயா பாக்க தான் மொரட்டுத்தனமா இர்ப்பாரு போலக்கீது, மன்ஸு சொம்மா கொய்ந்த மன்ஸுபா. அக்காங், இன்னா மேட்டர்ன்னு கேக்குறிங்களா! நம்ம பெரதமரும், முசரப்பு ஐயாவும் அமேரிக்காவுல போயி கை குலுக்கிக்கசொல்லோ முசரப்பு ஒரு போட்டோவ கைல குட்த்துக்கீறாரு. போட்டோவ பாத்த மன்மோகன் ஐயா படா ஃபீலிங்ஸு ஆகிப்புட்டாரு. பின்னா இன்னான்றிங்கோ நாளிக்கு எய்வத்திரெண்டு வயசாவப போற நம்ம பெரதமரு கொய்ந்த புள்ளியா இர்க்கசொல்லோ பட்ச்ச இஸ்கூலு போட்டோவல்ல முசரப்பு குட்த்தாரு. அத்த பாத்து பெரதமரு பீலிங்ஸு ஆவலைன்னா தான் பெர்ய விசியம்.

இப்டி கலக்குனது பத்தாதுன்னு கட்டம் கட்டி கலக்க ஆரம்பிச்சிட்டாரு முசரப்பு. போட்டோ குட்த்த கையோட "இந்தாபா நீயி அந்த இஸ்கூலுல பட்ச்சப்போ எட்த்த மார்க்கு"ன்னு சொல்லி மார்க்கு லிஸ்ட்ட கைல குட்த்துட்டாரு. அமேரிக்கா போயி இப்டி ஆட்டோகிராப்பு ஃபீலிங்ஸு வரும்ன்னு நம்ம பெரதமரு நென்ச்சே பாத்துருக்க மாட்டாரு. முசரப்பு நீயி கில்லாடி நைனா....

கொசுறு: நாளைக்கு இஸ்கூலு சர்ட்டிபிகெட்டு கணுக்குப்படி பொறந்தநாளு கொண்டாடப்போற பெரதமரு ஐயாவுக்கு குப்ஸாமி கைலேந்து பொறந்தநாளு வாய்த்துகள்.

Tuesday, September 21, 2004

கலாசாரம்

நம்மாளுங்கோ கலாசாரம் பத்தில்லாம் பேசிக்கின்னு கீறாங்கோ. ஜந்தோஜம் தான். கூடவே இந்தக் கலாசாரப் பாட்டையும் படிச்சிப் பாருங்கோ. இந்தப் பாட்டு நம்ம அல்வா பார்ட்டி சத்யராஜ் படத்துல வருதாம். நல்ல எலக்கியரசமான பாட்டுபா...

நமீதா

கௌப்பு கௌப்பு கௌப்பு நீ பட்டையத்தான் கௌப்பு

கழட்டு கழட்டு கழட்டு

உன் சட்டையைதான் கழட்டு

பச்ச அரிசி சாப்பாடு

பாடா படுத்துது வேக்காடு

புழுங்கல் அரிசி சாப்பாடு

புகுந்து நீயும் விளையாடு

பதினெட்டு வயசுல

கொழா புட்டு சைசுல

வெச்சிருக்கேன். தலைவாழை இலையில

பதினொரு வயசுல

பாதாம் பருப்பு சைசுல

வெக்கட்டுமா

எவர்சில்வர் தட்டுல.

மும்தாஜ்

வான்கோழி தொடையை நான் வறுத்துத் தரவா

வாழைத்தண்டு பொரியல நான் சமைச்சுத் தரவா

ஆடு முசலு குட்டி

துண்டு துண்டா வெட்டி

உப்புக் கண்டம் போட்டு

ஊட்டி விடவா.



நமீதா

கைமுறுக்கு இது நெய் முறுக்கு _ அட

யாருக்கும் தெரியாம வந்து நொறுக்கு

உன் கூறு கெட்ட உடம்ப _ நானு

ரிப்பேரு செய்யட்டா.

கௌப்பு கௌப்பு கௌப்பு

மும்தாஜ்

கருவாடு நான் காசிமேடு _ நீ

கொஞ்சம் கூட கூசாம பாய் போடு!

நமீதா

சிறுபயறு உளுத்தம் பருப்பு

கடலை பருப்பு சேத்தி இடிச்சு

கட்டி வெல்லம் கலந்து நானும்

உருண்டை செய்யவா!

மும்தாஜ்

வேகாத ஆம்லெட்டு

வெள்ளாட்டு கட்லெட்டு

மரக்காணம் சுறா புட்டு

எறா புட்டுடா

தாலி கட்டாம என்கூட குடும்பம் நடத்துடா!

யக்கோவ் நீயி பெர்யாளுக்கா

நம்மூருல இந்த ஒரு மாசத்துல ஆரோட பேரு நெறியா ஆளுங்கோ வாயிலே வந்துருக்குன்னு ரோசன பண்ணா அது நம்ம போலீஸக்கா செயலச்சுமியா தான் இர்க்கும்போல. ஒரு நாளைக்கு ஒரு நூஸ் வுட்டுக்கின்னே கீது. நம்மூரு அர்சியல்வாதிங்கோ தான் எப்பவும் தன்ன சுத்தி பத்தாளுங்கோ நிக்கணும், பத்து பேரு தன்ன பத்தி பேசிக்கின்னே இர்க்கணும்ன்னு நெனிப்பாங்கோ. அக்கா அவுங்கள தாண்டி போச்சு. நூஸ் பேப்பருங்கோ, டிவிகாரங்கோ அல்லாரும் இப்போ யக்காவ சுத்திக்கின்னே கீறாங்கோ.

செயலச்சுமியக்காவும் எதையும் பெர்ய மேட்டராவே எட்த்துக்க மாட்டங்குது. தெனம் எதுனா புச்சா ஒரு சரக்கு எறக்கிக்கின்னே கீது. இப்போ புச்சா எறக்குன மேட்டரு நம்ம ஓபிஎஸ்ஸு மேட்டரு. மன்ஸன் குந்துற எடத்துல முள்ளு வச்ச கணுக்கா போயி சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த சமயத்துல யக்கா அவராண்ட எதோ துட்டு குட்த்துச்சாம். இந்த நூஸ் இந்தியா டுடேயிலே வந்ததும் நம்ம சன் டிவி சொம்மா இர்க்குமா? நேத்து ஃப்ளாஸ் நூஸ்ல்லாம் குட்த்து "சன் டிவி நூஸ் பாருங்கோ, செயலச்சுமியக்கா கொரலு வுட்டுக்கீது"ன்னு சொல்லிக்கின்னே இர்ந்தாங்கோ. இன்னாடா மேட்டருன்னு பாத்தா கட்ஸீல ஒபிஎஸ்ஸுக்கு ஆப்பு.

ஒபிஎஸ்ஸு "இதெல்லாம் டுபாக்கூரு மேட்டரு, ஆரும் நம்பாதிங்கோ"ன்னு கொரலு வுட்டுக்கின்னு கீறாரு. மன்ஸன் மக்கள் மேல கீற பயத்துல கொரலு வுடுற மேரி தெர்யல, அம்மா கையிலே மேட்டரு போயி நம்மள எதுனா சேஞ்சிட்டாங்கன்னா இன்னா பண்றதுன்னு ஃபீலாகி வுடுற கொரலு மேரி தான் கீது.

முன்னே ஒருக்கா குப்ஸாமி "அடுத்த சிஎம்மு"ன்னு செயலச்சுமியக்காவ சொன்னப்போ நம்ம நாமக்கல் ராசா ரொம்ப ஃபீலானாரு. ஆனா அக்கா போற போக்க பாத்தா பர்கூர் தொகுதில அம்மாவுக்கு ஆப்போசிட்டா நின்னு கொரலுவுடும் போல தான் தெர்யிது. யக்கா நீயி கலக்குக்கா... தமிள்நாட்டோட தலவிதி ஒண்ணோட கையிலே இர்ந்தா அத்த ஆரால மாத்த முடியும்.

Wednesday, September 15, 2004

புள்ளையார் சதுர்த்தி

நம்ம வூருல இன்னா விசேஷம் வந்தாலும் நடக்காத ஒரு கூத்து இந்தப் புள்ளையார் சதுர்த்தி வந்தா மட்டும் நடக்கும்ப்பா. வூருல ஒண்ணுத்துக்கும் ஒதவாம சுத்திக்கின்னு கீற பசங்கோ அல்லாரு வூட்டுலையும் துட்டு வசூல் பண்ணி புள்ளையாருக்கு செலை வைக்கிறது, அன்னிக்கு ஆடாத ஆடமெல்லாம் ஆடுறதை நா கணக்குலியே எட்த்துக்கல. ஆனா கட்டே கடேசியா புள்ளியார கொண்டுபோய் கடல்ல போடுவாங்கோ பாருங்கோ, அத்தான்பா மெய்யாலுமே கொடுமையான மேட்டரு.

கண்ட பெயிண்ட்டு, எதுனா ரசாயனமெல்லாம் கலந்து தான் அந்தப் புள்ளியார செய்றாங்கோ, அத்த கொணாந்து கடல்ல கலந்தா அது மன்ஸனுக்கு மீனுக்கு அல்லாம் எம்மாம் பெரச்சனைய கொணாந்து வுடும். ஆருமே அத்த பத்தி ரோசனப் பண்றது கெடியாது. வூர்வலமா சுத்தி வந்து புள்ளியார கடல்ல வீசிப்புட்டு அத்த ரெண்டு மிதியும் மிதிச்சிட்டு போவாங்கோ. குப்ஸாமி இதையெல்லாம் கேட்டாக்கா ஹிந்து இண்டாலரண்ஸ்ன்னு கூட ஆர்னா சொன்னாலும் சொல்லுவாங்கோ.

இந்த தபா நல்லவேளியா நம்ம வூரு கோர்ட்டுல இது ஸ்டே குட்த்துட்டாங்கோ. ஆரும் இந்த தபா ரசாயனம் கலந்த புள்ளியார் செலைய கடல்ல கலக்கக்கூடாதுன்னு. ஆனாலும் நம்ம காவி கச்சி சிஸ்யப்புள்ளிங்கோ அன்னிக்கு சுகுரா கொண்டுபோயி செலைய கடல்ல கலந்துவுடும். அப்பாலிக்கா பெரச்சனை தான்.

சரி, புள்ளியார கொண்டு போயி இன்னாத்து கடல்ல கலக்கணும். புள்ளியாரு ஒன்னாண்ட வந்து "எனுக்கு கலரு கலரா பெயிண்டு அட்ச்சி நீயும் கொஞ்சம் மூஞ்சில பெயிண்டு தேய்ச்ச்க்கின்னு டமுக்குடப்பா ஆட்டம் போட்டுக்கின்னு போயி என்னிய கடல்ல தூக்கிப்போடு"ன்னு கேட்டாரா? கெடியாதே. இதெல்லாம் நம்மளா செஞ்ச பளக்கம் தானே. ஈ எறும்புல்லாமும் பசி இல்லாம இர்க்கோணும்ன்னு வூட்டு வாசல்ல அரிசிமாவு கோலம் போட சொன்னாங்கோ. நம்மாளு அதுக்கு கலரு குடுக்கிறேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் கலந்து போட்டுக்கின்னு கீறாங்கோ. அத்த மேரி தண்ணில கீற உசுருங்களுக்கும் எதுனா குடுக்கணும்ன்னு அரிசிமாவுல புள்ளியாரு செஞ்சி அத்த கொண்டு போயி ஆறு, கொளம், குட்ட, கடலுன்னு எங்க தண்ணிய பாக்குறியோ அத்துல போடுன்னு வெச்சாங்கோ.

குப்ஸாமி வூட்டுல இன்னிய வரைக்கும் களிமண்ணாலையோ, கண்ட ரசாயனத்துலியோ புள்ளியாரு பொம்ம செஞ்சு தண்ணில வுட்டது கெடியாதுபா. எப்பவும் அரிசி மாவு தான். அதுவும் நம்ம ஆத்தா அந்தப் புள்ளியார செய்ய சொல்லோ "நம்மல்லாம் இன்னா கண்ணு புள்ளியாரு செய்றோம். அந்தக் காலத்துல மூணு குறுணி அரிசிய போட்டு புள்ளியாரு செய்வாங்களாம். அது தான் முக்குறுணி புள்ளியார்ன்னு பேரு வந்திச்சி"ன்னு சொல்லிக்கின்னே செய்யும். நம்ம கவுருமெண்ட்டு கூட களிமண்ணால செஞ்ச புள்ளியார தண்ணில தூக்கிப்போட ஒண்ணும் சொல்லல. ஆனா அத்த தூக்கிப்போட்டா தண்ணி இருக்குற எடம் துந்து பூடாதா? அரிசி செஞ்சத போட்டா அங்கே இருக்குற மீனுக்கு நல்லது. களிமண்ணையும் ரசாயனத்தையும் போட்டா அல்லாருக்கும் கெடுதல் தான்பா.

சரி, இப்போ இன்னாதுக்கு இப்டி கூவிக்கின்னு கீற குப்ஸாமின்னு கேக்காதிங்கோ. இத்த படிக்கிற பத்து பேருல ரெண்டு பேராவது களிமண்ணு புள்ளியாரு, ரசாயன பொம்ம புள்ளியாருன்னு போவாம வூட்டுலியே அரிசியிலே செஞ்சு அத்த கொண்டு போயி தண்ணியிலே தூக்கிப்போடுவிங்கன்னு நென்ச்சி தான் சொல்றேன். அல்லாரும் சந்தோசமா புள்ளியாரு சதுர்த்தி கொண்டாடுங்கபா. வர்ட்டா....

Monday, September 13, 2004

தொயில்நுட்ப ஜிகிடி

நம்ம ஆளுங்கோ இந்த புளாக்கருல எதுனா புச்சா செய்துகினேகீறாங்கபா. நம்ம பத்ரி அண்ணாத்த பதிவுல பாக்கசொல்லோ அல்லாரும் எதிர்கொரலு குடுக்க சோக்கா வளி சேஞ்சு வெச்சிக்கீறாரு. ஆனா அவுரு பண்ணி வெச்சதுல ஒரு மேட்டரு இடிக்கிது. நா ஒருக்கா புளாக்கருல உள்ள வந்துட்டா அப்பாலிக்கா கொரலு வுடலாம், இல்லாங்காட்டி வூரு பேரு தெரியாதவனாட்டம் வுடலாம். எனுக்கு அப்டில்லாம் வாணாம், நான் இஸ்ட்டப்பட்ட பேர போட்டுக்கணும்ன்னு நென்ச்சா நடுக்காது. அத்த மேரி புளாக்கருல உள்ள வராம கொரலு வுடணும்ன்னா கண்டிப்பா வூரு பேரு தெர்யாதவனாட்டம் தான் கொரலு வுடணும். அத்தால நம்மாளுங்கோ குட்த்துக்கீற மேட்டருலியே கொஞ்சமா ஜிகிடி வேல காட்டி இங்க குட்த்துக்கீறேன். ஆரு வேணா இன்னா பேருல வேணா கொரலு வுடலாம்.

வெட்டி ஒட்டும்போது <BlogItemCommentsEnabled>லேந்து </BlogItemCommentsEnabled> வரையில கரீட்டா பாத்து ஒட்டணும், இல்லாங்காட்டி மேட்டரு சொதப்பிடும்...

எப்டிக்கீதுன்னு போட்டுப் பாத்துபுட்டு சொல்லுங்கபா...


<BlogItemCommentsEnabled><a name="comments"></a>
மறுமொழி இட:
<p>
<form action="http://www.blogger.com/add-comment.do" method="post" onSubmit="return AddName(this)">
<input type="hidden" name="blogID" value="<$BlogID$>">
<input type="hidden" name="postID" value="<$BlogItemNumber$>">
<textarea name="postBody" id="postBody" rows="10" cols="30" tabindex="1" style"font-family: Latha, TheneeUniTx"></textarea>
<br>
Name: <input type="text" name="strName" tabindex="2" size=30 style"font-family: Latha, TheneeUniTx">
<br>
URL:  <input type="text" name="strURL" tabindex="3" size=30>
<br>
<input type="hidden" name="anonymous" value="y">
<button style="margin-right:.3em; font-family: Latha, TheneeUniTx" tabindex="4" type="submit" name="post">மறுமொழி இடுக</button>
<br />
<br />
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் மேலே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
<br />
<textarea name="postBody1" id="postBody1" rows="5" cols="30" tabindex="1" style="font-family:Latha, TheneeUniTx;" onkeyup="convertUni('postBody1', 'postBody');" onclick="convertUni('postBody1', 'postBody');" onselect="convertUni('postBody1', 'postBody');"></textarea>
<br />
<font size=1>Thanks to <a href="http://www.suratha.com">suratha.com</a></font>
<form>
</p>

<script type="text/javascript" language="javascript" src="http://www.geocities.com/kvraja/uniconvertor.js"></script>

<script>
function AddName(form)
{
if (form.postBody.value == "")
{
alert("Please enter some message")
return false;
}
else if (form.strName.value == "")
{
alert("Please enter your Name")
return false;
}
else
{

form.postBody.value = form.postBody.value + "\n" + "\n" + "posted by: <a href=" + form.strURL.value + ">" + form.strName.value + "</a>";
return true;
}
}

</script>

மறுமொழிகள்:
<BlogItemComments>
<div class="blogComment">
<a name="<$BlogCommentNumber$>"></a>
<$BlogCommentBody$>
<script>
var CommentUser = '<$BlogCommentAuthor$>';
if (CommentUser.indexOf('Anonymous') == -1)
{
document.write('<br /><br />posted by: <$BlogCommentAuthor$>')
}
</script>
<br />
<div class="byline"><a href="<$BlogCommentPermalinkURL$>" title="permanent link">#</a> <$BlogCommentDateTime$> </div>
<$BlogCommentDeleteIcon$>
</BlogItemComments>

</BlogItemCommentsEnabled>

Sunday, September 12, 2004

சேது சேது சேது.....

நம்மூருல இப்போ ஆரெல்லாம் சேதுவா அலஞ்சிக்கின்னு கீறாங்களோ இல்லியோ நம்மூரு அர்சியல்வாதிங்கோ சேதுவா மாறிட்டாங்கோ. ஆரப் பாத்தாலும் "நாந்தான் சேது"ன்னு சொல்லிக்கிறாங்கோ. அல்லாருக்கும் ஒரு இஸ்டெப்பு மேல ஏறி நின்னுக்கின்னு "நாந்தான் சேது"ன்னு அம்மா கூவோ கூவுன்னு கூவிக்கின்னு கீறாங்கோ. வுட்டாட்டாக்கா இதுக்கு ஒரு கோடி ரூவா செலவு பண்ணி நூஸ் குட்ப்பாங்கோ போலக்கீது.

இப்போ இன்னா மேட்டருன்னா அம்மா கச்சிலேந்தே அம்மாவுக்கு ஆப்பு வெக்க ஆளு ரெடி. திமுக மதிமுகன்னு ஒரு ரவுண்டு வுட்டுப்போட்டு இப்போ அம்மா கச்சில ஐக்கியமான கே எஸ் ராதாகிஸ்ணன் தான் அந்தப் பார்ட்டி. ஆராரு சேது சமுத்திரம் வரணும்ன்னு பேசினாங்கோன்னு புட்டு புட்டு வெச்சிப்புட்டாரு. அவுரு சொல்றத வெச்சி பாத்தாக்கா நடையா நடந்துக்கின்னு கீற வைகோ தான் எதுனா கொஞ்சம் சொல்லிக்கலாம். அம்மா கூட கொஞ்சூண்டு எதுனா பேசிருப்பாங்கோ போல, ஆனா நம்ம தாத்தா அதுக்காக ஒரு கீரைய கூட கிள்ளிப்போடலையாம். ஆனா வூரு முளுக்க போஸ்டரா அட்ச்சி வொட்டிக்கீறாங்கோ. தாத்தா கைல அத்த பத்தி ஆர்னா கேட்டாக்கா பெர்ய மன்ஸன் கணுக்கா "இது எங்க கூட்டணி கெலிச்சதுபா, ஆளாளுக்கு தனித்தனியா கூவாதிங்கோ"ன்னு சொல்லிக்கீறாரு. அதுக்கு மேல எதுனா கொரலு வுட்டா "தோடா இந்தச் சேது வர்றதுக்காக தான் நா டெல்லியிலே கொடி புட்ச்சி கப்பல் துறை அமைச்சரா என்னோட ஆளுக்கு சீட்டு வாங்கி குட்த்தேன்"ன்னு சொல்லுவாரு. தாத்தா பலே கில்லாடி ஆச்சே....

