Tuesday, March 29, 2005

கேப்டரு பேட்டி

செப்டம்பர்ல புச்சா கச்சி ஆரம்பிச்சு அட்த்த மாசமே சிஎம்மு ஆவப்போற கேப்டரு கஜேந்திரர் விஜயகாந்தருடன் கொஸ்பேட்ட குப்ஸாமியின் சந்திப்பு

கொ.கு: வண்க்கம் கேப்டரு

கே: வணக்கம் கொசப்பேட்டை குப்புசாமி அவர்களே. நீங்கள் சொன்ன வணக்கத்திலேயே நீங்கள் எனது உண்மையான தொண்டர் என்பது தெளிவாகிறது. எல்லோரும் என்னை "கேப்டன்" என்று ஏகவசனத்தில் சொல்கிறார்கள். நீங்கள் ஒருவர் தான் என்னை மிக்க மரியாதையுடன் "கேப்டர்" என்று சொல்லி இருக்கிறீர்கள். நான் இனி என் மனைவிடம் கலந்தாலோசித்து எனது மச்சினர் வழியாக என் ரசிக சிகாமணிகள் இனி என்னை "கேப்டர்" என்று மரியாதையுடன் விளிக்க வேண்டும் என்று அறிவுருத்துகிறேன்.

கொ.கு: டாங்ஸுபா. வுன்னோட கச்சி மேட்டரு பத்தி பேசலாம்ன்னு வந்துக்கீறேன் தலீவா.

கே: ஆமாம் குப்புசாமி. வரும் செப்டம்பரில் எனது கட்சிப்பெயரை அறிவிப்பேன்.

கொ.கு: கச்சிப் பேரு இன்னா தலீவா?

கே: எனக்கு மொத்தம் 35,000 ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவற்றில் 3,50,000 ரசிகர்கள் உள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 1750000. இவர்கள் எல்லோரையும் கட்சிக்கு பெயர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவர்கள் சொல்லும் பெயரை நானும், என் மனைவி மச்சினனும் சேர்ந்து குலுக்கிப்போட்டுத் தேர்ந்தெடுப்போம்.

கொ.கு: ஆஹா, கல்க்கிற தலீவா. அப்போ இந்த தபா சிஎம்மு நீ தான்னு சொல்லு.

கே: நான் யாரோட சீட்டையும் பிடிக்க ஆசப்படல, என்னோட சீட்ட யாரும் பிடிக்கவும் முடியாது. சிஎம் சீட் எனக்கு என்று மக்கள் சொன்னால் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

கொ.கு: ஆஹா பயாஸ்கோப்புல பேஸ்ர மேரியே பேஸ்ர தலீவா. அட்ச்சி தூள் கெளப்பு. இன்னா மேரி ஆச்சி அமைக்கப்போற தலீவா?

கே: எனக்குப் பிடிக்காத ஊழல் மற்றும் சாதி அரசியலை ஒழிக்கப் பாடுபடுவேன்.

கொ.கு: அப்போ பாஜக தலீவரு ஒன்னோட மீட்டிங்குல கலந்துகின்னு "கேப்டரு எங்க சைடு"ன்னு சொல்லாம சொல்லுறாரே, அது இன்னா அர்சியலு தலீவா?

கே: சாதி அரசியலை தான் ஒழிக்கப் பாடுபடுவேன் என்று சொன்னேன். மத அரசியலை அல்ல. மத அரசியல் செய்யும் பாஜகவோடு கூட்டணி வைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.

கொ.கு: ஊலல் பண்ற அர்சியலும் புடிக்காதுன்னு சொல்லிக்கீறிங்கோ?

கே: நன்றாக கவனியுங்கள் குப்புசாமி. "எனக்குப் பிடிக்காத ஊழல்" என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எனக்குப் பிடித்த ஊழல் செய்யும் அரசியல்வாதிகளோடு கூட்டு வைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.

கொ.கு: சூப்பரு கொளுக தலீவா. நீயி கச்சி ஆரம்பிக்கசொல்லோ என்னிய கொளுக பரப்புச் செயலாளரா போட்டுக்கோபா. ஒன்னோட சேந்து நானும் கச்சிய வளக்குறேன். வர்ட்டா.

