இன்னாமா கண்ணுங்களா, எப்டி கீறிங்கோ, சோக்காக்கீறிங்களா? எம்மா நாளாச்சுபா ஒங்களல்லாம் பாத்து. குப்ஸாமி ரிக்ஸா வளிக்கற்துல பிஸீயா பூட்டேன், அத்தால தாம்பா ஒங்கள கண்டுக்க முடியல. இப்போ இன்னாத்து வந்துக்கீறேன்னு கேக்குறிங்களா, எலிக்ஸன் வந்துடுச்சு, மைக்செட்டு போஸ்டரு பிரியாணில்லாம் பாஸ்ட்டு, இப்போ டிஜிட்டல் போர்டு, டிவி, ஓட்டுக்கு ஐயாயிர்ரூவா துட்டு இத்தானாமே பேஸனு. அதான் கொஞ்சம் கெலிச்சிக்கிட்டு போலாம்ன்னு ரிக்ஸாவுக்கு டாட்டா காட்டிக்கின்னு வந்துட்டேன்.
இந்த தபா எலிக்ஸனுல அல்லாருக்கும் டாட்டா காட்டுனது டாக்டரும் கஜேந்திரரும் தான். சின்ன டாக்டரு தான் "யப்பா, இன்னாபா நீயி, எனுக்கு மந்திரி போஸ்ட்டு குட்த்தாங்கோ, ராஜ்யசபா எம்பி சீட்டு குட்த்தாங்கோ, அவுங்கள வுட்டுப்புட்டு அம்மா கைல சரண்டரு ஆவச் சொல்றியே"ன்னு ஃபீலானாரு. பெர்ய டாக்டரு "மவனே, நீ முன்னாடி மந்திரியா அஞ்சு வர்ஸம் குப்பக் கொட்டுனது பத்தியே ஃபீலிங்காவுற, நானு நீயி இன்னும் அஞ்சு வர்ஸத்துக்கு மந்திரி ஆவணும்ன்னு கணுக்குப் போட்டுக்கின்னு கீறேன்பா"ன்னு எதிர் ஃபீலிங்கு வுட்டுக்கிறாரு. வுட்ட ஃபீலிங்கு கரீட்டு தான் போல, இந்த தபாவும் ஒரு ராஜ்ய சபா சீட்டு உசார் பண்ணிட்டாரு.
கஜேந்திரரு சிஎம்மு தாத்தா போட்ட ரூட்டுக்கே வண்டிய வுட்டுட்டாரு. கஜேந்திரரு நம்மலாண்ட ஒட்டிக்கிட்டு ஓட்டுக் கேக்கறத விட தனியா நிக்கசொல்லோ அம்மா ஓட்ட நெறியா பிரிப்பாருன்னு தாத்தா போட்ட கணக்கு ஒர்க்கவுட்டு ஆயிபூட்ச்சி. இப்போ திமுக கூட்டணியோ கொபசெ கணுக்கா கஜேந்திரரு மைக் செட்ட புட்ச்சிக்கின்னு டாக்டரையும் அம்மாவைவும் கீச்சிக்கின்னு கீறாரு.
இந்த எலிக்ஸனோட பெர்ய காமெடியனே வைகோ தான். எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நல்லவரா கீறாரு. ஒரு சீட்டு கம்மியாகீதுன்னு திமுக கூட்டணில கலண்டுகின்னு வந்த வைகோ இப்போ "சகோதரி, நீயி எத்தன சீட்டு வோணும்ன்னாலும் குடு சகோதரி, அட சீட்டே குடுக்க வாணாம் சகோதரி, உனுக்காக நா கொரலு வுடுறேன்"ன்னு நிக்கிறாரு. அம்மாவும் நம்ம கச்சிக்கு கொரலு குடுக்க மைக்செட்டு முன்ஸாமி கணுக்கா ஆளு வோணுமேன்னு வெச்சிக்கின்னு கீறாங்கோ.
ஆமா, இவங்க அல்லாரும் போன மாசம் வரிக்கும் ஈழப் பெர்ச்சன, எலங்கை ராணுவம்ன்னு கொரலு வுட்டுக்கின்னு இர்ந்தாங்களே, இப்போ எங்கபா ஒரு கொரலையும் காணோம்? கஜினி படத்து சூர்யா கணுக்கா பாலிடிக்ஸு பண்றவங்கோ மற்ந்துபூட்டாங்களா? இல்லாங்காட்டி ஓட்டுப் போடுற மக்கள கஜினி ஆக்கிட்டாங்களா?