Thursday, September 02, 2004

சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

மர்த்தடி போட்டிக்காக பெரசன்னா நெல்லைய பத்தி வெண்பா எய்திக்கீறாரு. பட்ச்சா சோக்கா கீது. அத்த பாத்து நம்ம சென்னைய பத்தி, அதோட புகள பத்தி ரெண்டு வரி எட்த்து வுடலான்னு ஆச வந்துடுச்சு.

******************************************

அண்ணாந்து பாக்கவைக்கும் எல்ஐசி கட்டடமும்
கண்ணடிக்கும் நேரத்தில் கட்டுவுடும் ஆட்டோவும்
எந்தூரு போனாலு மெங்கேயு மிர்க்காது
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

எண்ணூரு போறதுக்கு எட்டுமணி பஸ்புடிச்சா
பண்ணாட பையனுங்கோ பர்ஸடிக்க சான்ஸுவுண்டு
கொண்டுவந்த பைசாவ கொள்ளையிலே வுட்டவன்நீ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

கொல்லுற வெய்யிலு கொள்த்துறது தெர்யாம
கல்லாட்டம் குந்திகின்னு காதலிப்போம்; அல்பாய்ஸ்ல
கண்ணாலம் கட்டாம கல்ண்டகத எத்தனையோ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

******************************************

இப்போதைக்கு இவ்ளோ தான். அப்பாலிக்கா என்னிக்காவது மூடு இர்ந்தா மிச்ச மீதி. வர்ட்டா....

Monday, August 30, 2004

அசத்தல் ஆண்டனி

நம்ம ஆண்டனி சேட்டன் கேரளத்து தாத்தா கருணாகரனுக்கு ஆப்போசிட்டா இம்மா நாளு அட்ச்சி ஆடிக்கின்னு இர்ந்ததே பெர்ய விசயம் தான். தாத்தா இன்னா டகுலு வுட்டாலும் அதுக்கு ஒரு கொய்யான் சிரிப்பு மாத்ரம் சிரிச்சிக்கின்னு பதில் சொல்லாம எஸ்கேப்பு ஆவுரதுல அண்டனி அண்ணாத்தே ஆளு பலே கில்லாடி. நம்மூரு தாத்தா கணுக்கா கருணாகர தாத்தாவும் புள்ளிங்கள பாலிட்டிக்ஸ்ல இஸ்துக்கின்னு வந்து வுடணும்ன்னு இன்னா மேரி டகுலு வித்த காட்டியும் ஆண்டனி கைல ஒண்ணும் வேகலை. எதுனா எசகுபெசகா எட்த்து வுடலாம்ன்னு பாத்தாலும் அண்ணாத்தே செம்ம கையி சுத்தம்.

இன்னா இர்ந்து இன்னா பண்றது. நேத்திக்கு சோனியா வந்ததும் ஆண்டனி கைல "இன்னா கண்ணு, ஒன்னோட வூருல நம்ம கச்சிக்காரங்கோ ஒரு சீட்டு கூட எடுக்கல, நீயி இன்னாத்துக்கு சிஎம்மா குந்திக்கின்னு கீறே"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. கேரளத்து காங்கிரஸுல இர்க்கிற அடிதடி தெர்ஞ்ச சோனியா அம்மாவே இப்டி கேக்க, நம்ம அண்ணாத்தே படா ஃபீலாயிப்புட்டாரு. "எனுக்கு சிஎம்மு போஸ்ட்டு வாணாம் போ"ன்னு கொய்ந்த புள்ள கணுக்கா சொல்லிப்புட்டு வந்துட்டாரு.

ஆனா ஒண்ணு மட்டும் சொல்லணும் அண்ணாத்தே. எங்க தமிள்நாட்டுல "பதவி எங்க தோள்ல கிடக்கிற துண்டு மாதிரி"ன்னு டயலாக்கு வுட்ட கச்சிலேர்ந்து வந்த பெர்ய மன்ஸங்கோ அல்லாம் அட்தது தன்னோட புள்ளிங்க தான் தன்னோட சீட்டுல குந்தணும்ன்னு சாடையா சொல்லிக்கின்னு கீறப்போ, நீ மாத்ரம் "எனுக்கு அது துண்டு கூட இல்லபா, தொட்ச்சி கீளே போடுற ஐட்டம் மேரி"ன்னு சிஎம்மு போஸ்ட்டுக்கு கல்தா குட்த்த பாரு. மெய்யாலுமே நீயி பெர்ய மன்ஸன்பா.

Sunday, August 29, 2004

அபாங் ஆப்பு

ஆகா அருணாச்சல பெர்தேஸமா கொக்கா. இன்னாமா சோக்கு வேலியெல்லாம் காட்றாங்கபா அந்தூருக்காரங்கோ. முன்னே ஒருக்கா காங்கிரஸுலேந்து அப்டியே அலேக்கா அல்லாரும் அருணாச்சல் காங்கிரஸுன்னு புச்சா ஒரு ஆட்டைய போட்டாங்கோ. அப்பாலிக்கா போன வர்ஸம் பிஜேபி கூட அப்டியே அட்டாச் ஆனாங்கோ. அந்த நேரத்துல பிஜேபி ஆட்டம் பெர்ய ஆட்டமா தான் இர்ந்துச்சு. தன்னோட ஸைடுலேர்ந்து ஒரு எம்எல்ஏ கூட இல்லாத காவி கச்சிக்கு 37 எம்எல்ஏ கெட்ச்சதும் அவுங்களுக்கு தலகாலு பிர்யாத ஆட்டமா இர்ந்துச்சு. இப்போ ஒட்டுக்கா ஆப்பு அட்ச்சிப்புட்டு திரும்ப காங்கிரஸுக்கே தன்னோட அல்லங்கைங்கள கூட்டியாந்துட்டாரு அபாங்கு.

அபாங்கு அல்லங்கைங்களுக்கு அப்டியே ஆட்டுமந்த மேரி மைண்டு போல கீது. அபாங்கு 1996ல நம்ம சிரிக்க தெர்யாத மன்ஸன் நர்சிம்மராவோட கா வுட்டுப்போட்டு காங்கிரஸ வுட்டு வெளில வந்ததும் அல்லங்கைஸும் அப்டியே வெளில வந்தாங்கோ. அப்பாலிக்கா இன்னா ஆச்சுன்னு தெர்ல, முகுத்து மித்தி ஆட்டைய கலைச்சுப்புட்டாரு. ஆட்டுமந்த கூட்டம் அபாங்கை அம்போன்னு வுட்டுப்போட்டு மித்தி கூட மூணு வர்ஸம் ஆட்டம் போட்டாங்கோ. போன வர்ஸம் மித்திய மிதிச்சுப்போட்டு திரும்ப அபாங்கு கூட அட்டாச் ஆகிப்புட்டாங்கோ. அபாங்கும் காவி கச்சி கூட ஐக்கியமாகி சிஎம்மு சீட்ட புட்ச்சிக்கின்னாரு.

இப்போ எலிக்ஸன் வர்ற டைமுல காவி கச்சிக்கு அபாங்கு ஆப்பு வெச்சிப்புட்டாரு. அல்லங்கைஸும் கரீட்டா அபாங்கு கூடவே வந்து காங்கிரஸுல ஐக்கியமாகிப்புட்டாங்கோ. இத்து நம்ம வெங்காய நாயுடு எதிர்பாக்காத டர்னிங்கு பாயிண்டு. போன வர்ஸம் இதே நேரத்துல ஒரு எம்எல்ஏ தன்னோட கச்சில இல்லாங்காட்டியும் அபாங்கோட 37 ஆளுங்கள வச்சிக்கின்னு கொரலு வுட்ட காவி பார்ட்டிங்களுக்கு திரும்ப பூஜ்ய ராசி தான் போல. இருவத்தஞ்சு வர்ஸம் அந்த வூருல குப்ப கொட்டி இன்னாத்த கண்டோம்ன்னு வெங்காய நாயுடு பொலம்பிக்கின்னு இர்ந்தாலும் இர்ப்பாரு.

Wednesday, August 25, 2004

அடுத்த சிஎம்மு

நம்ம வூரு பத்திரிகைங்களுக்கு வேற பொளப்பே கெடியாதுபா. எப்போ பாரு எவன் இன்னா பண்ணான், எந்தப் பொண்ணு ஆரால கெட்டுப்போனான்னு எதுனா எய்திக்கின்னே இர்ப்பாங்கோ. கேட்டாக்கா இன்வஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு இங்கிலிபீஸுல எதுனா சொல்லுவாங்கோ. இன்வெஸ்ட்டிகேடிவ்வா எய்தணும்ன்னா நாட்டுல எய்த மேட்டரா இல்ல? எந்த அமைச்சரு இன்னா ஊளலு பண்றான்னு எய்து. எந்த கவுருமெண்டு அதிகாரி தன்னோட ஜோலிய ஒய்ங்கா செய்யலைன்னு எய்து. அத்தெல்லாம் வுட்ருவாங்கோ, பொம்பள பின்னாடி அலையிறது தான் இப்போ இன்வெஸ்ட்டிகேடிவ் சர்னலிஸம்ன்னு சொல்றாங்கோ.

முன்னே கொஞ்ச நாளு அல்லாரும் செரினான்னு ஒரு பொண்ணு பின்னாலேயே சுத்திக்கின்னு இர்ந்தாங்கோ. அத்து மூஞ்ச அங்க இங்க திருப்புனா கூட அதுக்கு எதுனா காரணம் சொல்லிக்கின்னு இர்ந்தாங்கோ. அத்த எய்தி முட்ச்சாச்சு. இப்போ புச்சா கெளம்பிக்கீற மேட்டரு நம்ம செயலச்சுமியக்கா. செரினா மேட்டர்ல கூட பின்னால இர்ந்தது பெரிய அர்சியல் ஆளுங்கோன்னு கொஞ்சம் போட்டோல்லாம் அடக்கி வாசிச்ச பத்திரிகைங்கோ இந்த மேட்டருல ஒரே போட்டோவா போட்டு கிளிச்சி எட்க்கிறாங்கோ. அந்த அக்காவும் நீயி எத்த வேணா எய்திக்கோ எப்டி வேணா போட்டோ புட்ச்சிக்கோன்னு போஸ் குடுக்கிது.

சரி, மேட்டருக்கு வருவோம். இப்போங்காட்டி தமிள்நாடு இஸ்டேட்டு எலிக்ஸன் வர்துன்னு வெய்யிங்கோ, நம்ம தாத்தா கலீஞரு அப்டியே செயலச்சுமியக்காவ அமுக்கி தன்னோட கச்சிக்கு இஸ்துக்கின்னு வந்துடுவாரு. பர்கூரு தொகுதில அம்மாவுக்கு ஆப்போஸிட்டு செயலச்சுமி தான். செயலலிதாவா செயலச்சுமியான்னு ஆயிப்புடும். கெலிக்கிறது யாரா இர்க்கும்ன்னு நெனிக்கிறிங்கோ?? சுகுரா செயலச்சுமியக்கா தான் கெலிக்கும். அப்பாலிக்க அட்த்த கொஞ்சம் வர்ஸத்துல யக்கா தான் சிஎம்மு.

Tuesday, August 24, 2004

பாவம் தாத்தா

நம்ம சுஜாதா தாத்தா ரொம்ப பாவம்பா. எப்பனா எதுனா எசகுபெசகா எய்தி மாட்டிப்பாரு (இத்த எய்துசொல்லோ எனுக்கு ஒம்போது கெட்டளைங்கோ வேற ஞாபகத்துக்கு வர்து). முன்னே ஒரு தபா கற்றதும் பெற்றதும்ல என்னமோ புச்சா இலங்கைத்தமிழில் இப்போ தான் இலக்கியவாதிகளே உருவாவது மாதிரி படிச்சு பாராட்டி இர்ந்தாரு. இப்போ பாராட்ட கூட செய்யாம குப்ஸாமியும் முன்ஸாமியும் எத்தோ எய்தி வெச்சிட்டு அத்த பத்து பேரு படிக்கணும்ன்னு காத்திருக்க தான் வலைப்பதிவுல எய்துறாங்கோன்னு வலப்பதிவு பத்தி சொல்லிக்கீறாரு. அத்த கூட இன்னமும் புளாக்கு புளாக்குன்னு சொல்லிக்கீறாரு. வாத்யாரே அதுக்கு தமிளு வார்த்த கண்டுபுட்ச்சி ரொம்ப நாளாச்சுபா.

தாத்தா நீங்க கற்றதும் பெற்றதும்ல பத்து வாரம் களிச்சு எய்தப்போற மேட்டருல்லாம் இப்போவே வலப்பதிவுல வர்து. அத்தெல்லாம் பட்ச்சி பாத்துட்டு அப்பாலிக்கா வலப்பதிவு பத்தி சொல்லி இருக்கலாம். அத்த வுட்டுப்போட்டு குப்ஸாமி கொரலு வுடுறத மட்டும் எங்கணா பட்ச்சிப்புட்டு பதிவுன்னாவே இப்டி தான் இர்க்கும்போலன்னு நென்ச்சிக்கின்னு எய்தாத வாத்யாரே.

எனுக்கு இன்னா ஒரு டவுட்டு வர்து தெர்யுமா. இந்த வலப்பதிவு மேட்டரெல்லாம் ஒண்ணாண்ட வந்து எட்த்து சொல்லி அத்த பரப்புறதுக்கு உன்னியவே தலீவரா போட்டு செஞ்சிருந்தா "வலப்பதிவா அது படா சோக்கு மேட்டருபா, அல்லாரும் அத்த ஒரு தபா செஞ்சு பாருங்கோ"ன்னு சொல்லிருப்பிங்களோ. என்னமோ செய்யி வாத்யாரே, நீ எத்த எய்துனாலும் பட்ச்சிக்க தான் நாங்கல்லாம் கீறோம்ல...

பிகு: இதுக்கு முன்ன ஒரு தபா "இணையத்துல தகவல் தான் கிடைக்கும், அறிவு அல்ல"ன்னு புச்சா ஒரு மேட்டர கண்டுபுட்ச்சி சொல்லி இர்ந்தாரு. அத்து இன்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லி இருக்கலாம் அவரு. வர வர அமேரிக்க புஸ்ஸு மேரி பேச ஆரம்பிச்சிட்டாருபா இவுரும்.

Saturday, August 21, 2004

அண்ணாத்தேஏஏஏஏஏ..... தம்பீஈஈஈஈஈ....

ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு பாசமலையே கொட்டுச்சுபா. மரவெட்டி ஐயாவும் மீசக்கார நண்பனும் "அண்ணா..... தம்பி"ன்னு கட்டி வுருண்டுகினாங்கோ. இப்டில்லாம் செய்ய மேட்டர் இல்லாமலா கீது, மேட்டர் கீதுபா கீது. தாத்தா இன்னும் கொஞ்ச நாளைக்கு தான், அப்பாலிக்கா தாத்தாவோட புள்ளிக்கு எத்தன ஆளுங்கோ கூட வருவாங்கோன்னு தெர்யாது. பொடா புகழ் வைகோ வேற காரணமே இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டாரு (இவுரு பொறந்த மூணாம் மாசமே நடக்க ஆரம்பிச்சு இர்ப்பாரு போலக்கீது. எதுனா ஒண்ணுன்னா படைய கெளப்பிக்கின்னு நடக்க ஆரம்பிச்சுடுறாரு. இன்னா தான் இஸ்டண்டு வுட்டாலும் குப்ஸாமிக்கு புட்ச்ச ஆளு இவுரு தான்பா). ஆடி காத்துல பொசுக்குன்னு போய் கோபுரத்துல குந்திக்கின்ன காஞ்ச எல மேரி இவரு பாட்டுக்கு அட்ச்சிக்கின்னு மேலே போய் சீட்ட புட்ச்சிட்டா இன்னா பண்றதுன்னு ஐயா ஃபீலாகிப்புட்டாரு. இதுல கேப்டனு வேற அப்ப வருவேன் இப்போ வருவேன்னு கொடச்சல குட்க்கிறாரு.

இன்னா பண்றதுன்னு பாத்தாரு ஐயா. பத்து பேரு எதுத்து நின்னாலும் பக்கத்துல கீறவன் கைய புட்ச்சிக்கின்னா ஒரு தெம்பு வந்துடும்ல. பக்கத்துல இர்க்கிறது நம்ம மீசக்கார நண்பன் தான். இத்தினி காலமா வெட்டிக்கின்னும் குத்திக்கின்னும் இர்ந்தவங்க தான். எலிக்ஸன் வந்தா மீசக்கார ஆளுங்கள ஓட்டு போட வுடாம கூட ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ அட்ச்சி ஆடினா ஆட்டமெல்லாம் வுண்டு. இன்னா தான் பண்ணி இர்ந்தாலும் நமக்கே ஆட்டம் காட்ட ஆளுங்கோ ரெடியானா அப்பாலிக்கா இன்னா பண்றது. அத்தான் "அண்ணா தம்பி"ன்னு பாசமலைய ரெண்டு பேருமா பொளிஞ்சிக்கின்னாங்கோ. கைய குட்த்துக்கின்னப்போவே "தம்பி நீ உள்துறைய எட்த்துக்கோ, எனுக்கு மெயின் சீட்ட வுட்டுப்புடு"ன்னு தான் ஐயா பேசிருப்பாரு. "இந்தாளு கூட சேரமா இர்ந்தா நமுக்கு கெடிக்கிற ஓட்டும் கெடிக்காது, அப்பாலிக்கா நம்ம ஒரு ஆளு மட்டும் தான் எலிக்ஸன்ல ஜெயிச்சு அதையும் அப்பாலிக்கா தார வாக்கணும்"ன்னு நென்ச்சி மீசக்கார நண்பனும் ஆட்டத்துல சேந்துக்கின்னாரு.

இந்தக் கூட்டத்துல ஆருக்கு இன்னா சீட்டு கெடிக்கிதோ இல்லியோ பங்கர் தச்சானுக்கும் அறிவுமதிக்கும் கொளுக பரப்பு செயலாளரு சீட்டு கண்டிப்பா வுண்டு. செம்ம இஸ்பீச்சு வுட்டுக்கீறாங்கோ.

இத்து ஒங்க அர்சியலு, இன்னா வேணா செஞ்சிக்கோங்கபா. இனிமே ஆரும் சாதி பேர சொல்லி அட்ச்சிக்காம இர்ந்த செரி....

Saturday, August 14, 2004

சொதந்திர தெனம்

போன தபா எத்தனாவது சொதந்திர தெனங்கிறத மறந்துபுட்டு இப்போ குந்திக்கின்னு கணக்குப் போட்டு இஸ்கோல் டீச்சருங்கோ கொய்ந்தைங்க கைல "கொய்ந்திங்களா, நாளிக்கு இத்னாவது சொதந்திர தெனம். அல்லாரும் இஸ்கூலுக்கு யுனிபார்ம் போட்டுக்கின்னு வந்துடுங்கோ"ன்னு கொரலு வுட்டுருப்பாங்கோ. "இன்னாபாது, இப்டி ஞாயித்துக்கெளமைல வந்துடுச்சு. எதுனா திங்க, செவ்வான்னு வந்தா ஒரு நாளு லீவு கெடிக்கும்"ன்னு இஸ்கூலு புள்ளிங்களும், ஆபீஸு ஜோலிக்கு போறவங்களும் ஃபீலாவாங்கோ. "இந்த தபா வூட்ல ஒரு வேலியும் செய்யக்கூடாது. சன் டிவில ஒரு புரோகிராமும் வுடாம பாத்துடணும்"ன்னு வூட்டுல கீற பொம்பளிங்கோ ஐடியா பண்ணிருப்பாங்கோ. "தலீவரு வசூல்ராஜாவ வெளில வுட்டுக்கீறாரு. பாட்டெல்லாம் சோக்காக்கீது. டிக்கெட்டு கெடிக்குமா, இல்லாங்காட்டி ப்ளாக்குல எதுனா வாங்க வேண்டி இர்க்குமா"ன்னு நம்ம நாட்டு வருங்கால தூணுங்கோ கன்னத்துல கை வெச்சி ரோசனப் பண்ணும். "இன்னாபாது, நாளிக்கு டாஸ்மாக்கு லீவு வுட்டாங்களா"ன்னு நம்ம தோஸ்துங்கோ ஃபீலாவாங்கோ. அர்சியல்வாதிங்கோ அரத்தூக்கத்துல வந்து காந்தி தாத்தா செலைக்கு மாலப் போடுவாங்கோ. வர்ஸத்துக்கு நாலு தபா மாத்ரம் குளிக்கிற காந்தி தாத்தா ரெண்டாவது தபாவா குளிப்பாரு.