கே: என் குடும்பத்தாரோடும் என் ரசிக சிங்கங்களோடும் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவாகச் சொல்கிறேன் குப்புசாமி. உங்களை மாதிரி சுத்தமாக தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் எனது கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தால் அது எனக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றே நம்புகிறேன். போய் வாருங்கள்.

Monday, March 21, 2005

மூட(முடியாத)நம்பிக்கை

நம்மூருல லார்டு கணேஸு பால் குட்ச்சாரு, கொரங்கு மன்ஸன் வந்தான், மாட்டு கண்ணுல எம்சியாரு தெர்ஞ்சாரு. இப்போ புச்சா ஒரு கெளவி வந்து வெங்காயம் வோணும்ன்னு கேக்குதாம். அதுவும் "பசிக்குதுபா, வெங்காயம் குடு"ன்னு கேக்குமாம். தம்மாதுண்டு வெங்காயம் தானேன்னு குட்த்துப்புட்டா அப்பாலிக்கா நீயி கண்ணம்மாபேட்டையாண்ட ஒதுங்கிட வேண்டியது தானாம். வெங்காயத்துக்கும் மன்ஸன் மண்டைய போடுறதுக்கும் இன்னாடா லிங்குன்னு கேட்டா ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறானுங்கோ.

இத்தெல்லாம் தமிள்நாட்டுல நடுக்குதான்னு ஆரும் ஃபீலாவ வாணாம், நம்ம டில்லில நடுக்குது. வூருலக்கீற அல்லா மக்களும் இப்போ கெளவிங்கள பாத்தாலே பேஜாராவுறாங்களாம். நல்லவேளபா, கெளப்பிவுட்டவன் "வெங்காயம் குட்த்தா மண்டைய போட்டுடுவ"ன்னு கெளப்பிவுட்டான், "கெளவி ஒண்ணு வந்து குடிக்க ஒரு கிளாஸு தண்ணி கேக்கும், குட்த்துடாதே. குட்த்தா மண்டைய போட்டுடுவ"ன்னு சொல்லிருந்தா இன்னா ஆவுறது. சொம்மாவே நம்ம மன்ஸங்கோ தண்ணி குட்க்க ரோசன பண்ற மன்ஸங்கோ, இதுல இப்டில்லாம் சொல்லி வெச்சா அப்பாலிக்கா தாகத்துல தவிச்சு மண்டைய போட்டா கூட தண்ணி தர மாட்டாங்கோ.

தெனமலரு அத்த நூஸா போட்டுக்கீறாங்கோ. நீங்களும் பாருங்கோ.

Sunday, March 20, 2005

கஜேந்திரா மெடிகல் காலேஜு

"இன்னா அண்ணாத்தே நீயி. சொம்மா இன்ஜினீரிங் காலேஜு ஆரம்பிச்சிக்கீற. இந்த காலேஜுக்கு புள்ளிங்கோ சேரணும்ன்னா ரெண்டு லச்சம் தான் குடுக்கணும், இத்தே ஒரு மெடிகலு காலேஜு தொர்ந்துருந்தா பத்து பதினஞ்சு லச்சமா பாக்கலாம்ல"ன்னு எதுனா அல்லங்கை பார்ட்டிங்கோ கஜேந்திரரு கைல சொல்லிக்கீறாங்கோ போலக்கீது. அண்ணாத்தே சிலுத்து எய்ந்து "தொரடா ஒரு மெடிகல் காலேஜு"ன்னு கெளம்பிட்டாரு.

உள்ளூருல அம்மாவ கொஞ்சம் பகைச்சிக்கின்னதால காலேஜு கீலேஜுன்னு பேச்செடுத்தா அம்மா பிச்சு கடாசிடுவாங்கன்னு கஜேந்திரருக்கு நல்லாவே தெர்யும். அத்தால பாண்டிச்சேரியிலே போயி காலேஜு தொர்க்கப்போறாராம்.

"வருங்கால மொதல்வரு வருங்கால மொதல்வரு"ன்னு அவரோட ரசிக சிகாமணிங்கோ கொரலு வுடுறதோட மெய்யான மீனிங்கு இப்போ தான் வெளங்குது. கஜேந்திரரு "காலேஜு மொதல்வரு" ஆகுறத தான் இப்டி சொல்லிக்கீறாங்கோ போலக்கீது. இனிமே "வருங்கால மொதல்வரு"ன்னு சொல்லாதிங்கப்பா, அவுரு இப்பொவே "மொதல்வரு" தான்.