இந்த தபா பட்ஜெட்டுல அல்லாரையும் சோக்கா தாஜா பண்ணிக்கீறாங்கோ. மெயினா வயித்துல துணிய கட்டிக்கின்னு கீற வெவசாயிங்கோ வயித்துல பாலு.
- புச்சா வரி எதுவும் கெடியாது.
- விவசாய கடனுக்கு வட்டி ஏழு பர்செண்ட்டு.
- ரேஸன் அரிசிங்காட்டி தள்ளிகின்னு போனா குண்டர் சட்டத்துல உள்ள புட்ச்சிப் போட்டுருவாங்கோ
- எலவச சைக்கிளு, எலவச பஸ் பாஸ் அல்லாம் அப்டி அப்டியே கீது
- சென்னையிலேயும் கோவையிலேயும் புச்சா ரெண்டு டைடலு பார்க்கு
- இஷ்டிரைக்கு பண்ணவங்களுக்கு இஷ்டிரைக்கு டைமுல கெடிக்க வேண்டிய துட்டு
- தமிழ்ல சாப்ட்டுவேரு எய்துனா வரி கெடியாது (க்ருபா எய்துன பொறம்போக்குக்கு வரி உண்டாபா?)
- பயாஸ்கோப்பு பேரு தமிளுல வெச்சா வரி கெடியாது (மருத்துவரு குஸி ஆகிடுவாரு)
அல்லாம் சோக்கா தான் கீது. ஆனா அல்லாமே அடுத்த உள்ளாச்சி எலிக்ஸன மன்ஸுல வெச்சி போட்ட மேரி கீது. அடுத்த பட்ஜெட்டுல எதுனா ஆப்பு வருமான்னு தெர்லபா.