சொதந்திர தெனத்தன்னிக்கு பயாஸ்கோப்பு மேட்டரா டிவில காட்றாங்கோன்னு ஃபீலாவுற நாமளும் இந்தச் சொதந்திர தெனத்துல ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடுறது கெடியாது, சொதந்திர தென வாள்த்துகள் சொல்றது தவுர.

அல்லாருக்கும் சொதந்திர தென வாள்த்துகள்பா....

Wednesday, August 11, 2004

காவி கட்டிய கேப்டன்

எப்டி இர்ந்த கேப்டனைய்யா



இப்டி ஆகிட்டாருபா....



மன்ஸன் காங்கிரஸு, திமுகன்னு எதேதோ தடவிப்புட்டு இப்போ கட்ஸியா காவிக்கட்சிக்காரங்கள புட்ச்சிக்கீறாரு. ம்ஹ்ம் அவுரு புட்ச்சாருன்னு சொல்றத விட காவிக்கட்சி இவர இஸ்துக்கின்னு போவ பாக்குது, அத்தான் கரீட்டு. என்னமோபா, அல்லாரும் நல்லார்ந்தா செரி.

இன்னா மேட்டர்ன்னு தெர்யாம மண்ட காயுறவங்களுக்கு

செய்தி: விஜயகாந்துடன் சி.பி.இராதாகிருஷ்ணன் சந்திப்பு

Tuesday, August 10, 2004

பொடாவுக்கு போடா

எதுனா செய்ய வேண்டியது, அப்பாலிக்கா அத்த வாணாம்ன்னு திர்ப்பி இஸ்துக்க வேண்டியதே நம்ம அம்மாவுக்கு ஜோலியா பூட்ச்சிபா. கோயில்ல ஆடு கோளி வெட்டாக்கூடாது, அத்த செய்யாதே, இத்த செய்யாதேன்னு எதுனா சொல்லிக்கின்னு இர்ந்தவங்கோ எலிக்ஸன்ல ஆப்படிச்சதும் அல்லாத்தையும் ஒவ்வொண்ணா இஸ்துக்கினாங்கோ. இப்போ திடீர்ன்னு வைகோ மேலே போட்ருந்த பொடா கேஸையும் இஸ்துக்கினாங்கோ.

இப்போ குப்ஸாமி கீறான். அவனோட ரிக்ஸாவுல எதுனா புச்சா சேஞ்சு பண்றான். அப்பாலிக்கா கொஞ்சநாளு களிச்சு அத்த வாணாம், பளசே இர்க்கட்டும்ன்னு மாத்துறான்னு வெய்ங்கோ, அப்போ அதுக்கு இன்னா மீனிங்கு. குப்ஸாமிக்கு ரிக்ஸாவ ஒளுங்கா மெயிண்டைன் பண்ண தெர்ல. அத்தானே மீனிங்கு. குப்ஸாமி அப்டி செஞ்சா அவுனுக்கும் ரிக்ஸாவுக்கும் தான் பெரச்சனை. ஆனா அத்தையே அம்மா செஞ்சாங்கன்னா அல்லாருக்கும் பெரச்சனை. இப்போ வைகோ மேட்டர்லியே அவர வுள்ள தூக்கிப்போட்டதால ஆருக்கு லாபம். அவரோட அரசியல் வாள்க்கைல ரெண்டு வர்ஸம் வேஸ்டானது தான் மிச்சம். நஸ்டம் மட்டும் தான் மிச்சம்.

டில்லில குந்திக்கின்னு கீறவங்கோ இன்னும் கொஞ்ச நாள்ல பொடாவுக்கு போடா சொல்லிடுவாங்கோ. அப்பாலிக்கா வைகோவுக்கும் பெரச்சனை வராது. டில்லிலேந்து இந்த மேட்டரு நடக்கிறதுக்கு முன்னால நாமளே செஞ்சிடலாம்னு அம்மா பொடா கேஸை இஸ்துக்கின்னாங்களான்னு தெர்ல. இல்லாங்காட்டி 2006 எலிக்ஸன்ல வைகோவ தன் சைடுக்கு இஸ்துக்கின்னு போற ப்ளானான்னும் தெர்ல. ஒண்ணுமே புர்யலே அர்சியல்லே, என்னமோ நடுக்குது மர்மமாய்கீது, ஒண்ணுமே புர்யலே அர்சியல்லே....

Saturday, August 07, 2004

ஆக்ட்டு வுடுறவங்களுக்கு வெளிநாட்டு ஆபீஸர் சீட்டு

இனிமே வெளிநாட்டு தூதரா ஆரைன்னா சீட்டுல குந்த வெக்கணும்ன்னா பயாஸ்கோப்புல ஆக்ட்டு வுடுறவங்கள தான் வெக்கணும் போலக்கீதுபா. மேட்டரு இன்னான்றிங்களா? ஈராக்குல நம்ம ஆளுங்க மூணு பேர இஸ்துகின்னு போயி வெச்சிக்கீறாங்கோல்ல. அந்த மேட்டருல "அமிதாப்பும் தர்மேந்திராவும் பேசுனா தீவிரவாதிங்கோ ஆளுங்கள வெளில வுட்றுவாங்கோ"ன்னு அந்த வூருல நமக்காக தீவிரவாதிங்களாண்ட பேசிக்கின்னு கீற ஷேக் அல் துலைமி சொல்லிக்கீறாரு.

இந்த ரோசனைய சொன்னது மட்டுமில்லே, "எனுக்கு ஆஸா பரேக்குன்னா இஸ்டம். அத்தால அம்முணிய வந்து பேச சொல்லுங்கோ. அப்பாலிக்கா நா இன்னும் இஸ்பீடா இந்த மேட்டருல பேசுறேன்"ன்னு சொல்லி சந்துல சிந்து பாடிக்கீறாரு. இன்னா ஷேக்கு, ஆக்ட்டு வுடுறவங்கோ மேல கீற ஷோக்கு இன்னும் போவலியா?

இந்த மேட்டர பட்ச்சதுலேந்து குப்ஸாமிக்கும் மண்டைக்குள்ள கிர்ர்ர்ர்ர்ருன்னு கீதுபா. ஆரைன்னா ரெண்டு பேர எஸ்கேப் பண்ணியாந்து வெச்சிக்கின்னு "இன்னாபா கொய்ந்திங்களா, ஒங்கள வெளில வுடணும்ன்னா சோதிகாவும், சினேகாவும் என்னாண்ட வந்து பேசணும். அப்பாலிக்கா தான் வுடுவேன்"னு கொரலு வுடலாமான்னு ரோசனையா கீது.

Tuesday, August 03, 2004

அடிச்சு ஆடும் ஐயா

நம்ம மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்களுக்கு எதுனா அட்ச்சி ஒடிக்காம இர்ந்தா தூக்கம் வராது போலக்கீது. "தினமலரு நூஸ்ல ஐயாவ பத்தி இன்னாத்து நைனா ராங்கா எய்தினே"ன்னு கடலூர்ல தினமலர் ஆபீஸை அட்ச்சி நொறுக்கிப்புட்டாங்களாம்.

நூஸ் பேப்பருன்னா ஆயிரம் எய்த தான் செய்வாங்கோ. இன்னிக்கு வாள்த்தி எய்துவாங்கோ நாளைக்கு தாக்கி எய்துவாங்கோ. எதுனா எய்திக்கின்னு போவட்டும் இர்ந்தா அவன் பெர்ய மன்ஸன். "இன்னாத்துக்குபா எய்துனே"ன்னு கேட்டு ராங்கு பண்ணா அவன இன்னான்னு சொல்றது.

அட்ச்சி நொறுக்கின ஆளுங்கோ கரீட்டா கம்பூட்டர் ரூம்ல பூந்து அட்ச்சி நொறுக்கினத பாத்தா இது நேத்து பேசி இன்னிக்கு அட்ச்ச மேரி தெர்லபா. படா சோக்கா பிளான் பண்ணி ரீஜன் கெட்ச்சப்போ வந்து சந்துல சிந்து பாடின மேரி கீது. ஆராருக்கு இன்னான்னா முன்பகையோ......

Monday, August 02, 2004

கடலை

இன்னாபா அல்லாரும் எப்டிக்கீறிங்கோ. ரொம்ப நாளா சின்னவூட்டை மட்டும் கவனிச்சிக்கிட்டு இர்ந்த குப்ஸாமி இப்போ பெர்ய வூடு பக்கமும் போய் வர ஆரம்பிச்சுட்டான்பா.

இன்னிக்கு கடல போடுறதுக்கு சொம்மா ரெண்டு மூணு டிப்ஸு பெர்ய வூட்டுல குட்த்துக்கீறேன். எப்டிக்கீதுன்னு பட்ச்சி சொல்லுங்கோ.

Thursday, July 29, 2004

சினி நியூஸ்

ஷாக் படம் பார்த்த ஒருவருக்கு ஹார்ட் அட்டாக்

தோடா, அந்தப் பட்த்துல ஆர்ட்டுக்கு ஆப்படிக்கிற மேரி இன்னா கீதுன்னு ஒண்ணுமே பிர்யல. இத்தோட ஒரிஜினலு பூத்தையே ஒரு சைடா பீடி வளிச்சிக்கின்னு முன்னால கீற சீட்டு மேல காலத் தூக்கிப் போட்டுக்கின்னு ஒரு ரேஞ்சிலே பாத்தேன், இதுல இன்னா கீதுன்னு தெர்யல. படம் பொட்டிக்குள்ள போவாம இர்க்கோணும்ன்னு தாடிக்கார தியாகராசரே எதுனா டகுல்பாஜி வேல பண்றாரா?

மீரா வாசுதேவனுடன் முரளி மன்மதராசா ஆட்டம்

நைனா, இன்னாது இது.... வயசுப் பசங்க ஆடுற ஆட்டமெல்லாம் வயசான காலத்துல ஆடாத ராசா, அப்பாலிக்கா எங்கனா சுளுக்கிக்கப் போவுது.....

தன்னுடைய முதல் படத்தில் நடித்த சுதாகருக்கு நடிகை ராதிகா தனது டிவி தொடரில் வாய்ப்பளிக்கிறார்

ஆகா இதாம்மே பாசம்ன்னு சொல்லுவாங்கோ. பளைய பாசம் வுட்டுப்போவாம அப்டியே கீது போல. இன்னாமே அட்த்து பிரதாப்பு போத்தன், கேப்டனுக்கெல்லாம் சான்ஸு வுண்டா?

Tuesday, July 27, 2004

சிவசேனா போர்டு

இனிமே பயாஸ்கோப்பு எட்த்தா அத்த சென்ஸார் போர்டுக்கெல்லாம் கொண்டுபோவ வாணாம்ப்பா, நம்ம சிவசேனா போர்டுக்குக் கொண்டுபோனாக்கா போதும். இன்னாத்துக்குன்னு கேக்றிங்களா? மேட்டர் கீது. நீ இன்னா தான் சென்ஸார் போர்டுல குந்திக்கின்னு கீறவங்கோ கிட்டே கைல கால்ல வுய்ந்து பயாஸ்கோப்புல வெட்டு வாங்கி, வாங்காம படத்த ரிலீஸ் பண்ணாலும் சிவசேனா வுடாது. "நீ எப்டி நைனா பட்த்த இந்த மேரி எடுக்கலாம்"ன்னு கேட்டு தியேட்டராண்ட வந்து கலாட்டா பண்ணும். போன மாசம் பொட்டப்புள்ளிங்கோ (Girl Friend) படத்துக்கு இப்டி குதிச்சிக்கின்னு இர்ந்துச்சு, இப்போ புச்சா வந்துக்கீற ஜூலி படத்துக்கும் குதிச்சிக்கின்னு கீது. அத்தால இனி ஆரும் சென்ஸார் போர்டுக்கு போவாம சிவசேனா போர்டுக்குப் போனா போதும். படத்த பெரச்சனை இல்லாம ஓட்டலாம்.

இத்த சொல்றப்போவே குப்ஸாமிக்கு வேற ஒரு டவுட்டும் வர்துப்பா. அத்து இன்னான்றிங்களா, சொல்றேன் சொல்றேன். முன்னே ஒருக்கா சின்னப்பையன் டாவடிக்கிற படத்துக்கு (Ek choti si love story) பெரச்சனை பண்ணாங்கோ, படம் செம்ம கலெக்ஸன், அட்த்தாப்ல பொட்டப்புள்ளிங்கோ பட்த்துக்கு (Girl Friend) பட்த்துக்கு பெரச்சனை பண்ணாங்கோ, அதுவும் செம்ம வசூலு (ஓடின ஓட்டத்துல இப்போ இஸா அக்கா தான் வூர் ஒலகத்துல பெர்ய இஸ்டாரு). இப்போ ஜூலி பட்த்துக்கும் சிவசேனா பெரச்சனை பண்ணுது. இந்தப் படமும் பிச்சிக்கின்னு போவும். இதுல நம்ம டவுட்டு இன்னான்னா இந்த மேரில்லாம் பெரச்சனை பண்ணுங்கோ, அப்போ தான் நம்ம படம் சூப்புரா ஓடும்ன்னு படத்த எடுக்கிறவங்களே சிவசேனா கைல சொல்லி இந்த மேரில்லாம் பண்ண சொல்றாங்களான்னு தான். சிவசேனாவுக்கும் இப்போ கோயிலு கட்ற மேட்டரை விட இதுல தான் இண்ட்ரஸ்ட்டு அதிகமா பூட்ச்சு போலக்கீது. ஓசில பயாஸ்கோப்பும் பார்த்து அதுல பெரச்சனையும் பண்ணலாம்ன்னா ஆருக்கு தான் இண்ட்ரஸ்ட்டு வராது......

Monday, July 26, 2004

ஒண்ணும் தெர்யாத கொய்ந்த

 மொகமது அலி அண்ணாத்தே உள்ளே போய்க்கீற மேட்டரு நம்ம அல்லாருக்குமே தெர்யும். அவுரு ஒண்ணுமே தெர்யாத நல்ல மன்ஸன், அவுரு தாத்தா கைலே டிகால்டி காட்டினதால தான் வுள்ளே புட்ச்சிப் போட்டுட்டாங்கோன்னு அவுரோட வக்கிலு சொல்லிக்கீறாரு. கூடவே "ஒரு ஐபிஎஸ்ஸு வெளில வுட்டா ஓடியாப்பூடுவாரு. இன்னாத்துக்கு சாமீனு கொடுக்காம இர்க்காங்கோ"ன்னும் கேட்டுக்கீறாரு.

ஒரு கேஸ்ல இன்னாத்துக்கு இன்னாருக்கு சாமீனு கொடுக்காம இர்க்கோணும்? எந்தக் கேஸ்லேயாவது இன்னாரு ஐபிஎஸ்ஸு ஐஏஎஸ்ஸுன்னு பாத்தா சாமீனு கொட்க்கீறாங்கோ. கெடியாதே. இந்தாள வெளில வுட்டா இருக்கிற சாட்சிய கலைச்சுப்புடுவான்னு நீதிபதி ஐயாவுக்கு தோணுச்சின்னா சாமீன் கொட்க்க மாட்டாங்கோ. இஸ்டாம்பு பேப்பரு கேஸ்ல மீசக்கார அண்ணாத்தே மெயினு பார்ட்டின்னு சிபிஐ நம்புறாங்கோ, அப்டி இர்க்கசொல்லோ எப்டி அவருக்கு சாமீன் கொடுக்க முடியும்? இன்னா வக்கிலய்யா இத்தெல்லாம் ஒங்களுக்கு தெர்யாதா?

மரம் நடுங்கோ மரம் நடுங்கோ

மரத்த வெச்சவன் தண்ணி வூத்துவான், மரத்த வெட்னவன் இன்னா செய்வான்?. "மர்த்த நடுங்கப்பா, மர்த்த நடுங்கப்பா"ன்னு சொல்லி செஞ்ச பாவத்துக்கு புண்ணியம் தேடிப்பான். நம்ம மரவெட்டி ஐயாவும் இப்போ அத்த தான் செய்துகின்னு கீறாரு. அல்லாரும் மரம் நடணும், வூட்டுக்கு வூடு மரம் வளக்கணும், அப்டி செய்யாங்காட்டி எதுனா வரி அதிகமா போட சொல்லணும்ன்னு சொல்லிக்கீறாரு. ஐயாவோட புள்ள மட்டும் நிதியமைச்சரா இர்ந்தா இன்னேரத்துக்கு நாட்டுல நெறியா பேரு வரி கட்ற நெலமைக்கு வந்திருப்பாங்கோ.

சொல்றதெல்லாம் சோக்கா தான் கீது மரவெட்டி ஐயா. மரம் நடுறது நல்ல ரோசன தான். ஆனா அத்தெல்லாம் நீங்க வெட்டி வெட்டி ரோட்டுல சாய்ச்சப்போ ரோசன பண்ணவே இல்லியா. இத்த தான் "வூருக்கு ஒரு நாயம் வூட்டுக்கு ஒரு நாயம்"ன்னு சொல்லுவாங்களா?

Tuesday, July 20, 2004

ஆலோஸ்கேனுக்கு ஆப்பு

புளாக்கரு வெச்சிக்கீற மன்ஸங்கோ அதுல எதிர்கொரலு வுடுற மேட்டர எப்டி செய்றதுன்னு நம்ம கிறுக்கு சங்கரு சொல்லிக்கீறாரு. அப்டியே பேக்புளாக்குக்கு எப்டி ஆப்பு வெக்கிறதுன்னும் சொல்லிக்கீறாரு. புச்சா புளாக்கரு எதிர்கொரலு போடுறவங்கோ பளைய ஆலோஸ்கேனு எதிர்கொரலு இர்ந்தா இன்னா பண்றது, அத்த வெச்சிக்கணுமேன்னு ஃபீலாவாங்கோ. கிறுக்கும் அத்தப் பத்தி ஃபீலாகி "யார்னா அதுக்கு ஒரு வளி சொன்னிங்கன்னா அப்டியே நம்ம கைல கொஞ்சம் சொல்லுங்கபா"ன்னு சொல்லிக்கீறாரு.

கிறுக்கு, வளி கீதுபா கீது.

இந்தா புட்ச்சிக்கோ

ஆலோஸ்கேனு போட்டா

<a href="javascript:HaloScan('<$BlogItemNumber$>');"
target="_self"><script type="text/javascript">postCount('<$BlogItemNumber$>');
</script></a>
ன்னு ஒரு மேட்டர நம்ம புளாக்குல போட்டு வெப்போம்ல, அதுக்கு பதிலா

<script>if (hs["<$BlogItemNumber$>"]) {document.write('<a
href="javascript:HaloScan(\'<$BlogItemNumber$>\');" target="_self">Comments (' +
hs["<$BlogItemNumber$>"] + ')</a> | ');}</script>
ன்னு போட்டுக்கின்னா ஆலோஸ்கேன்ல எதிர்கொரலு இர்ந்தா அது கண்ணுக்கு தெர்யும், இல்லாங்காட்டி வராது. புச்சா போடுற மேட்டருக்கெல்லாம் புளாக்கரு எதிர்கொரலு வசதியே ஊஸ் பண்ணிக்கலாம்.

இன்னா கிறுக்கு, இத்து சோக்கா கீதா?

Sunday, July 18, 2004

ஷகீலாவுக்கு பெஸ்ட்டு ஆக்ட்டரஸு அவார்டு

நம்மூர்ல திடீர்ன்னு கில்மா பட்த்துக்கெல்லாம் ஒரு கூட்டம் போட்டு அதுல ஷகீலாவுக்கு அவார்டு குட்த்தாங்கன்னா எப்டி இர்க்கும். ஆக்ட்டு வுடுறவங்களுக்கு குண்ஸா கீதோ இல்லியோ அத்த பாக்குற நம்மூரு கொய்ந்த பசங்களுக்கு குஜாலா இர்க்கும். இத்த சொல்றப்போ "தோடா ஒண்ணுமே இல்லாத பொட்டப்புள்ளிங்கோ (கேர்ள் ஃப்ரண்ட்ஸ்) பட்த்துக்கே நம்மூர்ல கொடி புடிக்கிறாங்கோ, இந்த கண்டீஸன்ல அத்த எல்லாம் கொண்டாந்து அவார்டு குட்க்கிறாங்கோ வா நயினா'ன்னு உள்ளுக்குள்ளே குப்ஸாமி மன்ஸு கொரலு வுடுது.

இந்தியா வாணா அப்டில்லாம் இர்க்கலாம்பா, ஆனா நம்மள ஆண்ட பெர்ய மன்ஸங்கோ மெய்யாலுமே பெர்ய மன்ஸங்கோ தான். கில்மா படம் எட்க்கிறது எம்மா கஸ்டம்ன்னு புர்ஞ்சி அதுக்கும் இப்போ அவார்டு குட்க்கப் போறாங்களாம். எக்ஸ்ப்ளிசிட் 984ங்கிற கில்மா டிவி சேனல் தான் இதுக்கு ஸ்பான்ஸராம். இது செப்டம்பர்ல நடக்கப்போவுது. இன்னா மக்களே லண்டனுக்கு எப்போ கெளம்புறிங்கோ?

பிகு: இன்னா குப்ஸு நாங்க எல்லாம் கும்பகோணத்துல தீ புட்ச்ச மேட்டருல ஃபீலாயி கெடக்கிறோம். நீயி அத்த பத்தி ஒண்ணும் எய்தாம மேட்டரு படத்துக்கு மீட்டரு போடுறேன்னு கேக்குறிங்களா. குப்ஸுக்கும் ஃபீலிங்கு வுண்டுபா, ஆனா அத்த பத்தி ஒண்ணும் சொல்ல முடியாமக்கீறான். அம்புடுதான்..


Wednesday, July 14, 2004

சக்கரவள்ளி கெளங்கு.....

மொதலமைச்சரம்மா போட்ட குண்டுங்கள எல்லாம் தேர்தல் ரிசல்ட்டு மேட்டரால திருப்பி இஸ்துக்கின்ன பொறவு இப்போ தான் ஒரு உருப்படியான மேட்டரோட வந்துக்கீறாங்கோ. தண்ணி பத்தாக்கொறையோட கீற வெவசாயிங்கோ சக்கரவள்ளி கெளங்கு பயிரிடுற திட்டம். தண்ணி கெடிக்காம கஸ்டத்துல கீற நெறியா நாடுங்கள்ல இந்த மேட்டரு இஸ்டார்ட்டு ஆயிடுச்சு. இன்னாடா நம்மூருல மாத்திரம் இன்னும் பண்ணாம கீறாங்களேன்னு குப்ஸாமி ஃபீலானான். கரீட்டு டைமுக்கு அம்மா மேட்டர எட்த்து வுட்டுக்கீறாங்கோ.

இந்த மேட்டரு மெய்யாலுமே நல்ல மேட்டரு தான். தண்ணி செலவும் ஆவாது, துட்டும் கூடுதலா கெடிக்கும். தண்ணி இல்லாம கஸ்டப்படுற வெவசாயிங்க மேட்டர கப்புன்னு புட்ச்சி மீட்டராக்கினா குண்ஸா துட்டு பண்ணலாம். அப்பாலிக்கா "சக்கரவள்ளி கெளங்கு மாமா வெளஞ்சது எப்படி"ன்னு பாட்டும் பாடலாம்.

Monday, July 12, 2004

அருணு அண்ணாத்தேக்கு

வணுக்கம் அண்ணாத்தே, அங்கே சொல்லோணும்ன்னு நென்ச்ச மேட்டர இங்கேயே சொல்லிப்புடுறேன். கேப்டனைய்யா ஆக்ட்டு வுடுறுவங்கோ சங்கத்து கடன அடச்சது, சிவாசி ஐயா செத்து போனப்போ அல்லா நடிகருங்களும் லாரி மேலே போயி குந்திகின்னப்போவும் ஒத்த ஆளா கீளே நின்னுக்கிட்டு கூட்டத்தை எல்லாம் சரி பண்ணது அல்லாமே அவரோட தெறமைய காட்டுது, இல்லேன்னு நானுஞ்சொல்லல.

ஆனா கண்ணாலம் கட்டி குட்க்கிறது, சோறு போடுறதெல்லாம் அந்தக் கணுக்குல சேத்துக்க முடியாதுபா. கேப்டனு எம்சியாண்ட செஞ்ச அத்தே வேலிங்கள தான் இப்போ செஞ்சிக்கின்னு கீறாரு. எம்சியாரு ஆக்ட்டு வுட சொல்லோவே அரசியல்லேயும் ஒத்த கால வெச்சிக்கின்னு இர்ந்தாரு, ஆனா நம்மாளு அத்த மேரி செய்யாம நேரடியா சிஎம் சீட்டுக்கு வரணும்ன்னு கெனா காண்றாரு. அத்த தான் வாணான்னு சொல்றேன்.

அரசியலுக்கு வரணுமா நேரடியா வா, வந்து மக்களுக்கு எதுனா பண்ணு, அப்பாலிக்கா சிஎம் ஆவுற கெனாவெல்லாம் வர வெச்சிக்கோ. சினிமால கீற வெளிச்சத்த காட்டி சீனு போட்டு அத்த வெச்சி சிஎம் ஆவலாம்ன்னு கெனா வாணாம், இத்தான் நாஞ்சொல்றது.

குப்ஸாமி சொல்றது இப்போ வேணா ராங்கா உனுக்கு தோணும் அண்ணாத்தே, இன்னும் ரெண்டு வருசம் களிச்சுப் பாரு, அப்பாலிக்கா குப்ஸாமி சொல்றது கரீட்டுன்னு தெர்யும்.

கேப்டனுக்கு ஜே

நம்ம அருணு அண்ணாத்தே வுட்டாக்கா கேப்டனுக்கு கொளுக பரப்புச் செயலாளரா ஆயிப்புடுவாரு போலக்கீது. கேப்டனையா இத்த செய்துக்கீறாரு அத்த செய்துக்கீறாரு, அத்தால அவுரு மொதலமைச்சரா வரலாம்ன்னு சொல்லாம சொல்கிக்கீறாரு. ஆக்ட்டு குட்க்கிறவங்கோ அரசியல்ல வரக்கூடாதுன்னு பயாஸ்கோப்பு பொட்டிய தூக்கிக்கின்னு போறதுக்கு நா ஒண்ணும் மரவெட்டி ஐயா கெடியாது. ஆனா, அண்ணாத்த குட்த்த லிஸ்ட்டு மாத்திரம் சிஎம்மா வர்றதுக்கு போதுமாபா?

சினிமால பக்கம் பக்கமா டையலாக்கு வுடுற கேப்டன் நேர்ல எதுனா ஒரு மொதலமைச்சரு செய்யிற அக்குறும்புங்கள பத்தி எதுனா பேசிருப்பாரா? தாத்தா சீட்ல குந்திக்கின்னு இர்ந்தப்போ தாத்தாவுக்கு சோப்பு போட்டாரு, இப்போ அம்மாவுக்கு போடுறாரு. இப்போ கொஞ்ச நாளா கேப்டனுக்கு சிஎம் சீட்டு மேல கண்ணு. 2006க்கு மேல தாத்தா இர்ந்து பெர்சா ஒண்ணும் கிளிக்கப்போறது கெடியாது, அம்மா ஆட்சியும் மக்களுக்கு கொஞ்சம் டகால்டி காட்டுது, இந்த நேரத்திலே உள்ளே பூந்து ஆட்டய கலச்சா சீட்டப் புட்ச்சிடலாம், இத்தானே கேப்டனு திட்டமெல்லாம்....

கேப்டனைய்யா நேரடியா அரசியலுக்கு வரட்டும், மக்களுக்கு எதுனா நல்லது செய்யட்டும் (அன்னதான, கண்ணாலம் கட்டிக் குட்க்கிற இஸ்டண்டுல்லாம் மக்கள பிச்சக்காரனாவே வெச்சிக்கீற மேட்டருபா, அத்த வுட்டு வெளில வாங்கோ). இப்போ கேடுகெட்டு கெடக்கிற அரசியல்ல புச்சா எதுனா மீனு புடிக்கட்டும், அப்பாலிக்கா அவர "வா நைனா வா, வந்து கலாசு"ன்னு கூப்டுங்கோ அண்ணாத்தே. இப்போவே ரோசா மாலைய ரெடி பண்ணாதிங்கோ...

Wednesday, June 30, 2004

வுட்டாச்சு லீவூஊஊஊஊஊ

குப்ஸாமி ஒன் வீக் ரிக்ஸா வளிக்கிற ஜொலிய அப்பாலிக்கா தூக்கிப் போட்டுப்புட்டு குண்ஸா காலாட்டிக்கின்னு வூட்டுல பட்த்து தூங்கப் போறான்பா. இன்னா மேட்டருன்னு கேக்குறிங்களா? ரியாத்ல கீற குப்ஸாமிக்கு ஒன் வீக்கு அவனோட மொதலாளி வூட்ல போயி "என்ஸாய் பண்ணுபா"ன்னு லீவு குட்த்துக்கீறாரு.

ஆருக்குனா குப்ஸாமி கைல எதுனா பேசணும்ன்னு நென்ச்சா 04144-242278 நம்பர்ல கூப்டலாம். இன்னாபா யார்ன்னா குப்ஸாமிக்கு போன் பண்ணுவிங்களா??

Tuesday, June 29, 2004

தமிள் தேதி

நம்ம கிறுக்கு சங்கரு தன்னோட புளாக்குல தமிள் தேதி எப்டி வர வெக்கிறதுன்னு சொல்லிக்கீறாரு. அத்த இன்னும் கொஞ்சூண்டு அஜ்ஜீஸ் பண்ணி குப்ஸாமி எய்திக்கீறான். குப்ஸாமிது வோணும்ன்னா இத்த எட்த்துக்கோங்கோ, கிறுக்குது வோணும்ன்னா அங்கே எட்த்துக்கோங்க.

இத்த எட்த்து புளாக்கோட தலமாட்டுல (<head>) எங்கணா போட்டுக்கோங்கோ.


<script>
function ChangeDatetoTamil(dtmDate)
{
EnglishArray = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");

TamilArray = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");

for (i=0;i<19;i++)
{
dtmDate = dtmDate.replace(EnglishArray[i], TamilArray[i]);
}

return dtmDate
}
</script>


<$BlogDateHeaderDate$>ன்னு கீற எட்த்துல

<script>document.write(ChangeDatetoTamil("<$BlogDateHeaderDate$>"))</script>


போட்டுக்கோங்கோ. அப்பாலிக்கா தமிளு தேதி தான்.

வாள்க கிறுக்கு சங்கரு.....

Monday, June 28, 2004

கஜேந்திரா

பாபா கவுண்ட் டவுன் இஸ்டாப்பு ஆயி போச்சி, இப்போ கஜேந்திரா கவுண்ட் இஸ்டார்ட்டு ஆயிக்கீது. கஜேந்திரரு மரவெட்டி ஐயாவ சைடு காட்ட மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ சிலுத்துக்கின்னாங்கோ. கஜேந்திரரோட அடிபொடிங்களும் சொம்மா இர்க்குமா, அதுங்களும் "கஜேந்திரரு பவரு காட்றோம் பாரு"ன்னு அட்ச்சி ஆடுதுங்கோ.

கஜேந்திரரு எடுக்குற பயாஸ்கோப்புக்கு ஆப்பு வெக்கிறோம்ன்னு மரவெட்டி சிஸ்யப்புள்ளிங்கோ கொரலு வுடுதுங்கோ. ஒடனே கஜேந்திரரு "நீயி முட்ஞ்சா செய்து பாருபா"ன்னு எதிர்கொரலு வுடுறாரு. பாபா படம் வூத்திக்கின்னது மரவெட்டி ஐயா தான் ரீஜன்னு இன்னமும் சூப்புரு பொலம்பிக்கின்னு கீறாரு. மெய்யாலுமே படம் பாக்குற மேரி இர்ந்தா மரவெட்டி ஐயா பொட்டிய தூக்கிக்கின்னு போய்ட்டா மட்டும் படம் புட்டுக்குமா இன்னா? பாபா படமே ஒரு டுபுக்கு படம், அத்த மரவெட்டி ஐயா பொட்டிய தூக்கிக்கின்னு போவாம இர்ந்தாலும் படம் பணால் தான்.

இன்னும் ரெண்டு மாசத்துல கஜேந்திரா படம் ரிலீஸ் ஆவும். படம் என்னவோ படா வேஸ்ட்டு படம் தான். பக்கத்து இஸ்டேட்டுல கொய்ந்த பையன் ஜூனியர் எண்டிஆரு ஆக்ட்டு குட்த்த "சிம்மாத்ரி"ய இங்கே தமிளுல கஜேந்திரா ஆக்கிப்புட்டாரு நம்மாளு. படம் முளுக்க வெட்டு குத்து ப்ளட்டு தான். பக்கத்து இஸ்டேட்டுல படா இட்டு குட்த்த ஒரு படத்த நம்ம பிரசாந்து இப்படி கொண்டாந்து இங்கே வூத்திக்கிச்சு. கஜேந்திரரும் இப்டி வூத்திக்க சான்ஸு சோக்கா கீது.

படம் வூத்திக்கின்னா "தன்னோட பவரு"ன்னு மரவெட்டி ஐயா தலக்கீளா டான்ஸு ஆடுவாரு. படம் சோக்கா ஓடுச்சுன்னா கஜேந்திரரு சவுண்டு வுடுவாரு. என்னிய மேரி பாளாப்போன பொதுசனம் மட்டும் எப்பவும் கைய கண்ணத்துல வெச்சிக்கின்னு குந்திக்கின்னு இர்க்கும்.

Thursday, June 24, 2004

டைட்டிலு குட்க்கலாம் வாங்கப்பா

குப்ஸாமி வாய்க்கு அவலு கெடிக்கிலியேன்னு ரொம்ப ஃபீலாகி இர்ந்தான்பா. எய்த்தாளர் பாரா "இந்தா பையா புட்ச்சிக்கோ"ன்னு அள்ளி அவல குட்த்துக்கீறாரு.

தமிளுநாட்டுல கீற வலப்பதிவாளுங்கோ அல்லாருமா ஒரு நாளு மூட்டிங் போடலாம்ன்னு பிளான். அதுக்கு ஒரு நோட்டீஸ் வுட்டுக்கீறாரு. நோட்டீஸ்ல அல்லாரு பேரையும் போட்டுட்டு கூடவே வலப்பதிவு முன்னோடின்னு சொல்லி மாலனைய்யாவை சொல்லிக்கீறாரு. எனுக்கு பயாஸ்கோப்பு பாக்கசொல்லோ குபுக்குன்னு சிரிப்பு வர்ற மேட்டரு இன்னா தெர்யுமா, ஆக்ட்டு வுடுற அண்ணாத்தேங்களுக்கு போடுற டைட்டிலு தான். பாரா வலப்பதிவு முன்னோடின்னு சொல்றப்போவும் அத்தப் போலவே ஒரு சிரிப்பு சிரிச்சேன். மாலனைய்யா வலப்பதிவு முன்னோடின்னா அப்போ அதுக்கு முன்னே வலப்பதிவு செய்தவங்கள இன்னான்னு சொல்வாங்கோ, முன்னோடிக்கு முன்னோடியா? எதுக்கு தலீவா இந்த மேரி டைட்டிலெல்லாம். மாலன்னு சொன்னா ஆருக்கும் தெர்யாதா??

சரி, பாராவோட பதிவு, அவரு ஆரப் பத்தியும் இன்னா வேணா சொல்லலாம்ன்னு வுடுவோம். இத்த பட்ச்சி நம்ம மர்த்தடி சீமாச்சு இன்னும் கொஞ்சம் ஓவரா ஃபீலாயி பூட்டாரு. அரியண்ணாத்தேயை வலையண்ணான்னு டைட்டிலு குடுக்கலாமான்னு கேட்டுக்கீறாரு. வாணாந் தலீவா வாணா. இப்போ நீயி டைட்டிலு குட்ப்ப, அப்பாலிக்கா அந்த டைட்டில வெச்சி ஆர்ன்னா கலாசுவாங்கோ. இத்தெல்லாம் இன்னாத்துக்கு. அவரு செலருக்கு அரியண்ணா, எனுக்கு அரியண்ணாத்தே, இன்னும் செலருக்கு அரி. அப்டியே இர்ந்துட்டுப் போவட்டுமே, இன்னாத்துக்கு ஒரு டைட்டிலு....

Wednesday, June 16, 2004

ஓசி வெளம்பரம்

பயாஸ்கோப்பு எட்த்துபுட்டு அதுக்கு போஸ்டரு அடிக்காம, டிவி பொட்டில காட்டாம, நூஸ் பார்ட்டிங்களுக்கு துட்டு குட்க்காம வெளம்பரம் பண்ணனுமா, மேட்டரு ரொம்ப ஈஸிபா. பட்த்துல படா பேஜாரான மேட்டர்லாம் கீதுன்னு காவிப்பார்ட்டிங்கோ கைல சொல்லிட்டா போதும். படம் தெரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே கொரலு வுட ஆரம்பிச்சுடுவாங்கோ. ஒடனே நூஸ் பார்ட்டிங்களும் "இன்னாபா படம் இது, கண்ட கருமத்தை எல்லாம் புட்ச்சி போட்டு வெச்சிக்கீறாங்கோ"ன்னு எய்த ஆரம்பிச்சிடுவாங்கோ.

மெய்யாலுமே பட்த்துல தம்மாதுண்டு கலீஜி மேட்டரு கூட இர்க்காது, ஆனா இவனுங்கோ வுடுற கொரலுல படத்துக்கு பிரியாவே வெளம்பரம் கெட்ச்சிடும். குப்ஸாமி மேரி நல்லப்புள்ளிங்க அல்லாம் கூட இஸ்கிரீன்ல இன்னா தான் காட்றாங்கோன்னு தியேட்டராண்ட போயி கியூவுல நிண்ணு பயாஸ்கோப்பு பாத்துட்டு வர்வாங்கோ. படத்த எட்த்தவனுக்கு துட்டு செலவு இல்லாம வெளம்பரமும் ஆச்சு, படமும் செம்ம ரன்னிங்கு.

இப்போ புச்சா கேர்ள்பெரண்டுன்னு ஒரு படம் வந்துக்கீது. காவிப்பார்ட்டிங்கோ குதிக்க ஆரம்பிச்சாச்சு. படம் கண்டிப்பா பிச்சிக்கின்னு ஓடும். எட்த்த புண்ணியவானுக்கு நல்ல துட்டு வசூல். தமிளுல இஸ்து போத்திக்கின்னு ஆக்ட்டு வுட்ட இஸாவுக்கு இப்போ செம்ம டைமு போல, வர்மா அண்ணாத்தே ராசி, பார்ட்டிக்கு செம்ம ஓட்டம். இன்னும் நாலு படம் இப்டி ஆக்ட்டு வுட்டு அக்கா அப்டிக்கா எங்கனா போயி செட்டில் ஆயிடும். யக்கோவ் நீயி கலக்கு.......

பிட் நோட்டீஸ்

கெட்டள கேட்டு குப்ஸாமி பீஸாப்பூட்டானான்னு ஃபீலான அல்லாருக்கும் வண்க்கம்பா. குப்ஸாமியாண்ட இந்தக் கெட்டளல்லாம் வேலிக்காவாதுன்னு கெட்டள போட்டவருக்கே தெர்யும். கொஞ்சம் சவாரில பிஸியா இர்ந்தாச்சுபா, அத்தான் மேட்டரு.

Tuesday, June 08, 2004

ஒம்போது கெட்டளைகள்

நம்ம வாத்யாரு பாரா தன்னோட வூட்டுல ஒம்போது கெட்டளைங்கோ எய்திக்கீறாரு. அதுவும் மொதோ நாளே அக்கம்பக்கத்துல வூடு கட்டிக்கீறவங்கள ஒரு சாத்து சாத்துறார். இஸ்கூலுக்கு போவசொல்லோ வாத்யாரு எதுனா சொன்னாக்கா அவுரு அந்தப்பக்கமா திர்ம்பசொல்லோ பிகிலடிப்போம். குப்ஸாமிக்கு பள்ளிக்கொட நெனப்பு இன்னும் மாறல. அத்தான் இங்கயும் ஒரு பிகிலு........... மன்ச்சிக்கோ வாத்யாரே....

1. சொந்தமாக ஒரு வலைப்பதிவு வைத்துக்கொள்ளுவது, தொடர்ச்சியாக அதில் எழுதுவது எல்லாம் கைப்பழக்கத்துக்காக மட்டுமே. நமது மனத்தைச் சுத்திகரித்துக்கொள்ள இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த உபாயம். அவ்வளவே. மற்றபடி ஒண்ணரை மாசம் எழுதிவிட்டு, நாலுபேர் படிக்கிறார்கள் என்று தெரிந்ததுமே மனத்துக்குள் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா ரேஞ்சில் உருவகப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நல்லது. எழுதிக்கொண்டிருப்பது வேறு. எழுத்தாளராக இருப்பது வேறு.

இன்னா தலீவா. மன்ஸூக்குள்ளே தானே நென்ச்சிக்கிறாங்கோ, அத்தால ஆருக்கு இன்னா நஸ்டம் வந்துடும். சுசாதா சுரா ரேஞ்சிலே நென்ச்சி எய்துனா அவுங்க எய்துனதுல ஒரு பாயிண்டு ரேஞ்சிக்காவது எதுனா கிறுக்கலாம்ன்னு நென்ச்சிருப்பாங்கோ. இதுக்கெல்லாம் ஃபீலாவாதிங்கோ.

2. முழ நீளக் கவிதைகளை வலைப்பதிவுகளில் இடுபவர்கள், அடுத்ததற்கு அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (பெண்கள், ஆண்களில்லாத ஊரில்.) அப்படியே கவிதையை இட்டுத்தான் ஆவேன் என்று அடம்பிடிப்பவர்கள் முதலில் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு வலையேற்றுவது நலன் பயக்கும். யாஹு குழுமங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் வாசிக்கக் கிடைக்கிற கவிதைகள் நாராசமாக இருப்பது ஏன் என்று சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பீட்டாய்வு செய்து பார்த்துக்கொள்ளுவது அவர்களுக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு நல்லது.

அல்லாரும் பொற்கசொல்லவே கவுத எய்த பட்ச்சிறாங்களா இன்னா. பத்திரிகைக்கு அனுப்புனா போட மாட்றாங்கோ. குளுவுல எய்துனா யாரும் கண்டுக்க மாட்றாங்கோன்னு தானே தனக்குன்னு ஒரு எடத்த புடிச்சி போட்டு அதுல எய்திக்கிறாங்கோ. புட்ச்சா பட்ச்சு ரஸிக்கலாம், இல்லாங்காட்டி வுடு ஜூட்ன்னு போய்கினே இர்க்கோணும். சரி வாத்யாரே, கவுத தான் பக்கம் பக்கமா வுடக்கூடாது, நாலு பக்க கதிய ஆர்னா பதிவுல போட்டு வெக்கிறாங்களே அவங்களுக்கு ஒண்ணும் சொல்லலியா. வெண்பாம் எய்துறவங்கோ இன்னா பண்ணலாம் தலீவா, அத்தையும் சொல்லிப்போடுங்கோ....

3. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தது பற்றியும் பன்னிரெண்டரையாவது பதிவை வெளியிட்டது பற்றியும் வலைப்பதிவுகளின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்துமே அடிக்கடி எழுதி போரடிக்காதீர்கள். நீங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து உங்களிடமிருந்து ஏராளம் பெறுவதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் வைக்கவும்.

எதுனா உருப்படியா எய்தணும்ன்னு நெனிக்கிற ஆளுங்கோ உண்டு. என்னிய மேரி எதுனா கிறுக்கணும்ன்னே வர்ற ஆளுங்களும் உண்டு. பதிவுங்கற்தே "வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" மேட்டரு தானே. குளுவிலே செல மேட்டரு எய்த முடியாம கீறதால நெறிய பேரு பதிவு பாக்க வந்துட்டாங்க. அங்கேயும் இன்னது தான் எய்தணும்ன்னு ரூல்ஸு போட முடியுமா இன்னா??

4. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வலைப்பதியாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்துவிடாது. நாம் வலைப்பதியவில்லை என்பதற்காக ஒருத்தர் கூட ஒரு வேளை சோறைப் புறக்கணிக்கப்போவதில்லை. அப்படியிருக்க, இரண்டு மூன்று நாள் சோம்பலில் எழுதாமல் இருந்துவிட்டு, மீண்டும் எழுதும்போது எழுதாத தினங்கள் பற்றிய லெக்சரைத் தவிர்க்கவும்.

ஹீஹீஹீ, அக்ரீட். அல்லாரும் இத்தெ கேட்டுக்கோங்கபா. ஆனா வாத்யாரே, எய்தாமக்கீற நாளுல இன்னாத செஞ்சோம்ன்னு கொரலு வுடுறதா நென்ச்சிக்கோங்களேன்

5. சக வலைப்பதிவாளர்கள் நமது பதிவைப் படிக்கிறார்களா என்று அறிவதற்காகவே சம்பந்தமில்லாத மேட்டர்களுக்கு அவர்கள் பதிவில் போய் டிராக் பேக் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதேபோல் உங்கள் பதிவுக்கு யாராவது ஒருவர் அவரது பதிவில் லிங்க் கொடுத்ததற்காக ஒரு பக்கம் செலவழித்து நன்றியறிவிப்புப் பொதுக்கூட்டம் நடத்தாதீர்கள்.

பாரா மேரி ஒரு பெர்ய எய்த்தாளரு அவரோட பதிவுல குப்ஸாமி மேரி குண்ஸு பார்ட்டியோட லின்க் குட்த்துக்கீறாருன்னு வெய்ங்கோ, குப்ஸாமிக்கு ஒரு டாஸ்மாக்க ஜோடா கலக்காம அட்ச்ச மேரி இர்க்கும். ஒடனே இன்னா பண்ணுவான் "தலீவா நெம்ப டாங்ஸு தலீவா"ன்னு கொரலு வுடுவான். இத்தெல்லாம் மிஷ்டேக்கா எடுக்காத வாத்யாரே....

6. பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லி போரடிக்காதீர்கள். அடுத்தவரின் பின்னூட்டப் பெட்டிகளை மூத்திரச் சந்துகளாகக் கருதி அங்கே பத்துப் பத்து வரிகளில் சாராயச் சண்டை போடாதீர்கள். அப்படியே சண்டை போட்டே தீருவேன் என்பீர்களானால் யுனிகோடில் மட்டும் போடுங்கள். உங்கள் சோம்பலால் திஸ்கியில் சண்டை போட்டு அடுத்தவரை அவதிக்கு உள்ளாக்காதீர்.

பதிவுக்கு போனோமா மேட்டர பட்சோமான்னு வந்துரலாம் வாத்யாரே. ஆரு இன்னா சொன்னா நம்க்கு இன்னான்னு வந்துகினே இர்ந்தா சொல்றவன் திஸ்கில சொன்னா இன்னா உனிகோடுல சொன்னா இன்னா... இன்னா நாஞ்சொல்றது...

7. பிரபலங்களைத் தாக்குவதற்கும் பொத்தாம்பொது அபிப்பிராயங்கள் சொல்லுவதற்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தாதீர். வலைப்பதிவுகளுக்கு வருவோர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளரின் எழுத்துகளைப் படிக்க மட்டுமே அங்கே வருகிறார்கள். வாசிக்கும்போது ஒவ்வொருவரும் அவருடன் அந்தரங்கமாகப் பேசுவதாக, புரிந்துகொள்வதாக உணருகிறார்கள். இந்த அந்தரங்கத் தன்மையை உங்களது 138வது வட்டப் பொதுக்கூட்ட மைக் வீச்சுப் பேச்சாலும் எழுத்தாலும் அழித்து ஒழிக்காதீர்கள்.

"வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" பாலிஸி தான் இதுக்கும்.

8. சக வலைப்பதிவுகளிலிருந்தும் தமிழ் இணையத்தளங்களிலிருந்தும் ரீடிஃப், எண்டிடிவி, சிஎன்னென் போன்ற செய்தித் தளங்களிலிருந்தும் செய்திகளை வெட்டி ஒட்டி பஜனை பண்ணாதீர்கள். எழுத விஷயமில்லை என்றால் எழுதாமலிருப்பது உத்தமம்.

நாலு எட்த்துக்கும் போயி படிக்க வசதி இல்லாதவங்கோ இங்க வந்து நூஸ் பாத்துக்கலாம்ன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருப்பாங்கோ. வுட்டுத்தள்ளுங்கோ.

9. வெப் கவுண்ட் என்பது மிகப்பெரிய மாயை மற்றும் மோசடி. அந்த எண்ணிக்கையைப் பார்த்துப் பார்த்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். திரும்பத்திரும்ப ஐம்பது பேர்தான் சின்சியராக வலைப்பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் இருத்தவும்.

வாத்யாரே, டெக்னிகல் மேட்டர்ல வுள்ள போறிங்களே. வெப் கவுண்ட மாயை ஆக்குறதும் ஆக்காததும் அத்த போடுறவன் கைல தான் கீது. எதுனா பெர்ய எணைய பத்திரிகைல "நைனா இங்க பாருபா நா முண்ணூத்தி முப்பத்தோறாவது கோடிய தொட்டுட்டேன்"னு சீன் போடுறதுக்கு வூஸ் பண்ற கவுண்ட்டு வேற. நம்ம பதிவுல எத்தன பேரு வராங்கோ, இதுல ஆராரு புச்சா வராங்கோன்னு தெர்ஞ்சிக்க தான் பதிவுல கவுண்ட்டு போட்டு வெச்சிக்கறதே. அத்த நென்ச்சில்லாம் ஃபீலாவாதிங்கோ.

Wednesday, June 02, 2004

கேள்வி கேக்குறவன் கேனையன்

கேள்வி கேக்குறவனையும் குந்திக்கின்னு பாக்குறவனையும் கேனையனா ஆக்குற டிவி நிகள்ச்சி எது தெர்யுமாபா. லைவ்வா காட்டுறேன்னு சொல்லிக்கின்னு ஆர்னா ஒரு பெர்ய மன்ஸாள கூட்டியாந்து ஒக்கார வெச்சி கேள்வி கேக்குறாங்கோ பாருங்கோ அத்தான் அந்த நிகள்ச்சி.

நம்ம பொதிக டிவி கீதே, அதுல ராத்திரி ஆனாக்கா யார்ன்னா சினிமாக்காரங்களையோ இல்ல வேற ஆரையாவது கூட்டியாந்து கேள்வி கேப்பாங்கோ. நேத்தி நைட்டும் அப்டி ஒரு பெர்ய மன்ஸன கூட்டியாந்தாங்கோ. ஐயா மெய்யாலுமே பெர்ய ஆளு தான். மொனைவரு கொய்ந்தசாமி அய்யா. அய்யா அண்ணா பல்கலைக்களகத்துல இர்ந்தவரு, இப்போ எணைய தமில் பல்கலைக்கழகத்த நட்த்திக்கின்னு வர்றவரு.

முன்னால குந்திக்கின்னு இர்ந்து கேள்வி கேட்டவரும் சொம்மா இல்ல, அவரும் எதோ பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சவராம். இந்த மேரி லைவ்வா காட்ட சொல்லோ முன்னால குந்தி இர்க்குறவங்கோ டெலிபோன்ல ஆர்ன்னா கேள்வி கேக்கசொல்லோ வந்துக்கீற பெர்ய மன்ஸனுக்கு புர்யாங்காட்டி எட்த்து சொல்லோணும். ஆனா முன்னால குந்திக்கின்னு இர்ந்த ஆளு அத்த ஒய்ங்காவே செய்யல.

ஒரு ஆளு "கணினில தமிளு தான் சுலுவா கொண்டு வர்ற மேரிக்கீதுன்னு சொல்றாங்களே, அத்த பத்தி கொஞ்சம் வெளக்குங்கோ"ன்னு கேக்குறாரு. ஒடனே நம்மாளு கேள்விய ஒளுங்கா வெளங்கிக்காம அய்யாகிட்டே வேற என்னமோ மாத்தி எட்த்து சொன்னாரு. சரி அத்த வுட்டுத்தள்ளுன்னு வுட்டாச்சு. மறுக்கா ஒர்த்தரு "ஐயா, நா சொவடில்லாம் ஆராய்ச்சி பண்றவனுங்கோ. எனுக்கு அத்த பத்தி செல பொஸ்தகமெல்லாம் தேவப்பட்து. இண்டர்நெட்டுல போயி தேடுனாலும் ஒய்ங்கே கெடிக்க மாட்டேங்குது. அதுக்கு எதுனா சொல்லுங்கய்யா"ன்னு கேட்டாரு. முன்னால குந்திக்கீறவரு "அதுல்லாம் மேட்டரே இல்லபா, நீயே ஒரு மென்பொருள எய்திடு"ன்னு சொல்லி லைன கட் பண்ணிட்டாரு.

கேள்வி கேக்குறவன் இன்னா கேக்குறான்னு பிர்யாம நீயா பதில் சொல்லி லைன கட் பண்ண இன்னாத்துக்குபா நீயி குந்திக்கின்னு கீற. கேள்வி கேட்டவன் எம்மா முக்கியமா கேக்குறான். அதுவும் அய்யா எணைய தமிளு பல்கலைக்களகமெல்லாம் வெச்சிக்கீறாரே, அவுருக்கு எதுனா தெர்யும்னு தானே கேக்குறான். கேள்வி கேக்குறவனுக்கு சம்மந்தமே இல்லாம நீயா ஒரு பதில சொன்னா இன்னாபா மீனிங்கு.

இத்த பாக்கசொல்லோ "கேள்வி கேக்குறவன் தான் கேனையன்"னு நென்ச்சிக்க வேண்டியதா கீது. டிவி பொட்டில எதுனா இத்த மேரி நிகள்ச்சி பண்றவங்கோ எதுனா சினிமா நடிகய கொண்டாங்கபா, அவுங்க கிட்டே எதுனா மக்கள பேச வுட்டுடுங்கோ. அத்த வுட்டுப்போட்டு ஆர்னா பெர்ய மன்ஸன கொண்டாந்து அப்பாலிக்கா அவங்களாண்ட கேள்வியும் கேக்க வுடாம பண்ணாதிங்கோ......

Sunday, May 30, 2004

தம்மு

தம்மட்ச்சா கேன்ஸரு வரும். தம்மட்சா நெஞ்சுவலி வந்து அல்பாய்ஸுல பூடுவோம். தம்மடிக்கற்து ஒடம்புக்கு கெடுதலு. தெனம் தெனம் கேட்டுக்கின்னு கீறோம். ஆனா யார்ன்னா அத்த வுட்டு வெளில வராங்களா? கெடியாது. நம்மூர்ல தம்மடிக்காமலே பாதி பேருக்கு கேன்ஸரு வந்துரும். பஸ்ஸு பொக, தண்ணிலாரி பொக, ஆட்டோ பொக, இருக்குற மில்லுங்க அல்லாம் வெளில வுடுற பொக. இப்டி வர்ற அல்லா பொகையும் நம்ம வுள்ள இஸ்துக்கின்னு கீறோம். இதெல்லாம் நாமளா இஸ்டப்பட்டு இஸ்துக்கின்னுகீற பொக இல்ல. ஆனா தம்மடிக்கிறது மட்டும் நாமளா இஸ்டத்தோட இஸ்துக்கின்னு கீறோம்.

ஒரு மன்ஸன் நைட்டு தூங்க போவ சொல்லோ வாயிலே அரிசிய போட்டு வெச்சிக்கின்னு அத்த மறுநாளு காலங்காத்தால வெளில துப்புறான்னு வெய்யி, அத்த எதுனா கோளி துண்ணுச்சுன்னா அந்தக் கோளிக்கு அன்னியோட சமாதி தான். மன்ஸன் ஒடம்பே வெசம் தான். இதுல இருக்குற வெசம் போதாதுன்னு மன்ஸன் தம்மடிக்கிறது, கல்ப் அடிக்கிறதுன்னு புச்சு புச்சா வெசத்த சேத்துக்குறான். கல்ப் அட்சா அத்த அடிக்கிற மன்ஸனுக்கு மட்டும் தான் கெட்டது. ஆனா தம்மடிக்கிறது பெர்ய பேஜார் மேட்டரு. அவனையும் அடிக்கும், சுத்தி இருக்கிறவனையும் அடிக்கும். அத்த மேரி, ஒரு மன்ஸன் ஒரு நாளைக்கு பத்து தம்மு அடிக்கிறான்னு வெய்யி. அந்த பத்து தம்ம மொதோ நாளு ராத்திரி ஒரு டம்பளரு தண்ணில பத்து தம்ம வூறப்போடு. மறுநாளு அந்தத் தண்ணி குட்ச்சா ஆளு பனால். தம்மு அம்புட்டு வெசம்.

தம்மடிக்கிறது ஆம்புளைக்கு அளகு, இளுக்க இளுக்க இன்பம்ன்னு அடிக்க சொல்லோ சொல்லுவாங்கோ. ஆனா அத்த அட்ச்சா நம்ம நெஞ்சுவலி வந்து அல்பாயுசுல போறதுக்கு தியேட்டராண்ட டிக்கெட்டு எடுக்க க்யூவுல அட்ச்சிக்கின்னு நிக்கிற மேரி தான். தம்மட்ச்சா நெஞ்சுவலி, கூடவே வயுத்தெரிச்சலு, கேன்ஸரு அல்லாம் தோஸ்துங்க கணுக்கா வந்து ஒட்டிக்கும். இதுல்லாம் கூட மேட்டரே இல்ல, மேட்டருக்கே ஆப்பு வெக்கிது நம்ம தம்மு. ஆம்புளைக்கு அளகுன்னு சொல்லிக்கிற தம்மு தான் மேட்டருக்கு ஆப்பு வெக்கிது.

இன்னா நயினா, ஓவரா கலீஜ்ஜு பண்றேன்னு கேக்காதிங்கோ. தம்மடிக்கிறது கெடுதலு, அத்த தான் குப்ஸாமி சொல்ல முடியும். நிறுத்திடுபா'ன்னு சொல்ற ரைட்ஸு நம்ம கைல இல்லபா. வோணா ஒண்ணு சொல்லுவேன், அத்த மட்டும் மன்ஸுலே வெச்சிக்கோங்கோ. தம்மடிங்கோ வாணான்னு சொல்லல. அட்த்தவங்களுக்கு டிஸ்டர்பு இல்லாம அடிங்கோ. தம்மடிக்கணும்ன்னு தோணுச்சா, நேரா எங்கனா மன்ஸன் இல்லாத தூரமா போயி அட்ச்சிட்டு வந்துடுங்கோ. முக்கியமா கொய்ந்த புள்ளிங்கோ இர்க்கசொல்லோ அடிக்காதிங்கோ. ஒங்களுக்கு புட்ச்ச கொயிந்திய நீங்களே களுத்த நெரிச்சு கொல்ற மேரி தான் அது.

நாளிக்கி பொய்ல எதிர்ப்பு தெனாமாம். அந்த நல்ல தெனத்துலேந்து பத்து தம்மடிக்கிற ஆளுங்கோ எட்டா கொறச்சிக்கோங்கோ. அத்த மேரியே அடிக்கிற அல்லாரும் கொஞ்சம் கொறச்சுக்கப் பாருங்கோ. மன்ஸன் நென்ச்சா முடியாததாபா.

Thursday, May 27, 2004

வெளம்பரமா பிட்டுப்படமா???

நம்ம டிவி பொட்டில வர்ற வெளம்பரம் எல்லா இன்னாமா கீதுபா. வெளம்பரப் படம் எடுக்கிற அண்ணாத்தேங்க ஷகீலாவ வெச்சி எதுனா பிட்டு படம் எட்த்தாங்கோன்னு சொம்மா பிச்சிக்கின்னு ஓடும்.

இப்போ கொஞ்ச நாளா செவனப்புன்னு ஒரு மேட்டருக்கு வெளம்பரம் வர்தே ஆர்னா பாத்திங்களா. செவனப்பு குடிக்கற்த்துக்கு வர்ற வெளம்பரமில்ல அது, பாக்குறதுக்கு தான். வளக்கம் போல செனப்பு பொம்மய காட்றாங்கோ. அப்பாலிக்கா அந்த பொம்ம செம்மய்யா ஜொள்ளு விடுது. இன்னான்னு பாக்க சொல்லோ ஒரு யக்கா இத்துணூண்டு துணிய போட்டுக்கின்னு பீச்சாண்ட நட்ந்து வர்து. வந்து செவனப்ப எட்த்து குடிக்கிது.

குடிக்க சொல்லோ குடிக்கிற பாட்டில டைரக்டரு காட்ட மாட்டேங்கிறாரு. காமிராவ கீள கொண்டாந்துடுறாரு. பிட்டு படத்துல காட்டுற மேரியே நல்லா க்ளோஸப்புல அல்லாத்தையும் காட்ராங்கோ. குட்ச்சி முட்ச்சிட்டு அந்த யக்கா ஒரு இத்துணூண்டு மேல்துணிய எட்த்து சுத்திக்கின்னு போய்டுது. அப்போவும் டைரக்டரு சொம்மா வுடாம, பின்னாடியே காமிராவ அலைய வுட்டுக்கீறாரு.

அட்த்தது இன்னொரு வெளம்பரம். ஒரு சின்ன பொண்ணும் ஒரு ஆண்ட்டியும் கடைக்கு வராங்கோ. ஒரு வெடலப்பையன் குண்சா பின்னாடி வந்துக்கின்னு கீறான். சின்னப்பொண்ணு ஆண்ட்டிய பாத்து "இன்னிக்கி என்க்கு ஓசி சோறு"ன்னு சொல்லி சிரிக்கிது. பையனும் வந்து வழிஞ்சிக்கின்னே எதோ வழி கேக்குறான். பையன் போவ சொல்லோ சின்னப்பொண்ணு ஆண்ட்டிக்கிட்டே "எனுக்கு ஓசி சோறு கண்டிப்பா உண்டு"ன்னு சொல்லிக்கின்னே எஸ்கேப்பாவுது. பையன் இப்போ அண்ட்டி பின்னாடி வர்ற மேரி காட்றாங்கோ. ஒடனே "டொட்டோடைன்ன்ன்ன்"ன்னு ஒரு சத்தம் குட்த்து விஐபி ப்ரான்னு காட்றாங்கோ.

இவுங்களுக்கு கீற கற்பன தெறத்துக்கு வெளம்பரப்படம் எடுக்காம பிட்டு படம் எட்த்தா மெய்யாலுமே படம் வெள்ளி வெளா தான். வாள்க பாரதம்.

Tuesday, May 25, 2004

படிச்ச அப்பா அம்மாவுக்கு புள்ளியா பொறக்கணும்

எலிக்ஸன் வந்தாலும் வந்துச்சு ஒரே அரசியலா பேச வேண்டியதா பூட்ச்சிபா. இன்னா பண்றது அந்த டைமுக்கு அந்த மேட்டரு. என்னிய மேரியே நம்ம சன் டிவிக்கும் அரசியல் பேசி போரடிச்சிப் பூட்ச்சு போலக்கீது. புச்சா இப்போ பள்ளிக்கொடங்கள கைல எட்த்துக்கின்னாங்கோ. இவுங்க எந்தப் பள்ளிக்கொடம் நல்லாக்கீதுன்னு பட்ச்ச பெரிய மன்ஸங்களாண்ட கேட்டு சொல்லுவாங்களாம், அத்துல போயி துட்டு குட்த்து நம்ம பட்ச்சிக்கணுமாம்.

நேத்திக்கு மதுரைல இர்ந்து ஆரம்பிச்சாங்கோ. காட்டுன இஸ்கூலுல மொதல்ல வந்தது டிவிஎஸு. இஸ்கூல என்னமோ நல்ல இஸ்கூலு தான். ஆனா ஒரு மேட்டரு தான் இடிக்கிது. இந்த இஸ்கூல படிக்கணும்ன்னா புள்ளிங்களோட நைனாவும் ஆத்தாவும் பட்ச்சிருக்கணுமாம். அப்பனும் ஆத்தாளும் படிக்காட்டி புள்ளிங்கோ படிக்காதா? அப்பன் ஆத்தா படிக்காதவங்களா இர்ந்தா புள்ளிங்கோ அப்டியே வீணாப் போற பள்ளிக்கொடத்துல தான் படிக்கணுமா?

இது இன்னா நாயம்னே தெர்லபா. புள்ளிக்கு படிக்கிற தெறம கீதான்னு பாரு, துட்டு வாங்குற பள்ளிக்கொடமா இர்ந்தா துட்டு கெடிக்குமான்னு வோணும்ன்னாலும் பாரு. அத்த வுட்டுப்போட்டு அப்பனும் ஆத்தாளும் பட்ச்சிருந்தா தான் நீயும் படிக்க முடியும்ன்னு சொல்றது இன்னா நாயம்னே தெர்லபா. இஸ்கூலுன்னா இன்னாத்துக்கு கீது. புள்ளிங்கள நல்லா படிக்க வெச்சு, நல்ல மன்ஸங்களா வெளில அனுப்ப தானே. அப்டி இர்க்க சொல்லோ இன்னாத்துக்கு இந்த மேரில்லாம் கேக்கணும்.

குப்பைல கூட குந்துமணி கெடிக்கும், சேத்துல செந்தாமர மொளிக்கும்ன்னு இஸ்கூலுல படிக்க சொல்ல சொல்றாங்கோ. ஆனா அதே இஸ்கூலுல தான் இந்த மேரி மேட்டரும் நடக்குது. "ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே, என்னாமோ நட்க்குது மாய்ம்மாய் இர்க்குது, ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே"

Saturday, May 22, 2004

மக்கள் நலம்

வண்க்கம் மக்களா, எப்டிக்கீறிங்கோ. ஒரு வாரமா வலப்பூவாண்ட சவாரி போனது பெண்டு களண்டு போச்சுபா. குண்ஸா எதுனா வூத்திக்கின்னா தான் சரி வரும் போல.

சிங்கு தாத்தா நேத்தி சோக்கா போயி பெரதமரு சீட்டுல குந்திக்கின்னாரு. ரொம்ப நல்ல மன்ஸன். நம்ம நாடு நல்லா மேலே வர இவரு எதுனா பண்ணுவாருன்னு நம்புவோம்.

சிங்கு தாத்தா பெரதமரு ஆனது இப்போ மேட்டரே கெடியாது. நம்மூரு தாத்தா "எனுக்கு சீட்டு வாணாம் எனுக்கு சீட்டு வாணாம்"ன்னு சொல்லிக்கின்னு இர்ந்தாரு பாருங்கோ, அத்தான்பா செம்ம கலாசல் காமெடி. நம்மூர்ல கண்ணால சோறு போடுறப்போ செலரு "சோறு வோணுமா"ன்னு கேட்டா "வாணாம் வாணாம்"ன்னு பீச்சாங்கையால தள்ளுவாங்க, ஆனாக்கா சோத்துக்கையி "போடுபா போடுபா"ன்னு சிக்னலு குடுக்கும். அப்டி தான் நம்ம தாத்தா செஞ்சாரு.

டில்லிக்கு ஆதரவு கடுதாசி குட்க்கிறேன்னு கெளம்பி போயி அங்கனயே குந்திக்கின்னு இர்ந்தாரு. இன்னா மேட்டருன்னு பாத்தா தன்னோட பேராண்டிக்கு ஒரு காபினெட்டு மினிஸ்டரு வோணுங்கிறதுக்கு தான் இவ்ளோ ஆட்டமும். கூடவே அட்ட கணக்கா பேராண்டியும், மெயின் அல்லங்கை பாலுவும் ஒட்டிக்கின்னே இர்ந்தாங்கோ. தாத்தாவும் போட்ட பிளான்படி பேராண்டிக்கு காபினெட்டு வாங்கி குட்த்துட்டாரு.

தாத்தாவுக்கு கொஞ்சமும் கொறஞ்சவரு இல்ல நம்ம மரவெட்டி ஐயா. அவரும் டெல்லில போயி குந்திக்கின்னாரு. இவுரு தான் கச்சி ஆரம்பிக்க சொல்ல "நானோ என்னோட வூட்ல இர்ந்தோ ஆரும் எந்தப் பதவியும் ஏத்துக்க மாட்டோம்"ன்னு கொரலு வுட்டவராச்சே, இவுரு இன்னாத்துக்கு இப்டி சுத்திக்கின்னு இர்க்காருன்னு குப்ஸாமியும் ரொம்ப அப்பாவியா நென்ச்சிக்கின்னு இர்ந்தான். மரவெட்டி ஐயா மவன எலிக்ஸன்ல நிறுத்தாமலே காபினெட்டு வாங்கி குட்த்துப்புட்டாரு. அத்தான் ராஜ்யசபா எம்பி சீட்டு கீதுல்ல....

இத்தெல்லாம் பாக்குறப்போ நம்ம பொர்ச்சி தலீவரு ஒரு பயாஸ்கோப்புல பாடுன பாட்டு தான்பா நாபகத்துக்கு வர்து. அத்த அப்போவே நம்ம தாத்தாவ பாத்து தான் பாடி வெச்சாரு, ஆனா தாத்தா தான் இன்னிய வர மாறவே இல்ல.

பாட்டு இன்னான்னு தெர்தா????

"மக்கள்நலம் மக்கள்நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்"

Wednesday, May 19, 2004

வலப்பூ சவாரி

ஓரு வாரத்துக்கு வலப்பூவாண்ட சவாரி வந்துக்கீதுபா. அத்தால சவாரி முடிஞ்சதும் இங்கே வந்து கண்டுக்கீறேன்.

வர்ட்டா......

Friday, May 14, 2004

ஜக்குபாய் ஆட்டைக்கு மறுக்கா வராரு

தலீவரு ஜூட்டு வுட்டுக்கின்னாருக்கு நேத்து நூஸ் பாத்து ஃபீலாகி குப்ஸாமி கொரலு வுட்டுட்டான். இன்னிக்கு மசாலா டைரக்டரு "இன்னாமா கண்ணுங்களா நம்ம பொயப்புக்கே ஒல வெக்கிறிங்கோ. அத்தெல்லாம் அரசியல்ல இன்னா நடந்தாலும் நம்ம தலீவரு படத்த பொங்கலுக்கு வெளில வுடுறாரு"ன்னு பொலம்பிக்கீறாரு.

தலீவா, பாபா மேரி மன்ஸன சுண்டக்கஞ்சி குட்ச்சி சுத்திக்குன்னு இர்க்க வுடாம ஜக்குபாய சொம்மா சுர்ருன்னு ஏறுற பட்டசரக்கு மேரி குடுப்பா. சொம்மா இன்னும் எளம வூஞ்சலாடுதுன்னு நென்ச்சிக்கின்னு ஐஸ்வர்யா, கரீனான்னு கூட்டியாராம ஒன்னோட ரேஞ்சிக்கு ஏத்த மேரி எதுனா ஒரு மீனாவோ ரம்யா கிருஸ்னனையோ புட்ச்சி பட்த்துல போடுபா. இல்லாங்காட்டி சோடிய ஆக்ட்டு கொடுக்கிறங்கோ ஒன்னோட பொண்ணு மேரி தெர்யும். இத்த தலீவரு மட்டும் சொல்லலைபா, அல்லா தாத்தா, சித்தப்பா நடிகருங்களுக்கும் குப்ஸாமி சொல்லிக்கீறேன், அக்காங்.

ஜக்குபாய் ஜகா வாங்கிட்டாருபா

எலிக்ஸன்ல யாருக்கு இன்னா லாபம் கெட்ச்சுதோ இல்லியோ நம்ம சூப்புரு இஸ்டார மெர்ஸல்ல வுட்டுடிச்சி. மன்ஸன் ரொம்பவே ஃபீலாட்டாரு போலக்கீது.

ரசிகனுவோ வெட்டிக்கின்னு வாங்கடான்னா கட்டிக்கின்னு வருவாங்கோன்னு நென்ச்சி மரவெட்டி ஐயாவுக்கு எதிரா கொரலு வுட்டாரு. ரசிகனுங்கோ அல்லாரும் நல்ல மன்ஸங்க தான், தலீவரு கொரலு வுட்டா அத்த சோக்கா செஞ்சு முடிக்கிற ஆளுங்க தான். ஆனா தலீவரு ஒரு நாளிக்கு ஒரு கொரலு வுடுறாரு, தலீவரோட அல்லங்கையி புச்சு புச்சா ஆர்டரு போடுது. ஆனா தலீவரு பப்ளிக்கா எதுனா கொரலு வுட சொல்ல அடக்கி வாசிக்கிறாரு.

இத்தல்லாம் பாத்தாக்கா ரசிகனுங்கோ கொளம்பிபூட மாட்டானுங்களா. அட போ தலீவா நீயி கொரலு வுட்டுப்போட்டு எங்கனா எமயமல, அமெரிக்கான்னு கெளம்பிடுவ, அப்பாலிக்கா அடி ஒத மட்டும் நாங்க வாங்கணும்ன்னு நென்ச்சிட்டாங்க போல. எலிக்ஸன்ல கண்டுக்காம வுட்டுப்போட்டாங்கோ. தாத்தா கூட கூட்டு வச்ச அல்லாருமா கெலிச்சும்புட்டாங்கோ.

இத்த கேட்ட சூப்புரு படா ஃபீலாய்ட்டாரு. இந்த ரசிகனுங்கள நம்பி இனி படம் எறக்குனா இம்மா நாளு சம்பாரிச்சு வச்ச துட்டல்லாம் வுட்டுடுவோம்ன்னு நென்ச்சி நா இனி படம் பண்ணலபான்னு ஜகா வாங்கிக்கின்னாரு. ஜகா வாங்கின கையோட பக்கத்து இஸ்டேட்டு நாயுடுகாருவையும் பாக்கப் போறாராம். அங்க கீற திராச்ச தோட்டத்தைல்லாம் ஆருக்குனா வெல பேசிட்டு அமெரிக்காவுல ஆசிரமம் எதுனா வெச்சி குந்திக்கப் போறாரு போல. போ தலீவா போ, எங்க இர்ந்தாலும் நல்லாருபா.

Tuesday, May 11, 2004

அரோகரா ஆந்திரா

எலிக்ஸன் முடிஞ்சி ஆரு லீடிங்ல வருவாங்கோன்னு கோடு போட்டுக் காட்டுற மேரி ஆந்திரா எலிக்ஸன் ரிசல்டு வந்துடுச்சி. கைச்சின்னம் பார்ட்டிங்கோ அவங்களே எதிர்பாக்காத ரேஞ்சில கெலிச்சிப்புட்டாங்கோ. ஆனாலும் இவ்ளோ பெர்ய தர்ம அடிய நாயுடுவுக்கு தெலுகுப் பார்ட்டிங்கோ குட்த்திருக்க கூடாது.

மேட்டர் முடிஞ்சிப்போச்சு, இனி ஆவ வேண்டிய காரியத்த கவனிக்கணும்.

கைச்சின்னம் பார்ட்டிங்கோ இனியாவது அவங்களுக்குள்ள அட்ச்சிக்காம மக்களுக்கு எதுனா செய்ய நெனைக்கணும். கெட்ச்ச சான்ஸ ஊஸ் பண்ணி எவ்ளோ துட்டு சம்பாரிக்கலாம்ன்னு நெனிக்காம மக்களுக்கு எதுனா செய்யணும்.

நைனா நாயுடு, நீ கவலப்படாத நைனா. இத்த விடப் பெர்ய அடியெல்லாம் தமிள்நாட்டு தாத்தா வாங்கிக்கீறாரு. ஆனா இந்த எலிக்ஸன்ல பாத்தல்ல, ஒரு மாசம் சொம்ம பம்பரம் கணக்க சொலண்டு ஓட்டு சேகரிக்கிறாரு. தமிள்நாட்டுல காமராஜருக்கே ஆப்பு அட்ச்சாங்கோ. ஆந்திராவுல அத்த மேரில்லாம் இல்லாம குப்பம் ஆளுங்கோ ஒன்னிய கெலிக்க வெச்சாங்களே, அத்த நென்ச்சி சந்தோஷப்படுபா.

இந்த தபா பூட்ச்சின்னா இன்னா அட்த்த தபா பாத்துக்கலாம். இனிமேலாவது சினிமாக்காரங்கள நம்பாம ஒன்னிய நம்பு நைனா. ஒரு நல்ல எதிர்கச்சிக்காரன்னா எப்டி இருக்கணும்ன்னு காட்டு, அப்டி செஞ்சின்னா அட்த்த தபா சோக்க கெலிக்கலாம். ரிசல்ட்டு வந்ததும் கைச்சின்னங்காரங்களுக்கு வாள்த்து சொல்லிப்புட்டு சலாம் வெச்சி வெளில வந்தியே, மன்ஸன்பா நீயி. நல்ல எதிர்கச்சியா இர்ந்து அட்த்த தபா ஆட்சிய புடிபா. வர்ட்டா...

Sunday, May 09, 2004

அல்லாரும் மறக்காம ஓட்டு போடுங்கபா

ரெண்டு மாசமா அட்ச்ச வெயில்ல ஐஸ்வாட்டரு குடிக்காம தொண்டத்தண்ணி வத்திப்போவ நம்ம அரசியல்வாதிங்கோ கூவிக்கின்னு இர்ந்த எலிக்ஸன் ஒரு வளியா நாளைக்கு நடக்கப்போவுது. ஒவ்வொரு டிவியும் ஒரு நூஸ் வுடுது. எத்த நம்புறதுன்னு தெர்யாம மக்களும் கொயம்பிக் கெடக்குது. கருத்துக்கணிப்புன்னு சொல்லி நாட்டுல பங்குசந்தைக்கு ஆப்பு வெச்சது தான் மிச்சம். வேற ஒண்ணையும் இந்தக் கருத்துக்கணிப்பு கிளிக்கப் போறது கெடியாது.

ஒவ்வொரு தபா எலிக்ஸன் முடிஞ்சாலும் ஓட்டு பதிவான எண்ணிக்கய பாத்தா அம்பதுலேந்து அறுவது சதவிதம் தான். நைனா நம்ம இன்னா காஷ்மீர்லையும் பீகார்லேயுமா குந்திக்கின்னு கீறோம். ஓட்டு போடுறது நம்மளோட உரிம, அத்த இன்னாத்து வேஷ்ட் பண்ணணும். கரீட்டா ஓட்டக் குத்திட்டா அப்பாலிக்கா எந்த அரசியல்வாதிய வேணா கேள்வி கேக்கலாம். எவன் வந்தா எனக்கென்னன்னு நம்ம வூட்டுல குந்திக்கின்னு சண்டிவி இந்த வாரம் ஒலகத் தொலைக்காச்சில வராத இன்னும் தியேட்டருக்கே வராத பயாஸ்கோப்ப பாத்துக்கின்னு கீறோம்.

இந்தத் தபா எலிக்ஸன் திங்கக்கெளமைல வேற வந்துடுச்சு. ஒட்டுக்கா மூணு நாளு லீவு கெடிக்கும்ன்னு அம்மா வூட்டுக்கு போயிக்கீற பொண்டாட்டிய பாக்க தான் பாதிப்பேரு கெளம்பிடுறாங்கோ. நைனா பொண்டாட்டிய பாக்க வாணாம்ன்னு சொல்லல, ஓட்டப் போடாம வேஷ்ட் பண்ணாத. புச்சா ஒரு பயாஸ்கோப்பு ரிலீஸு ஆனாக்கா மணிக்கணக்கா காத்துக்கின்னு இர்ந்து டிக்கெட்டு வாங்குறோம். டாவு பீச்சாண்ட வெயிட் பண்ணுன்னு சொன்னா அதுக்காக நாலு மணிநேரம் வேணாலும் காலுவலி தெர்யாமா காத்துக்கின்னு கீறோம். ஒரு அரமணி நேரம் வரிசைல நிண்ணு ஒட்டு போட்டா நம்மூட்டு சொத்தா அளிஞ்சுடப்போவுது. அத்தால மறக்காம அல்லாரும் ஓட்டுப் போடுங்கபா.

குப்ஸாமி, வூருக்கெல்லாம் யோக்கியம் சொல்ற, நீ ஓட்டுப் போடலையான்னு கேக்காதிங்கோ, குப்ஸாமிக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயிஸு ஆவல. வர்ட்டா....

Saturday, May 08, 2004

வருது வருது வீராணம் வருது

நம்மூர்ல பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யணும்ன்னு எளுதிக்கீது போல. வங்கக்கடல்ல பொயல்சின்னம் வந்து அஞ்சு நாளு மள பொலந்து கட்டுனதுல இப்போ அல்லாரும் கொஞ்சம் குஜாலாக்கீறாங்கோ.

மளப் பெஞ்சதுல அம்மாவும் குஷி ஆயிட்டாங்க போல, "வீராணத்துல தண்ணி ஃபுல்லாக்கீது, இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைல குடிக்கத் தண்ணி இல்லேன்னு ஒர்த்தரும் கொரலு வுடாத ரேஞ்சில கொண்டாறேன்"னு சொல்லிக்கீறாங்கோ. வீராணத்துலேந்து தண்ணிக் கொண்டாரது, அத்துக்கு ஒலக பேங்கு துட்டு குட்க்கிறது அல்லாம் சர் தான் தாயி. கேக்க ஜந்தோஷமா தான் கீது.

ஆனா ஒரு மேட்டர மன்ஸுல வெச்சிக்கோங்கபா. பக்கத்து இஸ்டேட்டுப் பார்ட்டிங்கோ தண்ணி தருவாங்கோங்கிற நம்பிக்க இப்போ அல்லாருக்கும் பூட்ச்சு. ஓடுற ஆத்தை எல்லாம் தேசியமயமாக்குறதும் எலிக்ஸன் ஸ்டண்டு மேரி ஆயி பூட்ச்சு. பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யும் ஆயிட்ட நெலமைல பெய்யிற மளய கொஞ்சம் மண்ணுக்குள்ள சேர்த்து வெக்க ஆர்ன்னா முயற்சிப் பண்ணிங்கன்னா நல்லா இர்ப்பிங்கோ.

வூரு ஒலத்துல கீற ஏரி கொளமெல்லாம் தூரு வாராம அடஞ்சி கெடக்குது. அத்த அப்பப்போ தூரு வாறிக்கின்னு இர்ந்தா இப்டி அடிக்கிற மள கொஞ்சமாவது அதுல போய் நிக்கும், அல்லாங்காட்டி அவ்ளோ தண்ணியும் வீணால்ல போவும். அந்தக் காலத்துல ராசாவெல்லாம் கொளம், ஏரின்னு வெட்டி அத்து தூரடஞ்சு பூட்ச்சின்னா தூரு வாரிக்கின்னு இர்ந்தாங்கோ. நீங்கல்லாம் புச்சா ஏரி கொளம் வெட்ட வாணாம். இருக்கிறத பத்திரமா பாத்துக்கின்னு அத்துல எதுனா தண்ணிய புட்ச்சி வெக்க முடியுமான்னு பாருங்கபா. மக்களுக்கு மதமாற்றத் தடைச் சட்டத்தல்லாம் விட குடிக்கிற தண்ணி ரொம்ப முக்கியம்.

Wednesday, May 05, 2004

புது மாப்ள சாசர்

நமம் கம்பியூட்டருக்கு புச்சா ஒரு வைரஸு வந்துக்கீதாம். ஆளு படா ஷோக்கு பார்ட்டியாம். இந்தச் சாசர ஆரும் உள்ள புட்ச்சாந்து வுட வாணாமாம், தானே உள்ள பூந்து ஜில்லாத்தாங்கு ஆட்டம் போடுவாராம்.

இந்தச் சாசரு வந்த கம்பியூட்டருல பெரிய பெரிய பார்ட்டிங்க அல்லாம் அடி வாங்கிருக்காங்க போல.

சாசரப் பத்தி தெர்ஞ்சிக்கணும்ன்னா இங்கே போங்க "சாசர் வாங்கலையோ சாசர்"

Sunday, May 02, 2004

நூறு வர்ஸம் இந்த மாப்ளேயும் பொண்ணும்

மர்த்தடில குந்திகின்னு கொரலு எதிர்கொரலுன்னு வுட்டு கலக்கிக்கின்னு இர்ந்த பெரச்சனைக்கு இன்னிக்கு டும்டும்டும். இனி பார்ட்டியால காலத்துக்கும் கொரலே வுட முடியாதுன்னு தோணுது.

மச்சி பெரச்சனை இன்னேரம் கண்ணாலம் முடிஞ்சு நெக்ஸ்ட் மேட்டரு இன்னான்னு நகத்த கட்ச்சிக்கின்னு குந்தியிர்க்கும். கண்ணாலம் கட்ன மச்சியும் தங்காச்சியும் நூறு வர்ஸம் குஷியா குஜாலா இர்க்கணும்ன்னு குப்ஸாமி கடவுளாண்ட வேண்டிக்கிறான்பா.

Saturday, May 01, 2004

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே தண்ணியில்லாம திண்டாட்டம்

நேத்து ஆர்ல்லாம் சண்டிவி நூஸ் பாத்திங்கபா. நேத்திய நூஸ்ல ஒரு மறக்க முடியாத மேட்டர காட்னாங்கோ. வர்ற அஞ்சாந்தேதி டெல்லி பெர்ய தாத்தா ஓட்டுக் கேக்க வர்றாரு. தாத்தா வர்ற நேரத்துல வீராணத்துலேந்து சென்னப்பட்டணத்துக்கு தண்ணி கொண்டாந்துட்டோம்ன்னு காட்ட வேண்டி அம்மா ஒரு ஜூப்புரு ஐடியா பண்ணிக்கீறாங்கோ.

செங்கல்பட்டாண்ட லாரி லாரி கொளாய்ல தண்ணி வூத்தி அத்த அஞ்சாந்தேதி தாத்தா வர்ற நேரத்துல ஓப்பனிங் வுடப்போறாங்களாம். அஞ்சாந்தேதி வரைக்கும் அந்தக் கொளாய்ல எவ்ளோ தண்ணி வூத்துவாங்கோன்னு அம்மாவுக்கும் கார்ப்பரேஸனுக்கும் தான் வெளிச்சம்.

லாரிலேந்து தண்ணி கொளாய்ல வூத்த சொல்ல நமக்கு வயிறு எரியுதுபா. கொளாய்ல பாதி தண்ணி வெளில பாதி தண்ணின்னு ஓடுது. நூஸ்ல காட்டுறப்போவே ஒரு அம்பது லாரி நிண்ணுருக்கும். அப்பாலிக்கா எத்தன லாரியோ.

அவனவன் சென்னப்பட்டணத்துல களுவத் தண்ணியில்லாம கஸ்டப்படுறான். அம்மா இன்னான்னா தாத்தாகிட்டே சீன் காட்றதுக்கு கொளாய்ல லாரி தண்ணி வுடுறாங்கோ. கொளந்தைக்கு சோறு வூட்னதா காட்றதுக்கு அம்மாக்காரி வர்ற நேரத்திலே வேலக்காரி கொளந்த வாயில சோத்துப்பருக்கய தடவி வுட்டாளாம். அந்தக் கதயா தான் கீது நம்ம அம்மா செய்ற மேட்டரும்.

Wednesday, April 28, 2004

ராசா ராசா ராசா பாரதிராசா

பேச ஆரம்பிச்சாலே "என் இனிய தமிழ்மக்களே"ன்னு கொரலு வுடுற பாரதிராசா திடீர்ன்னு "நான் கள்ளச்சாதிப் பய"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. பத்து நாளைக்கு முன்னே பாரதிராசாவுக்கும், தமிளுக்குச் சோறுபோடுற வைரமுத்துவுக்கும் மருதையில நடந்த பாராட்டு விளாவுல தான் இந்தச் சவுண்டு.

மொதல்ல பேச வந்த பயாஸ்கோப்புக்கு கத எளுதுற ரத்னகொமாரு "இந்தப் பெர்ய மன்ஸங்கோ இம்மா பெர்ய லெவல்லக்கீறாங்கன்னா அதுக்கு நம்ம கள்ளருங்க தான்பா மெயின் ரீசனு"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. தமிளுக்கே சோறு போடுற மீசக்கார வைரமுத்து இதுல எதோ மேட்டர்கீதுபா நம்ம நைசா மாட்டாம எஸ்கேப் ஆவணும்ன்னு "இது சாதிக்காரங்க வெளா இல்லபா, இனவிளா"ன்னு அஜீஸ் பண்ணிட்டாரு.

அப்பாலிக்கா பேசவந்த பாரதிராசா கரீட்ட "பல்லி கயினித்தொட்டில குதிக்கிற" மேரி குதிச்சிட்டாரு. "நா கள்ளச்சாதி தான்பா, எனக்கு சாதிப்பயங்கோ தான்பா வோணும்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

கொரலு வுட்ட அண்ணாத்தே சினிமால மட்டும் தான் சாதி வாணாம் மதம் வாணாம்ன்னு க்ளாஸ் எடுக்கிறாப்ல மொதல் மருவாதியும், அலைகள் ஓய்வதில்லேயும், வேதம் புச்சுன்னும் எடுப்பாராம், ஆனா மன்ஸுக்குள்ள சாதி என்னிக்கும் சேர் போட்டு குந்திக்கின்னு கீதாம். சோக்கா கீதுபா நாயம். இவுரு சாதிக்காரங்கோன்னு சொல்றவங்கோ மட்டும் தான் இவரு படத்த பாத்தாங்களா, இவரு சாதியால தான் இவருக்கு அவார்டுல்லாம் குட்த்தாங்களா. எந்தூரு நாயம்னே தெர்லபா.

இந்த மேட்டர பட்ச்சப்போ இதுக்கு இன்னா ரீசனு இருக்கும்ன்னு குப்ஸாமி குந்திகின்னு ரோசனப் பண்ணான். இந்த மன்ஸன் நெய்வேலில வந்து அம்மாவுக்கு சோப்பு போடறதுக்காக சவுண்டு வுட்ட பார்ட்டி, இப்போ புச்சா "நா கள்ளச்சாதிடா"ன்னு சவுண்டு வுட்றாருன்னா ரீசனில்லாமலா இர்க்கும். கீதுபா கீது.

இன்னும் ரெண்டு வர்சத்துல இஸ்டேட்டு எலிக்ஸன் வர்து. நம்ம லெவலுக்கு பார்லிமெண்டுல்லாம் வேலிக்காவாதுன்னு பாரதிராசாவுக்கு தெர்யும். அத்தோட அம்மா வேற எல்லாரையும் புச்சு புச்சா புட்ச்சு எலிக்ஸன்ல நிக்க வெக்கிறாங்கோ. பாத்தாரு நம்ம பாரதிராசா, இப்போவே நம்ம பின்னால ஒரு சாதிக்கார கூட்டமே பிகிலடிக்க ரெடியாக்கீதுன்னு அம்மா காதுல போட்டு வெச்சா இஸ்டேட்டு எலிக்ஸன்ல அம்மா நம்மள கண்டுக்குவாங்கோன்னு ஒரு நெனப்புல ஓவரா சவுண்டு வுட்டுக்கீறாரு.

நயினா பாரதிராசா, நீயி நெய்வேலில "அம்மா தன்னோட சொந்த செலவுல எங்களுக்கு பஸ்ஸு குட்த்தாங்கோ, வழி செலவுக்கு பிஸ்கோத்து குட்த்தாங்கோ"ன்னு போட்டுவுட்டப்போவே அம்மா உன்னிய நம்பி ஒண்ணும் செய்யக்கூடாதுன்னு டிசைடு பண்ணிட்டாங்கோ. இப்போ நீ இன்னா சவுண்டு வுட்டாலும் சீட்டும் கெடிக்காது, ஒண்ணும் கெடிக்காது. நல்லதா நாலு படத்த குட்த்தோமா, புள்ளிய நடிகனாக்காம எதுனா ஒரு கடையகன்னிய வச்சி பாத்துக்கச் சொன்னோமான்னு இர்பா, அத்தான் உனுக்கும் நல்லது, தமிள்நாட்டுக்கும் நல்லது.

Tuesday, April 27, 2004

அ.இ.ல.தி.மு.க கச்சி தலீவர் தாடிக்காரராண்ட குப்ஸாமி பேட்டி

திங்கக்கெளம புச்சா கச்சி ஆரம்பிச்ச தாடிக்கார அண்ணாத்தே டி.ராஜேந்தராண்ட குப்ஸாமி பேட்டி எடுக்கப்போறான்பா.

குப்ஸ்: சலாம் போட்டுக்கிறேன் வாத்யாரே

டிஆர்: வாய்யா என் குப்பு
இனி என் ரேஞ்சு அப்பு
என்கிட்டே வேகாது பப்பு

குப்ஸ்: தலீவா இன்னும் எத்தினி காலத்துக்கு தான் இத்த மேரி கொரலு வுட்டுக்கின்னு இர்ப்ப. எதுனா புச்சா பேசுபா.

டிஆர்: (படா ஃபீலிங்ஸோட) என் அம்மா, தாய், என்னைப் பெத்த கடவுள் என்ன பெத்துப்போட்டப்போவே கூட பொறந்ததைய்யா இந்தப் பேச்சு, இது எனக்கு உயிர் மூச்சு.

குப்ஸ்: தோடா, இந்த டகுலு தானே நம்ம கைல வாணாங்கிறது. எம்சியாருக்கு எதிரா நம்ம தாத்தா ஒன்னிய கொம்பு சீவி வுட்டப்போ தாத்தாவ கரீட் பண்ண வேண்டி சொம்மா அடுக்கடுக்கா டயலாக்கு வுட்ட, இப்போ இன்னான்னா அத்த கூட பொறந்ததுன்னு என்னாண்ட போட்டுக்காட்றியே தலீவா, இத்து நாயமா..

டிஆர்: என் அன்பு தம்பி குப்புசாமி, நான் உங்களின் தோழன். ஏழைகளின் நண்பன். உழைப்பாளிகளின் உன்னத நண்பன்.

குப்ஸ்: செரி செரி, ஒடனே ஃபீலிங்ஸ் ஆவாதபா. பயாஸ்கோப்புல ஒண்ணோட ஃபீலிங்ஸ் பாத்து பிகிலடிச்சாங்கோன்னு எப்போ பாத்தாலும் அத்த எட்த்து வுடாதே. நான் இப்போ புச்சா ஆரம்பிச்ச கச்சிய பத்தி பேச வந்துக்கீறேன்

டிஆர்: நான் ஆரம்பிச்சிருக்கேன் புது கச்சி
இனி மத்ததெல்லாம் எனக்கு எச்சி
நீ கேள்விய கேளு மச்சி

குப்ஸ்: ஒன்னிய கரீட் பண்ணவே முடியாதுபா. கச்சி ஆரம்பிக்கசொல்ல ஒன்னோட ரசிகர் மன்ற நிர்வாகிங்க கூட பேசி இந்த முடிவ எட்த்துக்கீறே'ன்னு டயலாக்கு வுட்டியே ஆர்பா அந்த நிர்வாகிங்கோ?

டிஆர்: என் மனைவி உஷா அகில உலக டிஆர் ரசிகர் மன்ற தலைவர். எனது மூத்த மகன் சிலம்பரன் அகில உலக டிஆர் ரசிகர் மன்ற பொறுப்பாளர். எனது அன்பு மகள் இலக்கியா அகில உலக பொருளாளர். என் இளைய மகன் குறளரசன் அகில உலக செயலாளராகவும் இருக்கிறார்கள். இவங்க எல்லோருடனும் பேசியே இந்த முடிவுக்கு வந்தேன்.

குப்ஸ்: ஆகா ரசிகருங்கோ ஒரு குடும்பமா இர்க்கணும்ன்னு சொல்லுவாங்கோ, இங்கே குடும்பமே ரசிகர் மன்றமா கீது. நயினா நீ கில்லாடிபா. செரி, ஒன்னோட பெரிய புள்ள இன்னான்னா குத்து படத்துல "அஞ்சு வெரல் காட்டுனா"ன்னு கூவிக்கின்னே க்ளோஸப்புல வெரல் காட்டுது, நீ இன்னான்னா தாத்தாவ எதுத்துக்கின்னு புச்சா கச்சி ஆரம்பிச்சிக்கீற. அப்போ பெர்ய புள்ள ஒங்கூட கொரலு வுடாதா?

டிஆர்: (திரும்பவும் படா படா ஃபீலிங்ஸுடன்) அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவனுக்காக படத்துக்கு கத எழுதினேன். அவன் தொட்டில்ல தவழுறப்போவே அவன் கதாநாயகனா 20 வயசுல நடிக்க கதை எழுதினேன். இப்படி எல்லாம் பாலூட்டி சீராட்டி வளத்த புள்ள இப்போ என் படத்துல நடிக்க கால்ஷீட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.

குப்ஸ்: செரி வுடு தலீவா, எந்த வூட்டுல புள்ளிங்கோ அப்பன் பேச்சக் கேக்குதுங்கோ. கச்சில ஆர்ல்லாம் கீறாங்கோ, ஆராருக்கு இன்னா போஸ்ட்டிங்?

டிஆர்: கடந்த முறை கட்சி ஆரம்பித்தபோது அரசியல் அனுபவம் இல்லாத என் மனைவி மக்களை முக்கிய உறுப்பினர்களாக போட்டதால் என் கட்சி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதனால் இம்முறை அந்தத் தவறை செய்வதாக இல்லை.

குப்ஸ்: இன்னா தலீவா இப்டி சொல்லிட்ட. உனுக்கு அவங்கள வுட்டா கச்சில ஆர்பா ஆளுக்கீறா?

டிஆர்: இந்த டி.ராஜேந்தர் மாயவரத்திலிருந்து ரயில் ஏறி பாடிக்கொண்டே சென்னை வந்தது தனியாக தான். அவன் படங்களில் வெற்றிக்கொடி நாட்டியதும் தனியாக தான். அதனால, கட்சித்தலைவர், செயலாளர், பொருளாளர், கொ.ப.செ, கட்சி பேச்சாளர், நிர்வாகக்குழு தலைவர், கட்சி உறுப்பினர், போஸ்டர் ஒட்டுபவர் என்ற எட்டு காரியங்களையும் நானே எடுத்துச் செய்யப்போகிறேன். இந்தக் கட்சிக்கு ராஜேந்தர் ஒருவனே போதும், தனியாக நின்று ஜெயிப்பேன். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் தலைவி ஜெயலலிதா என்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவருக்கு எனது ஆதரவு உண்டு.

குப்ஸ்: நைனா நீயி மெய்யாலுமே பெர்ய ஆளுபா. ரிக்ஸாவுக்கு சவாரி ஒண்ணு வெயிட்டிங்ல கீது, நா கலண்டுகிறேன்.

Monday, April 26, 2004

ஓட்டு கேக்குறாங்கப்பா

கட்சிக்காரங்களுக்கு எப்டில்லாம் ஓட்டுக் கேக்றதுன்னு ஒரு ரேஞ்சே இல்லாம பூட்ச்சுபா.

நம்ம தெலுங்கு தேச நாயுடுகாரு இண்டெர்நெட்டு, ஈமெயிலுன்னு ஓட்டுக் கேக்க ஆரம்பிச்சிட்டாரு. நாயுடுகாரு ஓட்டுக் கேக்கப் போற எடத்துலல்லாம் தெலுங்குதேசத்துக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்றாரோ இல்லியோ "மறக்காம ஈமெயிலு ஒண்ணு வெச்சிக்கோங்கோ"ன்னு சொல்றாராம். இன்னா கொடுமைன்னா அவரோட தொகுதிலக்கீற மக்கள்ஸ்க்கு ஈமெயிலு, கொசுமெயிலுல்லாம் ஒண்ணுமே தெர்யாது. நாயுடுகாருவுக்கு ஐத்ராபாத்து தான் ஆந்திரான்னு நெனப்பு.

நாயுடுகாரு ஈமெயிலு, இண்டர்நெட்டுன்னு போன நம்ம காவிக்கட்சி சொம்மா குந்திக்கின்னு இர்க்குமா. நைனா நீ இஸ்டேட்டு, நானு ஒட்டுமொத்த இந்தியாவையே கைல வெச்சிக்கீறேன், இன்னா செய்றேன் பாருன்னு கெளம்பிட்டாங்க. வூர்ல கொஞ்சநஞ்ச எடம் கெடைச்சாலும் தாமரப்பூவ வரஞ்சி வுட்டுடுறாங்களாம்.

தாமரப்பூவ எதுனா செவுத்துல வரஞ்சிவுட்டா பரவால்ல, ஆர்வக்கோளாறுல பேங்கு பணக்கட்டுல ஒட்டிக்கீற பேங்கு பேப்பருல கூட தாமரப்பூவ அடிச்சி வுட்டுட்டாங்களாம். இத்த விட பெரிய கூத்து இன்னான்னா கேரளாவிலே வூர்லக்கீற வழிகாட்டி கல்லுல்லாம் தாமரப்பூவ வரஞ்சி தள்ளிட்டாங்கோ. கேரளாவிலே இனி ஒரு பயலும் புச்சா ஒரு வூருக்குப் போனா அது இன்னா வூரு, அங்கேர்ந்து அடுத்த வூருக்கு எத்தினி கிலோமீட்டருன்னுல்லாம் தெர்ஞ்சிக்கக்கூடாது.

"அரசாங்க சொத்து நம்ம சொத்து"ன்னு சொல்றதை கரீட்டா புர்ஞ்சிக்கின்னது காவிக்கட்சி தான்பா.

நாளைக்கே நம்ம வெங்காய நாயுடு "தாமரப்பூவ நாங்க பேங்கு பணக்கட்டுல அடிச்சதுக்கும், கேரளாவிலே வழிகாட்டி கல்லுல வரஞ்சி வெச்சதுக்கும் காரணம் எங்க கட்சி சின்னங்கிறதால கெடியாதுபா. தாமரப்பூ நம்ம தேசியப்பூ, அத்த ஆரும் மறந்துடக்கூடாதுன்னு ஃபீலாயி தான் அப்டி செஞ்சோம்"ன்னு டகிலு வுட்டாலும் வுடுவாரு.

Saturday, April 24, 2004

எலக்கியம் படிக்கலாம் வாங்க

ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமிக்கு எலக்கியம் படிக்க ஆச வந்துடுச்சுபா. முன்னே ஒருக்கா இப்டி ஆர்வத்துல நம்ம பேட்ட தமிளுல வெண்பால்லாம் எய்திக்கீறேன். குப்ஸாமிக்கு வெண்பான்னா புட்ச்சிப் போனது இன்னா மேட்டருன்னா பாத்தா ரெண்டு பார்ட்டிங்கள மெயினா சொல்லணும்பா. மொதோ ஆளு கவிதன்னா என்க்கு கலீஜுன்னு டகிலு வுடுற பாரா. அவரு தான் "தெரிஞ்சது மட்டும்"ன்னு குமுதத்துல எய்தினப்போ சுலுவான வெண்பால்லாம் வாராவாரம் எய்துவாரு. "அட வெண்பா ஒரு குண்சாத்தான் கீதுபா"ன்னு நெனைக்க வெச்சவரு அவரு தான்.

அடுத்தது நம்ம குருஜி அரியண்ணாத்தே. அண்ணாத்தே பத்தி கோபக்கார வாத்யாரு, அத்து இத்துன்னால்லாம் சொல்றவங்கோ கீறாங்கோ. மெய்யாலுமே அப்டில்லாம் இல்லபா. சின்னச் சின்ன மிஸ்டேக்குல்லாம் பண்ணிட்டு "அண்ணாத்தே இது கரீட்டா ராங்கா"ன்னு கேட்டா, மன்ஸன் இன்னா பிஸியா இர்ந்தாலும் செரி "அப்டி வரக்கூடாது கண்ணா, இத்தான் கரீட்டு"ன்னு சொல்லி, அதுக்கு ரெண்டு மூணு சாம்பிளும் எட்த்து வுடுவாரு. இன்னிய தேதில நெறியா சின்னப்பசங்களுக்கு வெண்பா எளுதணும், மரபுன்னா இன்னான்னு கத்துக்கணும்ன்னு ஒரு ரேஞ்சிலே சுத்திக்கின்னுக்கீறாங்கன்னா அதுக்கு அண்ணாத்தே ஒரு மெயின் பார்ட்டி.

செரி குப்ஸாமி, அத்தான் அல்லாருக்கும் தெர்ஞ்ச மேட்டராச்சே இப்போ இன்னா சொல்ல வரேன்னு கேக்றிங்களா. நம்ம அரியண்ணாத்தே மதுரபாரதியாரோட சேந்து ஒரு குளு ஆரம்பிச்சிக்கீறாரு. பேரு "மரபெலக்கியம்".

"கவித எய்தணும்ன்னா இந்த மேரி மரபெல்லாம் கத்துக்கணும், எனக்கு இன்னாத்துக்கு"ன்னு கேக்காதிங்கோபா. எதுனா ஒரு மேட்டர ஆர்ன்னா கத்துக்குட்க்க ரெடியாக்கீறாங்கோன்னா அத்த கத்துக்கிறது நல்லது. இல்லாங்காட்டி கத்துக்குட்க்க ஆளு இல்லாத நேரத்துல ஃபீலாவணும்.

கத்துக்குட்க்கிற எடத்துல உள்ள பூந்து சவுண்டு வுடணும்ன்னு இல்ல, கத்துக்கின்ன அடுத்த நாளே மரபுக்கவித எய்தணும்ன்னு இல்ல. ஒரு ஓரமா குந்திக்கின்னு இன்னா தான்பா நடக்குது இங்கேன்னு வேடிக்கப் பாக்கலாம். இன்னிக்கு இல்லாங்காட்டி என்னிக்காவது ஒரு நாளு "அட இத்தெல்லாம் பட்ச்சது நல்லதா பூட்ச்சுபா"ன்னு சொல்லுவோம்.

"மரபெலக்கியம்" பக்கமா ஒரு சவாரி வுட்டப்போ ஒரு மேட்டரு மன்ஸுல பட்டுச்சு. குளு கலரெல்லாம் "சேப்பு கலரு ஜிங்குச்சா, மஞ்சா கலரு ஜிங்குச்சா"ன்னு கண்ணுல அடிக்கிற கலரா போட்டுக்கிறாங்கோ, அத்த கொஞ்சம் சரி பண்ணா ஜூப்பரா இர்க்கும்.

Wednesday, April 21, 2004

ஊனம் எல்லாம் ஊனமில்லிங்கோ

இன்னிக்கு குப்ஸாமி மன்ஸு ரொம்ப ஃபீலாகி எய்துறான்பா. நேத்திக்கு நம்ம பகுத்தறிவு பகலவரோட பயாஸ்கோப்பு பொட்டில நூஸ் காட்னாங்கோ. கடேசியா "வேடிக்கை வேட்பாளர்கள்'ன்னு ஒண்ணு காட்னோங்க.

மொதோ ஒருத்தரு காட்னாங்கோ, அவரு எதோ ஆர்வக்கோளாறுல எலிக்ஸன்ல நிக்கிற பார்ட்டி. கூட நிண்ணு கையெளுத்து போட பத்து பேரு கூட இல்லாத ஆளு. இவர வேடிக்கை வேட்பாளர்ன்னு சொன்னாங்கோ, இத்த லூஸ்ல வுடலாம்.

அடுத்ததா ஒராளு கின்னஸ்ல பேரெடுக்கணும்ன்னே எலிக்ஸன்ல நிக்கிற பார்ட்டி. பொண்டாட்டி தாலிய கூட அடவு வெச்சி எலிக்ஸன்ல நிக்கிறாரு. இவரல்லாம் பாத்த அய்வுலாமா சிரிக்கலாமான்னு கூட தெர்ல. இவர வேடிக்க வேட்பாளருன்னு காட்னாங்கோ, இத்தையும் லூஸ்ல வுடலாம்.

ஆனா, கட்ஸியா காட்னது தான்பா மன்ஸுக்கு ஃபீலிங்கா கீது. ரெண்டு காலும் ஊனமான மன்ஸன் எலிக்ஸன்ல நிக்கக்கூடாதுன்னு எதுனா சட்டம் கீதா. ஒரு எள வயசு, நல்லா பட்ச மன்ஸன் (சட்டம் படிக்கிறாரு) ஆனா ரெண்டு காலும் ஊனமானவரு எலிக்ஸன்ல நிக்க ஆசப்பட்டு பதிவு பண்ணிக்கீறாரு.

எலிக்ஸன்ல ஜெயிச்சா "ஊனமுற்றவங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுக்குவேன்"ன்னு சொல்லிக்கீறாரு. நெறியா ஊனமுற்றவங்கோ அவருக்கு பாராட்டுல்லாம் சொல்றாங்கோ. ஆனா அவரு சுயேச்சையா நிக்கிற காரணத்தால அவரையும் "வேடிக்க வேட்பாளரு"ன்னு கட்டம் கட்றாங்கோ நூஸ் பார்ட்டிங்கோ.

ரெண்டு காலும் இல்லாங்காட்டி பாராளுமன்றதுக்கு போவ முடியாதா? மக்களுக்கு நல்லது செய்ய முடியாதா? நீயி அவரோட மன்ஸ பாராட்ட வாணாம், தட்டி கீள எறக்காமலாவது இர்க்கலாம்ல. ரஜினி கொரலு வுட்டா பக்கம் பக்கமா எய்துற நம்ம மக்களுங்கோ இத்தல்லாம் கண்டுக்க மாட்டேங்கிறாங்கபா. மன்ஸுல கொறை கீறவங்கோல்லாம் எலிக்ஸன்ல நிக்கிறப்போ ஒடம்புல கொறக்கீற அந்த மன்ஸன் நிண்ணா தப்பில்லேன்னு நூஸ் பார்ட்டிங்களுக்கு ஆர்னா சொல்லுங்கபா.

Monday, April 19, 2004

தீரனைய்யா இது கரீட்டா???

எலிக்ஸன் நெருக்கத்துல வர்றப்போ நம்ம விகடன் பார்ட்டிங்கோ எலிக்ஸன் ஜோக்குல்லாம் எட்த்து வுடுறாங்களோ இல்லியோ அரசியல்வாதிங்கோ சொம்மா சோக்காவே ஜோக்கு எட்த்து வுடுறாங்கபா.

மொதோ ஜோக்கு நம்ம காவி வேட்டி பார்ட்டி ராசா (பொது செயலாளராம்ல்ல) "ரஜினி அறிக்கையால் மக்கள் மனதில் மாற்றம் வந்திருக்கிறது"ன்னு சொல்லிக்கீறாரு. நானும் அத்தான்பா சொல்றேன். சூப்புரு கொரலு வுட்டதும் "அட போப்பா, இனிமே நீ கொரலே வுட வாணாம். அல்லாம் எங்களுக்கு தெர்யும். நீ வுண்டு ஒண்ணோட எமயமல வுண்டுன்னு போயி குந்திக்கோ"ன்னு தான் மக்கள்ஸ் மன்ஸுல வுண்டாய்க்கீது. அத்தான ராசா நீங்க சொல்ல வர்றது?

நேத்திக்கி நட்ந்த இன்னொரு ஜோக்கு சொல்றேம்பா. மரவெட்டி கட்சில சீட்டு குட்க்கலைன்னு கோச்சிக்கின்னு போயி காவி வேட்டி கட்டிக்கின்னாரே தீரரு, நாபகம் கீதா. அவுருக்கு காவி பார்ட்டிங்களும் சீட்டு குட்க்கல, அத்து வேற மேட்டரு. அந்தத் தீரரு நேத்து காவிக்காரங்கோ கட்டடத்துல குந்திக்கின்னு "நா பெரிய மரவெட்டியோட ஊளலைல்லாம் வெளில கொணாரப் போறேன்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

நைனா, நா ஒண்ணு கேட்டா கோச்சுக்கக்கூடாதுபா. நீ எத்தினி காலமா அந்த மரவெட்டி கூட குந்திக்கின்னு ஒரே தட்டுல சோறு துண்ணு ஒரே குவாட்டர கட்டிங் வுட்டுக்கின்னு இர்ந்த. அப்போல்லாம் மரவெட்டி செய்த ஊளலு கண்ணுக்கு தெர்யலையா? அவரு புள்ளிங்கோ, கொயிந்த, குட்டிக்குல்லாம் சொத்து சேத்தாருன்னு கண்ணுக்கு தெர்யலையா? வூருல வெட்டுன மரத்துக்கெல்லாம் சேத்து வச்சி தைலாபொரத்துல மரமா வளத்து ஒரு பண்ண வச்சிக்கீறாரே, அத்தெல்லாம் மூணு நாலு வர்சமா சொம்மா குந்திக்கின்னு பாத்துக்கின்னு தான இர்ந்த.

கச்சில சீட்டு குட்க்கலைன்னதும் சொம்மா ஃபீலிங்ஸு பிச்சிக்கிச்சு போல. இப்போ வந்து "நா ஒண்ணோட ஊளலைல்லாம் வெளில கொணாரேம் பாரு"ன்னு ஃபிலிமு காட்றியே இத்து நாயமா நைனா. மன்ஸனா இர்ந்திருந்தா கச்சில குந்திக்கின்னு இர்ந்தப்போவே சொல்லிருக்கணும்பா, இப்போ வந்து கொரலு வுடாதே.

Saturday, April 17, 2004

குப்ஸாமி அய்வுறாம்பா



இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுன்றாங்கோ, மன்ஸனோட உசிரு என்னிக்கு போவும் எப்போ போவும்ன்னு ஆருக்கும் தெர்யாதுன்னு சொல்றாங்கோ. மெய்யாலுமே அப்டி தான் போல. இன்னிக்கு காலேல வர்ற குப்ஸாமியோட கனவுல வந்து குண்ஸா ஒரு கோண ஒதட்டு சிரிப்பு சிரிச்ச அம்மிணி இப்போ உசுரோட இல்ல.

டொப்புன்னு கெலிகாப்டரு தீப்புட்ச்சிக்கின்னு டப்புன்னு மேல போயி சேந்துட்டாங்கோ. மேல பறந்துகின்னு கீறப்போவே மேல போயி சேந்துட்டாங்கோ. இந்த "மேல போறது"க்கு மட்டுந்தாம்பா விசா வாணாம், டிக்கெட்டு வாணாம், ஆரும் பாதி வளில எறக்கி வுட மாட்டாங்கோ, நேரா போயி சேர வேண்டிய எடம் தான் மேட்டரு.

"அப்டி பாக்றதெல்லாம் வாணாம்"ன்னு கனவுல வந்து பாடிக்கின்னு இர்ந்தவங்கோ உசுரோட இல்லைன்னு நென்ச்சிக்கூட பாக்க முடியலபா. குப்ஸாமி செம்ம ஃபீலிங்ஸ்ல கீறான். மெய்யாலுமே அய்க வருதுபா. அப்பாலிக்கா பாக்கலாம்.....

Thursday, April 15, 2004

தொள்ஸி தங்காச்சி, பெரபு அண்ணாத்தே சவாரிக்கு ரெடி

ஆஹா வாள்க்கைலே குப்ஸாமி மொதோ தபா செம்ம குஷியாக்கீறான்பா. முன்னே ஒருக்கா இத்தே கேள்விய வேற எடத்துல கேட்டப்போ பத்து நாளு தப்பு தப்பா அல்லாரும் பதிலு சொன்னாங்கோ. ஒர்த்தரு தேவான்னாரு, ஒருத்தரு இல்லபா காளிதாசன்னு சொன்னாரு. அல்லாருக்கும் தேவா பயாஸ்கோப்புல சொன்ன மேட்டரு நாபகம் வந்திச்சு, ஆனா மீசக்கார நண்பன அல்லாரும் மறந்துபூட்டாங்கபான்னு ஒரே ஃபீலாய்டுச்சு என்க்கு.

ஆனா இந்தத் தபா கேள்விய கேட்ட ஒடனேயே பெரபு அண்ணாத்தே கரீட்டா பதில சொல்லிப்புட்டாரு. தொள்ஸி தங்காச்சி (வய்ஸுல யக்கா) "குப்ஸாமி பதிலு இன்னாபா பதிலு, நா ஒனக்கு பாட்டையே எட்த்து வுடுறேன்"னு கரீட்டா பாட்டையும் எட்த்துவுட்டாங்கோ. ரெண்டு பேருக்கும் நெம்ப டாங்ஸுபா.

மீசக்கார தோஸ்துங்காட்டியும் எங்கக் குப்பத்துல பொறந்துருந்தா "காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்"ன்னு பாடாம "டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா"ன்னு தான் ஃபீலாய்ருப்பாரு. மிஸ்ஸாயிடுச்சுபா.

குப்ஸாமிப்ரியரு "நீ போட்டுக்கீற பாரதி படம் ஞாநிக்கு சொந்தம்"ன்னு சொன்னதால வேற படம் மாத்தியாசுபா


இன்னிக்கு குப்ஸாமி ரிக்ஸாவிலே பெரபு அண்ணாத்தேக்கும் தொள்ஸி தங்காச்சிக்கும் ஒரு சூப்புரு சவாரி.

வர்ட்டா....

Sunday, April 11, 2004

டாவு டாவு டாவுடா

அல்லாருக்கும் சலாம் போட்டுக்கிறேம்பா....

நம்ம புளாக்கு இப்போ நெறியா பேரு படிக்கிறிங்கோ, குப்ஸாமிக்கும் குஜாலாக்கீது. குப்ஸாமி ஒரு கேளுவி கேக்கப் போறேம்பா. தெர்ஞ்சவங்கோ கரீட்டா பதிலு சொல்லணும். நா ஒருதபா செலருக்கு இந்தக் கேளுவிக்கு பதிலு சொல்லிக்கீறேன், அவங்க இதுல பதிலு சொல்லக்கூடாது.

கேளுவி:

"டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா" இந்தப் பாட்ட எய்துனது ஆரு?

கரீட்டா பதிலு சொன்னா குப்ஸாமி ரிக்ஸாவுலே ஓசி சவாரி ஒண்ணு கெடிக்கும்.

வர்ட்டா.....

சென்னைத்தமிளு அகராதி

வண்க்கம்பா, அல்லாரும் கொஸப்பேட்ட நீயி பேசறது மெய்யாலுமே வெளங்கலபா, எதுனா ஒரு டிஸ்னரி போட்டுவுடுன்னு சொல்றாங்கோ. அத்தால நம்ம மக்கள்ஸ்க்கு நம்ம கைலேந்து ஒரு பீஸ் எட்த்துவுட்டுக்கீறேன்.

பிட் நோட்டீஸ்: இதுல வந்துக்கீற வார்த்தைங்கோ நெறியா இப்போ காலேஜிலே படிக்கிறதா பேர் பண்ணிக்கின்னு திரியிற பசங்க ஊஸ் பண்ற வார்த்தைங்கோ. நம்ம பேட்ட வார்த்தைங்களோட டிஸ்னரி அப்பாலிக்கா பாக்கலாம்பா...


அல்வா - ஏமாற்றுதல்

ஆத்தா - அம்மா

அபேஸ் - திருடுதல்

அல்பம் - கீழ்தரமான

அண்ணாத்தே - அண்ணன் அல்லது அண்ணனுக்கு சமமான மரியாதைக்கூறியவர்

அண்ணி - அண்ணாத்தேயுடைய ஆள்

அப்பீட்டு - தோல்விநிலை

அசத்தல் - அருமை

பஜாரி - பிடிக்காத பெண்

பந்தா, பிலிமு - அதிகப்படியான அலட்டல்

பேக்கு - முட்டாள்

சிட்டு - அழகான பெண்

டுமீல், பேளு, பீலா - பொய் சொல்லுதல்

குஜ்லி - அழகான, அலட்டலான பெண்

தில்லு - தைரியம்

தூள் - சூப்பர், அருமை

தம் - புகைப்பிடித்தல்

டாவு - காதலி(லன்)

டோரி - மாறுகண்

ஃபிகரு, ஐட்டம் - பார்வையை கவர்ந்திழுக்கும் பெண்

ஃபிரியாய்டு - தேவையில்லாததை மறந்துவிடு

கானா - சென்னையில் உடல் உழைப்பை நம்பி வாழும் மக்கள் இரவு நேரங்களில் தங்கள் மகிழ்ச்சிக்காக பாடும் ஆட்டத்துடன் கூடிய பாடல்

குரு - கூட்டத்தின் அல்லது குழுவின் தலைவன்

ஜொள்ளு - ஆண்கள்/பெண்களை பார்த்து அதிகப்படியாக மயங்கிப்போவது

ஜில்பான்ஸ், குஜால்ஸ், ஜல்ஸா - பெண்களுடன் சந்தோஷமாக கூத்தடிப்பது.

ஜூட் - தப்பி ஓடுவது

ஜோட்டு - காலில் போட்டிருக்கும் செருப்பு

ஜுஜூபி - மிக சுலபம்

ஜில்லு - மிக அழகான பெண்

காட்டான் - மிருகத்தனமானவன்

கேனை - முட்டாள்

கிக்கு, மப்பு - புத்தி தெளிவில்லாத நிலை

கலக்கல்ஸ் - அருமை

கொழை அடிக்கிறது - ஒருவரை தேவையில்லாமல் அதிகப்படியாக பாராட்டி காரியம் சாதித்துக்கொள்ள நினைத்தல்

குட்டி - அம்சமான பெண்

குள்ஸ் - குள்ளமான நண்பன்

லாடு - பெரிய மனிதன் போல தன்னை காண்பித்துக்கொள்பவர்

மச்சி - உற்ற நண்பன்

மண்டை பார்ட்டி - அதிபுத்திசாலி

மாம்ஸ் - நண்பர்கள் கூட்டத்தில் வயதில் முதிர்ந்த, அரட்டையான நண்பன்

மாவா, ஒன் ட்வெண்டி - புகையிலை, பான், பீடா

மாங்கா - முட்டாள்

நம்பிட்டேன் - நம்ப முடியவில்லை

நாட்டுக்கட்டை - அருமையான கிராமத்து பெண்

நாட்டான் - கிராமத்தான்

நாமம் - ஏமாற்றுதல்

கடலை - ஆண்/பெண் விஷயமே இல்லாமல் ஆனால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொள்வது

பட்டானி - ஆண்கள் ஆண்களிடமோ, பெண்கள் பெண்களிடமோ பேசிக்கொள்வது

பீட்டர் - பெண்கள் முன்னிலையில் உயர்தர ஆங்கிலத்தில் பேசுவதாக காட்டும் ஆண்

மேரி - ஆண்கள் இருக்கும் இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசும் பெண்.

பாடி - நல்ல உடற்கட்டுள்ள நண்பன்

நைனா - அப்பா

ஓபி - நேரத்தை செலவழிப்பது.

ஓட்டுதல் - நண்பர்களை கிண்டல் செய்வது

பக்கிரி - ரௌடித்தனம் செய்பவன்

பேட்டை - மக்கள் வசிக்கும் பகுதி

பிசாத்து - எளிதான விஷயம்

ராம்போ - ஆண்தனமான பெண்

சொங்கி - சோம்பேறி

தண்ணி - மதுவகைகள்

டின் கட்டுறது - அடி வாங்குதல் அல்லது பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளுதல்

உஷார் பக்கிரி - புத்திசாலி

ராங்கு காட்டுறது - போலியாக நடித்தல்

வெயிட்டு பிகர் - பணக்கார பெண்